Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Monday, January 11, 2010

பெற்றோர் - ஆசிரியர் --பின்னூட்டம்

பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு என்னும் சம்பிரதாயம். இது வருடத்திற்கு இரண்டு முறையோ நான்கு முறையோ பள்ளியில் படிக்கும் தம் குழந்தைகளின் ”எப்படி படித்துக் கிழிக்கிறார்கள்” பற்றிய பின்னூட்டத்தை(feed back) நேரடியாக ஆசிரியர்களிடம் பெறுவதுதான்.பெற்றுக்கொண்டு சீர்படுத்துவது.இங்கு அனானி பின்னூட்டம் இல்லை.பிள்ளைகளின் ”ஓபன் சீக்ரெட்”

இது எவ்வளவு பள்ளிகளில் இருக்கிறது என்பது தெரியாது.

இதில் “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை _________ “எனக்கேட்க அம்மாவும் “ மகன் தந்தைக்கு _____________இவன் தந்தை  என்னோற்றன் கொல்லொனுஞ் சொல்”லை கேட்க அப்பாவும் வருவதுண்டு. கடந்த நான்கு வருடங்களாக நிறைய அப்பாக்கள் தென்படுகிறார்கள்.

என் வீட்டில் மாறிமாறிப் போவதுண்டு.நான் போவதற்கு முன் எனக்கும் ஒரு கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடக்கும்.அங்கு போய் இதைப் பற்றி பதிவுப் போடுவதற்கு மண்டையில் யோசித்துக்கொண்டிருக்காமல் ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதை கவனமாக காதில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்பதாக."படிப்பு முக்கியம்...பதிவு அல்ல.understand?" "Yes.... mam!"
 
புத்தகத்திருவிழாவில் ஸ்டால் ஸ்டாலாகப் போவது போல் இங்கு வகுப்பு வகுப்பாகப்  போக வேண்டும்.முக்கால்வாசி கவலைத் தோய்ந்த முகங்களைப் பார்த்தாலும் இங்கு நடக்கும்  இந்த சந்திப்புகள் பார்த்தால்  நன்றாக பொழுதுபோகும்.

ஆசிரியரைக் கும்பலாக சூழ்ந்துக்கொண்டு மற்ற குழந்தைகளின் மார்க்கை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அவர்களின் “ஓபன் சீக்ரெட்டை”காதில் கேட்டுக்கொண்டுதான் நடக்கும்.அடுத்து அழுவது.ஒரு முறை ஒரு மாணவனின் தாயார் (விசும்பி விசும்பி) அழுதைப் பார்த்தேன்.(இது கண்டிப்பாகத்  தவிர்க்க வேண்டிய செயல்.)பிறகு மாணவ/வியின் காதைத் திருகி அங்கேயே கண்டிப்பது.அடுத்தவரைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் குழந்தைகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது.
  
ஒரு ஆசிரியர் ஒரு நாளில் கிட்டத்தட்ட 200 பெற்றோர்களைச் சந்தித்து பின்னூட்டம் கொடுக்கிறார்.பரிதாபம்.முப்பது அல்லது நாப்பதாவது பின்னூட்டத்திலேயே சலிப்பு வந்து ரோபோவாகி “டெம்பிளேட் பின்னூட்டம்” ஆகிவிடுகிறது. ”நிறைய பிராக்டீஸ் பண்ணனும்” “கான்செப்ட்ட தெரிஞ்சிகிடனும்””சில்லி மிஸ்டேக்ஸ்””வாய்விட்டு படிக்கணும்” “She/He can still do better"”lacking concentration".
 
( Lacking concentration எனும்போது இப்போது இருக்கும் தலைமுறைக்கு கவனக்கலைப்புகள் அதிகம்.இதிலிருந்து மீண்டு படிப்பில் பாடம் செலுத்துவது இமாலய சாதனை.)இது பெற்றோர்களுக்கும் ஒரு சவால்.இதில் பல பெற்றோர்கள் சலித்துப்போய் அலுத்து நொந்து விடுகிறார்கள்.

