Thursday, October 30, 2008

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும் போது பிரச்சினையின் அடி வேருக்கு சென்று நிரந்தர தீர்வாக காண வேண்டும். அந்த பிரச்சனையை மேலோட்டமாக அணுகினால் நிரந்தர தீர்வு கிடைக்காமல் ,பிரச்னை அடிக்கடி வந்து தொல்லை கொடுக்கும் .

பிரச்சினையின் அடிவேர்க்கு எப்படி போவது?. ஒரு பிரச்சினை வரும்போது, ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்? (5 ஏன்களுக்கு மேல் போகக் கூடாது) கேட்டு Drill down செய்து கொண்டே போனால் அடி வேர் வந்து விடும் . எப்படி?

(இந்த முறை பெரிய கம்பனிகளில்(TQM) பயன்படுத்த படுகிறது

கிழே பார்க்கலாம்:-

பிரச்சனை 1

வீட்டிற்க்கு (மழை நாளில்) இரவு ஏழு மணிக்கு வர வேண்டியவன் 11 மணிக்கு வந்தேன்.

(நாலு மணி நேரம் லேட் )

லேட்

ஏன் லேட்?

டிராபிக் ஜாம்

ஏன் டிராபிக் ஜாம் ?

ரோட்டில் தண்ணிர் தேங்கி டிராபிக் ஊர்ந்தது .

ஏன் தண்ணிர் தேங்கியது ?

கழுவு நீர் கால்வாய் வழியாக மழை தண்ணிர் ஓட வழியில்லை

ஏன் மழை தண்ணிர் ஓட வழியில்லை ?

கழுவு நீர் கால்வாய்யில் அடைப்பு.

ஏன் கழுவு நீர் கால்வாய்யில் அடைப்பு?

ஊரிலுள்ள எல்லா குப்பைகளும் விழுந்து

அடைத்துக்கொண்டு விட்டது./மற்றும் கால்வாய் சரியில்லை.

என்ன தீர்வு? அரசே யோசியுங்கள்!.

கிழிருந்து மேலே போய் பார்க்கலாம் (பிரச்சனை தீர்ந்தால் )

குப்பை போடப்படவில்லை

ஆதலால் அடைப்பு இல்லை

ஆதலால் மழை தண்ணீர் ப்ரீயாக ஓடுகிறது

ஆதலால் மழை தண்ணீர் தேங்கவில்லை

ஆதலால் டிராபிக் ஜாம் இல்லை

ஆதலால் லேட் இல்லை

நான் வீட்டிற்கு ஏழு மணிக்கு வந்து விட்டேன்


பிரச்சனை 2

என்னுடைய (Honda Activa ) வண்டி நின்று விட்டது


ஏன்? நின்று விட்டது ?

ஸ்டார்ட் ஆக வில்லை?

ஏன்? ஸ்டார்ட் ஆக வில்லை?

பேட்டரி வீக்

ஏன்? பேட்டரி வீக் ?

Distilled வாட்டர் இல்லை

ஏன்? Distilled வாட்டர் இல்லை?

பேட்டரி சர்வீஸ் செய்யவில்லை

ஏன்? சர்வீஸ் செய்யவில்லை?


பிரச்சினையின் அடிவேர் ------- periodical சர்வீஸ்

இந்த maintenance marthiyaal ,ஆட்டோவிற்கு 150/- செலவு

என்ன தீர்வு? யோசியுங்கள்.


பிரச்சனை – 3

என்னுடைய blog லுக்கே இல்லாமல் பழசாக இருக்கிறது .

ஏன்? பழசாக இருக்கிறது ?

நான் beginner டெம்ப்லேட் use செய்கிறேன்

ஏன்? beginner டெம்ப்லேட் use செய்கிறேன்?

இதை சரிபடுத்த முயற்சிப்பதில்லை

ஏன்? சரிபடுத்த முயற்சிப்பதில்லை?

எப்படி/எங்கு/ஏன் கேட்க வேண்டும் தெரியவில்லை

ஏன்? கேட்க தெரியவில்லை?

