Monday, March 7, 2011

சினிமா டிக்கெட் 150/- பார்க்கிங் 120/-

ஒரு காலத்தில் வாசல் மெயின் கேட்டுகளில்  “Keep the door closed" என்றொரு போர்ட் தொங்கும். அதெல்லாம் போய் இப்போது சென்னையில் (10-12 வருடமாக)”No parking in front of the gate" "Do not park vehicles in front of the gate" போன்ற போர்டுகள், கோவில் அரச மரத்தில் தொங்கும் பிராத்தனை வேண்டுதல் பொருள்கள்போல் தொங்க ஆரம்பித்துவிட்டன.யாரும் இதை இம்மிக்கும் பொருட்படுத்துவது இல்லை.

ஒரு தனி வீட்டில் கிட்டத்தட்ட 12 போர்டுகள்.

லோக்கல் எலெக்ட்ரிஷியன் அல்லது பிளம்பர் அல்லது இன்ஷுரன்ஸ் ஏஜண்ட் விளம்பரத்திற்காக  ஒரு கலர் தகரத்தில் மேலே மேல் சொன்ன வாசகமும் கிழே தன் செல் நம்பரைப் போட்டு வீட்டு உரிமையாளருக்குத் தெரியாமல் மாட்டிவிட்டுப்போய்விடுகிறார்கள்.அடுத்து டியூஷன் செண்டர் ஆசாமிகள்.

பார்க்கிங் பிரச்சனை அந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிட்டது சென்னையில்.காரணம் தொலைநோக்குப் பார்வை இல்லாத அரசும், பொதுமக்களும், பொது நிறுவனங்களும், மற்றவர்களும்.

மால்களில் இரண்டு நான்கு சக்கரவாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் கொள்ளையடிக்கப்படுகிறது என்று பலரும் அவ்வப்போது எழுதி இந்த அநியாயத்தைக் கேட்க ஆளே இல்லையா என்று புலம்புகிறோம்.

நானும் அதில் பாதிக்கப்பட்டேன்.முதன்முறை பிவிஆர்(அம்பாமால்) தியேட்டரில் படம்  பார்க்க கட்டணம் 150/-.பார்க்கிங் 120/-.பார்த்தப் படமே மறந்துவிட்டது.

இந்த அநியாயத்தைக் கேட்க ஆளே இல்லையா என்று கேட்பதற்கு முன் இதில் இன்னோரு கோணம் இருப்பதைப் பார்ப்போம்.

வாகனங்கள் பெருகிய அளவுக்கு ஈடாக இடம் பெருகவில்லை.Demand is more than Supply.அதை பெருக அல்லது உருவாக்க  முடியாது.அது நிலம். இருக்கிறதை வைத்துதான் சமாளிக்க வேண்டும்.சமாளிக்க என்றால் சும்மா இல்லை.பூமி பூஜை போடுவதற்கு முன் யோசிக்க வேண்டிய விஷயம்.

ஆனால் மால்கள் தோராயமாகத்தான் இதைப் பற்றி யோசிக்கிறது.
 
இதற்கு “பார்க்கிங்” போட்டு நிறைய யோசிக்கனும்.தொலை நோக்குப் பார்வை வேண்டும் மற்றும் Massive plan.நிறைய முதலீடு தேவைப்படும். Terrace parking அபிராமி மாலில் செய்யப்படுகிறது.அரசாங்கம் பல அடுக்கு (multilevel parking) பார்க்கிங் பற்றி யோசித்து வருகிறது.மாலும் தியேட்டரும் சேர்ந்து இருக்கும் இடத்திற்கு நிறைய பார்க்கிங் இடம் தேவைப்படுகிறது.

இடத்தை உருவாக்க முடியாததால் சுலபமான வழியான “வாகனம் கொண்டு வராதே” பின்பற்றுகிறார்கள்.

சென்னையில்  ஒரு கிறித்துவர் இடுகாட்டில்(புதைக்கும் வழக்கம்) பிணங்களுக்கு புதைக்க இடம் இல்லாமல்  கல்லறைகள் நிரம்பி வழிந்து காபின் வைக்கலாமா என்று யோசிப்பதாக படித்தேன்.

கட்டியாச்சு.சமாளிக்க முடியல. சரி பார்க்கிங்கு ”மீட்டர் வட்டி”
போடுவது போல் போட்டுத் தாளித்துவிட்டார்கள் மால்காரர்கள்.வேறு வழியில்லை.