இங்கும் ஒரு பக்கப் பார்வைதான்(one sided view) பார்க்கப்படுகிறது.அதாவது ஆசிரியர்களிடம் குற்றமே இல்லாத மாதிரியும் மாணவ/விகள்தான் முழு பொறுப்பு என்பதாக.பெற்றோர் மற்றும் குழந்தைகளிடமும்  பதிலுக்கு உண்மையான “டெம்பிளேட் பின்னூட்டங்கள்”தொண்டையில் உண்டு.ஆனால் சொல்வதில்லை. அவை” போர்ஷ்ன்களை மின்னல் வேகத்தில் நடத்திக்கொண்டுப் போவது” “பாடத்தை எழுதுவதற்குள் அழித்துவிடுவது””எப்படி இருந்தாலும் மாணவ/விகள் டுயூஷன் வைத்துவிடுவதால் மேலோட்டமாக சொல்லிக்கொடுப்பது”” மார்க் குறைந்தாலும் பணம் இருப்பதால் இன்ஜினியரிங் கல்லூரி சேர்த்துவிடலாம்”

வகுப்பில் ஆசிரியர்களின் கண்டிப்பில் வீரியம்  குறைவாகத்தான் இருக்கிறது.காரணம் மாணவ/விகள் தற்கொலை.மனித உரிமைக் கழகம்.ஏதாவது நடந்தால் ரெடியாகக் காத்திருக்கும் புலானய்வு ஊடகங்கள்.

நான பார்க்கும்  உலக மகா அபத்தம் கம் குற்றம்  ஒரு வகுப்புக்கு 65 மாணவ/விகள் மேல் இருப்பது.இருக்க வேண்டியது 30.எவ்வளவு சொல்லியும் இந்த டெம்பிளேட் பின்னூட்டத்தை யாரும் காதில் போட்டுக்கொள்வதில்லை.

குறைவாக மதிப்பெண் பெறும் மாணவ/மாணவிகளின் பெற்றோர்களுக்கு எங்கு தவறு என்று நன்றாகத் தெரிந்துதான் இருக்கிறது.தெரியவில்லை என்றால் முட்டாள் பெற்றோர் என்றுதான் சொல்வேன்.

சில படித்தப் பெற்றோர்கள் டுயூஷன் வைக்காமல் சொல்லிக்கொடுக்கிறார்கள்.ஆனால் இதற்கு.எல்லையில்லா பொறுமையும் எனர்ஜியும் வேண்டும்.அதுவும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கும் வீடு? அம்மாடியோவ்!


பெரும்பாலும் கணக்குப்பாடத்தில் சறுக்குவது சகஜம்.காரணம் இதில் கதை விட முடியாது. அடிப்படைத் தெரியவேண்டும்.கவனம் குறைந்தால் காலிதான்.

அடுத்து ஆங்கிலம்.இலக்கணம் மிக முக்கியமானது.ஆசிரியர்/மாணவர் இரண்டுமே இங்கு சொதப்பல். மூன்றாம் நான்காம் வகுப்பிலேயே அடித்தளம் பலமாக போட வேண்டும்.இல்லாவிட்டால் காலி.தமிழ்(2nd language) இங்கும் சொதப்பல்.காரணம் மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பதால்.இதை இரு தரப்பும் அவ்வளவாக கண்டுக்கொள்வதில்லை.காரணம் இது சோறுப் போடப்
போவதில்லை என்பதால்.பிளாக் எழுத உதவும்(????).

என் மகன் 2nd language தமிழ்தான். ”ஐனூத்தி என்பத்தி நாலு ரூபாய்” என்பதை மார்வாடி போல் தட்டுத்தடுமாறி உச்சரிப்பான்.


இந்த சந்திப்பில் வெளி வரும் விஷயங்கள்:

  • பாடத்தின் அடைப்படையை மண்டையில் ஏற்றுதல்
  • மாணவ/விகளின் சோம்பேறித்தனம்
  • கணக்கில் பயிற்சி நிறைய செய்யவேண்டும்.அசுர சாதகம்.போட போட கணக்கு, பாடபாட பாட்டு.....
  • அடித்தளம் பலமாக இருக்கவேண்டும்.இது ஆரம்ப நிலையிலேயே
  • பொறுமையின்மை(பெற்றோர்/குழந்தைகள்)
  • கவனக்கலைப்புகளை கண்டறிதல்
  • டீச்சர்களுக்கும் கவனக்கலைப்புகள்
  • பாடச் சுமை
  • வாய்விட்டுப் படித்தல்
  • தனி கவனம் இல்லாமை
  • கூலிக்கு மாரடைப்பது

கவனக்கலைப்பு: டிவி,ரேடியோ,டிவிடி,நண்பர்கள்,வீட்டு உறுப்பினர்கள்,ஷாப்பிங்,குர்குரே இத்யாதிகள்

Friday, June 19, 2009

குழந்தைகள்..பெற்றோர்கள்.. மக்குகள்...

