Showing posts with label ராஜா-புல்லாங்குழல். Show all posts
Showing posts with label ராஜா-புல்லாங்குழல். Show all posts

Friday, April 15, 2011

இளையராஜா King of Mellifluous Flute

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் இளையராஜாவின் புகழ் பாடுங்களேன் என்று பாடத்தான் வேண்டும்.பிரபஞ்சத்தில் புல்லாங்குழலுக்கு இந்த அளவிற்கு திரை இசையில் அணி(அழகு) சேர்த்தவர் மேஸ்ட்ரோ ஒருவராகத்தான் இருக்க முடியும்.

பிரமிக்கத்தக்க அளவில் புல்லாங்குழலுடன் விதவிதமாக லீலைப்புரிந்திருக்கிறார்.அதே பிரபஞ்சத்தில் முதலில் தோன்றிய இசைக்கருவி புல்லாங்குழலாகத்தான் இருக்கும் என்பது என் யூகம்.

குழல் பேசும் மொழிகள் பல.ஓவ்வொன்றும் வேறுபட்டவை.சில
ரகசியமானது.சில புரியாதவை.ரசிக்கக்கூடியவை.வேற்று பிரபஞ்ச மொழிகளும் இதில் அடக்கம்.


இந்த நாதங்கள் மனதில் ஊடுருவி கிளர்த்தும் காட்சிகள்/தீட்டும் ஓவியங்கள் விவரிக்க முடியாதவை.

He is a dictionary for  cinema light music flute.Magic Flute magician.

ஒரு இசைக்கலைஞனின் உன்னதம் அவன் இசைக்கும் இசையில் மட்டுமில்லாது தன் வசப்படுத்திய(mastering instruments) இசைக்கருவிகளின் மேன்மைகளும் வெளிப்படவேண்டும் அவன் இசையில்.

அந்த வகையில் All the musical instruments are at Ilaiyaraja"s delight.

இவரின் இசை மனதின் அடியில் வண்டல் போல் படிவதற்குக் காரணம் emotions....emotions ... emotions ... full of emotions!போதை அடிமை போல் ஆகிவிடுகிறோம்.ஒரு நவீன தொனியில் ஆத்மா கலையாமல் கொடுக்கப்படுகிறது.

உயர்தர சைவ உணவகம் மாதிரி உயர்தர இசை.You name it. I music it.

போவதற்கு முன் இசைஞானியின் விதவிதமான வேணுகாணத்தில் நனைந்தபடி போவோம்.
 



Flute-Ooranjaaram-Kakkaisirakinile.mp3

Flute-Sollividu Vellinilave-Amaithi Padai.mp3

Flute-Orampo Orampo.mp3

Flute-Aur Ek Prem Kahani - Naina.mp3 

Flute-Gnan Gnan Paada-Poonthalir.mp3

Flute-Shri Eadukondalaswami.mp3

Flute-Unnaivazhathi Paadukiren-OhoKaalaiKuyilgale.mp3

Flute-Madhuramari.mp3

Flute-Sharadendupaadi-Kaliyoonjalu.mp3

Flute-Pularkindrapozhuthu-Uliyin Oosai.mp3

Flute-84-Oh Vasantha Raja-Neengal Kettavai.mp3

Flute-Chinnakannan Azhaikiran-Kavikkuyil.mp3

தன் புல்லாங்குழல் இசைப் பயணத்தை அன்னக்(குயில்)கிளியுடன்தான் ஆரம்பித்திருக்கிறார்.முன்னால் இசை மேதைகளிடமிருந்து வாங்கி அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

முதல் கட்டம்:

நதியைத் தேடிவந்த கடல்-1980- எங்கேயோ ஏதோ
ராஜாவிற்கு முன் இசையில் புல்லாங்குழல் இந்தப் பாடலில் (இதுவும் ராஜாதான்)வருகிற மாதிரிதான் சம்பிரதாயமாக இருக்கும். சில விதிவிலக்குகளும் இருக்கிறது.
ஜெயலலிதாவும் “படாபட்” ஜெயலட்சுமியும்

Flute-NathiyaiThediVandhaKadal-Engeyo.mp3

அடுத்தக் கட்டங்கள்:(முதலில் நாம் நனைந்ததும் அடுத்தக் கட்டம்தான்)

இந்த மனதை வருடும் உணர்ச்சிகள் நவீன தொனியுடன் இசைக்கப்பட்டு அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தப்பட்டது. 

