பதிவர்களை பற்றி ஒரு புதிய பதிவரின் பார்வையில்
நான் ஒரு புதிய பதிவர்.(ரொம்ப லேட் ) இந்த தமிழ்மணம் பதிவுகள்,பதிவர்கள் பற்றி என்னுடைய "டாப் ஆங்கிள்" அல்லது "பறவை பார்வை ".புதியவர் என்பதால் சற்று தள்ளி நின்று எடை போடலாம் ஒரு "Third Umpire"
உள்ளே நுழைந்தால் "ஜே ஜே" என்று சென்னை சென்ட்ரல் கூட்டம் ..பள பள என்று கண்ணை பறிக்கும் ஸ்டால்கள். மினி மினு வண்ணங்கள். வழுக்கும் டைல்ஸ் நீயான் போர்டுகள்.அன்டார்டிக, அலாஸ்கா , மற்றும் பெர்முடா ட்ரையாங்கில் (அருகே) வசிப்பவர்கள் கூட ஸ்டால் போட்டிருக்கிறார்கள். செருப்பு token கணக்கை வைத்து .எவ்வளவு பேர் உள்ளே என்று காட்டும் ஸ்கோர் போர்டுகள் .வெளியூர் கிளைகள். இங்கே இறங்கினால் மற்ற ஊர்களுக்கு ரயில் வசதி உண்டு . நான்தான் பதிவர்களின் சூப்பர் ஸ்டார் என்ற பேனர்கள்.
ஜே கே ரிதிஷ்களும் உண்டு. சில ஸ்டால்கள் "பேய்" வீடு மாதிரி வெறிச்சோடி இருக்கிறது
கன்பார்ம் ஆகி கரை ஏற முடியுமா? புதிய பதிவர்கள் திரு திரு வென விழித்துக்கொண்டு,. கையில் இத்துப்போன டென்ட்
அளவில்லா சுதந்திரம் .இது ஏழைகளின் "ஓ" பக்கங்கள் .அல்லது A to Z பக்கங்கள் . "எட்டு " போட்டு காட்டிவிட்டு லைசென்ஸ் வாங்க வேண்டாம். Proof Reading” கிடையாது. உடனே பதிப்பித்து விடலாம் கும்மாளம் & குஷி தான். .விசில் .பாயிலா பாட்டுதான்.. விடலைத்தனம் ஜாஸ்தி
என்ன எழுதுகிறார்கள் .எதை வேண்டுமானாலும் எழுதலாம் ."என் செல்போன் சார்ஜ் வைக்க பட்டிருக்கிறது " என்ற பதிவு கூட எழுதலாம். பலர் கஷ்டபபட்டு ,உழைத்து சில விஷயங்களை பதிவு போடுகிறார்கள் .மிகவும் அருமையாக இருக்கிறது . . சில அறிய தகவல்கள் கொடுக்கிறார்கள் .ரசனையை உயர்த்துகிறார்கள் "ஓஹோ அப்படியா " என்று சில விஷயங்கள் பிரமிக்க வைக்கின்றன . நமக்கு தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். சூடான தகவல்கள் உள்ளே
தான் ரசித்த எல்லா விஷயங்களையும் உலகுக்கு சொல்லிவிட துடிக்கிறார்கள் .பாதி பேர் த்ன்னுடைய "மால் குடி"தினங்களை பதிவிடுகிறார்கள் . நெறைய லைட் விஷயங்கள். கொஞ்சம் கன விஷயங்கள் எல்லாம் கலந்து கட்டியாக இருக்கிறது.. கன விஷயங்களை படிக்க ஆள் இல்லை.
."இன்று பல் தேய்த்தேன்" என்ற பதிவு போட்டால்.
"நச்" பாஸ் , "நெத்தியடி" " கொன்னுட்ட மச்சி" ""எப்படி உன்னால முடியுது " என்று செல்லம் கொஞ்சுகிறார்கள். " உனக்கு நான் எனக்கு நீ " என்ற ” MOU “அனுமார்வால் மறுமொழிகளில் தெரிகிறது
சில பதிவுகளுக்கு "சும்மாங்காட்டியும் " மறுமொழி கொடுத்து விசிடிங் கார்ட் போடுகிறார்கள். மறுமொழிக்க்காகவே பதிவு போடுகிறார்கள் . சில மறுமொழிகளில் பதிவரை பின்னி எடுக்கிறார்கள். மறுமொழியிலும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் உண்டு.
எல்லா பதிவுகளையும் படிக்கிறார்களா? எல்லாவற்றிக்கும் பதில் போடுகிறார்களா ? எல்லா பதிவுகளையும் படித்து விட முடியுமா? .எழுதமுடியுமா ? எவ்வளவு மறுமொழிகள் போடுவார்கள்..