குழந்தைகளுக்கு சின்ன வயதிலிருந்தே (Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவது அவர்களுக்கு அன்றாட வாழ்வில் ரொம்ப பயனளிக்கும்.என் பெற்றோர் எனக்குக் கற்று தந்த (Life Skills)வாழ்க்கைத் திறமைகள் எனக்கு ரொம்ப பயன்பட்டது. ஒவ்வொரு வாழ்க்கை கட்டத்திலும் பயன் படுத்தினேன்.என் பையனுக்கும் அதைக்கற்றுத் தந்திருக்கிறேன்.

வாழ்க்கை ரொம்ப சுலபம் இல்லை.திடீர் திடீர் என்று கிறுக்கல் அடித்து நம்மை வேடிக்கைப் பார்க்கும்.

____________________________________________________________________________________

_________________________________________________________________________________

பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கினால படிப்பாளி.திறமைசாலி அல்ல.நூற்றுக்கு நூறு மார்க் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித்தரும்.பள்ளி படிப்பில் முதலில் இருக்கும் சில பேர் பொரோபஷனல் (professional) வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் ஒளியற்று இருப்பார்கள்.மக்குத்தனம் இருக்கும்.படிப்பு வேறு.புத்திசாலித்தனம் வேறு.

குழந்தைகள் நூற்றுக்கு நூறு பார்டியாக இல்லாவிட்டாலும் “உஷார் பார்ட்டி”யாக (சாமர்த்தியசாலியாக..) இருக்கவேண்டும்.இப்போது இருக்கும் உலக நடப்புக்கு அதுதான் யதார்த்தம்.“உஷார் பார்ட்டி” with நேர்மை/ஒழுக்கம்/பக்தி/அன்பு. Be practical. வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வர வேண்டும்.

அது என்ன வாழ்க்கைத் திற்மைகள்(Life Skills):-


உதாரணம்- 1
பக்கத்துவீட்டுப் பையன் படிப்பில் கில்லாடி.ஆனால் தன் சைக்கிளின் செயின் கழண்டால் அதை சரி செய்யக் கூடத்தெரியாது.தள்ளிக்கொண்டுதான் வருவான்.ஆறு கிலோ மீட்டர்.காற்று கூட அடிக்கத் தெரியாது. அடிப்பது அவன் அப்பா.இழப்பு யாருக்கு?

உதாரணம்- 2
பல வலைப்பதிவர்கள் மெது மெதுவாக தங்கள் திறமைகளை(skills) பயன்படுத்தி வலையை ஜொலிக்க வைக்கிறார்கள்.எல்லாம் ரெடிமேடாக கிடைத்தாலும் அதை நிறுவும் பொழுதில் கிடைக்கும் அனுபவம் அடுத்த முயற்சிக்கு தூண்டுகிறது.அறிவு /அனுபவம் வளருகிற்து.திறமைகள் வளர்கிறது.

உதாரணம்- 3
நடிகர் கமல் நாலாவதுதான் படித்திருக்கிறார்.புகழின் உச்சியில் இருக்கிறார்.அவர் கால கதாநாயகர்கள் காணாமல் போய்விட்டார்கள்.காராணம் கமல் தன் திறமைகளை வளர்த்துக்கொண்டார்.(மோகன் மாதிரி மைக் பிடித்துக் காணாமல் போகவில்லை)தொலை நோக்குப் பார்வையில் சினிமாவை எடைப்போட்டு காணாமல் போகாமல் தன்னை நிறுத்திக் கொண்டார்.தன்னுடைய சிவப்பு நிறம் அழகான முகம் ரொம்ப நாள் “தாக்குப்பிடிக்காது” என்று தெரியும்.