புல்லாங்குழல் -1
அன்னக்கிளி-1976-அன்னக்கிளி உன்ன தேடுதே
 0.12-0.18க்குள் இரண்டு தடவை குழல் நாதம் வருகிறது.வருவதற்கு முன் இரண்டுக்கும் எப்படி ஒரு இசை பில்ட் அப் கொடுக்கிறார் பாருங்கள்!

“தேடுதே” (0.24)என்று முடிக்கும்  இடத்தில் மெலிதாக குழல் வருடிக்கொடுக்கிறது.
Flute-Annakkili Unna Theduthu1.mp3
 
புல்லாங்குழல்-2

ஜானி-1980 -காற்றில் எந்தன் கீதம்
 Flute-KaatrilEnthan.mp3

புல்லாங்குழல் -3
ஹே ராம் - 2000-நீ பார்த்த பார்வை
பின்னணியில் புல்லாங்குழல் சிறு சிறு விரகதாப அலையாக எழுவது அதீத கற்பனை.Out of the world flute interlude!
Flute-Neepaartha-Hey Ram.mp3

புல்லாங்குழல்-4
சாதனை-1986 -ஓ வானம்பாடி 
இசைத்துளியை கவனமாக கேளுங்கள்.0.03 இருந்து இசைக்கப்படும் ஷெனாய்  நாதத்தில் 0.08-0.09லும் மற்றும் 0.11-0.12லும் பு.குழல் இசைத் துளிகள்  தொடுக்கப்படுகிறது.இது என் யூகம்.

முக்கால் ஷெனாய்யும் கால் புல்லாங்குழலும் (இசை)கூட்டணி.
Flute-Saadhanai-OhVaanampaadi.mp3

புல்லாங்குழல்-5
கடவுள்- 1997 -ஆதிசிவன் தோளில்
குழலின் நாதத்தில் ஜீவகளை சொட்டுகிறது.
Flute-Kadavul-AadhiSivan.mp3

புல்லாங்குழல்-6
மண்வாசனை -1983- பொத்திவச்ச மல்லிகமொட்டு
பட்டாம்பூச்சிகள் படபடத்தபடி பூவில் தேனை உறிஞ்சுவது  போல் ஒரு நாதம்.ஆச்சரியப்படுத்துகிறார்.பாரதிராஜா இந்த  மாதிரி இசைத்துளிகளுக்கு காட்சி  அமைக்கத் தடுமாறுவாராம்.

வித்தியாசமான சின்னச் சின்ன  அசட்டுத்தனம் இல்லாத hifi ஊதல்கள்.
Flute-PothiVechcha.mp3

புல்லாங்குழல்-7
இது நம்ம பூமி -1992 - ஆறடி சுவருதான்
0.17/0.21/0.25/0.29ல் நாதம் உச்சஸ்தாயில் போய் நம்மிடம் பேசுகிறது. ஆனால் உச்சஸ்தாயில் வேறு ஒரு இசைக்கருவியும் கலவையாக  வாசிக்கப்படுகிறது என்பது என் யூகம்.உச்சஸ்தாயில் அதன் ஜீவனே மாறுகிறது.
Flute-AaradiChuvarthan.mp3

புல்லாங்குழல்-8
நிழல்கள் - 1980-பூங்கதவே தாழ்திறவாய் 
0.11 பிறகு மென்மையான புல்லாங்குழல் படபடக்கப்போகிறது என்பதை யூகிப்பது கஷ்டம்.
Flute-PoongathaveThazh.mp3

புல்லாங்குழல்-9
ருசிகண்ட பூனை-1980 - என் நெஞ்சம் உன்னோடு
Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3