எதோ ஒரு பதிவு தளத்தில் 200000000000000000000 " ஹிட்ஸ்,Pathivist No.1. என்று போட்டிருந்தது வாய் பிளந்தேன் நினைவு எங்கோ ஓடியது. பலம் வந்தது. எவ்வள்வு NRI , சாப்ட்வேர் பெண்கள் படிப்பார்கள். காதல் கதை, கவிதை எழுதி , கவர் பண்ணி அமெரிக்காவில் செட்டில் ஆகி விடலாம்.. காதல் "வித்தௌட் சீஇங்"..புல்லரித்தது
தமிழ் உதைக்குமே! கவலை படாதே! என்றார் நண்பர்
நண்பர்கள் சொன்ன தட்டச்சு மென் பொருள் கற்று கொண்டு . "தென்றல் வந்து என்னை தொடும் " ராஜாவின் பாட்டின் prelude ஓட கண்ணை மூடிக்கொண்டு ஒரு முதல் பதிவு காதல் கவிதையை தட்டச்சு செய்தேன்.
அடித்தவுடன் கண்ணை திறந்தேன். கவிதையை பார்த்தேன்
ம்க்ய்ந்கோ
அன்பே வ்ஸ்ச் ம்க்ஸ்ழ்கயு மிர்கோபி
ஒலோகி அன்டிய்ட் உண்டேர்ஷ்டண்டின்
ம்க்ய்சு ஈஸ்கயோ அல்லுவோத்
மணித் கண்டால் அல்லா. மொட்ஷன்
ஒவொரு துமல்யும் உன் முகம்
அநேச்திஎய ஓசம் பின் கவிதை .
Xxxxxxxxxxxxxxxxxxx -----------------------xxxxxxxxxxxxxxxxxxxxxxx
..
வாங்க தல,
ReplyDeleteஒரு கலக்கு கலக்கலாம்!
வாழ்த்துக்கள்!!
ஹி ஹீ, நானெல்லாம் பதிவிடும் போதே தெரிந்துக்குங்க!
நல்லா இருக்குங்க..சும்மாங்காட்டியும் சொல்லல உண்மையாகவே :-)
ReplyDeleteவாழ்க! வளர்க!.என்னோட பொதுவான கருத்து!,எப்பயுமே பழைய பெருங்களோட பதிவை படிக்கறதோட நிப்பாட்டிக்கிங்க!.அவங்க பதிவைப் படிச்சி அவங்க நல்லவங்களா நீங்க நினைச்சிக்கிட்டா அது வில்லங்கம் தான்!.இங்கே ஒவ்வொருத்தனும் தன்னை ஹீரோவா நினைச்ச்சித்தான் பதிவு போடறாங்க அப்படிங்கறதை மனசில எப்பவுமே வெச்சிக்கிங்க!.
ReplyDeleteஅப்புறம் இந்த சொல் மட்ட்டுறுத்தலை எடுக்காட்டா பின்னூட்டம் சத்தியமா வராது!.அதைப் புரிஞ்சிக்குங்க!.அதை எடுத்துடுங்க!அப்புறம் நான் தெரிஞ்சவரைக்கும் அனானிகள் கும்மி கொட்டும் போது அவங்களை நல்ல வார்த்தையா உபயோகிக்கச்சொல்லுங்க!.ஏன்னா அனானி சொல்லற வார்த்தைக்கெல்லாம் நீங்கதான் காரணம்ன்னு கதை கட்டி பேசறத்துக்கு ”ராபின்” போல சில கிருத்துவ ஏஜண்டுகள் இருக்காங்க!. அவங்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!.அவங்கள மாதிரி இருக்குறவங்களுக்கு சைட் கிடையாது.அவங்க இந்த பின்னூட்டம் போட்டு மதவெறியை வளக்க மட்ட்டும்தான் இணையத்த உபயோக்கிற ஆளுங்க!.
மத்தபடி நல்ல எழுதுங்க!.இணைய அரசியலிலெ எப்பவுமே கலந்துகாதீங்க!.என்னப் போல! வாழ்த்துக்கள்!.நல்லா எழுதுறதில மட்டும் குறியாயிருங்க! :0
:)இப்படி போட்டது.இப்படி ஆகிடுச்சி :0 மன்னிக்கவும் ரவி! :)
ReplyDelete"நச்" பாஸ் , "நெத்தியடி" " கொன்னுட்ட மச்சி" ""எப்படி உன்னால முடியுது "
ReplyDeleteஅப்படியே இனொன்னும் ஏ... சூப்பருபா..
