Tuesday, March 22, 2011

இளையராஜா கிடார் இசை



படிக்க: இளையராஜா King of Mesmerising Musical Guitar

http://raviaditya.blogspot.com/2011/03/king-of-mesmerising-musical-guitar.html

இளையராஜா King of Mesmerising Musical Guitar



    கிடார் என்றால் என் மாணவ வயதில் மனதில் பதிந்த பிம்பங்கள்:
  1. கையில் கிடார் வைத்திருந்தால் மேலே உள்ளவர் மாதிரி நடை,உடை பாவனை இருககவேண்டும்.Hey.. you..! come to the stage yaar!sing a song with me? ஒரு மார்டன் பெண்ணைப் பார்த்து கத்த வேண்டும்(கிடாரைத் தீற்றிக்கொண்டே)
  2. கண்டிப்பா சுராங்கன்னிகா மாலு கண்ணா வா பாட்டுப் பாடனும்
  3. ஹோட்டல் காபிரே டான்ஸ் பாடல்களுக்கு இசைக்கப்படும் கருவி
  4. ஆங்கிலோ இந்தியர்கள்தான் இதை வாசிப்பார்கள்
  5. ஊட்டி பிக்னிக்கில் நெருப்புக்குப் பக்கத்தில் உட்கார்ந்து காதலியைப் பார்த்து இசைக்கவேண்டும் அல்லது டாப்லெஸ் காரில் சட்டைபோடாமல் கையில் கிடார் வைத்துக்கொண்டு கோவா செல்ல வேண்டும்
  6. கிடார் கிறிஸ்துவ மதத்திற்கென்று உருவான இசைக்கருவி
  7. முஸ்லீம் அல்லது பாலைவனம்  போன்ற அரேபியன் வகை இசைக்கு உகுந்த கருவி
  8. திகிலுக்கு பின்னணியாக (மார்டர்ன் தியேட்டர்ஸ்/கர்ணன் படங்களில் எலெக்டிரிக் கிடார் பயன்படுத்துவார்கள்)
  9. ஸ்டைல் அல்லது ஜாலி என்றால் இதை கையில் பிடித்து போஸ் கொடுக்க வேண்டும்.
  10. சினிமா கல்லூரி விழாக்களில் கட்டாயம் இருக்கும்
  11. சினிமா கிடார் இசையெல்லாமே இதைச்சுற்றித்தான் இருக்கும்
  12. தமிழ் பண்பாட்டுக்கு ஏற்றதல்ல.
90%  பழைய சினிமா  கிடார் இசையெல்லாம் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுற்றி வந்தது.இந்திய கலாசாரத்திற்கு ஒவ்வாத இசைக்கருவி. அதுவும் அந்தக் கால குடும்ப செண்டிமெண்ட் படத்திற்கு கிடார் ஒத்துவராது.

மேற்கத்திய இசையில் உபயோகிக்கப்படும் கிடாரைப் பற்றி  அல்ல நான் சொல்லுவது. அது ஒரு தனி இசை உலகம்.


(வேட்டியோட கிடார்  வாசிக்கும் போஸ் கொடுத்த ஒரே நாள் இசைஞானிதான்)

இசைஞானி இளையராஜா தமிழ்ப் பட  கிடார் சம்பிரதாயங்களை உடைத்துத் தூள் தூள் ஆக்கினார்.எல்லாவற்றையும்  தலைகிழாகக் கவிழ்த்தார். கிடார் நரம்புகளை வித விதமாக அதிர வைத்தார்.

மனிதனுக்கு பத்து விரல்கள்தான் இறைவன் கொடுத்தார்.ஒரு வேளை இருபது விரல்கள் கொடுத்திருந்தால் ராஜா என்னவெல்லாம் செய்திருப்பார்.

நான் வீனஸ் அல்லது ஜுபிடர் கிரகத்தில் ஜாக்கிங் போவது போல் கனவு கண்டிருக்கிறேன். ஆனால் மென்மையான கிடாரில் “அதிகாலை நிலவே” மற்றும் “ ராமனின் மோகனம்” “இளைய நிலா” பாட்டினிடையே வித்தியாசமாக இசைக்க சாத்தியமுண்டு\என்று  கனவு கண்டதில்லை.

முதல் படத்திலேயே கிடாரை தைரியமாக வித்தியாசமாகப் பயன்படுத்தினார்.காரணம் இவரிடம் இருக்கும்  பலவித கருவிகளின் இசை இழைகளை பிணைக்கும் திறமை.


ஒரு அம்மா தன் குழந்தைகளைப் புரிந்து வைத்திருப்பதுப் போல இவர் எல்லா இசைக்கருவிகளையும் நுணுக்கமாகப் புரிந்துவைத்து ஆட்சி செய்திருக்கிறார்.செல்லம் கொஞ்சி இருக்கிறார்.அதில் ஒன்று கிடார்.இது நம்மூர் வீணையின் ரொம்ப தூரத்து கசின் என்று சொல்லலாம்.

இவர் முறையான  கிடாரிஸ்டும் கூட.கேட்க வேண்டுமா இசைக்கு?தந்தியின் அதிர்வுகளை inch by inch உணர்ந்திருக்கிறார்.He tamed the instrument like a circus man tamed Lion.எல்லாவிதமான மணமும் கொடுக்கிறார்.
நாரதர் கையில் வீணை
கிடாரில் ஒரு இண்டு இடுக்கு விடாமல் சின்ன நகத்தீற்றல் வருடலிலிருந்து எல்லா வகையான வருடல்களும் கிடார் தந்திகளில் வருடி இசையை பொழிந்திருக்கிறார்.பாட்டின் மெலடியை தனியாக திரியவிடவில்லை.

கவுண்டர்பாயிண்ட் கவிதைகளை கிடார் நரம்பில் தீட்டி இருக்கிறார்.

மிகைப்படுத்தவில்லை. கேட்டால் தெரியும்.பாடல்களோடு வாழவேண்டும்.

முக்கியமாக புளித்துப்போன  பிக்னிக் மற்றும் ஹோட்டல் கிளப்
பாடல்களுக்கு ஒரு வித்தியாசமான பரிமாணம் கொடுத்தார்.உதாரணம் “வான் எங்கும்”
(மூன்றாம் பிறை).

கவனிக்க வேண்டியது, பொழிந்த காலம் தொழில் நுட்பம் அவ்வளவாக முன்னேறாத காலம்.லேப்-டாப்பிலிருந்து பொழியவில்லை.ஆத்மார்த்தமாக இசைக்கப்பட்டது.

98% சதவீதம் அவர் பாடல்களில்  bass guitar பாட்டின் பின் தம்புரா சுருதி போல மெதுவாக ரீங்காரம் இட்டபடி இசைத்துக்கொண்டே பின் தொடரும். கவனமாக கேட்டால் ரசிக்கலாம்.
சதா என்கிற சதானந்த்
இவரிடம் சதானந்த்,சந்திரசேகர்,சாய்பாபா,டேவிட் ஜெயகுமார்(ஹாரிஸ் ஜெயராஜ் தந்தை),கங்கை அமரன்,ராதா விஜயன் மற்றும் சஷி போன்றவர்கள் கிடாரிஸ்ட்டாக பணிப்புரிந்துள்ளதாக வலையில் ஒரு செய்திப் படித்தேன்.
.
ராதா விஜயன்

 பாட்டு அல்ல.கடைசிவரை கட்டாயம் கேளுங்கள்(இதன் ஒலிப்பதிவு சூப்பர்)
 Guitar-SPB(16 takes).mp3


அன்னக்கிளி உன்ன தேடுதே(சோகம்-டிஎம்எஸ்) -அன்னக்கிளி-1976
00.11-00.25 முன்னணியில் ஒரு கிடாரின் சோகமும் பின்னணியில்(bass guitar) சோகமும்.
Guitar-AnnakiliUnnaiTMS-Sad.mp3

 Bass Guitar

கொடியிலே மல்லியப்பூ-கடலோரக்கவிதைகள்-1986
படத்தில் உள்ளதுதான் bass guitar இதை வைத்து முக்கால் பாட்டு இசைக்கிறார்.

உறுத்தாமல் பாட்டில் மயிலிறாக  அங்கங்கு வருடுகிறது.bass guitarக்கு என் அன்பு முத்தங்கள்.
Guitar-Kodiyile Malliyapoo.mp3

தத்தோம் தலாங்கு தத்தோம் - வெற்றிவிழா-1989
கிடாரே ஆச்சரியப்பட்டிருக்கும் “ நம்மிடம் இது மாதிரி ஒசையெல்லாம் வருமா?”தோல் கருவியின் வீரியத்தோடு கிடார் இசைக்கப்படுகிறது.அட்டகாசம்
Guitar-Thatthom Thalangu-Vetrivizha.mp3

அரும்பும் தளிரே - சந்திரலேகா-1995
பாட்டின் பின்னணியில் கிடாரின் நரம்புத் துடிப்புகள் அருமை.மிகவும் மென்மையான வித்தியாசமான உணர்ச்சிகள் கொண்ட பாட்டு.