புல்லாங்குழல்-10
தம்பி பொண்டாட்டி -1992 - என் எண்ணம்
Mind blowing  romantic musical Flute! எவ்வளவு வர்ணங்கள் காட்டுகிறார் ராஜா.
Flute-Un Ennam-Thampi Ponndatti.mp3

புல்லாங்குழல்-11
தீர்த்தக்கரையினிலே -1987- விழியில் ஒரு கவிதை படித்தேன்.
அடுத்தக் கட்டம் என்பதற்கு  பல பல உதாரணங்களில் ஒன்று. கதம்ப இசையில் குழல் சிறிதாக ஒத்தப்பட்டு அலங்காரப்படுத்தப்படுகிறது.

0.03-0.10 பிரமிக்க வைக்கிறார்.real stunner!தேஷ் ராக சுரங்களும் தெறிக்கிறது.
Flute-Vizhiyil Oru Kavithai-Theerthakkaraiyinile.mp3


கிட்டத்தட்ட முதல் 15 வருட மேஸ்ட்ரோவின்  முக்கால்வாசிப் பாடல்களில் வயலினுக்கு அடுத்து புல்லாங்குழல் நாதத்தில் தடுக்கி விழுவீர்கள்.இதில்நிறைய கிராமம் சார்ந்தப் படங்கள்.

மேஸ்ட்ரோவின் இசையின் எப்பவுமே ஆச்சரியப்படுவது :-
  • ஒரு இசையிழையும் அதனுடன் துரிதகதியில் இன்னொரு இசையிழை சேரும்போது அசட்டுத்தனம் இல்லாமல் இணைவது... இசைவது...
  •  அபஸ்வரம் தட்டாமல் இணைவது
  • ”ஆத்மா”(soul) கலந்து இந்த  இணைவதும் இசைவதும்  

வெஸ்டர்ன் கிளாசிகல் பின்னணியில் ஒரு பு.குழல் நாதம்:
அஜந்தா-2007 -தூரிகை இன்றி.
Flute-Thoorigaiindri-Ajantha.mp3

முதல் மரியாதை-1985:
மேஸ்ட்ரோ  புல்லாங்குழலை இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக உலவ விட்டுள்ளார்.அத்தனை புல்லாங்குழல் நாதங்கள். தமிழ்நாடு மறக்கவே முடியாது இந்தப் புல்லாங்குழல் நாதங்களை.

ராசாவே வருத்தமா! கூ கூ!

நவீனப்படுத்தப்பட்ட கிராமிய சாயல் கொடுக்கப்பட்டுள்ளது.குழலின் துளைகளினிடையே கசியும் உணர்ச்சிகள் விவரிக்க முடியாதவை.

Flute-Antha Nilavathan-Mudhal Mariyathai.mp3

Flute-Vettiveru Vaasam-Mudhal Mariyathai.mp3

Flute-Mudhal Mariyathai-PoongatruThirumbuma.mp3

பிரமிக்கத்தக்க விஷயம்:

63 வகையான புல்லாங்குழல் இடையிசைகள்(interludes) இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.ஒன்றின் சாயல் மற்றதில் இல்லை.back to back xeroxம் இல்லை. It is a amazing achievement!

காரணம்:
பல வித கலவைகளில் (combinations) இசை கோர்க்கப்படுகிறது.

எப்படி சாத்தியமாகிறது இந்த கலவைகள்?

  • இசைக்கருவிகளைப் பற்றிய நுண்ணிய அறிவு
  • நோட்ஸ் எழுதும் வேகம்/திறமை
  • வெஸ்டர்ன் கிளாசிகல்/கர்நாடக இசை/கிராமியம்,இந்துஸ்தானி.. எல்லாம் விரல் நுனியில்
  • மாற்றிப்போடும் தாளங்கள்/இசைக்கருவிகள்
  • permutation & combination
  • மாத்தி யோசி கான்செப்ட்
  • காட்சியமைப்பு
  • சில வித்தியாசமான இயக்குனர்கள்
  • அனுபவம்
டூயட்டில் புல்லாங்குழல்:
சின்னத்தாயி-1992- நா ஏரிக்கரைமேலிருந்து.
மனதுக்கு நெருக்கமான பாட்டு.
Flute-Naan Eraikkaraimel-Chinnathayee.mp3