முயற்சிப்பதில்லை

ஏன்? முயற்சிப்பதில்லை

ஆர்வமில்லை

பிரச்சினையின் அடிவேர் - ஆர்வமில்லை

Blog காலமெல்லாம் பழசாகவே இருக்கும்

Tuesday, October 28, 2008

ஷேர் மார்க்கெட் ரவுடிகள்

ஷேர் மார்க்கெட் ரவுடிகள்-கவிதைகள்

காதில் கடுக்கனும்

தலை முடி கற்றையை

ரப்பர் பேண்டில் முடிந்து

பின்னல்போல் முதுகில் விட்டு

ஆட்டோவிலிருந்து FII க்கள்

இது எவ்வளவு ?

சில இடது விரல்களை

விரித்து காட்டி கேட்டார்கள்

சொன்னேன் - "அடிங்கடா இவன"

அடித்தார்கள் , அடித்தார்கள்

தெளிய வைத்து - மறுபடியும்

ஜனவரியில் 21000 புள்ளிகள் என்று

" மகர ஜோதிகாட்டிய புள்ளிகள்

ஆறிப்போன புண் தழும்புகளின்

மேல் அடித்தார்கள்,அடித்தார்கள்

தெளிய வைத்து, தெளிய வைத்து

அவர்கள் ஊரில் வாங்கிய

அடிகளை இங்கு வந்து

ஓட ஓட மடக்கி மடக்கி

"வூடு" கட்டி அடித்தார்கள்

அம்பானிகளும்,மிட்டல்க்ளும்

ராகேஷ் ஜுன் ஜுன் வாலாக்களும்

வாடியாக்களும், பஜாஜ்களும்

தப்பவில்லை இந்த முறை

ஜெனரல் வார்டில் - பல சிராய்ப்புகளும்,

சில உள் காயங்களுமாக

ICU வில் ரவுண்ட்ஸ் வந்த

டாக்டர் என் கைப்பிடித்து

2025குல் சரியாகிவிடும் என்றார்

.கே .ரவிஷங்கர்

Sunday, October 26, 2008

டீச்சர் காதல் - 1975

என் டீச்சர் TVS-50 டீச்சரும் இல்லை
Scooty டீச்சரும் இல்லை
Bajaj-Kawasakiயில் யாரும்
கொண்டுவிடுவ்தும் இல்லை
தலையில் கொண்டையுடன்
கையில் குடையுடன்
பூப்போட்ட பார்டர் புடவையுடன்
மார்பில் அணைத்த
கரக்‌ஷன் நோட் புக்குகளும்
நடந்தே பள்ளி வரும்
பக்கத்து தெரு மரினா கிரேஸ் சில்வியா
கன்னியாகுமரி கிறிஸ்டியன் டீச்சர்
கருப்பாக இருந்தாலும் -களையான
முகத்தில் கருப்பு திராச்சை கண்களும்
எண்ணை மின்னும் தலையில்
சைடு வைகிடு எடுத்த தலை முடியும்
பாடம் நடத்துகையில்
ஏசுநாதர் சிலுவை போட்ட
தங்க செயின் மார்பில் ஆடுவதையும்
பிரா ஸ்ட்ரப்பை அடிக்கடி உள்ளே
தள்ளுவதும் பின் பக்கம் சரிபார்ப்பதும்
கடிகார பெண்டுலம் போல் ஆடும்
அலை அலையான நீண்ட கூந்தலின்
கடைசி நுனி வரை சென்று
நான்,ராபர்ட்,பரமேஸ்வரன்,சத்தியநாதன்,மணிவண்ணன்
எல்லோரும் சேர்ந்து
மொத்தமாக காதலித்தோம் .
ஒருவன் காதலித்தது – இன்னொருவனுக்குத்
தெரியாமல்.