உதாரணம்- 4
பக்கத்து வீட்டுப் பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டி நின்று விட்டது.காரணம் தெரியவில்லை மெயின் ரோட்.ஆள் நடமாட்டம் கம்மி.மெக்கனிக் ஆறு கிலோ மீட்டர் தள்ளி.எப்படி நடுரோடில் விட்டு வருவது. ஐடியா! பக்கத்து பங்களாவின் மாடியில் நின்றவரைக் தையரிமாக கூப்பிட்டு ”excuse me, if you don"t mind" சொல்லி புன்னகைத்து வண்டியை உள்ளே விட்டு விட்டாள்.சாமர்த்தியம்!
பிறகு ரிப்பேர்.

உதாரணம்- 5
பிளாட் லிப்டில் கரெண்ட் போய் ஒரு சிறுவன் மாட்டிக்கொண்டான்.எமர்ஜென்சி அலாரம் வேலைச் செய்யவில்லை.”அய்யோ அம்மா,,அய்யோ அம்மா”என்று பெரும் குரலில் கத்தினான். ஷூவைக் கழட்டி லிப்ட் கதவில் அடித்தான். அடுத்த கணத்தில் உதவி வந்தது.அலாரம் வேலைச் செய்யா விட்டால்”அய்யோ அம்மா,,அய்யோ அம்மா”..கதவைத் தட்டுதல்...” போன்றவற்றை செய்யவேண்டும் என்று சொன்னது அவன் அப்பா.அப்பா கே.ரவிஷங்கர்.பையன் ஆதித்யா.

உதாரணம்- 6
பக்கத்து வீட்டு மாமிக்கு காஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் புதுசு மாட்டத் தெரியாது.வாட்ச்மேன் அல்லது எதிர்வீடுதான் உதவி செய்யவேண்டும்.அந்த இரண்டு பேர் இல்லாவிட்டால் என்ன செய்வார்?


இந்த திறமைகளைப்(skills) பற்றிச்சொல்லும்போது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.

நான் கடையில் ஒரு நாள் ஏதோ வாங்கிக்கொண்டிருந்தேன்.அப்போது என் மகன்
(வயது 10) என்னைக் கடந்து சைக்கிளில் போய் சிக்னலில் நின்றான்.என்னை கவனிக்கவில்லைஅப்போது எதிரில் வந்த தண்ணீர் லாரி சடன் பிரேக் அடித்து ஒரு குலுங்கு குலுங்கி தண்ணீர் பீச்சியடித்து அவன், சைக்கிள்,புத்தகப்பை எல்லாம் அருவியில் குளித்த மாதிரி ஆகிவிட்டது.

வாழ்க்கையைப் பச்சையாக (raw formஇல்) சந்திக்கிறான்.என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு என்னசெய்யப்போகிறான் என்று பார்த்தேன்.

நனைந்ததால் உடலோடு ஆடைகள் ஒட்டி கட் பனியன்,ஜட்டி ஷேப் தெரிந்தது.(வெள்ளை யூனிபார்ம்).அவமானத்தில் முகம் சுருங்கிவிட்டது.வாழ்க்கையின் ஒரத்தில் இருந்தான்.(பொது ஜனங்கள் “உச்” கொட்டிவிட்டு ”பாத்துத் தம்பி” என்று நகர்ந்தார்கள்).கடைசியாக வீடு வந்து சேர்ந்தான்.

தண்ணீரில் நனைந்ததிலிருந்து வீடு வந்து சேரும் வரை அவனுடைய

திறமைகள்:-

1.அடுத்த வினாடி முக்கியமான புத்தகங்களை பையின் பின் அறைக்கு மாற்றினான்.(அங்கு ஈரமில்லை). (மெயிண்டனென்ஸ்/வாழ்வாதாரம்(survival)

2.TNEB Junction Boxலிருந்து தள்ளி நின்று கொண்டு தலையை கர்சீப்பால் தவிட்டிக்கொண்டான். (பாதுகாப்பு)

3.அடுத்து வேறு சந்தில் நுழைந்து சில நிமிடம் காத்திருந்து கிளாஸ் டீச்சரை ரோடில் சந்தித்து “see my position" என்று லேட்டாக வருவேன் என்று பர்மிஷன் வாங்கினான். (முன் யோசனை/சமயோசிதம்/பயம்)

4.PCOக்குப் போய் எனக்கு செல்லடித்தான்.(உதவி/தகவல்)

நான் செல் எடுக்கவில்லை காரணமாக.(இவனுக்கு பணம் எப்படி?இதை தனியாக கவனிக்க வேண்டும்)