கோபுர வாசலிலே-1991- காதல் கவிதைகள்
அமர்க்களமான அரேஞ்மெண்ட்.0.46-0.47 ல் கலக்கல்.054-1.18 பரந்த  வானில் ஏகாந்தமாக கூவிக்கொண்டுச் செல்லும் ஒற்றைப்பறவையின் மொழி.
Flute-Kadhalkavithaigal-Gopura Vaasalile.mp3

ஆராதனை-1981 - ஒரு குங்கும செங்கமலம்
காட்டில் இந்த இசையை இசைத்தால் பதிலுக்கு சத்தியமாக கூவத்தான் செய்யும் பெயர் தெரியாத பறவைகள்.
Flute-Oru Kunguma-Aaradhnai.mp3

கனிவு உணர்ச்சி:
உதிரிப்பூக்கள்-1979-அழகிய கண்ணே
Flute-UthiriPookal-AzhagiyaKanne.mp3

கண்ணே கலைமானே-1988-நீர் விழ்ச்சி தீமூட்டுதே
Flute-Neervizhchi-Kanne Kalaimane.mp3

வித்தியாசமான உணர்ச்சிகள் வித்தியாசமான நாதங்களில்:

மோகமுள்-1995-கமலம் பாத கமலம்
Flute-KamalamPaadha-Mogamull.mp3

பாக்யாதேவதா - 2009-அல்லிப்பூவே மல்லிப்பூவே
Flute-Allipoove-Bhagayadevatha.mp3

மணிப்பூர் மாமியார்-1982 -ஆனந்த தேன்காற்று
Flute-Aanandhathenkaatru-ManipurMamiyar.mp3

வருஷம்-16 -பூ பூக்கும் மாசம்
ராஜாவின் மாஸ்டர் பீஸ்.வீணையும் புல்லாங்குழலும் தனியாக உரையாடிபடியே கடைசியில் இணைவது அருமை.Awesome maestro! He is music magician.இந்த மாதிரி இசைக்கோர்ப்புகள் அனாசியமாகப் போடுகிறார்.
Flute-Varusham-16-PooPookkum.mp3

முரட்டுக்காளை-1980- மாமன் மச்சான்
தாளம் புல்லாங்குழலை தோற்கடிக்கிறது.
Flute-MamanMachan-Murattu Kalai.mp3

அரண்மனைக்கிளி-1993-ராசாவே உன்னை விட
 

”அன்னக்கிளி உன்ன தேடுதே”வின் 1993 வெர்ஷன். ரெண்டுமே ஜானகிதான்.0.35-0.54 அட்டகாசம்.இந்தப் பாட்டின் மெட்டை மிகவும் ரசிப்பவன்.
Flute-Raasave Unnai-Aranmanaikili.mp3

சிங்காரவேலன் - 1992 -தூது செல்வதாரடி.
புல்லாங்குழலோடு தபலாவும் தட்டப்படும் இடம் 0.10 அருமை ரம்யம்.
Flute-ThoodhuSelvadharadi-Singaravelan.mp3

என்றும் அன்புடன் - 1992 - நிலவு நிலவு வந்தது


மெல்லத் திறந்தது கதவு -1986 - குழலூதும் கண்ணனுக்கு
 Flute-KuzhaloothumKannanukku.mp3

மோகமுள்-1995-சொல்லாயோ
Flute-Sollayoo-Mogamull.mp3


Flute-Sevanthipoomudicha-16Vayathinile.mp3

Flute-80Rusikanda Poonai--EnNenjamUnnodu.mp3

Flute-SalangaiOli-VaanPole.mp3

Flute-Bharathi-EthilumIngu.mp3

Flute-ThendraNeePesu-Kadavul Amaitha Medai.mp3

Flute-SandhyavukkuVirinja-Manjum Kulirumi.mp3

ரோசாப்பூ ரவிக்கைக்காரி-1979-என்னுள்ளில் எங்கோ
இந்தப்பாட்டின் ஒரு துளியும் அதன் உணர்ச்சிகளும் மனதைக் பிசையக் கூடியது.b>0.36-0.55 இரு புல்லாங்குழல் பேசும் மொழி ரகசியமானவை.அதன் அந்தரங்கம் புனிதமானவை.