0.45-1.03 வேறு ஒரு கிரகத்து இசை.பாட்டின் அதே மூடிலேயே இசையும். 0.50-0.55 கிடாரின் உணர்ச்சிகள் அருமை.பிரமிக்க வைக்கிறார்.
Guitar-Arumbum Thalire-Chandraleka.mp3

உத்தமபுத்திரி நானு-குருசிஷ்யன் - 1988
விதவிதமாக கலை உணர்வோடு மீட்டுகிறார்.வெளிப்படும் உணர்ச்சிகள் புல்லரிக்கிறது. தல ஒண்ணயும்  பிரியல!
Guitar-UthamaPuthiriNane.mp3

Mudhi Mudhi Ittefaq Se - Paa -2009 
0.46-0.57 மேற்கத்திய ஸ்டைல் வித்தியாசமாக கொடுக்கப்படுகிறது.இது மாதிரி நாம் கிடாரின் நாதத்தை கேட்டுருக்கிறமோ?

Guitar-Paa-MudhiMudhi-Shilpa.mp3

ராமனின் மோகனம் -நெற்றிக்கண்-1981
0.24-0.35 இடையில்(வேறு கருவி நாதத்திற்கு) இசைவாக மீட்டப்படுகிறது.கிட்டத்தட்ட வீணை மாதிரியே பயன்படுத்துகிறார்.சில சமயம் வீணையா கிடாரா என்று கண்டுப்பிடிப்பது கஷ்டம்.

கிடாரயே வீணை மாதிரி பயன்படுத்துவார் நண்பர் ரவி நடராஜன் சொன்னதுண்டு.ஒன்றுக்கொன்று வித்தியாசமான இசை கருவிகளின் நாதங்களை  இணைத்து ஒரு கெமிஸ்டரி உருவாக்குகிறார்.
Guitar-RamaninMoha.mp3

அதிகாலை நிலவே-உறுதிமொழி-1990
கிடார் தேனாக நாதத்தை இறைத்துக்கொண்டே போக மற்ற நாதங்கள் தேனீயாக மொய்க்கின்றது.ராஜாவின் அழகுணர்ச்சி(aesthetics)கிடார் தீற்றலில் மிளிர்கிறது
Guitar-AthikalaiNilave.mp3 

ஹே ராஜா-ஜல்லிக்கட்டு -1987
0.32-0.43கிடாரை வீணை மாதிரி மீட்டுகிறார்.முடிவிலும் ஆனால் வேறு மாதிரி.

தொடர்ந்து வரும் கிடார் தீற்றலில் 0.12ல் சர்ரென்று ஒரு வயலின் சரம் உருவிக்கொண்டு வந்து  0.19-0.24  கிளாசிகல் மணம் கொடுக்கிறது.Mindblowing maestro! 

Guitar-Jallikkattu-HeyRaaja.mp3


ஒரு சிரிகண்டால்(மலையாளம்) -பொன்முடிபுழையோரத்து-2005
முன்னணியில் வீணை நம்மை வருடுகிறது. பின்னணியில் கிடார் வீணையை வருடுகிறது.
Guitar-OruChirikandal--Ponmudipuzhayorathu.mp3
 
நிலா அது வானத்துமேலே - நாயகன் - 1987  
Guitar-Nila Athu Vanathu.mp3


ஆட்டுக்குட்டி முட்டையிட்டு - 16 வயதினிலே-1978
Guitar-Aatukuttimuttai.mp3
  
சிந்துநதிக் கரையோரம்-நல்லதோர் குடும்பம் -1979
Guitar-SindhunadhiKaraioram.mp3

குதிக்கிர குதிக்கிர - அழகர்சாமியின் குதிரை (ரிலிஸ்???)
Guitar-Kuthikkira Kuthikkira-Azhakarsamiyin.mp3

ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம்-1978
0.03-0.08 கவுண்டர் பாயிண்ட்(பு.குழல்-கிடார்).0.17-0.25 இரண்டு கிடார் நாதங்கள் கேட்கிறது.ஏதோ வித்தியாசமாக முயற்சித்திருக்கிறார்.

Guitar-OruVaanavilPole-Katrinile Varum.mp3

மஞ்சள் அரைக்கும்போது -ஆளுக்கொரு ஆசை -1977
Guitar-AalukuOruAasai-Manjal.mp3

ஏஞ்சல் -கவரிமான்-1979
Guitar-KavariMaan-Angel.mp3

அழகான பூக்கள் - அன்பே ஓடி வா -1984
Guitar-Anbe Odi Vaa-AzhagaanaPookal.mp3

ராஜராஜ சோழன் - ரெட்டை வால் குருவி -1987
மேஸ்ட்ரோவின் மாஸ்டர் பீஸ்.00.23பாடல் ஆரம்பிக்கும் போது plainஆக கிடாரை தீற்றியபடி ஆரம்பிக்காமல் வரவேற்பில் தலையில் பன்னீர் தெளிப்பது மாதிரி ஒரு அழகுணர்ச்சி.

0.47-0.57 இடையில் கிடாரின் உரையாடல் டச்சிங்.இரண்டாவது 0.52கிடாரின் (சிந்த்?)நாதம் அப்படியே பேசுகிறது.Highly divine and soulful.
Guitar-RajaRajaChozhan.mp3

கவுண்டர்பாயிண்ட்  கிடார் கவிதைகள்:
(ஒரே சமயத்தில் இரு வேறு மெட்டுக்களை இசைப்பது.கேட்பதற்கு ஒன்றுபோல் தோன்றும்)

கவிதை-1

பூந்தளிர் ஆட - பன்னீர்புஷ்பங்கள்-1981

 நிஜங்களின் நடனத்தில் இணையாக  நிழல்கள் இசைக்கும் கவிதை
  (கிடார் vs கிடார் மற்றும் ஹம்மிங் vs கிடார் )
ஹம்மிங்கிற்கு இசைவாக கிடார் தீற்றல் வளமான கற்பனை.
Guitar-Poonthaliraada.mp3

கவிதை-2
தேன்பூவே பூ -அன்புள்ள ரஜினிகாந்த்-1984
புல்லாங்குழலும் கிடாரும் தேன் பூவில் ரீங்காரமிட்டபடி ரொமாண்டிக் கவுண்டர்பாயிண்ட் அதில் தளும்பும் இசையின் அழகு. 
Guitar-TheanPoove.mp3

மலையோரம் வீசும் -பாடு நிலாவே-1987
சோகத்திற்கு கிடார் மாற்றப்படுகிறது.
Guitar-Paadu Nilave-Malaiyoram.mp3

மயிலே மயிலே - ருசி கண்ட பூனை-1978
0.08-0.16 புல்லாங்குழலுக்கு தாளமாக கிடார்.0.44-0.54 ஹம்சத்வனி ராக சாயலில் நாதம். இந்தப்பாடலே  ஹம்சத்வனி ராகம் என்று யூகிக்கிறேன்.
Guitar-MayileMayile.mp3


உனக்கெனதானே இன்னேரமா-பொண்ணுக்கு ஊரு புதுசு-1979
Guitar-Unakenethaane Innerama.mp3

வானெங்கும் தங்க வீண் மீன்கள்- மூன்றாம் பிறை-1982
ஜானகி ஒன்றை ஹம் செய்ய பாஸ் கிடார் வேறொன்று ஹம் செய்கிறது.