கே .ரவிஷங்கர்

Friday, October 24, 2008

காதல் கவிதைகள்.... காதல் கவிதைகள்


காதல் கவிதைகள்.... காதல் கவிதைகள்


காதல் 1980

ஒரு பெண்ணை

ஒரே நாளில்

ஒன்பது தடவை

பார்த்து விட்டால்

காதல் முடிச்சு ஆட்டோமேட்டிக்காக

அப்ளை ஆகிவிடும்

காதல் சட்டத்தில்

ஏதோ ஒரு பிரிவின்

உட் பிரிவின் கிழ்

சொன்னான் பள்ளி

நண்பன் குரு நாதன்

"அம்மை" போட்டு படுத்து விட்டதால்

அடுத்த ஒன்பது நாள் யாரையும்

பார்க்க முடியவில்லை - அந்த

குறிப்பை நகல் எடுத்து

பத்திரமாய் வைத்துள்ளேன்

தலைக்கு தண்ணிர் வைத்ததும்

ஒரே நாளில் ஒரே பெண்ணை.....





காதல் ஒரு தொடர் ஒட்டம் 1980-1990

ஜென்சியின் "ஆயிரம் மலர்களே " கேட்டு

நித்ய கல்யாணியையும்

"காதல் ஓவியம் " கேட்டு

மேக வள்ளியையும்

"தம் தனனம் தம் தனனம் " கேட்டு

லட்டு முழுங்கி வைஜய்ந்தியையும்

"தெய்விக ராகம் " கேட்டு

சத்திய குமாரியையும் - மற்றும்

பல பாடல்களை கேட்டு

பல பெண்களையும் காதலித்து

காதலித்து, காதலித்து, காதலித்து

என் கையில் உள்ள மயிலிறகை

வாங்கி கொண்டு நீங்களும்

சாதன சர்கம் அல்லது ஸ்ரேயா கோஷல்

பாடல்களை கேட்டுக்கொண்டு

யாரையாவது காதலியுங்களேன்


கே.ரவிஷ்ங்கர்


வைக்காத பொண்ணு மேல ஆச

டைரக்‌ஷன்  காட்டுதல் 

சின்ன வயதில் "ரயில் பயணங்களில்" (T.ராஜேந்தர்)  என் அக்கா ராஜலக்ஷ்மியுடன் பார்த்திருக்கிறேன். அக்கா சில சீன்கள்  பார்த்து  கண் கலங்கியிருக்கிறாள்.

ரொம்ப  நாள் கழித்து மறுபடியும் "ரயில் பயணங்களில்" படம்

(T.ராஜேந்தர்) TV யில் பார்த்தேன்..

 நான் பரிணாம வளர்ச்சி அடைந்தது நல்லதாக போயிற்று  அக்கா  பரிணாம வளர்ச்சி அடைந்தாளா? கடைசியில் பார்ககலாம்

 முக்கோண காதல் கதை. கதைநாயகி சாந்தி (ஜோதி), வசந்தை(ஸ்ரீநாத்) லவ் செய்கிறாள். விதி வசத்தால் சாந்தி ராஜீவை மணக்கிறாள். ராஜீவ்  சாந்திக்கு திருமணத்திற்கு முன் ஒரு காதல் உண்டு என்பதை  தெரிந்து கொள்கிறான் . ராஜீவ் சாந்தியை காம்பெல்சரியாக கொடுமை படுத்துகிறான் .

 கதைநாயகி,  இன்னொருவனுக்கு மனைவியாகி விட்டதால் , "ஒரு வார்த்தை எதிர்த்து பேசாமல் " எல்லாவற்றையும் பொறுத்து கொள்கிறாள் . படத்தின் கடைசிவரை  புடவை தலைப்பை போர்த்திக்கொண்டு கண்களில் சோகத்தோடு "நடை பிணமாக " உலா வருகிறாள். வசந்த்  தாடி வளர்கிறான். ( வசந்த், ராஜேந்தர் ஜாடையில்   இருக்கிறான்.)

 டைரெக்டர் ராஜேந்தருக்கும் இதெல்லாம்  ரொம்ப பிடித்து போய்

நெறைய  டைரக்‌ஷ்ன் காட்டுகிறார்.