இளையராஜாவின் முதல் ஐந்து பாடல்களில் இது கட்டாயம் இடம் பிடிக்கும்.


மெட்டி-1982-சந்தக்கவிகள் பாடிடும்
புல்லாங்குழலுக்கு இணையாக கோரஸ் வயலின்கள் டால்பின் மீன்கள் போல துள்ளி விளையாடுகின்றன.
Flute-Sandhakavigal-Metti.mp3

Flute-KalaKalakkum-Eramana Rojave.mp3

கிளாசிகல் ரொம்ப ஸ்டைலாக(மல்லுவேட்டி).
Flute-MalluvettiMinor-Kathiruntha Malli.mp3 

செந்தாழம் பூவில் வந்தாடும் புல்லாங்குழல் நாதங்கள்.
 Flute-Senthazham Poovil-Mullum Malarum.mp3

 வித்தியாசமான சின்னச் சின்ன நாதங்கள்:-

லேடிஸ் டெய்லர்-1986(தெலுங்கு)-பொரப்பட்டித்திதி
Flute-Ladies Tailor-Porapaatidhi.mp3

ஆ ராத்திரி -1983-நீலிமதன்(மலையாளம்)
Flute-Aa Rarathri(movie)-Ee Neelimathan.mp3

மகளிர் மட்டும்-1994 கறவ மாடு மூணு
Flute-KaravaiMaadu-Magalirmattum.mp3

மரகதவீணை-1986 -மரகதவீணை இசைக்கும்
Flute-MaragathaVeenai.mp3

உள்ளம் கவர்ந்த கள்வன் - 1988

குணா-1991 - உன்னை நானறிவேன்

குருசிஷ்யன் -1988 - உத்தமபுத்திரி நானு

உதிரிப்பூக்கள்-1979-ஹேய் இந்த பூங்காற்று

கோடை மழை-1986 -துப்பாக்கி கையிலெடுத்து
Flute-KodaiMazhai-ThupakiKayil.mp3

என் அருகில் நீ இருந்தால் - 1991
Flute-Udhayam Neeye-En Arugil Nee.mp3


டெயில் பீஸ்:
(30-03-11)ஆ.விகடன் கேள்வி:“ மத்த இசையமைப்பாளர்களை ரசிப்பீர்களா?”


இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பதில்: “ ஒரே ஒரு இசையமைப்பாளரை ரசிப்பேன். அவர் இளையராஜா. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவருக்கு “மாஸ்ட்ரோ”னு சின்ன பட்டத்தைக் கொடுத்திருக்காங்க. அந்த யானை சாப்பிட்டுப் போட்ட மிச்சத்தை வெச்சுத்தான் நாங்க விளையாடறோம்!’


Wednesday, March 10, 2010

இளையராஜா- மயக்கும் புல்லாங்குழல்

இசைஞானி இளையராஜா,இந்த ஒண்ணரை அல்லது ரெண்டு அடி புல்லாங்குழலை வைத்துக்கொண்டு அதில் இருக்கும் காற்றுத்துளைகளின் வழியாக மயக்கும் இசைத் துளிகளை தன் பாடல்களில் விதவிதமாக வழிய விடுகிறார் .

மேஸ்ட்ரோவின் இசையில் எப்போதுமே “classical touch" & "classic" இருக்கும்.No artificial flavour.No additives,No preservatives.


மேஸ்ட்ரோ தவிர மற்றவர் 95% பாடல்களில் புல்லாங்குழல் நேரடியாக வாசிக்கப்பட்டு பாடல் அமைந்திருக்கும்.அதாவது மேஸ்ட்ரோ மாதிரி பாடல்களின் குறுக்கும் நெடுக்குமாக புல்லாங்குழல் இசைக்கப்பட்டு ஒப்பனைச் செய்யப்பட்டிருக்காது.