Guitar-Moondram PiraiVaanengum.mp3

ஓ மானே மானே - வெள்ளைரோஜா -1983
Guitar-Oh Mane Mane.mp3
கிடார் விட்டு விட்டு சினனதாக வித்தியாசமாக தீற்றப்படுகிறது.0.27-0.35 கிடார் -புல்லாங்குழல் பேச்சு அருமை.முதலில்0.08-0.20 வயலினோடு உரையாடுகிறது.
Guitar-Oh Mane Mane.mp3

பிறையே பிறையே - பிதாமகன் -2004
Guitar-PirayeaPirayea.mp3

சினோ ரீட்டா -ஜானி-1980
Guitar-Sinorita I love Johnny.mp3

என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி-1993
Raja is the King of Romanticization.பாடல்களை ஓவராக romanticize செய்கிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு இவர் மேல்.நல்லதானே இருக்கு.
Guitar-EnnulleEnnulle.mp3

என்னம்மா கண்ணு-மிஸ்டர் பாரத்-1986
0.25 வரை முனகிக்கொண்டே வரும்Bass Guitar பின்னால் வேறுவிதமாக இசைக்கப்படுகிறது
Guitar-YennammaKannu-MrBharath.mp3

அந்திவரும் நேரம் - முந்தானை முடிச்சு-1983
கிடாரை  ஜாலிக் கருவி என்று நினைக்கிறோம் இதில் வயலின் போல் இசைக்கப்படுகிறது.சூப்பர்.அதுவே ஒரு கலவையுடன் கொடுக்கப்படுகிறது. உற்றுக்கேளுங்கள்.
Guitar-AndhivarumNeram.mp3

எங்கெங்கோ செல்லும் - பட்டாகத்தி பைரவன் -1979
Guitar-Engekengosellem.mp3
                          
என்னடி மீனாட்சி -இளமை ஊஞ்சலாடுகிறது-1978
சொன்னது என்னாச்சு?மீனாட்சி மேல் கிடாருக்குக் கோபமோ?
Guitar-YeenadiMeenaakshi.mp3

அழகே உன்னை -அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்-1979
Guitar-AzhageunnaiAradhanai.mp3

மாமன் மச்சான் - முரட்டுக்காளை-1980 
Guitar-MamanMachan.mp3

பழமுதிர்சோலை - வருஷம் 16 -1989

Guitar-Varusham16-Pazhamuthir.mp3

மனதில் என்ன நினைவுகளோ-பூந்தளிர்-1979
 Guitar-ManathilEnnaNinaivugalo-Poonthalir.mp3

ஊமை நெஞ்சின் சொந்தம்- மனிதனின் மறுபக்கம்-1986
Guitar-Oomai Nenjin-Manithanin Marupakkam.mp3

ரோஜாவைத் தாலாட்டும் - நினைவெல்லாம் நித்யா-1982
0.16-0.17 மற்றும் 0.28-0.29 சிக்கலானச் சின்னத்திற்றலில் இசையைக் கோர்க்கிறார். இதைக் காப்பி அடிப்பது கூட  ரொம்ப கஷ்டம் என்று யூகிக்கிறேன்.
Guitar-RojaveThalaatum.mp3

யார் யாரோ எனக்கு -செல்வி-1985
Guitar-Selvi-YaarYaaroi.mp3

மண்ணில் இந்த காதல் - கேளடி கண்மணி-1990
Guitar-MannilIndha.mp3
 
வனிதா மணி - விக்ரம் - 1986
எனக்குப்பிடித்தமான ஒன்று. இதில் 0.12-0.16 ஒரு அதட்டல் தொனியை உணர்வேன்.0.18-0.27 பிரமிக்க வைக்கும் இசைத் துளி. இதனிடையில் ஒவ்வொரு தீற்றலுக்குப் பிறகும் வரும் ஒவ்வொரு(18/20/22/24/27) சின்ன நாதமும் அருமை.ஆச்சரியப்படுத்தும் கற்பனை.மிஸ் செய்யாதீர்கள்.
Guitar-VanithaMani.mp3

காதல் மகராணி - காதல் பரிசு-1987
0.12-0.14 அருமை. 
 Guitar-Kaathal Maharani-KaathalParisu.mp3

ஆடும் நேரம் இதுதான் - சூரசம்ஹாரம்-1988
GuitarAadumNeram.mp3

சங்கீத மேகம் - உதய கீதம் -1985
என்ன ஒரு வித்தியாசம்.

Guitar-Sangeetha Megam.mp3

காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு-1984
கிடாரில் ஒரு கவிதை.ரொம்ப அழகாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.ரஜினி ரொம்ப ஸ்மார்ட்.
Guitar-Kadhalin Deepam.mp3

பூவே செம்பூவே - சொல்லத் துடிக்குது மனசு-1988
கிட்டத்தட்ட 22 வருடமாக இந்த இசைப் பகுதியை ரூம் போட்டு பிரமித்துக்கொண்டிருக்கிறேன்.இவ்வளவு ரகளையில் இசை நாதங்கள் இருந்தாலும் மெலடி மற்றும் ஆத்மாவை மெயிண்டெய்ன் செய்கிறார். GuitarPooveSempoove.mp3

பூவாடைக் காற்று - கோபுரங்கள் சாய்வதில்லை-1983
Guitar-Gopurangal Saiva-Poovaadikaatru.mp3

காதில் கேட்டது - அன்பே ஓடி வா -1984
Guitar-KathilKettathu-Anbe Odi Vaa.mp3


செந்தூராப்பூவே - 16 வயதினிலே -1978
Guitar-SenthooraPoove.mp3

சுந்தரி நீயும் - மைக்கேல் மதனகாமராஜன் - 1990
Guitar-SundariNeeyum.mp3


”இளையநிலா”ஆவணப்படுத்த வேண்டிய ஒரு இசைக்கோர்ப்பு.


இந்தி,உதிரிக் கட்சிகள் மற்றும் பலர்

சில மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இன்றும் “Learn a Hindi word everyday" என்று பெயிண்ட் செய்யப்பட்ட தலைப்பில் ஒரு கரும்பலகை தொங்கும்.அதில் சாக்பீஸால் ஒரு இந்தி சொல்லும் அதன் கிழ் ஆங்கில தமிழ் மொழிப்பெயர்ப்பும் எழுதப்பட்டிருக்கும்.

இது எதற்கு?யாருக்கு?இதை எவ்வளவு பேர் கவனிக்கிறார்கள்? படிக்கிறார்கள்?2011லிலும் இந்த சம்பிரதாயம் ஏன் தொடர்கிறது.வேலைப் பார்க்கும் அலுவலர்கள் தினமும் கற்றுக்கொள்கிறார்களா?

ஒரு வாடிக்கையாளராக ஒரு மொழியைஆர்வமாகக் கற்றுக்கொள்கிறேன் என்றால் கூட  300(தோராயமாக) நாள் தினமும் செல்ல வேண்டும் அங்கு.சற்று வெட்கமாக கூட இருக்கும்.சொற்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது.

அரசு ஆணை சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

Once upon a time, very very very long ago ஹிந்தி(ராஷ்ட்ரா பாஷா) படித்தால் டெல்லியில் வேலைக் கிடைக்கும் என்று படித்தார்கள் தமிழ்நாட்டில்.ஜூனூன் சீரியலுக்காகவும்(பிறகு தமிழில் டப்பிங் செய்யப்பட்டுவிட்டது) படித்தார்கள்.

எந்த ஒரு கலை அல்லது மொழி கற்றுக்கொள்வதில் யாருக்கும் எந்த ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பது என் எண்ணம்.அது ஆர்வம் அல்லது தேவை சார்ந்து வரலாம்.
___________________________

தேர்தல் வந்தால் நிறைய உதிரிக்கட்சிகள் முளைக்கும்.இதில் ஜாதி கட்சிகள்,தமிழ் மீட்பு,உரிமையை நிலைநாட்ட,ஜனநாயக விழிப்புணர்ச்சி,ஊழல் லஞ்ச ஒழிப்பு முன்னணி என்று விதவிதமாக முளைக்கும்.ஏற்கனவே நிறைய இருக்கிறது.

இதில் ஜாதிக்கட்சிக்களுக்கு மற்ற கட்சிகளை விட மதிப்பு அதிகமாகிறது.மக்கள் மற்ற உதிரியை விட இந்த ஜாதிமல்லிதான் ரொம்ப விரும்புகிறார்கள்.தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.தங்கள் வியாபாரம் சார்ந்து ஆதரிக்கிறார்கள்.

இதன் வீரியம் சற்று அதிகமாக இருக்கிறது இந்த தேர்தலில்.பெரிய கட்சிகள் சீரியஸாக கவனிக்க ஆரம்பித்துவிட்டது. இதிலும் இரண்டு கட்சிகள் எப்போதும் உண்டு.ஒன்று அம்மா. இன்னொன்று அய்யா.

ஊழல் எதிர்ப்பு,உரிமை நிலைநாட்டல்,ஜனநாயக விழிப்புணர்ச்சி என்று பல பல வருடங்களாக போராடி வரும் இயக்கங்கள் இருக்கையில் இந்த உதரிக்கட்சிகள் எப்படி இயங்குகின்றன?

இந்தக் கட்சிகள் உண்மையான நோக்கத்துடன் போராடி
வந்தாலும் மக்கள் அதை அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை.மாறி மாறி கழகங்கள் அல்லது ஏதாவது ஒரு நடிகர் பின்னால் போவது.இதற்குத்தான் பழகி இருக்கிறோம்.

ஊழல்  மக்களுக்குப் பிடிக்கவில்லைதான்.அப்படியானல் ஊழல் எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏன் மக்கள் ஆதரவு இல்லை?

