காதல் கவிதைகள்.... காதல் கவிதைகள்
காதல் 1980
ஒரு பெண்ணை
ஒரே நாளில்
ஒன்பது தடவை
பார்த்து விட்டால்
காதல் முடிச்சு ஆட்டோமேட்டிக்காக
அப்ளை ஆகிவிடும்
காதல் சட்டத்தில்
ஏதோ ஒரு பிரிவின்
உட் பிரிவின் கிழ்
சொன்னான் பள்ளி
நண்பன் குரு நாதன்
"அம்மை" போட்டு படுத்து விட்டதால்
அடுத்த ஒன்பது நாள் யாரையும்
பார்க்க முடியவில்லை - அந்த
குறிப்பை நகல் எடுத்து
பத்திரமாய் வைத்துள்ளேன்
தலைக்கு தண்ணிர் வைத்ததும்
ஒரே நாளில் ஒரே பெண்ணை.....
காதல் ஒரு தொடர் ஒட்டம் 1980-1990
ஜென்சியின் "ஆயிரம் மலர்களே " கேட்டு
நித்ய கல்யாணியையும்
"காதல் ஓவியம் " கேட்டு
மேக வள்ளியையும்
"தம் தனனம் தம் தனனம் " கேட்டு
லட்டு முழுங்கி வைஜய்ந்தியையும்
"தெய்விக ராகம் " கேட்டு
சத்திய குமாரியையும் - மற்றும்
பல பாடல்களை கேட்டு
பல பெண்களையும் காதலித்து
காதலித்து, காதலித்து, காதலித்து
என் கையில் உள்ள மயிலிறகை
வாங்கி கொண்டு நீங்களும்
சாதன சர்கம் அல்லது ஸ்ரேயா கோஷல்
பாடல்களை கேட்டுக்கொண்டு
யாரையாவது காதலியுங்களேன்
கே.ரவிஷ்ங்கர்
உங்களோட ரெண்டாவது கவிதை மாதிரி எழுத ஆரம்பிச்சா,ஒரு நாவலே நான் எழுதணும். என்ன பாடல்கள் மாறும்..'கண்மணி நீ வரக் காத்திருந்தேன்','பாட வந்ததோர் கானம்' முதற்கொண்டு இப்போ ,கோடானுகோடி வரைக்கும் சொல்லலாம்.
ReplyDeleteநல்ல காதல்..நல்ல கவிதைகள்...
Mr.காதல் பறவை,
ReplyDelete//கோடானுகோடி வரைக்கும்//
’காதலித்து காதலித்து, காதலித்து” என்ற
வரியை அதனால்தான் எழுதியுள்ளேன்.
நன்றி.
பாவம் உங்களிடமெல்லாம் காதல் படும் பாடு...
ReplyDeleteவலைச்சரம் பார்த்தீங்களா??
http://blogintamil.blogspot.com/
அன்புடன் அருணா
நன்றி அருணா,
ReplyDeleteவருகைக்கு. வலைச்சரம் வருகிறேன்.
கருத்து சொல்கிறேன்.
வழக்கமான run of the mill கவிதைகளாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கு இந்தக் கவிதைகளும்!
ReplyDeleteரொம்ப நன்றிங்க!
ReplyDelete"ஸ்பேம்/ரயில்வே கேட்”கவிதைகள் மற்றும் கட்டுரை பற்றி கருத்து சொல்ல வேண்டுகிறேன்.