 சின்ன கண்ணன் அழைக்கிறான் -1977 - கவிக்குயில்

ஆரம்பத்தில் ரீதகெளள ராக நாதம் இனிமை.இதில் நேரடியாக பாடல் முழுவதும் வாசிக்கப்பட்டிருக்கும்.அதிக ஒப்பனைகள் கிடையாது.ஆனால் நாதங்கள் இனிமை.

பொன்மானே கோபம் - 1985 -ஒரு கைதியின் டைரி

”சின்னகண்ணன்” புல்லாங்குழல் இதில் பார்ட்டைம் தான். ”பொன்மானே””கோபம்” “ஏனோ” என்ற வரிகளுக்கு சுட்டித்தனமாக ரெஸ்பான்ஸ் அளித்துவிட்டு மறையும்.உமா ரமணன் கடைசிப் பல்லவியில் இதன் வேலையைப் பறித்துக்கொள்கிறார்.(பொன்மானே!கோபம் எங்கே?)

ராஜாபார்வை வயலின் BGM  - 1981

மெய்சிலிர்க்கும் ஆரம்பம். 0.57ல் வயலினோடு தபலா அழகாக சேர்ந்துக்கொள்ளும்.1.09ல் ஒரு புல்லாங்குழல் மொட்டவிழ்ந்து மலரும்.1.16ல் இன்னொரு புல்லாங்குழல் மலரும்.மெய்சிலிர்க்கும்.

காதல் மயக்கம்  - 1984 - புதுமைப் பெண்

மிகவும் காதல்படுத்தப்பட்ட பாட்டு.இதில் 4.14 - 4.25 புல்லாங்குழல் கானத்தில் கண்ணாமூச்சி விளையாடும்.

தாலாட்டும் பூங்காற்று -1991 - கோபுரவாசலிலே


மேஸ்ட்ரோவின் மாஸ்டர் பீஸ் புல்லாங்குழல் புல்லரிப்புகள்.

Thalattum poongatru





ஜானகியின் ஹம்மிங் முடிந்து ஜிகு ஜிகு புல்லாங்குழலின் குஷிதான்.

ஹெட் போனில் கேட்கவேண்டும்.”நள்ளிரவில் நான் கண் விழிக்க” இடது காதில் மென்மையான வருடல். “உன் நினைவில் மெய் சிலிர்க்க” வலது காதில் மென்மையான வருடல். வலது இடது புல்லாங்குழலின் ஸ்வரம் மாறும்.இது மாதிரி இரண்டு தடவை.

“எப்பொழுதும் சொப்பனங்கள்” இப்போது முதல் வருடல் வலது.”எப்போழுதும் உன் கற்பனைகள்”பிறகு இடது.

3.00 -3.20 மென்மையான புல்லாங்குழல் உரையாடல்.ஜானகி அட்டகாசம்.


ஆனந்த ராகம் -1981 - பன்னீர் புஷ்பங்கள்

இந்தப் பாட்டைத் தொட்டால்  சில இடங்கள் சுடும்.

ஆரம்ப உக்கிரமான western classical வயலின் /செல்லோ தீற்றல்களுக்கு நடுவே நம்ம ஊர் Indian Classical சிம்மேந்திர மத்யமம் ராக ”கலங்கும்” புல்லாங்குழல் அருமை.அட்டகாசமான வெஸ்டர்ன்+இண்டியன் Fusion."ஆயிரம் ....” “ஆசைகள்” இந்த வரிகளுக்கு ரெஸ்பான்ஸாக கிணற்றுக்குரலில் வித்தியாசமான புல்லாங்குழல்ஆச்சர்யம். பாட்டின்  முடிவிலும் கொசுறாக சூப்பர்.

குறுக்கும் நெடுக்கும் போகும் western classical வயலின் சிக்கலுக்கிடையே நம்ம ஊர் இந்திய ஷெனாயின் கதறலைக் கேளுங்கள்.அம்மாடியோவ்!