காரணம் நமக்கும் ஊழல் வசதியாக இருக்கிறது.எவ்வளவு பேர் சிரத்தையாக “எட்டு”ப் போட்டு ஓட்டுனர் உரிமம் வாங்கி இருக்கிறோம்?
___________________________


Monday, March 21, 2011

ஓட்டுக்கு காசு பாலிசிக்கு து(வே)ட்டு

வேட்பாளரை அவரின் தகுதி பார்த்து தேர்ந்தெடுப்பது உத்தமம்.பணத்திற்கு ஓட்டுப் போடுவது கேவலம்.

ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.ஆயுள் காப்பீடு முகவர்கள் ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு முதல் இரண்டுஅல்லது மூன்று தவணையோ இலவசமாக கட்டுவார்கள்.இது சட்டவிரோதம்.காரணம் காசுக்காக பாலிசி இல்லை. உங்கள் தேவைக்காகத்தான் பாலிசி.

இதை 98% கண்டுக்கொள்வதில்லை.இது இல்லாமல் வியாபாரம்
செய்வது கடினம்.நான் யாரிடமிமும் காசு வாங்கியதில்லை.அதற்காகவே எனக்கு சூப்பர் சர்வீஸ் விழுந்து விழுந்து கொடுப்பார்கள்.

ஒருவர் ரொம்ப பிடிவாதமாக ஒன்பது தவணைகள் இலவசமாக கட்டவைத்து காப்பீடு எடுத்துவிட்டார்.பாலிசிதாரருக்கு பெருமைப்பிடிபடவில்லை.ஆனால் முகவருக்கு கடுப்பான கடுப்பு செம்மை கடுப்பு.(இவன் செத்தா கிடைக்கும் தொகையிலிருந்து எனக்கு கமிஷன் தருவானா என்று சகமுகவரிடம் முணுமுணுத்தாராம்)

பாலிசிதாரர், சம்பளத்திலிருந்து தொழிலாளர் கூட்டுறவு சேமிப்புக்கிற்கு தவணைப்பிடிப்பதாக வீட்டில் ரீல் விட்டு அதை
குடிக்கு செலவழித்தார்.பாலிசி முகவரிடம் இருந்தது.பாலிசிதாரர் ஊர் மாறினார்.பிறகு இறந்தார்.அவர் இறந்து போனது ஐந்து மாதம் கழித்துதான் முகவருக்குத் தெரியும்.முகவரும் கண்டுக்கொள்ளாமல் ”காலாவதி பாலிசி" என்று சொல்லி விட்டுவிட்டார்.இரண்டு லட்ச ரூபாய் போச்சு.

துட்டுக்கு ஓட்டுப் போட்டால் இந்த முகவர் கொடுத்த மதிப்புதான் வாக்காளருக்குக் கிடைக்கும்.

Tuesday, March 15, 2011

எல்லாமே லேட்டுதான்/எல.ஆர்.ஈஸ்வரி/சர்வீஸ் மெக்கானிக்

புகைப்பிடிப்பதின் தீமையைப் பற்றி நிறைய விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இப்போது திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் பெரும்பாலும் குறைக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிகளில் அந்த காட்சி வந்தால் "புகை உடல் நலத்திற்கு கேடு” என்று போடுகிறார்கள்.
 
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தயாநிதி மாறனின் தொலைக்காட்சியில் போடுவதில்லை.இது முழு நீள (கொடூர) நகைச்சுவை.
பழைய தமிழ்ப் படங்களில்(கருப்பு வெள்ளை) சிகரெட்டை ஊதி
ஊதித்தள்ளுகிறார்கள்.சிவாஜி,ரங்கராவ்,எம்.ஆர்.ராதா,டி.ஆர்.ராமச்சந்திரன்,பாலையா,டி.ஆர்.மகாலிங்கம்,
சந்திரபாபு,ஜெமினி,ஜெய்சங்கர்,நாகேஷ் என்றபடி
 
இது ஹாலிவுட் படங்களின் தாக்கம்.அடுத்து கதாநாயகன் சிகரெட் பிடித்தால் ஸ்டைல்.சகலகலாவல்லவன்.ரஜனி தன் நடிப்பின் ஒரு அங்கமாகவே அதை வைத்திருந்தார்.பள்ளி பருவத்தில் பென்சிலை வாயில் வைத்து பிடிப்பது மாதிரி ஸ்டைல் காட்டுவது ஒரு ஸ்டைல்.

அப்போது ஏன் இல்லை விழிப்புணர்ச்சி. எல்லாமே லேட்டுதான்.ரூம் போடாமல் யோசித்தது.
 _____________________________________________________________

 சிறு வயதில் ஹோட்டலில் ஜுஸ் குடிக்கும்போது  உறிஞ்சிக் குடிப்பதற்கு ‘ஸ்ட்ரா” கொடுப்பார்கள்.வாய் அருகே கவ்வி குடிப்பதில் சிறு வயதுகாரர்களுக்கு பிரச்சனை அருக்கும்.ஒட்டகம் மாதிரி கழுத்தை உயர்த்தி குடிக்கவேண்டும்.

அப்போது” வாய் வைக்கும் இடத்தில் கொஞ்சம் வளைஞ்சுருந்தா ஈசியாகக் குடிக்கலாம்” என் சித்திப்பெண் சொன்னபோது நாங்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தோம்.


பிற்காலத்தில் அவள் சொன்னபடியே “ட” சைசில் வந்து குடிப்பதற்கு லகுவாகி விட்டது.”மாத்தி யோசி”த்தால் சிரிக்கிறோம்.
_______________________________________________________________

L.R.ஈஸ்வரியின் குரல் யாரிடம் இல்லாத அபூர்வமான குரல். “குடியிருந்த கோவில்” படத்தில் வரும் “துள்ளுவதோ இளமை” பாட்டு வாழ்நாளில் மறக்க முடியாத பாட்டு.பாட்டின் இசையும் அருமை.அதுவும் இரண்டாவது சரணத்தில் “வாய் பேச தோன்றுமா.... வாய்.... பேச தோன்றுமா...”சூப்பர்.சின்ன வயசுல அப்படியே போய் மனசுல பதிஞ்சுடிச்சா எக்கா!
 
அவர் குரலுக்கு பெரிய ரசிகன் நான்.இந்த பாடலில் ஒரு கர்நாடக கிளாசிக் டச் இருக்கும்.அடுத்து "அம்மம்மா கேளடி சேதி”(கருப்புப் பணம்) பாட்டு உருக்கும் பாட்டு.இவரைக் கேட்டு வளர்ந்ததால் மற்ற பெண் குரல்களின் ஆழத்தை அனுமானிக்க முடிகிறது.


_______________________________________________________________

கிழ் வரும் ஆடியோவில் இரண்டு பாடல்களின்  கிடார் இசை வருகிறது.என்ன படம்.00.07 க்கு பிறகு இரண்டாவது பாடல்.முதல் இசையில் கிடாருக்கு முன் வரும் இசை நாதம stunning!



 படங்களின் பெயர் என்ன?
_______________________________________________________________
சமீபத்தில் நண்பர் ஒரு பிரஷர் குக்கர் வாங்கினார்.அதில் ஒரு பிரச்சனை.போன் செய்து பிரச்சனையை சொன்னார்.சர்வீஸ் மெக்கானிக் பேசினார்.அவருக்கு ஒன்றும் தெரியாதாம். சர்வீஸ் என்ஜீனியர் வந்தால் கேட்டுச் சொல்கிறேன் என்றார்.

போனை வைத்துவிட்டு "ங்கொய்யாலா.என்ன கம்பெனிடா இது?” என்றார்.

பிரச்சனை?

குக்கர் சமைத்து முடித்த பிறகு திறந்தால் உள்ளே சாதம் கொட்டிக்கிடக்கிறது.அவரே 10 நிமிட கிச்சனில்(ரூம் போடாமல்) பொதுப்புத்தியில் யோசித்து விடைக் கண்டுபிடித்தார்

மீண்டும் அவனுக்கு போன் செய்தார். பிரச்சனையையும் அதன் தீர்வையும் அவனிடம் சொன்னார். அவன் ஏதோ சொன்னான்.  ”டேய் ங்கொய்யாலா. என்று  இம்முறையும் சொல்லிவிட்டு வைத்தார்.

ஏன் இந்த ரெண்டாவது ”டேய் ங்கொய்யாலா”?

”ரொம்ப தாங்க்ஸ் சார்! நீங்களே பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிச்சுட்டீங்ன்னு எங்க சர்வீஸ் என்ஜினியரட்ட சொல்லிடரேன்.அகெய்ன் தாங்கஸ் சார்”

Moral of the Story:

பொருள்களை  சர்வீஸ்/சேல்ஸ் செய்யும் எந்த ஒருவரும் தன் பொருளைத் தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்று.

Know your product always!

