அதிஷாவின் ’ இறுதி முத்தம் “ (20-08-08) கதையை எப்படி எழுத வேண்டும் என்று யோசனை கொடுத்திருந்தேன். ”நீ எழுதி காட்டு” என்று என் மனம் சொல்லியது. காட்டி விட்டேன். பதிவர்கள் விமர்சனம் செய்யலாம்.
முதல் முத்தம் யார் கொடுத்தது?.
பச்சை நிற ஹாஸ்பிடல் "தொள தொள " உடையில் உள்ளடங்கி வாடிபோய் தூங்கி கொன்டிருந்தாள். ஹாஸ்பிடல் சாப்பாடு சாப்பிடபடாம்ல் திற்ந்து கிடந்தது. நெற்றியில், யாரோ மந்திரித்து கொடுத்த விபூதி. டேபிளில், அவள் படிப்பதற்காக கொண்டு வந்த சுட்டி விகடன், Wisdom. மற்றும் முட்டைக் கண் டோரா (சுட்டி டீ.வி.) ஸ்டிக்கர்.
உடை, ஷூ, டை, எதையும் கழட்டாமல் குழந்தையை குனிந்து முத்தமிட்டான். அவள் கனவு உடைந்து நீர் குமுழிகள் மிதந்தன. உடைத்தவனை, "தொள தொள” சட்டை கையால் மெதுவா விரட்டி, சிணுங்கி னாள் தூங்கி போனாள்.
மனைவிக்கு கொடுத்த முத்தங்க்ள்..?மனைவி போய் விட்டாள். கொடுத்த முததங்கள் இருக்கிற்து. உலகின் முதல் முத்தம் காதலா? அனபா? நினைவு இப்படியே சில மணி நேரம் ஒட ......
சொல்லவில்லை.ஒரு வருடம் முன்பு இதே ஹாஸ்பிடலில் ஒரே நாள்தான். மனைவி கவிதா திரும்பவேயில்லை கண் மூடி திறப்பதிற்குள் பிரிந்தாள். புவனா செல்லமோ கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி ஸ்லோமோஷனில் மறைய தொடங்கினாள். முன்று மாதமாக.......ஹாஸ்பிடல்தான் கடைசி புள்ளியா?
. சீஃப் டாக்டர் வந்தார் அவர் பின்னால் எட்டு உதவி டாக்டர்கள். . முக்கியமான ஆபரேஷுன் என்று தெரிந்து விட்டது .எல்லோரும் கை கோர்த்து கொண்டு புவனாவை காப்பாற்றி விடுங்கள். நிறைய முத்தங்கள் காத்திருக்கிற்து. கொடுப்பதிற்கு. சீஃப் டாக்டர் புவனாவை சோதித்தார். எல்லா கடைசி ரிப்போர்ட்களையும் ஊன்றி படித்தார் . "இவர் கிட்ட டீ டெயில்டா சொல்லிடீங்களா?" பெண் டாக்டரை பார்த்து கேட்டார் அவ்ள் "எஸ்" என்று தலையாட்டினாள் .
. விரக்தியாக அவரை பார்த்துக்கொண்டிருந்த்தேன்.
முற்றும்
கே.ரவிஷங்கர்
இனி அதிஷா எழுதிய கதை
முத்தம் தரும் சுகம் மிக அருமையானதுதான் , அது எங்கே எப்போது யாரிடத்தில் பெறப்பட்டது , தரப்பட்டது என்பதை பொருத்தது , முத்தம் வலிமை வாய்ந்தது , முத்தமிடும் தருணங்கள் நம் வாழ்வில் மிக குறைவு , சில சமயங்களில் பாசத்தோடு , சில சமயங்களில் காதலோடு , சில சமயங்களில் கனிவோடு , சில சமயங்களில் காமத்தோடு , ஆனால் மிகச்சில சமயங்களில் மட்டுமே நாம் வேதனையோடு , பிரிவு தரும் வேதனையோடு ......