Maestro  went full blast! Hats off Maestro!

”தாலாட்டும் பூங்காற்று”ம்  சிம்மேந்திர மத்யமம். அது மென்மை.இது முரடு.எப்படி ராஜா? அதான் ராஜா.

தென்றல் காற்றே  - 1991 - ஈரமான ரோஜாவே

புல்லாங்குழலில் மதுர கானம்தான். சோகம்(ஏக்கம்?) கானம் இசைக்குமா? இதில் சோக கானம் 01.19 -01.30 முக்கியமாக  03.28 -03.30 மற்றொரு வாத்தியங்களுடன் சேர்ந்து சோகம் பாடிவிட்டு மீண்டும் தனியாக 03.31-03.33 சோகம்.

 வா வா அன்பே
அதே படத்தில் இன்னோரு பாடல்.அதே மெட்டு.ஆனால் புல்லாங்குழல் முதலில் கொஞ்சம் சோகம் ஆனால் 01.25-1.52 வரை துடிப்புடன் நிரம்பி வழியும்.வயலினுடன் உரையாடிக்கொண்டே வரும்.


மதுர மரிக்கொழுந்து  - 1987 -எங்க ஊரு பாட்டுக்காரன்

”பச்சரிசி மாவு இடிச்சு..சக்கரையில் பாவு(கு) வச்சு...சுக்கிடிச்சு.மிளகிடிச்சு..
..................அம்மனவ எங்களயும் காக்க வேணும்.....0.27-0.41 மதுர மரிக்கொழுந்து வாசம் வீசும் புல்லாங்குழல் தெய்வீக கானம்.கிராமிய மணம் கமிழும்.Stunning  Maestro!  




"தல..!சின்ன ஹார்மோனியத்துல மெட்டுப்புடிக்கிறீங்க.ஆனா அத அழகுப்படுத்த எத்தன விதமான இசைக்கருவிகள்...!

பூங்கதவே தாழ்  - 1980 -நிழல்கள்

வீணையுடன் புல்லாங்குழல் காதல் 0.33-0.42 அருமை.டால்பின் போல் துள்ளும் துடிப்பான வாசிப்பு 1.44-1.49.புத்திசாலித்தனமான அதே சமயத்தில் பாட்டோடு ஒட்டி வரும் கானம்.


கண்ணா வருவாயா...  - 1987 -மனதில் உறுதி வேண்டும்

மீரா-கண்ணன் சம்பந்தப்பட்ட பாட்டு. 5.31 நிமிட பாட்டில் 1.50-1.57 புல்லாங்குழல் கண்ணில்(காதில்?) காட்டுவார்.5.04-5.05 மருந்துக்கு சிணுங்கிவிட்டுப் போகும். மேஸ்ட்ரோ இது நியாமா? ”சின்ன கண்ணன் அழைக்கிறான” பாட்டுக்கு எல்லாம் வாசிச்சாச்சுப் போல..!

சிறு பொன்மணி அசையும் - 1980 -கல்லுக்குள் ஈரம்

பாரதிராஜாவுக்குன்னு தனி உழைப்பு உண்டு.இந்தப்பாட்டில் 0.15 - 0.24ல் நேரடியாக வரும் கிராமிய புல்லாங்குழல் கானம் 0.25-0.28 ல் வயலினுடன் எப்படி கொஞ்சுகிறது பாருங்கள். தல..! பின்னிட்டீங்க!

பின்னால் வரும் அலைபுரண்டு வரும் கானமும் அருமை.

சின்ன சின்ன - 1986 -மெளனராகம்

0.27-0.39 ,1.04-1.10ட் ஆணி அடிக்கிற மாதிரி புல்லாங்குழல் கானத்தை ஊதி ஊதி அடித்துக்கொண்டே வருவார்.அட்டகாசம்.வித்தியாசமான கானம்

இன்னும் நிறைய இருக்கு.பின்னால் பார்க்கலாம்.

படிக்க:

இளையராஜா The King of Beats

இளையராஜாவின் -நாத உரையாடல்கள்