திறமையின்மை:

1,வண்டியை ஓட்டாமல் தள்ளிக்கொண்டே வந்து சேர்ந்தான்.
உலகமே தன்னைப் பார்த்து பரிதாபப் பட வேண்டும்.(சுய பச்சாதாபம்)

2.பணம் எப்படி வந்தது என்று கேட்பார்கள் என்று லாஜிக் யோசிக்கமால் செல்லடித்தது.(முன் யோசனையில்லாமை)

3.ஸ்கூலுக்கு மறுபடியும் திரும்பி போகும்போது வேற சுத்து ரூட்.ஏன்? திரும்பவும் தண்ணீர் லாரி வந்து விட்டால்?(பயம்/வெறுப்பு/உஷார்)

4.அவன் என்னை வரச் சொல்லியிருந்தான்.செக்யூரிட்டி/லேட் மிஸ் என்று வாசலில் இருப்பவரிடம் நான் விளக்கிச் சொல்லி உள்ளே அனுப்ப.அவன் தன் சொந்த திறமையில் இதை சமாளிக்க வேண்டும்.செய்யவில்லை.
(தன்னம்பிக்கையின்மை)

எந்த குழந்தையிடமும் 100% பெர்பெக்‌ஷன் எதிர்பார்க்கமுடியாது.அப்படி இருந்தால் அது குழந்தை அல்ல.சம்திங் ராங்.குழந்தை குழந்தையாகத்தான் இருந்தால்தான் அழகு.ஆனால் அவ்வப்போது அந்தந்த வயதுக்கு ஏற்றார் போல் திறமைகளை வளர்க்கவேண்டும்.

”என் பையன் மாதிரி கம்பூயட்டர் கேம்ஸ் விளையாட.....என்றும் செல்போனக் கொடுத்துட்டா போதும் அதுல பூந்து விளையாடுவான்...அவன மாதிரி..” என்று மற்றவர்கள் முன்னால் குழந்தைகளை செல்லம் கொஞ்சுவார்கள்.இதெல்லாம் என்னைப் பொறுத்தவரை காமெடி. ஏனென்றால் 99% சதவீதம் குழந்தைகளுக்குத் இதெல்லாம் தெரியும்.

”கண்ணே...செல்லம்...உச்சு புச்சு..”என்று கொஞ்சிக் கொண்டு இருக்காமல் வைக்கும் இடத்தில் வைத்து சாத்தும் இடத்தில் சாத்துங்கள். குழந்தைகளுக்கு வாழ்க்கையின் அடிப்படை எதார்த்தங்களை (ground realities) கற்றுக் கொடுங்கள்.

குழந்தையை வளர்ப்பதும் ஒரு பெரிய(life skill) திறமைதான்.


(Life Skills)வாழ்க்கைத் திறமைகளை கற்றுத் தருவதில் என்ன நன்மைகள்:-

1.சுயசிந்தனை
2.அடுத்தவரை சாராமை
3.அனுபவம்
4.அனுபவத்தில் பெறப்படும் அறிவு
5.சுறுசுறுப்பு
6.பொது அறிவு
7.பிரச்சனை எதிர் நோக்கும் துணிவு
8.ஒரு வித சுய சந்தோஷம்(நானே செய்தேன்!)
9.சமயோசிதம்
10.கெளரவம் பார்க்காமை


ஒரு தலைமுறை குழந்தைகளுக்குக்கு(நகர்புறம் சார்ந்த) இருக்கும் lifeskills அடுத்த தலைமுறைக்கு இல்லை.இப்போது இருக்கும் தலைமுறைக்கு எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே கிடைக்கிறது.

பாதுகாக்கபட்ட சுழ்நிலையில் வளர்கிறது.(highly protected zone).போனதலைமுறை மாதிரி அல்லதுஅதற்கு முந்திய தலைமுறை அலைந்துதான் எல்லாம் பெற வேண்டும் .கையில் எதுவும் தொப்பென்று விழாது.

கடைசியாக... மிருகங்கள தங்கள் வாழ்வாதர திறமைகளை எப்படி பயன்படுத்துகிறது என்று டிஸ்கவரி சேனல்,அனிமல் பிளானெட்டில் பாருங்கள்.

Survival of the fittest! நமக்கும் அது நூறு சதவீதம் பொறுந்தும்.