Wednesday, March 9, 2011

கருணைக் கொலையும் மும்பாய் நர்சுகளும்

அருணா ராமச்சந்திரா ஷான்பாக்கின் தோழி, பின்கி, அருணாவைக் கருணைக் கொலை செய்வதற்க்கு மனுப்போட்டிருந்தார்.ஆனால் அதை சுப்ரீம்கோர்ட் நிராகரித்துவிட்டது.காரணம் தோழி என்ற முறையில் அவருக்கு உரிமை கிடையாது.இப்போது அருணா இருக்கும் மருத்துவமனைக்குதான் உரிமை உண்டு என்று சொல்லியது.

அதே தீர்ப்பில் எந்த ஒரு மனிதரும் நிரந்தரமாக பச்சைக்காயைப்(permanent vegetative state) போல் எந்தவித மூளை/உடல் சம்பந்தமான இயக்கங்கள் இல்லாமல் படுத்தபடுக்கையாக இருந்தால் அவரை மருத்துவ ஆலோசனை மற்றும் நீதிமன்ற உத்திரவின் பேரில் கருணைக் கொலை செய்யலாம்.அவரின் உடலில் இருந்து வாழ்வாதாரக் குழாய்களை எடுத்துவிட்டு என்றும் சொல்லி இருக்கிறது.இது மென்மையாகக் கொல்வது(passive killing).

 இதைத் தவறாகப் பயன்படுத்த முன்னோடியாக இருக்கக்கூடாதும் என்று சொல்லி இருக்கிறது.

                              (அருணாவின் இளவயது தோற்றம்)

மும்பாயில் நர்சிங் மாணவியாக இருந்த அருணா (62) 27-11-1973 அன்று மருத்துவமனை காமுகன் வார்டு பையன் ஒருவனால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு பிறகு நாய் கட்டும் சங்கிலியால் கழுத்து நெறிக்கப்பட்டு உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு  37 வருடமாக படுத்தப் படுக்கையாகி விட்டார்.மிகச் சிறு உணர்வுகளுடன்தான் இருக்கிறார்.

                                                  (அருணா இன்று)

அருணா வேலைப் பார்த்த மருத்துவமனைதான் இன்றுவரை அவரை கவனித்துக்கொள்கிறது.அருணாவின் அம்மா அப்பா இறந்துவிட்டார்கள்.வயதான சகோதரனால் பார்த்துக்கொள்ள இயலவில்லை.இன்னொரு உறவுக்காரர் கொஞ்ச நாள் மட்டும் கவனித்துவிட்டு திருமணம் ஆனதும் கவனிக்கவில்லை.
(சுப்ரீம்கோர்ட் தீர்ப்பைக் கொண்டாடும் மும்பாய் KEM மருத்துவமனை நர்சுகள்)

இப்போது பதிவின் முக்கியமான பகுதிக்கு வருகிறேன்:

மருத்துவனை மொத்தமும் “அருணா எங்கள் உடன் பிறந்த சகோதரிபோல” அவர் வாழ்வதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது என்றபடி கொண்டாடுகிறார்கள்.இப்போது அருணா மருத்துவமனையின் மொத்தப்பொறுப்பில் இருக்கிறார்.அருணா அவர்களின் சக அலுவலராக இருந்தவர்.

இவர்களில் யாராவது ஒருவர் தன் சுயப் பொறுப்பில் 37
வருடம் வீட்டில் வைத்து அருணாவை கவனித்துக்கொண்டிருப்பாரா?

ஏன் இந்தக் கேள்வி எழுகிறது என்றால்,சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பண்டில் பண்டிலாக துணிகளையும் மற்ற உதவிகளையும் செய்தோம்.காரணம் இதில் பொறுப்பு எதுவும் கிடையாது.

அனாதையாக்கப்பட்ட குழந்தைகளைத் தத்து எடுத்துகொள்ள யாரும்(99%) வராததற்குக் காரணம் நீண்ட காலப் பொறுப்பு.உணர்ச்சி வேகத்தில் ஏதாவது செய்துவிட்டு பின்னால் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது.

அருணா என்னைச் சேர்ந்தவராக இருந்தால் நான் என்ன செய்வேன்?இப்போது இருக்கும் நிலமையில் கருணைக்கொலைக்கு ஆதரவு தருவேன்.காரணம் அவர் மேல் இருக்கும் அன்புதான்.இது மாதிரி ஒரு வாழ்வு தேவையா? வாழ்வதற்கு உரிமை இருந்தாலும் அதை சுயமரியாதையுடன் அல்லது கண்ணியத்துடன்(dignity of life) வாழ்கிறரா?

ஒருவரைக் கொன்றுத்தான்(killing)அவரின் வலியைப் போக்குவது என்பது மனதைப் பிறாண்டத்தான் செய்கிறது.

இது மாதிரி முக்கியமான விஷயங்களில் நம்முடைய அடிப்படை உணர்ச்சிகளை  மனதைத் தளரவிடாமல் கைவிட்டு அடுத்தக்கட்டத்திற்கு நகர்வது நல்லது.

டெயில் பீஸ் -1
அவ்வளவுதான் இனிமேல் ஒன்றும் செய்யமுடியாது என்று மருத்துவமனையில் படுத்தப்படுக்கையாக இருந்த
முதியவர்கள்/இளையவர்கள் மூச்சுகுழாய்கள் எடுக்கப்பட்டு சிம்பிளாக உயிர் பிரிந்ததை (கருணைக்கொலை)பார்த்திருக்கிறேன் மற்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த வருத்தமும் இருந்ததில்லை.

டெயில் பீஸ் -2
சோகன்லால் வால்மீகி,குற்றவாளி 7 வருடம் தண்டனை அடைந்து வெளியே வந்துவிட்டான்.இப்போது அவனுக்கும் வயது 60க்கு மேல்?


Monday, March 7, 2011

சினிமா டிக்கெட் 150/- பார்க்கிங் 120/-

ஒரு காலத்தில் வாசல் மெயின் கேட்டுகளில்  “Keep the door closed" என்றொரு போர்ட் தொங்கும். அதெல்லாம் போய் இப்போது சென்னையில் (10-12 வருடமாக)”No parking in front of the gate" "Do not park vehicles in front of the gate" போன்ற போர்டுகள், கோவில் அரச மரத்தில் தொங்கும் பிராத்தனை வேண்டுதல் பொருள்கள்போல் தொங்க ஆரம்பித்துவிட்டன.யாரும் இதை இம்மிக்கும் பொருட்படுத்துவது இல்லை.

ஒரு தனி வீட்டில் கிட்டத்தட்ட 12 போர்டுகள்.

லோக்கல் எலெக்ட்ரிஷியன் அல்லது பிளம்பர் அல்லது இன்ஷுரன்ஸ் ஏஜண்ட் விளம்பரத்திற்காக  ஒரு கலர் தகரத்தில் மேலே மேல் சொன்ன வாசகமும் கிழே தன் செல் நம்பரைப் போட்டு வீட்டு உரிமையாளருக்குத் தெரியாமல் மாட்டிவிட்டுப்போய்விடுகிறார்கள்.அடுத்து டியூஷன் செண்டர் ஆசாமிகள்.

பார்க்கிங் பிரச்சனை அந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிட்டது சென்னையில்.காரணம் தொலைநோக்குப் பார்வை இல்லாத அரசும், பொதுமக்களும், பொது நிறுவனங்களும், மற்றவர்களும்.

மால்களில் இரண்டு நான்கு சக்கரவாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் கொள்ளையடிக்கப்படுகிறது என்று பலரும் அவ்வப்போது எழுதி இந்த அநியாயத்தைக் கேட்க ஆளே இல்லையா என்று புலம்புகிறோம்.

நானும் அதில் பாதிக்கப்பட்டேன்.முதன்முறை பிவிஆர்(அம்பாமால்) தியேட்டரில் படம்  பார்க்க கட்டணம் 150/-.பார்க்கிங் 120/-.பார்த்தப் படமே மறந்துவிட்டது.

இந்த அநியாயத்தைக் கேட்க ஆளே இல்லையா என்று கேட்பதற்கு முன் இதில் இன்னோரு கோணம் இருப்பதைப் பார்ப்போம்.

வாகனங்கள் பெருகிய அளவுக்கு ஈடாக இடம் பெருகவில்லை.Demand is more than Supply.அதை பெருக அல்லது உருவாக்க  முடியாது.அது நிலம். இருக்கிறதை வைத்துதான் சமாளிக்க வேண்டும்.சமாளிக்க என்றால் சும்மா இல்லை.பூமி பூஜை போடுவதற்கு முன் யோசிக்க வேண்டிய விஷயம்.

ஆனால் மால்கள் தோராயமாகத்தான் இதைப் பற்றி யோசிக்கிறது.
 
