Wednesday, March 2, 2011

இறந்துப்போன பதினாலாவது ஆள்

”என் பேரு சத்தியமூர்த்தி.நான் இந்த எட்டாம் நம்பர் வீட்லதான் குடி இருக்கேன்.வேற வழி இல்ல.டபுள் பெட்ரூம் வீட்டக் கட்டிட்டு சும்மா பூட்டி கிடந்த வயத்தெரிச்சலா இருக்கு.இங்கிருந்து ஆபிசுக்கு தினமும் காஞ்சிபுரம் போய்ட்டு வரேன்.முடியாமத்தான் போறேன்.உடம்பு இத்துப்போய்டுது. குடும்பமும் கஷ்டப்படறாங்க.என்ன செய்றது?”

”இந்த வீட்டுக்கு எவனும் குடி வரமாட்டேன்றான்.வீடு என்ன இந்தத் தெருவுக்கே வர மாட்டேன்றான்.அதுவும் ரோடுக்கு வலது பக்கம் இருக்கிற வீடுகளுக்கு.எதிர்சாரி வீடுகளுக்கு அடிச்சுப் பிடிச்சுட்டு வரான். செம்ம வாடகைங்க.பொறாமையா இருக்கு.”

“இந்தத் தெருவச் சுத்தி எல்லா வசதியும் இருக்கு. முக்கியமா பள்ளிக்கூடம் காலேஜ் வசதிகள்.அப்புறம் பிபிஓ கம்பனிங்க ஜாஸ்தி. ஏப்ரல் மேல டிமாண்ட் அதிகமாகும்.ஆனா வலது பக்கம் தல வச்சுப்படுக்கமாட்டேன்றான்க.அதுவும் 18-25 வயசு பொண்ணோ புள்ளையோ இருக்கறவங்க.எங்க குடும்பத்தல அந்த வயசுல யாரும் இல்ல.”

”காரணம் வரவங்க 18-25 வயசு அல்பாய்சல போய்டுறாங்களாம்.போகட்டும் ஆனா இவனுங்க  சடங்குன்னு  சடங்குன்னு ஒரு ஷாமியானப்போட்டு ஊரக்கூட்டுவானுங்க. அடுத்தது பிளக்ஸி பேனர்”.

” செத்தவங்க திருப்பி  பிளக்ஸி பேனர்ல ஒரு மாசம் சிரிச்சுக்கினு இருப்பாங்க. அதான் தாங்க முடியாது.இங்க செத்தது எல்லாம் ஒண்ணு விடாம பிளக்சி பேனர்ல சிரிச்சிட்டு நின்னாங்க. பார்க்கவறங்க “ என்ன சின்ன வயசுல போய்ட்டாங்கன்னா” பதில் சொல்வறன் “ வீடுகள் ராசி இல்லாத காத்து கருப்பு சுத்தற வீடு”சொல்லிடறாங்க. தேமேன்னு இருக்கிற வீடுகளுக்கு கெட்டபேர் வந்துடுது”

”ரெண்டு வருஷத்துல 22 பேர் செத்துட்டாங்கன்னு ஒரு கணக்கு
சொல்றாங்க.அது பொய் கணக்கு.இதுக்காகவே மெனக்கெட்டு விவரம் எடுத்தேன்.வீட்ட வாடகைக்கு விடனும்.நல்ல வாடகை வரும்.கடன அடைக்கனும்.

”ரொம்ப மெனக்கெட்டேன்.அந்த ஏரியா  நல சங்கம் கூட்டம் மாசமாசம் நடக்கும் அதுல விவரம் கொடுத்து மக்களுக்கு விழுப்புணர்ச்சி ஏற்படுத்தலாம்னுதான்.இத நிறைய பேர்ட்ட சொன்னேன். நமுட்டா சிரிச்சாங்க. இது பரவாயில்ல பாதிக்கப்பட்ட வலது பக்ககாரனும் “வேலைக்கு ஆவுமா” என்கிற மாதிரி பார்க்கிறான்.”

