Wednesday, April 15, 2009

அறியாத வயதில் லேகியம் - கவிதை

அறியாத வயதில்
கெட்ட பழக்கங்களினால்
கை கால் நடுக்கம்
கண் எரிச்சல்
தூக்கமின்மை
தகுந்த நேரத்தில் முடியாமை
ஞாபக மறதி
பசியில்லாமை
கெட்ட கனவு மூலம்
அடிக்கடி சக்தி வெளியாதல்
அடிக்கடி சிறுநீர் போகுதல்
ரொம்ப உஷ்ணம்
சக்தி சிறுநீரிலேயே போகுதல்
மலச்சிக்கல்
குழந்தையில்லாமை
உறுப்பு சிறுத்து போகுதல்
அடிக்கடி சோர்வு
நடு முதுகில் வலி
தைரியமில்லாமை
மணம் செய்ய பயம்
விரை வித்தியாசம்
என்ற அறிகுறிகள்
அந்த சித்த வைத்திய
கொள்ளுத் தாத்தா முதல்
கொள்ளுப் பேரன் காலம் வரை
தவறாமல் படித்து வருகிறேன்
சற்று மூச்சு வாங்குகிறது 
அறிகுறிகளை விடாமல்
படிக்கும் போது மட்டும் 
தவிர வேறொன்றுமில்லை
ஆரோக்கியமாக
வாழ்ந்து விட்டேன் 
96வது பிறந்த நாள்
இன்று

8 comments:

  1. தல,

    எதையுமே வித்தியாசமா பார்கிறத்துதான் உங்கள் கவிதை ஸ்டைல். நன்று.

    ReplyDelete
  2. அறியாத வயதில் ஏன் லேகியம்..


    தலைப்பில் பிழை இருக்கோ!

    ReplyDelete
  3. அதிஷா,

    //தலைப்பில் பிழை இருக்கோ//

    இல்லை என்று என் கருத்து.

    ReplyDelete
  4. ;-))

    வழக்கம்போலவே கலக்கல்!!

    ReplyDelete
  5. நன்றி சென்ஷி.

    ReplyDelete
  6. அதிஷா,

    கவிதையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?

    ReplyDelete
  7. நன்றி அனானி.

    ReplyDelete
  8. நல்லா இருக்குங்க

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!