இதற்கு “பார்க்கிங்” போட்டு நிறைய யோசிக்கனும்.தொலை நோக்குப் பார்வை வேண்டும் மற்றும் Massive plan.நிறைய முதலீடு தேவைப்படும். Terrace parking அபிராமி மாலில் செய்யப்படுகிறது.அரசாங்கம் பல அடுக்கு (multilevel parking) பார்க்கிங் பற்றி யோசித்து வருகிறது.மாலும் தியேட்டரும் சேர்ந்து இருக்கும் இடத்திற்கு நிறைய பார்க்கிங் இடம் தேவைப்படுகிறது.

இடத்தை உருவாக்க முடியாததால் சுலபமான வழியான “வாகனம் கொண்டு வராதே” பின்பற்றுகிறார்கள்.

சென்னையில்  ஒரு கிறித்துவர் இடுகாட்டில்(புதைக்கும் வழக்கம்) பிணங்களுக்கு புதைக்க இடம் இல்லாமல்  கல்லறைகள் நிரம்பி வழிந்து காபின் வைக்கலாமா என்று யோசிப்பதாக படித்தேன்.

கட்டியாச்சு.சமாளிக்க முடியல. சரி பார்க்கிங்கு ”மீட்டர் வட்டி”
போடுவது போல் போட்டுத் தாளித்துவிட்டார்கள் மால்காரர்கள்.வேறு வழியில்லை.

சாதா கட்டணம் வைத்து நிரம்பி வழிந்தால்,யாருக்கு முன்னுரிமை கொடுப்பது ஷாப்பிங் வருபவர்களுக்கா அல்லது சினிமா டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கா?

கடனுக்கு உரிய சான்றிதழ்களை பேக் டூ பேக் போட்டோகாபி எடுத்துக்கொடுத்தால் உடனே வண்டி கொடுக்கிறார்கள்.இடம் கொடுப்பதில்லை.அது தவிர இப்போது விதவிதமான வடிவங்களில்  இடத்தை அடைத்துக்கொள்ளூம் (Tata innova/Toyoto Qualis)வாகனங்கள்.

சென்னையில் மத்தியதரம் மற்றும அதற்கும் கிழ்,விளிம்பு நிலை மக்கள் வாழும் இடங்களின்  பொதுப் பாதைகளில் இரு சக்கரவாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ,டெம்போக்கள் நிரம்பி வழிகிறது.


அதே மாதிரி உயர்மத்தியவர்க்கம் மற்றும் இரண்டாவது அல்லது மூன்றாவது கார் வைத்திருக்கும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் இடங்களின் பொதுப் பாதைகளில் வாகனங்கள் நிரம்பி வழிகிறது.மற்றும் கடை வாசல்களில்.
வண்டியை எடுக்கையில் பல சமயங்களில் இரு இடங்களிலும் தகராறு ஏற்படுகிறது.


ஆறு மணிக்கு மேல் சாதாரண ஒரு டாஸ்மாக் கடைவாசலில் விதவிதமான இரு சக்கரவாகனங்கள்.

சாதாரண கட்டணம் இருந்த ஒரு மாலில் ”Excuse us.Parking full" என்றிருந்தது.
திருதிருவென்று விழித்துவிட்டு திரும்பிவிட்டோம்.

மால்களுக்கு வருபவர்கள் சராசரியாக இரண்டு மணி நேரம் தங்குகிறார்கள்.இதில் தியேட்டர் இருந்தால் சராசரி மூணரை மணி நேரம்.இதில் ”சும்மா” பொழுதுப்போக்க வருபவர்கள் அதிகம் என்று ஒரு தகவல் சொல்கிறது.சிலர் காதலர் பூங்கா போல் மணிக்கணக்கில் சுற்றுகிறார்கள்.இது தவிர Scootyகள் அதிகமாகிவிட்டது.

இது தவிர மாலில் வேலைப்பார்வர்களின் பிசினஸ் செய்பவர்களின்  வாகனங்கள்.தோரயமாக 200 இருக்கலாம்.மேலேயே இருக்கும்.

சாதாரண நாட்களிலேயே சில மால்கள் பொங்கிவழிகிறது.விடுமுறை நாட்களில் விளம்பரதாரர்கள் தங்கள் ஷோக்களைப் போட்டு கூட்டம் போட்டு மோடிவித்தைப் போல் எதையோ  காட்டுகிறார்கள்.அதற்கு இளைஞர்கள் கூட்டம் அம்முகிறது.

அண்ணா நகரில் இருக்கும் ஒரு கையேந்திபவனில் டிபன்
சாப்பிடவதற்கு இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தில் வண்டியை விட்டுவிட்டு வரவேண்டும்.அதே மாதிரி தி.நகரிலும்.அடிக்கடி பதிவர் சந்திப்பு நடக்கும் இடமான கேகே நகரிலும் இதே பிரச்சனைதான்.

அண்ணா நகரில் இருக்கும் என் நண்பரின் தனிவீட்டில் ரூபாய் 3500/- சம்பளத்தில் ஒரு செக்யூரிட்டி போட்டிருக்கிறார்கள். எதற்கு?”தயவு செய்து வாகனங்களை நிறுத்தாதீர்கள்” என்று சொல்லி விரட்டுவதற்கு.


அடுத்தக் கொடுமை கன்னபின்னாவென்று பார்க் செய்வது.டிராவல்ஸ் மற்றும் கால் டாக்சிகாரர்களின் பார்க்கிங் அதிகமாகிவிட்டது.

பிளாட்டுக்கட்டுபவர்கள் பார்க்கிங்கிற்கு என்று லட்சக்கணக்கில் வாங்குகிறார்கள்.பார்க்கிங் வாங்கி வாகனம் இல்லாதவர்கள் அதை மற்றவர்களுக்கு (இரண்டாவது வாகனம்) வாடகைக்கு விடுகிறார்கள்.

பிளாட்டில் கொடுத்த பார்க்கிங்கிறகு ஏற்றர்போல் வாகனம் (Tata innova)இல்லாமல் பக்கத்து பார்க்கிங் வண்டிமேல் பம்பர் இடித்து ஆங்கிலத்தில் ஒரே ரகளை.

இப்போது இருக்கும் தியேட்டர் மால்களில் கட்டணத்தைக் குறைத்தால் கூட்டம் இன்னும் கூடும். அதற்கும் தயாராக இருக்கவேண்டும்.

டெயில் பீஸ்-1: 
கணினியில் பைல்களை சுருக்குவதற்கு zip இருப்பது மாதிரி வண்டிகளையும் சுருக்க ஏதாவது கண்டுபிடிக்கவேண்டும்.

டெயில் பீஸ்-2: 
பார்க்கிங் கொள்ளை என்றவுடன் இன்னொரு விஷயம் ஞாபகம் வரும். 

ரொம்ப வருடம் முன்பு பன்னாடு நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபோது  அடிக்கடி நெட்வொர்க் கணினியில் வைரஸ்.காரணம் பிளாப்பி டிரைவ்.பிளாப்பி டிரைவ் உபயோகப்படுத்தக்கூடாது என்று எவ்வளவு சொல்லியும் யாரும் கேட்கவில்லை.ஒரே நாளில் எல்லா(106) கணிகளில் பிளாப்பி டிரைவ்வை கழட்டி விட்டார்கள்.

டெயில் பீஸ்-3: 
சென்னையில் மிகவும் நம்பகமான ஒரு நிதி நிறுவனத்தில் fixed depositல் பணம் அளவுக்கு மேல் நிரம்பி வழிந்தது.போதும் என்றாலும் கொட்டினார்கள் மக்கள். வட்டியைக் குறைத்தாலும் கொட்டினார்கள்.ஒரு கட்டத்தில் வாங்குவதையே நிறுத்திவிட்டார்கள்.

.


Saturday, March 5, 2011

இளையராஜா- King of Musical Voices-1

இளையராஜாவின் இசையில்  மற்றொரு முக்கியமான   அங்கம் பாடல்களின் இடையே  (filler) இசைக்கப்படும்  குரல்கள்.

இவை  வித்தியாசமான இரட்டைக் கிளவி அல்லது அடுக்குத் தொடர், அர்த்தம் பொருந்திய/பொருந்தாத ஜதிகள் அல்லது சொற்கள் அல்லது/வார்த்தைகள்  என்று சொல்லலாம். இவை பற்றிப் பார்ப்போம் இப்பதிவில்.

இம்மாதிரியான குரலிசைகள் ஜாலி,குழந்தைகள் குஷி,கடல்/ஆறு,கிராமம்,நடனம்,ஆதிவாசி,கோரஸ் சம்பந்தப்பட்டுப் பெரும்பாலும் இசைக்கப்படுகிறது.
(சிக்குமங்கு சிக்குமங்கு செக்கபப்பா... நாங்களும் இது மாதிரி சவுண்ட் விட்டோம் அந்தக் காலத்துல)

இது ஹம்மிங்கிலிருந்து வேறுபடுகிறது.