சாதா கட்டணம் வைத்து நிரம்பி வழிந்தால்,யாருக்கு முன்னுரிமை கொடுப்பது ஷாப்பிங் வருபவர்களுக்கா அல்லது சினிமா டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கா?

கடனுக்கு உரிய சான்றிதழ்களை பேக் டூ பேக் போட்டோகாபி எடுத்துக்கொடுத்தால் உடனே வண்டி கொடுக்கிறார்கள்.இடம் கொடுப்பதில்லை.அது தவிர இப்போது விதவிதமான வடிவங்களில்  இடத்தை அடைத்துக்கொள்ளூம் (Tata innova/Toyoto Qualis)வாகனங்கள்.

சென்னையில் மத்தியதரம் மற்றும அதற்கும் கிழ்,விளிம்பு நிலை மக்கள் வாழும் இடங்களின்  பொதுப் பாதைகளில் இரு சக்கரவாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ,டெம்போக்கள் நிரம்பி வழிகிறது.


அதே மாதிரி உயர்மத்தியவர்க்கம் மற்றும் இரண்டாவது அல்லது மூன்றாவது கார் வைத்திருக்கும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் இடங்களின் பொதுப் பாதைகளில் வாகனங்கள் நிரம்பி வழிகிறது.மற்றும் கடை வாசல்களில்.
வண்டியை எடுக்கையில் பல சமயங்களில் இரு இடங்களிலும் தகராறு ஏற்படுகிறது.


ஆறு மணிக்கு மேல் சாதாரண ஒரு டாஸ்மாக் கடைவாசலில் விதவிதமான இரு சக்கரவாகனங்கள்.

சாதாரண கட்டணம் இருந்த ஒரு மாலில் ”Excuse us.Parking full" என்றிருந்தது.
திருதிருவென்று விழித்துவிட்டு திரும்பிவிட்டோம்.

மால்களுக்கு வருபவர்கள் சராசரியாக இரண்டு மணி நேரம் தங்குகிறார்கள்.இதில் தியேட்டர் இருந்தால் சராசரி மூணரை மணி நேரம்.இதில் ”சும்மா” பொழுதுப்போக்க வருபவர்கள் அதிகம் என்று ஒரு தகவல் சொல்கிறது.சிலர் காதலர் பூங்கா போல் மணிக்கணக்கில் சுற்றுகிறார்கள்.இது தவிர Scootyகள் அதிகமாகிவிட்டது.

இது தவிர மாலில் வேலைப்பார்வர்களின் பிசினஸ் செய்பவர்களின்  வாகனங்கள்.தோரயமாக 200 இருக்கலாம்.மேலேயே இருக்கும்.

சாதாரண நாட்களிலேயே சில மால்கள் பொங்கிவழிகிறது.விடுமுறை நாட்களில் விளம்பரதாரர்கள் தங்கள் ஷோக்களைப் போட்டு கூட்டம் போட்டு மோடிவித்தைப் போல் எதையோ  காட்டுகிறார்கள்.அதற்கு இளைஞர்கள் கூட்டம் அம்முகிறது.

அண்ணா நகரில் இருக்கும் ஒரு கையேந்திபவனில் டிபன்
சாப்பிடவதற்கு இரண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்தில் வண்டியை விட்டுவிட்டு வரவேண்டும்.அதே மாதிரி தி.நகரிலும்.அடிக்கடி பதிவர் சந்திப்பு நடக்கும் இடமான கேகே நகரிலும் இதே பிரச்சனைதான்.

அண்ணா நகரில் இருக்கும் என் நண்பரின் தனிவீட்டில் ரூபாய் 3500/- சம்பளத்தில் ஒரு செக்யூரிட்டி போட்டிருக்கிறார்கள். எதற்கு?”தயவு செய்து வாகனங்களை நிறுத்தாதீர்கள்” என்று சொல்லி விரட்டுவதற்கு.


அடுத்தக் கொடுமை கன்னபின்னாவென்று பார்க் செய்வது.டிராவல்ஸ் மற்றும் கால் டாக்சிகாரர்களின் பார்க்கிங் அதிகமாகிவிட்டது.

பிளாட்டுக்கட்டுபவர்கள் பார்க்கிங்கிற்கு என்று லட்சக்கணக்கில் வாங்குகிறார்கள்.பார்க்கிங் வாங்கி வாகனம் இல்லாதவர்கள் அதை மற்றவர்களுக்கு (இரண்டாவது வாகனம்) வாடகைக்கு விடுகிறார்கள்.