 அது என்ன டைரக்‌ஷ்ன் காட்டுவது?

 அந்த கால படங்களில் …………..

உதாரணம் 1.

சி.கே.சரஸ்வதி (அம்மா)  ம்கனிடம்(எஸ்.எஸ்.ஆர்) மருமகளைப்பற்றி (விஜய குமாரி) கோள் மூட்டுகிறார்

டைரக்‌ஷ்ன்

அப்பொழுது பட்டாசு  திரி பற்ற வைக்கப்படும் காட்சி

.உதாரணம்-2

கதா பாத்திரம்  யோசித்துகொண்டிருக்கிறார்.

டைரக்‌ஷ்ன்

சைக்கிள் வீல் (ஸ்டாண்ட் போட்ட ) சுற்ற ஆரம்பிக்கும். சிறுது நேரம் கழித்து நின்று விடும் . யோசித்து முடித்துவிட்டார்.

உதாரணம் 3

வீட்டின் பெரிய மனிதர் இறந்து விட்டார் .

டைரக்‌ஷ்ன்

அவர் வீட்டு சுவர் கடிகாரம் நின்று விடும் .(blood related  கடிகாரம்?)

உதாரணம் 4

கற்ப்பழிப்பு காட்சி. வில்லன் கதா நாயகியை துரத்துகிரான்

டைரக்‌ஷ்ன்

புலி மானை துரத்தும்.

இந்த டைரகஷன் காட்டுதலை தி.ராஜேந்தர் உலக திரை படங்களை மிஞ்சும் வகையில் காட்டியிருக்கிறார்"ரயில் பயணங்களில்"

 பார்க்கலாம்   கிழே. சிலவற்றை சற்று சரியாக கவனிக்கவில்லை. மன்னிக்கவும்.

சீன் -  1

கதைநாயகி மாயவரம் ஸ்டேஷனில் தனியாக நிற்கிறாள் . வேறுங்கோ   காதலன்

கேமரா ஸூம் ஆகிறது : அங்கே ........ இங்கே என்ற புத்தகம்  ரயில்வே புத்தக ஸ்டாலில் .வேறு ஒரு எல்.ஐ.சி வாசகமும் காட்டப்படுகிறது.

Formula

அங்கே ........ இங்கே என்ற புத்தகம்   =  இவள் இங்கே, அவன் அங்கே

 சீன் -  2

மறுபடியும் கதைநாயகி மாயவரம் ஸ்டேஷனில் தனியாக படபடப்புடன்

கேமரா ஸூம் ஆகிறது : பிளாட்பாரத்தில் கிரிக் கிரிக் பொறிகள் யாரோ "வெல்ட்" செய்துகொண்டிருக்கிறார்கள் .

              Formula

கிரிக் கிரிக் பொறிகள்  =  பட பட பட படப்பு   

சீன் -  3

கதைநாயகி (திருமணம் ஆன சில நாள் பிறகு ) காரில் வரும்போது , எதிர் சைடில் பழைய காதலன் காரில் வருகிறான் கண்கள் நோக்குகின்றன . கலங்குகின்றன

கேமரா ஸூம் ஆகிறது :: "நலந்தானா ! நலந்தானா!" பூம் பூம் மாட்டுக்காரன் வாசிக்கிறான் நட்ட நடு  ரோட்டில்.

 

               (,கதைநாயகி, பழைய காதலன் ,பூம் பூம் மாடு, பூம் பூம் மாடு உரிமையாளர் ,

 அவர்   பையன், அசிஸ் டென்ட்,   நலந்தானா பாட்டுபட படக்கும்  வெயிலில்,   

 பெசன்ட் நகரில்   எல்லாம் ஒரே நேரத்தில். 

(இதுதான்  butter fly effect ஆ?)

 Formula

"நலந்தானா ! நலந்தானா!" பூம் பூம் =

 1. இருவ்ர் உள்ளமும்(வாய் பேச

 முடியாத சிட்ச்சுவேஷன்) பேசுகிறது.