”கஷ்டப்ட்டு எல்லா விவரமும் சேகரிச்சேன்.ரொம்ப சந்தோஷமா இருக்குது.மீட்டிங்குல கொடுத்தட வேண்டியதுதான்”

13 பேர் செத்த விவரம்:

 1. 2 பேர் (இரட்டைப் பிறவிங்க)நீச்சல் அடிக்கும்போது ஒரே சமயத்தில் பிட்ஸ் வந்து முழுகிட்டாங்க.
 2. ஒருத்தன் ஓவர் தண்ணி அதோட ஜர்தா போட்டு ஹார்ட் அட்டாக்
 3. ஒருத்தன் கானடால  தற்கொலை.திருட்டுத்தனமா நுழைஞ்சு மாட்டிக்கிட்டான்.
 4. ரெண்டு பேர் கிட்னி பிராப்ளம்
 5. ஒருத்தி கேன்சர்(வீட்டுக்கு வரும்போதே இருந்தது.சாவட்டும்னு கொண்டு வந்தாங்களோ?)
 6. ஒருத்தி சிக்கலான முதல் பிரசவம்
 7. 2 பேர்(ஒரு பொண்ணு ஒரு பையன்)ஆந்திராவுல இருக்கிற   சாமியார் மடத்துல சேர்ந்து ஜீவன் முக்தி அடைச்சுட்டாங்க.உண்மைதாங்க
 8. 2 பேர் திருப்பதி டூர் போகும்போது  காரும் லாரியும் மோதி பயங்கர விபத்து
 9.  ஒருத்தன் மூளைக் காய்ச்சல் வந்து போய்ட்டான்.
14வதாக இறந்தான் ஒருவன் அந்தத் தெரு ஒரு வலதுபக்க வீட்டில்.அதை லிஸ்டில் சேர்ப்பதற்கு சத்திய மூர்த்தி உயிருடன் இல்லை.

14வதாக இறந்தவன் வயது 21.

பூட்டி இருந்த சத்தியமூர்த்தியின்(மத்தியான வேளை)வீட்டில் திருடப்போய்  கெய்சரில் கசிந்துக்கொண்டிருந்த கரண்ட்டில் கைவைத்து  ஷாக் அடித்து போய்விட்டான்.சத்திய மூர்த்தியும் இதைத் தாங்க முடியாமல் அடுத்த நாள் ஹார்ட் அட்டாக்கில் இயற்கை எய்தினார்.

சத்தியமூர்த்திக்குதான் பிளக்சி பேனர் வைத்தார்கள்.  14 comments:

  1. வேகமாக படிக்க வைக்குது சிறுகதை...
   முடிவு அப்படி ஒன்னும் தொடலங்க :)

   ReplyDelete
  2. இது சிறுகதை மாதிரி இல்ல... எதோ அனுபவம் மாதிரி இருக்கு...

   ReplyDelete
  3. நன்றி அஷோக்

   நன்றி வினோத்.அனுபவம் இல்லை.கதைதான்.

   ReplyDelete
  4. எக்ஸ்பிரஸ் கதை!

   ReplyDelete
  5. வித்தியாசமா இருக்குது கதை. பிடிச்சிருந்தது.

   ReplyDelete
  6. நன்றி சித்ரா

   நன்றி தமிழ்ப்பறவை

   ReplyDelete
  7. கதை படிக்கும் போதே முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை யூகித்துவிட்டேன்

   ReplyDelete
  8. நன்றி ஸ்ரீ

   நன்றி மைதீன்

   ReplyDelete
  9. சார் தாங்கள் இப்போதெல்லாம் ஏன் “நாளைய இயக்குனர்” விமர்சனம் எழுதுவதில்லை. தொடர்ந்து எழுதுங்களேன்! தற்போது
   நாளைய இயக்குனரில் வந்த எனது இரு குறும்படங்கள்
   போஸ்டர்
   மரண அடி

   ReplyDelete
  10. முன்னர் பார்க்கும்போதே நிறைய இடையூறுகளுடன்தான் பார்த்தேன்.ஆனால் சமாளித்தேன்.ஆனால் இப்போது இடையூறுகள் அதிமாகி விட்டது.

   இதைத் தவிர மேலும் எவ்வளவு பிளான் செய்தாலும் அன்று நான் வெளியே செல்லும் வேலை அடிக்கடி வந்துவிடுகிறது.

   உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.இயலாமைக்கு வருந்துகிறேன்.

   ReplyDelete
  11. சிரிப்பு முடிவு.. நான் 14வது ஆளு சத்தியமூர்த்தினு நெனச்சேன்

   ReplyDelete
  12. //
   இறந்துப்போன//

   இதுல ப் எப்படி வரும்?

   ReplyDelete
  13. @கானகம்.... அதான் இறந்து போயிட்டாரே... ‘ப்’ வந்தா என்ன? வராட்டிதான் என்ன? :)

   ReplyDelete

  எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!