சில மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இன்றும் “Learn a Hindi word everyday" என்று பெயிண்ட் செய்யப்பட்ட தலைப்பில் ஒரு கரும்பலகை தொங்கும்.அதில் சாக்பீஸால் ஒரு இந்தி சொல்லும் அதன் கிழ் ஆங்கில தமிழ் மொழிப்பெயர்ப்பும் எழுதப்பட்டிருக்கும்.
இது எதற்கு?யாருக்கு?இதை எவ்வளவு பேர் கவனிக்கிறார்கள்? படிக்கிறார்கள்?2011லிலும் இந்த சம்பிரதாயம் ஏன் தொடர்கிறது.வேலைப் பார்க்கும் அலுவலர்கள் தினமும் கற்றுக்கொள்கிறார்களா?
ஒரு வாடிக்கையாளராக ஒரு மொழியைஆர்வமாகக் கற்றுக்கொள்கிறேன் என்றால் கூட 300(தோராயமாக) நாள் தினமும் செல்ல வேண்டும் அங்கு.சற்று வெட்கமாக கூட இருக்கும்.சொற்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது.
அரசு ஆணை சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
Once upon a time, very very very long ago ஹிந்தி(ராஷ்ட்ரா பாஷா) படித்தால் டெல்லியில் வேலைக் கிடைக்கும் என்று படித்தார்கள் தமிழ்நாட்டில்.ஜூனூன் சீரியலுக்காகவும்(பிறகு தமிழில் டப்பிங் செய்யப்பட்டுவிட்டது) படித்தார்கள்.
எந்த ஒரு கலை அல்லது மொழி கற்றுக்கொள்வதில் யாருக்கும் எந்த ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பது என் எண்ணம்.அது ஆர்வம் அல்லது தேவை சார்ந்து வரலாம்.
___________________________
தேர்தல் வந்தால் நிறைய உதிரிக்கட்சிகள் முளைக்கும்.இதில் ஜாதி கட்சிகள்,தமிழ் மீட்பு,உரிமையை நிலைநாட்ட,ஜனநாயக விழிப்புணர்ச்சி,ஊழல் லஞ்ச ஒழிப்பு முன்னணி என்று விதவிதமாக முளைக்கும்.ஏற்கனவே நிறைய இருக்கிறது.
இதில் ஜாதிக்கட்சிக்களுக்கு மற்ற கட்சிகளை விட மதிப்பு அதிகமாகிறது.மக்கள் மற்ற உதிரியை விட இந்த ஜாதிமல்லிதான் ரொம்ப விரும்புகிறார்கள்.தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.தங்கள் வியாபாரம் சார்ந்து ஆதரிக்கிறார்கள்.
இதன் வீரியம் சற்று அதிகமாக இருக்கிறது இந்த தேர்தலில்.பெரிய கட்சிகள் சீரியஸாக கவனிக்க ஆரம்பித்துவிட்டது. இதிலும் இரண்டு கட்சிகள் எப்போதும் உண்டு.ஒன்று அம்மா. இன்னொன்று அய்யா.
ஊழல் எதிர்ப்பு,உரிமை நிலைநாட்டல்,ஜனநாயக விழிப்புணர்ச்சி என்று பல பல வருடங்களாக போராடி வரும் இயக்கங்கள் இருக்கையில் இந்த உதரிக்கட்சிகள் எப்படி இயங்குகின்றன?
இந்தக் கட்சிகள் உண்மையான நோக்கத்துடன் போராடி
வந்தாலும் மக்கள் அதை அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை.மாறி மாறி கழகங்கள் அல்லது ஏதாவது ஒரு நடிகர் பின்னால் போவது.இதற்குத்தான் பழகி இருக்கிறோம்.
ஊழல் மக்களுக்குப் பிடிக்கவில்லைதான்.அப்படியானல் ஊழல் எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏன் மக்கள் ஆதரவு இல்லை?
காரணம் நமக்கும் ஊழல் வசதியாக இருக்கிறது.எவ்வளவு பேர் சிரத்தையாக “எட்டு”ப் போட்டு ஓட்டுனர் உரிமம் வாங்கி இருக்கிறோம்?

ReplyDeleteஇதுதான் எனது கேள்வியும்
நன்றி மைதீன்
ReplyDelete//காரணம் நமக்கும் ஊழல் வசதியாக இருக்கிறது.எவ்வளவு பேர் சிரத்தையாக “எட்டு”ப் போட்டு ஓட்டுனர் உரிமம் வாங்கி இருக்கிறோம்?//
ReplyDeleteஇரண்டு சக்கர வாகனம் வைத்திருக்கும் எத்தைனை பேர் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கிறான். (போலீஸ் புடிச்ச லஞ்சம் கொடுக்க வேண்டியது, கொஞ்சம் தள்ளி வந்து போலீஸ் தொல்ல தாங்க முடியலனு பொளம்புரது)
This comment has been removed by the author.
ReplyDeleteNot only that. I feel, fighting with oneness is not there in us. We are looking for a leader outside and not ready to find the one inside us.
ReplyDeleteசெம்மொழி, நம்மொழி என பேசும் தலைவர்கள் மட்டும் என்ன உள்ளதிளிருந்தா பேசுகிறார்கள்? All political drama for gaining the political power. "Maska" போட்டு புத்தியை மந்தமாக்கும் மாயமே!
பெற்றோர் தன குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதை உவகை கொண்டு பெருமை பேசுவதைவிடுத்து, அதுவும் ஒரு மொழியே என புரியவைத்து, தாய்மொழியோடு வேறுமொழியும் கற்றுகொடுக்க வேண்டும்.
சொந்தமாக எப்போது யோசிக்கிறார்களோ, பகுத்தறிவால் எப்போது சிந்திகிரார்களோ, தன கையில் இருக்கும் சக்தியை எப்போது உணர்கிறார்களோ, அப்போதுதான் பின்னல் ஓடும் பழக்கம் ஒழியும். பணத்திற்கும், பகட்டிற்கும், சொம்பெரிதனதிர்க்கும், தொலைகாட்சியின் வெட்டி தொடர்களுக்கும் பழகி போன அறிவு, ஒவருவரும் தட்டி எழுப்பினால் மட்டுமே நன்மை பிறக்கும். "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது இதற்கும் பொருந்தும்.
நன்றி ந.நவில்
ReplyDeleteநன்றி mira-arts.blogspot.com