 2. தில்லானா மோகனாம்பாள்  சிச்சுவேஷன் வந்து  விடுகிறது

 

 சீன் -  4

      கல்யாண ஏற்பாடு நடக்க ஆரம்பித்துவிடுகிறது

அவசரமாக   காதலனோடு பேச போனில் அழைக்கிறாள். . வேலைக்காரன்தான் பேசுகிறான் .ஏமாற்றம்  அடைகிறாள் .

               கேமரா ஸூம் ஆகிறது:

அந்த வீட்டில் டைனிங் டேபிளில் , ஒரு பையன்  ஒரு சாசெரை  (டீ)   விரிசில் விட்டு உடைக்கிறான்

    Formula

 சாசெரை  (டீ)   விரிசில்     =     அவர்கள் காதலில் விரிசல்.

   சீன் -  5

கதைநாயகி திருமண பத்திரிக்கை கொடுக்க, பழைய காதலன் வீட்டிற்கு வருகிறாள்

க.நா.:  "உங்க பேரு  N..வசந்த்  ?

ப.கா.  "ஆமாம் N..வசந்த்  .........என் வசந்த்

க.நா:  என் வசந்த் ஆ ?”  சோகமாகிறாள்.

 க.நா:   என் பேரு கவருக்குள் உள்ள பத்திரிகையில் இருக்க வேண்டும் . ஆனால்  கவரில் இருக்கிறது

 க.நா:  மௌனம் . கண்ணீர் வருகிறது .

 கேமரா ஸூம் ஆகிறது ::

ஒரு துளி  கண்ணீர் 90  டிகிரியில்  Nக்கும்    வசந்துக்கும்  உள்ள புள்ளியில் விழுந்து புள்ளி  அழிகிறது . Nன்னும் வசந்தும்  சேர்க்கிறது   

  Formula

ஒரு துளி  கண்ணீர் 90  டிகிரியில்  Nக்கும்   = (துக்கம் நெஞ்சை அடைப்பதால்  Formula  எழுதமுடியவில்லை.)

 சீன் -  6

. கடைசியில் பழைய காதலன், அவள். இருவரும்  இறந்துவிடுகிறார்கள் .பிணங்கள் அருகருகே சற்று இடைவெளி விட்டு PARALELLL  ஆக  .

கேமரா ஸூம் ஆகிறது ::

அவர்கள் பிணத்தின் மேல் ,   தண்டவாளம் ,அவர்கள் --இருவர் ,

அவர்கள் இருவர்-- தண்டவாளம் , என்று மாறி மாறி .தண்டவாளம் சீன் ஓவர் லேப் செய்யப்படுகிறது.....

 "தண்டவாளம் இணைந்து செல்லுமே தவிர சேராது

அது மாதிரி இவர்கள் காதலும் ".((பின்னணியில் குரல்)

   Formula

தண்டவாளம்   = அவர்கள் காதல்

 

                                     _______________XXXX___________________

                                   

என் அக்கா ராஜலக்ஷ்மிக்கு   போன் செய்து கேட்டேன் , படம்  பார்த்தியா என்று?

  'ம்... பார்த்தேன் .  சூப்பர் டைரக்‌ஷ்ன் டா !

                                   _______________XXXX___________________

 

  கேமரா ஸூம் ஆகிறது :

 Arnold Schwarzenegger (Terminator  XI)  டெலிபோன் பூத்தில் .டெலிபோன் புக்கை புரட்டுகிறார் . O….P…….Q……R… பிறகு RA……...கண்கள் சிவக்க உற்று பார்க்கிறார் .மிலிடரி பைக்கில் விர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர்      பறந்து  ஒரு வீட்டின்  முன் நிற்கிறார் .காலிங் பெல் அடிக்கிறார் . மிஷன் கன்னை  கைகளில் ஏந்தி    படக்  கிரிசிக் என்று trigger சரி செய்து கொள்கிறார் . கதவு திறக்கிறது .

..பட பட பட பட பட பட பட பட பட ..... பட பட பட பட பட பட பட

           Rajalakshmi ?   Ravishankar ?    Rajender ?