இந்த குழந்தைக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன் , இவளுக்கு தெரியுமா இறப்பென்றால் என்னவென்று , ஏழுவயது குழந்தைக்கு மூளைக்காய்ச்சல் என்றால் என்னவென்று தெரியுமா , அது ஒரு மனிதனின் உயிரையே காவு கேட்பது என்றும் புரியுமா ? , அவளது தாய் உயிரோடிருந்திருந்தால் அவள் புரிய வைத்திருப்பாளோ, தாயில்லா பிள்ளை , இன்றிரவு தான் நானும் என் மகளும் இறுதியாய் சந்திக்க போகிறோம் என்று யாருக்கு தெரியும் ,
என் மனதில் ஓடும் எண்ணங்களை என்னால் கட்டு படுத்த இயலவில்லை .
என் மடியில் உறங்கும் இந்த பிஞ்சுக்கு இதை தாங்கும் சக்தியை ஆண்டவனால் மட்டுமே தர இயலும் ,
'' அப்பா , ஏன்ப்பா அழற ''
''ஒன்னுமில்லடா குட்டி ''
''அப்புறம் ஏன் உன் கண்ல தண்ணி ''
''தெரியலடா ''
அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிலிருந்த படுக்கையில் , வெள்ளைநிற குழல் விளக்கின் அதீத ஒளியில் மருத்துவமனையின் மிருதுவான பச்சை நிற சுவர்களின் நடுவில் மருந்து மணத்தினூடே என் ராஜி தேவதையாய் அழகு மிளரும் மின்னும் முகத்துடன் கண்களில் இனம் புரியாத வேதனையை காட்டியபடி கேள்விகள் கேட்கையில் பதில் கூற இயலாத என் நிலை யாருக்கும் வரக்கூடாது.
அவளது வேதனைக்கு எனக்கு காரணம் தெரியும் , ஆனால் இப்போது என்னால் எதுவும் செய்ய இயலாத நிலை , பிரிவின் வேதனை மிகக்கொடியதும் வலிமிகுந்ததுமாகும் , சமயங்களில் அது உயிர் பிரியும் வலியையும் தரவல்லது
'' அப்பா , ஏன்ப்பா , ஒரு மாதிரி இருக்க ''
'' நல்லாதான்டா குட்டி இருக்கேன் ''
''நாளைலருந்து நாம பார்க்க முடியாதப்பா ?''
''இல்லடா குட்டி , நாளைக்கு கட்டாயம் நாம பாக்க முடியும் ''
''பொய் சொல்லாத , டாக்டர் அங்கிளும் நீயும் பேசினத நான் கேட்டேன் ''
''அது சும்மா பாப்பா , குட்டிமா அதுலாம் பொய் லுலுலாய் ''
'' அது சும்மாவா , அப்பா , ஒரு கதை சொல்லேன் ''
என்ன கதை சொல்வது இந்த பிஞ்சிற்கு , என்னால் சரியாக பேசக்கூட முடியவில்லை , எப்படி சொல்வேன் கதைகளை , என் நாளைய கதை எழுதப்பட்ட பிறகு என்ன கதை சொல்வேன் .
''அப்பா, என்னப்பா எதுவுமே பேச மாட்டேன்ற , ''
''......................''
''பா , ''
''செல்லம் அப்பாக்கு , உடம்பு சரில்ல , நாளைக்கு சொல்லட்டுமா ''
கண்களில் இன்னும் கண்ணீர் துளி துளியாய் துளிர்த்தபடியே இருந்தது .
எனக்கு கதறி அழ வேண்டும் போலிருக்கிறது , என் குரலை வெளியே வர விடாமல் தொண்டையில் ஏதோ தடுக்கிறது , இதற்கு முன் என் மனைவியின் மரணத்தில் மட்டுமே இது போன்றதொரு வேதனையை அடைந்திருக்கிறேன் .
'' அப்பா , எனக்கு ஒரு உம்மா குடேன் ''
''அப்பாக்கு ஒன்னு குடுடா குட்டி ''
என் ராஜிக்குட்டி என் கன்னத்தில் தந்த அந்த முத்தம் முதல் முறையாய் மகிழ்ச்சிக்கு பதில் வேதனையை தந்தது .
'' அப்பா , தலை வலிக்குதுப்பா ''
''அப்பா ரொம்ப தலை வலிக்குதுப்பா ''
''இரும்மா இரும்மா '' என் இதழ்கள் உதறியபடி கதறியபடி , என் கால்கள் நடுங்க , அவளது பிரிவின் கடைசி நிமிடங்களில் , சுற்றியிருந்த மருத்துவர்களுக்கு நடுவே , அந்த குழந்தையின் மிருதுவான கால்களின் விரல்களை என் கைகளால் பற்றிய படி கண்களில் நீருடன்.............