பிளாட்டில் கொடுத்த பார்க்கிங்கிறகு ஏற்றர்போல் வாகனம் (Tata innova)இல்லாமல் பக்கத்து பார்க்கிங் வண்டிமேல் பம்பர் இடித்து ஆங்கிலத்தில் ஒரே ரகளை.

இப்போது இருக்கும் தியேட்டர் மால்களில் கட்டணத்தைக் குறைத்தால் கூட்டம் இன்னும் கூடும். அதற்கும் தயாராக இருக்கவேண்டும்.

டெயில் பீஸ்-1: 
கணினியில் பைல்களை சுருக்குவதற்கு zip இருப்பது மாதிரி வண்டிகளையும் சுருக்க ஏதாவது கண்டுபிடிக்கவேண்டும்.

டெயில் பீஸ்-2: 
பார்க்கிங் கொள்ளை என்றவுடன் இன்னொரு விஷயம் ஞாபகம் வரும். 

ரொம்ப வருடம் முன்பு பன்னாடு நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபோது  அடிக்கடி நெட்வொர்க் கணினியில் வைரஸ்.காரணம் பிளாப்பி டிரைவ்.பிளாப்பி டிரைவ் உபயோகப்படுத்தக்கூடாது என்று எவ்வளவு சொல்லியும் யாரும் கேட்கவில்லை.ஒரே நாளில் எல்லா(106) கணிகளில் பிளாப்பி டிரைவ்வை கழட்டி விட்டார்கள்.

டெயில் பீஸ்-3: 
சென்னையில் மிகவும் நம்பகமான ஒரு நிதி நிறுவனத்தில் fixed depositல் பணம் அளவுக்கு மேல் நிரம்பி வழிந்தது.போதும் என்றாலும் கொட்டினார்கள் மக்கள். வட்டியைக் குறைத்தாலும் கொட்டினார்கள்.ஒரு கட்டத்தில் வாங்குவதையே நிறுத்திவிட்டார்கள்.

.


9 comments:

  1. கணினியில் பைல்களை சுருக்குவதற்கு zip இருப்பது மாதிரி வண்டிகளையும் சுருக்க ஏதாவது கண்டுபிடிக்கவேண்டும்.


    ....ha,ha,ha,ha,ha,ha.... who knows? it may happen. :-)

    ReplyDelete
  2. நன்றி சித்ரா.

    ReplyDelete
  3. பேசாம, எல்லா ‘பார்க்’லயும் பார்க்கிங் பண்ணிக்கலாமா?

    ReplyDelete
  4. இனி வான்வழி trafficஐ ஆரம்பித்து மொட்டை மாடியில் ஹெலிபேட்?!!

    ReplyDelete
  5. //தொலைநோக்குப் பார்வை இல்லாத அரசும், பொதுமக்களும்//
    -- கரெக்ட்...

    //அடுத்தக் கொடுமை கன்னபின்னாவென்று பார்க் செய்வது.//

    இது ரொம்ப கொடுமை. உள்ள அவ்வளவு இடம் இருக்கும். ஆனா பெரும்பாலும் வெளியிலேயே நிறுத்தியிருப்பார்கள்.

    இல்லன்னா இண்டு இடுக்குல பூந்து நிறுத்தியிருப்பாங்க. அதுல நம்ம வண்டிய மீட்டுக்கிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடும்..

    ReplyDelete
  6. நன்றி தமிழ்ப்பறவை

    நன்றி மிடில்கிளாஸ்மாதவி

    நன்றி ஸ்வர்ணரேக்கா

    //அதுல நம்ம வண்டிய மீட்டுக்கிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடும்.. //

    உங்கள மாதிரி பெண்கள் வண்டியை எடுக்க படும் க‌ஷ்டங்கள் ரொம்ப அதிகம்.பார்க்கிங்கில் ஒழுங்குமுறை நம்மிடம் சுத்தமாக இல்லை.

    ReplyDelete
  7. முடிந்த அளவு அனைவரும் பொது வாகனங்களைப் பயன்படுத்துதலும் இதற்கு ஒரு தீர்வாகும்.மாநகரப் பேருந்து, மின்சார ரயில் போன்றவை...

    ReplyDelete
  8. http://www.tamiljothy.info/tv_shows/?cid=211&id=3&programme=Naalaya%20Iyakunar

    intha thalaththil "naalaya iyakkunar" nikalchi vaaraa vaaram telecost aanathum aduththa naale update seyyappadukirathu. tv program muluvathum. ithu ungalukku vimarsanam elutha payanpadum.

    ReplyDelete
  9. நன்றி டக்கால்டி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!