இந்த விசயத்த இப்படிக்கூட எழுத முடியுமா????
ReplyDeleteஅதே போல இங்க புதிதா பதிவெழுத வரும்போதே யாரும் ஜிகினா டென்டோட வரதில்ல அங்க வந்துதான் கிழிஞ்ச டெண்ட ஜிகினா போட்டு அலங்கரிக்கறாங்க என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் சார்..
நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்...
ReplyDelete//அளவில்லா சுதந்திரம் .இது ஏழைகளின் "ஓ" பக்கங்கள் //
இதுக்கு ஒரு 'ஓ' போட்டுகிறேன்...
நல்ல நடுநவீனத்துவக் கவிதை...
pls remove word verification...
சூப்பர் கவிதை!!!!!
ReplyDeleteவாழ்த்து(க்)கள்.
வேண்டுகோள்: வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்க. அதான் மாடு ரேஷன் இருக்கே:-)
ரவி ஆதித்யா,
ReplyDeleteஉங்களை சினிமா தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரமிருப்பின் தொடருங்கள்.
http://soundparty.blogspot.com/
உதய்.
எல்லோருக்கும் நன்றி! நன்றி! நன்றி!
ReplyDelete"word வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்க. "
தூக்கி விட்டேன்.
நல்ல தம்பி அவரகளே ! நீங்கள் சொல்லும் ஏரியா என்னுடையது அல்ல.நமக்கு நகைச்சுவைதான் ஏரியா.கட்டுரையின் நோக்கம் அதுவும் அல்ல
அன்புடன்
கே.ரவிஷங்கர்
வாங்க வாங்க...
ReplyDeleteவாழ்த்துக்கள்
:-))))))))))))))))
ReplyDelete//நல்ல தம்பி அவரகளே ! நீங்கள் சொல்லும் ஏரியா என்னுடையது அல்ல.நமக்கு நகைச்சுவைதான் ஏரியா.கட்டுரையின் நோக்கம் அதுவும் அல்ல //
ReplyDelete:)பேரைக் கொஞ்சம் சரி பாருங்க அண்ணா! :)
வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteநீங்க பதிவ போடங்க.
மிந்நத்த நாங்க பாத்துக்கறம்
hav Fun :)
மன்னிக்கவும் நல்ல தந்தி (தம்பி!) அவர்களே.
ReplyDeleteவாங்க...கலக்கலாம்...:)
ReplyDeleteவாழ்த்துக்கள்...
புதிய பதிவரா? ஆரம்பத்திலேயே கலக்குரீன்களே??
ReplyDeleteஉங்களிலேயே கும்மி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்கையா..
ரவி,
ReplyDeleteஉங்களிடம் நிச்சயம் திறமை இருக்கிறது. எனக்கு மிகவும் தேவை என்றுணரும் நகைச்சுவை உங்களுக்கு இயல்பாக வருகிறது. ஓரளவு உங்கள் பதிவுகள் படித்துவிட்டு இதை எழுதுகிறேன். வாழ்த்துக்கள்.
சுஜாதா நெடி அப்பட்டமாகத் தெரிகிறது. சுஜாதாவின் நடை புதியவர்களால் தவிர்க்க முடியாத ஒன்று. என்னளவில் சுவாரஸ்யம், நடை என்று பார்த்தால், it cant get better than Sujatha. ஆயினும் சிவாஜி போலவோ, கமல் போலவோ வேறு யாராவது நடித்தால், முதல் ஈர்ப்பு போனபின் ஒரு எரிச்சலே மிஞ்சும். அது சுஜாதாவுக்கும் பொருந்தும்.
எங்கே தேடி என் வலைப்பூவை பிடித்தீர்கள் என்பது ஆச்சரியம்! நிறைய படியுங்கள். அதில் பத்து சதவீதம் எழுத்தில் கடத்தப் பாருங்கள். பதிவுலக அரசியலில் கூடியவரை சிக்க வேண்டாம். எல்லோருக்கும் அரசியலில், சமூகப் பிரச்சனைகளில், சினிமாவில் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதனை கீறிப்பார்க்கும் பல பதிவுகள் 'என்னை கவனி' என்று தமிழ் மணத்தில் கூவி அழைக்கும். டிராவிட் போல leave it outside the off-stump. மன உளைச்சல் போன்ற உபாதைகள் இன்றி நீங்களும் உங்கள் அளவில் தமிழ் கூறும் நல்லுலகிற்கு இலக்கிய சேவை புரிந்திடலாம்.