நாம் நடைமுறை வாழ்க்கையில் குழந்தைகளைக் கொஞ்சும்போது செல்லமாக அர்த்தமில்லாத வார்த்தைகளைச் சொல்லி கொஞ்சுவோம்.குழந்தை சொற்களின்
/வார்த்தைகளின் ஓசையின் அங்கதத்தைக் கேட்டுச் சிரிக்கும்.


மேஸ்ட்ரோ இம்மாதிரி குரல்களைப் பாட்டின் இடையே தொடுத்து அழகுப்படுத்துகிறார்.இதையும் ஒரு கலையம்சத்தோடுச் செய்கிறார்.களிமண் அடைப்பதுபோல் அடைப்பதில்லை.அதற்கும் ஒரு பரிமாணம் கொடுக்கிறார்.

முக்கியமாக ஸ்டைல் இருக்கிறது. ஆத்மா இருக்கிறது.

பாடலின் சூழ்நிலையைப் பொருத்து குரல்கள் அமைக்கப்படுகிறது.

நான்கு பாடல்களில்  கடல் மற்றும் ஆறு சம்பந்தப்பட்ட  காட்சி வருகிறது.அதற்கு நான்கு விதமான  துடுப்புப் போடும் குரல்கள்.

1.காவிரியே கலைக்குயிலே 2.தாலாட்டுதே வானம்
3.கடலோரம் கடலோரம் 4.வெற்றி வெற்றி

வழக்கமான ”ஏலேலோ அய்லசா...ஏலேலோ அய்லசா”வை கொடுக்கவில்லை மேஸ்ட்ரோ.மாத்தி யோசி!

பருவ காலங்களின் கனவு-மூடுபனி-1980
”தகதகதாங்கு தகதக தாங்கு”(இரட்டைக் கிளவி?)ஜானகி சூப்பர். 0.10 கிடார் ஒரு அப்பு அப்பிவிட்டு ஷணத்தில்  மறைகிறது.
Voice Moodupani-Paruva.mp3

சோளம் வெதக்கையிலே - 16 வயதினிலே-1978
VoiceSolamvedhakkaiyile.mp3

காவிரியே கவிக்குயிலே - அடுத்தவாரிசு-1983
கப்பல் டூயட்.இதில் வரும் குரல்  வித்தியாசமானது. அட்டகாசம்.
VoiceAduthavaarisu-Kaveriye.mp3

ஜின்ஞ்னாக்டி ஜிங்கலங்கடி -வண்ண வண்ண பூக்கள்-1992
VoiceVannaVannaPangunikapuram.mp3

மார்கழி பார்வை பார்க்கவா- உயிரே உனக்காக-1984
(நதியா-மோகன் நடித்த படம் அல்ல.இதே பெயரில் வேறு படம் (பிரபு-சுலக்‌ஷணா)பூஜைப்போடப்பட்டு நின்ற படம்)
VoiceUyireUnakkagaMaargazhiPaarvai.mp3

வானெங்கும் தங்க விண்மீன்கள்-மூன்றாம் பிறை-1982
இந்த “தத்துத்துத்துத்” படத்துல ஒரு திருப்புமுனை. இவர்தான் “தத்துத்துத்” சொல்ல ஆரம்பிச்சு  பின்னால் காரில் வரும் ஸ்ரீதேவி குஷியாகி திரும்பிப்பார்த்து லாரி மோதி......கடைசில கமல் பிளாட்பாரத்துல குட்டிக்கரணம் அடிச்சு...படம் முடிகிறது.

“தத்துத்துத்துத்”சொல்லாம இருந்திருந்தா?
VoiceMoonPiraiVaanengum.mp3

தூரி தூரி தும்மக்க - தென்றல் சுடும்-1989
குழந்தைகளின் மழலைச் சிரிப்பு கொள்ளை அழகு.
VoiceDhooriThendralSudum.mp3

இளம் மனதினில் - மஞ்சள் நிலா-1982

VoiceIlamanathinil-ManjalNila.mp3 

சொர்க்கம் மதுவிலே - சட்டம் என் கையில்-1978

VoiceSattam En Kaiyil-SorgamMathu.mp3

தாத்தா தாத்தா கை -அன்புள்ள ரஜனிகாந்த்-1984
VoiceAnbulla Rajinikanth.mp3

சுக ராகமே சுப போகமே - கன்னிராசி-1985

VoiceSuga Raagameykannirasi.mp3

வெற்றி வெற்றி - கட்டுமரக்காரன்-1995
வேகமாக வரும் தாளக்கட்டு 0.43ல் மாறி மெதுவாகி பாட்டு ஆரம்பித்து “முத்தம்மா”க்கு பிறகு வரும் heavenly ஹம்மிங் அட்டகாசம்!Only Maestro can do it! 0.(40-0.42 இல் ஒரு வித்தியாசமான நாதம் கேட்கிறது.Soulful music bit!)
VoiceVetriVetri-Kattumararakaran.mp3

தோப்பிலொரு நாடகம் நடக்குது -கல்லுக்குள் ஈரம் -1980
VoiceThoopiloru Nadagam.mp3

சிங்களத்து சின்னக்குயிலே - புன்னகை மன்னன்-1986
VoiceSingalathuchinna.mp3

டிங்கு டாங்கு - வள்ளி-1993
சூப்பர் ஸ்டார் இல்லக்கிழத்தி லதாரஜினிகாந்த் பாடறாங்க.
VoiceValli-DinguDaangu.mp3

தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்-1981
VoiceKadalMeengalThalaa.mp3

புதுச்சேரி கச்சேரி - சிங்காரவேலன்-1992
VoicePuthucheri.mp3

எங்கேயோ திக்குதெச - மகாநதி-1994
VoiceMahanadhi-(bengali)Engeyo.mp3

காதல் ராகமும் - இந்திரன் சந்திரன்-1990
VoiceIndranChandranKadhalRaga.mp3

இதயம் போகுதே - புதிய வார்ப்புகள்-1978
ஜென்சியின் எட்டுப்பட்டிக்கும்  கேட்கும் வீர்யமான இனிமையான குரல.
 
”லாலாலல லாலலால”வை குறுக்கிடும் துந்தனா அழகுப்படுத்துகிறது.பழைய நினைவு கதாநாயகிக்கு?
VoiceIdhayampoguthey.mp3

இது ஒரு நிலா காலம் - டிக் டிக் டிக்-1981
Voice Idhuoru Nila-Tik.mp3

எங்கும் நிறைந்த இயற்கை - இது எப்படி இருக்கு-1978
VoiceEngumNiraintha.mp3

இதழ் எனும் மடலிலே - காவலுக்குக் கெட்டிக்காரன்-1990
VoiceKaavalukkuKetti-Idhazhenum.mp3

தேவனின் கோவில் - அறுவடை நாள்-1986
Voice Devanin Koil-Aruvadai Naal.mp3

மீன் கொடி தேரில் - கரும்பு வில்-1980
VoiceMeenkodiTheril.mp3

கடலோரம் கடலோரம் - ஆனந்தராகம்-1982
VoiceAnantha RaagamKadaloram.mp3

தேவதைபோலொரு - கோபுரவாசலிலே-1991
VoiceGopura VasalileDevathai.mp3

மஞ்சள் நிலாவுக்கு - முதல் இரவு-1979
சுசிலா மேடம்தான் ரயில் விடறாங்க.ஜெயசந்திரன் சார்  ஏன் விடல?
VoiceManjalNilavukku.mp3

ராமன் ஆண்டாலும் - முள்ளும் மலரும் -1978

ராக்கம்மா கையத்தட்டு - தளபதி -1991
VoiceRakkammaKaiya.mp3

.

மணப்பெண்ணான காங்கிரஸ்

எப்போதும் மணப்பெண் தோழியாக இருந்த காங்கிரஸ் இப்போது மணப்பெண் ஆகி நிறைய கேட்கிறது.கலைஞர் டெல்லிப் போய் கேட்டார். இவர்கள் சென்னை வந்து நிறைய கேட்கிறார்கள்.காங்கிரசுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.ராசா கை வச்சு ராங்காகப் போய் கலைஞரைப் படுத்துகிறது.
ராசாவும் ஈழமும் இரண்டுக்கும் மைனஸ்தான்.இதைத் தவிர டெல்லி ஊழல்கள்.

எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆயிடுச்சி.
 (233 சீட்டும் நீங்களே எடுத்துங்குங்க. எனக்கு சேப்பாக்கம் மட்டும் போதும்)

கூட்டணிகளில் இருக்கும் எல்லா கட்சிகளுமே ஆட்சியில் பங்கேற்று ஒன்றுக்கொன்று “கண்காணிப்பாக” இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது.பயம் இருக்கும்.ஆண்டுக்கு ஆண்டு ஆளும்கட்சியின் அதிர்ப்தியில் பல ஜாதிக் கட்சிகள் உருவாகி ஓட்டு வங்கி குறைய ஆரம்பிக்கிறது.

“கண்காணிப்பு” வேறு விதமாக ஆகி “நா கண்டுக்கல நீயும் கண்டுக்காதே” ஆயுடுச்சின்னா? கடவுள்தான் காப்பாத்தனும்.

கூட்டணிக்கட்சிகளும் முதல் போட்டுத்தானே அரசியலுக்கு
வந்திருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் கூட்டணி ஆட்சி வரக்கூடிய சாத்தியக்கூறுகள் பிரகாசம்.


 (என்ன சாப்பிட்டுறீங்க  மிஸ்டர் விஜய்காந்த் ஹாட் ஆர் கோல்ட்?)

திமுக-காங்கிரஸ் கூட்டுப் பழகிப்போன ஒன்று.பழைய ஜோடி.தேமுதிக-அதிமுக புது கூட்டு.புது ஜோடி.இதற்கு ஆர்வக்கோளாறில் ஓட்டு விழும்.

முதலி சீட் ஒப்பந்தம்.அடுத்து யார் யார் எங்கு நிற்பது.அடுத்து
பணம் செலவழிப்பது.உள்குத்து வெளிகுத்து.கள்ளவோட்டு.வாக்காளருக்கு கட்டிங்.ஓட்டு எண்ணிக்கை.இழுபறி.வன்முறை.வோட்டு மறு எண்ணிக்கை.

இவ்வளவையும் கடக்கவேண்டும் நம் இனிய தமிழ்மக்கள்.தல சுத்துதே.ஒரு வாரம் டாஸ்மாக் கிடையாது.


 இதையும் மீறி என் கவலை:

இந்த தடவை காலையில் ஏழு மணிக்கு நான்தான் முதல் ஆளாக வோட்டுப் போடப்போகிறேன்.போனதடவை அரைமணி நேர தாமதத்தில் என் வோட்டை யாரோ ஆட்டைப் போட்டுவிட்டார்கள்.


Wednesday, March 2, 2011

இறந்துப்போன பதினாலாவது ஆள்

”என் பேரு சத்தியமூர்த்தி.நான் இந்த எட்டாம் நம்பர் வீட்லதான் குடி இருக்கேன்.வேற வழி இல்ல.டபுள் பெட்ரூம் வீட்டக் கட்டிட்டு சும்மா பூட்டி கிடந்த வயத்தெரிச்சலா இருக்கு.இங்கிருந்து ஆபிசுக்கு தினமும் காஞ்சிபுரம் போய்ட்டு வரேன்.முடியாமத்தான் போறேன்.உடம்பு இத்துப்போய்டுது. குடும்பமும் கஷ்டப்படறாங்க.என்ன செய்றது?”

”இந்த வீட்டுக்கு எவனும் குடி வரமாட்டேன்றான்.வீடு என்ன இந்தத் தெருவுக்கே வர மாட்டேன்றான்.அதுவும் ரோடுக்கு வலது பக்கம் இருக்கிற வீடுகளுக்கு.எதிர்சாரி வீடுகளுக்கு அடிச்சுப் பிடிச்சுட்டு வரான். செம்ம வாடகைங்க.பொறாமையா இருக்கு.”

“இந்தத் தெருவச் சுத்தி எல்லா வசதியும் இருக்கு. முக்கியமா பள்ளிக்கூடம் காலேஜ் வசதிகள்.அப்புறம் பிபிஓ கம்பனிங்க ஜாஸ்தி. ஏப்ரல் மேல டிமாண்ட் அதிகமாகும்.ஆனா வலது பக்கம் தல வச்சுப்படுக்கமாட்டேன்றான்க.அதுவும் 18-25 வயசு பொண்ணோ புள்ளையோ இருக்கறவங்க.எங்க குடும்பத்தல அந்த வயசுல யாரும் இல்ல.”

”காரணம் வரவங்க 18-25 வயசு அல்பாய்சல போய்டுறாங்களாம்.போகட்டும் ஆனா இவனுங்க  சடங்குன்னு  சடங்குன்னு ஒரு ஷாமியானப்போட்டு ஊரக்கூட்டுவானுங்க. அடுத்தது பிளக்ஸி பேனர்”.

” செத்தவங்க திருப்பி  பிளக்ஸி பேனர்ல ஒரு மாசம் சிரிச்சுக்கினு இருப்பாங்க. அதான் தாங்க முடியாது.இங்க செத்தது எல்லாம் ஒண்ணு விடாம பிளக்சி பேனர்ல சிரிச்சிட்டு நின்னாங்க. பார்க்கவறங்க “ என்ன சின்ன வயசுல போய்ட்டாங்கன்னா” பதில் சொல்வறன் “ வீடுகள் ராசி இல்லாத காத்து கருப்பு சுத்தற வீடு”சொல்லிடறாங்க. தேமேன்னு இருக்கிற வீடுகளுக்கு கெட்டபேர் வந்துடுது”

”ரெண்டு வருஷத்துல 22 பேர் செத்துட்டாங்கன்னு ஒரு கணக்கு
சொல்றாங்க.அது பொய் கணக்கு.இதுக்காகவே மெனக்கெட்டு விவரம் எடுத்தேன்.வீட்ட வாடகைக்கு விடனும்.நல்ல வாடகை வரும்.கடன அடைக்கனும்.

”ரொம்ப மெனக்கெட்டேன்.அந்த ஏரியா  நல சங்கம் கூட்டம் மாசமாசம் நடக்கும் அதுல விவரம் கொடுத்து மக்களுக்கு விழுப்புணர்ச்சி ஏற்படுத்தலாம்னுதான்.இத நிறைய பேர்ட்ட சொன்னேன். நமுட்டா சிரிச்சாங்க. இது பரவாயில்ல பாதிக்கப்பட்ட வலது பக்ககாரனும் “வேலைக்கு ஆவுமா” என்கிற மாதிரி பார்க்கிறான்.”

”கஷ்டப்ட்டு எல்லா விவரமும் சேகரிச்சேன்.ரொம்ப சந்தோஷமா இருக்குது.மீட்டிங்குல கொடுத்தட வேண்டியதுதான்”

13 பேர் செத்த விவரம்:

  1. 2 பேர் (இரட்டைப் பிறவிங்க)நீச்சல் அடிக்கும்போது ஒரே சமயத்தில் பிட்ஸ் வந்து முழுகிட்டாங்க.
  2. ஒருத்தன் ஓவர் தண்ணி அதோட ஜர்தா போட்டு ஹார்ட் அட்டாக்
  3. ஒருத்தன் கானடால  தற்கொலை.திருட்டுத்தனமா நுழைஞ்சு மாட்டிக்கிட்டான்.
  4. ரெண்டு பேர் கிட்னி பிராப்ளம்
  5. ஒருத்தி கேன்சர்(வீட்டுக்கு வரும்போதே இருந்தது.சாவட்டும்னு கொண்டு வந்தாங்களோ?)
  6. ஒருத்தி சிக்கலான முதல் பிரசவம்
  7. 2 பேர்(ஒரு பொண்ணு ஒரு பையன்)ஆந்திராவுல இருக்கிற   சாமியார் மடத்துல சேர்ந்து ஜீவன் முக்தி அடைச்சுட்டாங்க.உண்மைதாங்க
  8. 2 பேர் திருப்பதி டூர் போகும்போது  காரும் லாரியும் மோதி பயங்கர விபத்து
  9.  ஒருத்தன் மூளைக் காய்ச்சல் வந்து போய்ட்டான்.
14வதாக இறந்தான் ஒருவன் அந்தத் தெரு ஒரு வலதுபக்க வீட்டில்.அதை லிஸ்டில் சேர்ப்பதற்கு சத்திய மூர்த்தி உயிருடன் இல்லை.

14வதாக இறந்தவன் வயது 21.

பூட்டி இருந்த சத்தியமூர்த்தியின்(மத்தியான வேளை)வீட்டில் திருடப்போய்  கெய்சரில் கசிந்துக்கொண்டிருந்த கரண்ட்டில் கைவைத்து  ஷாக் அடித்து போய்விட்டான்.சத்திய மூர்த்தியும் இதைத் தாங்க முடியாமல் அடுத்த நாள் ஹார்ட் அட்டாக்கில் இயற்கை எய்தினார்.

சத்தியமூர்த்திக்குதான் பிளக்சி பேனர் வைத்தார்கள்.