முத்தம் தரும் சுகம் மிக அருமையானதுதான் , அது எங்கே எப்போது யாரிடத்தில் பெறப்பட்டது , தரப்பட்டது என்பதை பொருத்தது .
அதிஷா
good attempt
ReplyDelete(My tamil fond not working)
சார்.. அருமையாக இருக்கிறது உங்கள் கதை.. என் கதையை இதைவிட சிறப்பாக யாராலும் மாற்றியமைக்க இயலாது.. உங்களை போன்ற சிறந்த எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டும்...
ReplyDeleteஆவலுடன்
அதிஷா
ந்ன்றி அதிஷா!
ReplyDeleteவயது,அனுபவம்,பார்க்கும் பார்வை
வித்தியாசப்படும்.அவ்வளவுதான்.கதைகளங்களும் உண்ர்ச்சியை பிரதி பலிததால் நல்லது.
கே.ரவிஷங்கர்
//முததம் அன்பு கலந்த பாதுகாப்பா?//
ReplyDeleteஇருக்கலாம்...
//ஹாஸ்பிடல்தான் கடைசி புள்ளியா//
சிந்திக்க வேண்டிய விஷயம்.இயல்பு மரணங்களை விட மருத்துவமனை மரண விகிதம் மிக அதிகமாகி வருகிறது.
//முததம் கொடுக்க மனசு விரும்பவில்லை //
இந்த ஒரு வரியில் அழகாக நம்பிக்கையைச் சொல்லிவிட்டீர்கள்.
புவனாவின் சோகக்கதை தேவையற்றது போல் எனக்குத் தோன்றியது.(எனக்குக் கதை எல்லாம் எழுத வராது)
அதிஷாவின் கதையை விட இது சற்று நன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றிய காரணம்.,இரு கதைகளிலும் வரும் குழந்தையின் உரையாடல்கள்.
அதிஷாவின் கதையில் இது 'மணிரத்னம்' படக் குழந்தை போல் தோன்றியது.
உங்கள் கதையில் சற்று இயல்பாக இருந்தது.
இதைவிட இன்னும் சிறப்பாக உங்கள் படைப்புக்களை எதிர்பார்க்கிறேன்...
நன்றி தமிழ் பறவை!
ReplyDeleteஎனக்கு கதையை மிகை படுத்துதல் பிடிக்காது.
சுஜாதா சொன்னது “ ஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது அதை எழுதுபவனின் நடை, சொல்லும் விதம்,காட்சிகளை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் திற்மை..”இதோ
பார் வாழ்வின் அபத்தம் ” இதோ பார் வாழ்வின் சந்தோஷம்” கதைக்கு
உள்ளே வந்து “மைக்” பிடித்தால். கதை Documentary ஆகி விடும்.”
வாசகனே உணர வேண்டும்.
அன்புடன்
கே .ரவிஷங்கர்
//உள்ளே வந்து “மைக்” பிடித்தால். கதை Documentary ஆகி விடும்.”
ReplyDeleteவாசகனே உணர வேண்டும்.//
well said ravi
ரவி, அருமையாய் மாற்றி அமைத்திருக்கிறீர்கள். சொற்றொடர்கள் ஒவ்வொன்றும் இயல்பாய் ஒட்டிக்கொள்கிறது. நீங்கள் எழுத்தாளரா, உங்கள் ப்ரொபலையே காணோமே.
ReplyDeleteSperb...!! :)))ரொம்ப நல்லா இருந்தது கதை.. மத்தபடி எனக்கு விமர்சனம் பண்ணத்தெரியாது சாரி.. நான் ரொம்ப ரசிச்சேன்.. :)))
ReplyDeleteநன்றி ஸ்ரீமதி,
ReplyDeleteஎன் வலைப்பூவிற்கு வந்து வாழ்த்தியதற்கு.
This blog is very very super............
ReplyDelete(Prasanna.s)
prasannascs@yahoo.co.in
நன்றி பிரசன்னா.நானே மறந்து போன இந்த கதை
ReplyDelete(அக்டோபர்-08)படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//This blog is very very super......//
அடிக்கடி வரவும். கருத்து சொல்லவும்.