நிறைய சிற்றிதழ்களில் மட்டும் எழுதும், அவற்றையும் புறக்கணிக்கும் எழுத்தாளர்கள் புழங்கும் இடம். என்னளவில் அது ஒரு பெரிய வரப்பிரசாதம். பிடித்திருந்தால் பயனடையுங்கள்.
All the best and welcome aboard
அனுஜன்யா
நன்றி அனுஜன்யா!
ReplyDelete//சுஜாதா நெடி // உண்மைதான்
சில (பல) இடங்களில் வேணுமென்றே செய்தேன்
. "முதல் முத்தம் " சிறு கதை என் சொந்தம் . நீங்கள் படித்திர்களா தெரியாது!
இந்த கதை அதிஷ்வின் கதையையை என் பாணியில் எழுதியது . அவருக்கு "நீங்கள் நெறைய படிக்க வேண்டும் " என்றேன் . "உள் வாங்கி வெளி விடுவதில்தான் திறமை " என்றேன்
"நீங்கள் நெறைய " இப்போது எனக்கு சுழற்சி முறையில் . எழுத்துக்கு புதியவன் அல்ல."பதிவிற்கு" புதியவன் கவிதைக்கு புதியவன் .சத்தியமாக எல்லாமே என்னுடைய முதல் கவிதைகள். தமிழ்மணம் திருப்பி அனுப்பாத கவிதைகள் .
"எங்கே தேடி என் வலைப்பூவை "
"விஷம் வாங்கியதில்" மனதில் நின்ற ஹைகூ .
லாங் சாட், பிறகு மிட் சாட் ,கடைசியில் க்ளோசப்பில் (zoommil) உறைய வைத்தது.
//பதிவுலக அரசியலில் //
பதிவிடுவதுதான் என் வேலை. பதிவு அரசியல் வேண்டாம் .
மீண்டும் நன்றி
:)))))))))))))
ReplyDeleteEXCELLENT
சமீபத்தில் பதிவுலகுக்கு வந்தவர்களில் நீங்கள் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறீர்கள். பதிவர்கள் குறித்த உங்கள் பார்வையோடு என்னைப் போன்ற அமெச்சூர்கள் அப்பட்டமாக ஒத்துப்போக வேண்டியிருக்கிறது. அதிஷாவின் கதைகளை ஃபைன்ட்யூன் செய்தது போல மற்ற அமெச்சூர்களின் எழுத்துக்களையும் அவ்வப்போது தனிமடலிலாவது ஃபைன் ட்யூன் செய்யுங்கள். உங்களைப் போன்ற அனுபவஸ்தர்களின் ஆலோசனை இல்லாது அமெச்சூர்கள் அடுத்த படிக்கு தாவுவது அசாத்தியம்.
ReplyDeleteஅன்புடன்
லக்கி
லக்கி லுக்,
ReplyDeleteநானும் ஒரு .குமு, ஆ.வி., கல்கி , குங், மற்றும் பல வணிக பத்திரிகைகளில் புக முடியாமல் உயிர்மை /கா.சுவடு /தீ.நதி போன்றவற்றிற்கு qualify ஆகாமல் நடுவில் மாட்டி கொண்டு தொங்கிகொண்டிருக்கும் ஒரு மிடில் கிளாஸ் பதிவர். வலைப்பூ ஒரு "ஒரு கோடி விழுந்த" அதிர்ஷ்ட குலுக்கல். நீங்கள் எனக்கு கொடுத்திருக்கும் வேலை "லஞ்சத்தை ஒழி" ஆண்டவனே வந்தாலும் முடியாது .
நானும் அந்த வயதில் " கண்ணே உன் நிழலை மிதித்தல் புண்ணியம் " என்று மிகவும் அசட்டுத்தனமான கவிதைகளை எழுதினேன் .23 வயதில் தெளிந்து விட்டேன் 23 வயதில் தெளிந்தது அதிசயம்தான் ..காரணம் நெறைய ரைட் அண்ட் லெபிட் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன் .உள் வாங்கி வெளி விடுவதில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன் அப்போது நிறைய டிவி சேனல்கள் இல்லை . இப்போது வைரமுத்து நிறைய செல்லம் கொடுத்து விட்டார் .மானாட மயிலாட......டிவி ரசனைதான்இங்கும் வெளிபடுகிறது.
யாரும் படிப்பதில்லை drilled down திங்கிங் இல்லை.
ஒன்று தெரிந்து கொண்டேன் . கவிதை/சிறு கதை எழுதுவதற்கு முன் நிறைய படிக்க வேண்டும் .அப்புறம் எழுதலாம் .முடிந்தவரை ஆலோசனை அவ்வப்போது சொல்கிறேன் .
நன்றி!