Sunday, December 20, 2009

இளையராஜாவின் வயலின் ரங்கோலி

படம்:கோபுர வாசலிலே  பாடல்: காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.அற்புதமான பிரமிக்க வைக்கும் இசைக்கோர்ப்பில் காதல் கவிதை படிக்கிறார்(இசைக்கிறார்) இசைஞானி ராஜா.




”Yes..! I love that... idiot. I love that lovable idiஏஏஏஏஏஏot...! கதாநாயகி காதல் பசலையில் கூச்சலிட, அடுத்த வினாடி... கவுண்ட் 0.06ல் மேஸ்ட்ரோவின் இசை குறிப்புகளிலிருந்து வயலின் இசை தீற்றல்கள் grand ஆக சிலிர்த்து சிறகடித்துப் பறக்கத் தொடங்குகிறது.  அதைத் துரத்தி காதலித்தவாறே ஒரு  புல்லாங்குழல் மாயா மாளவ கெளள ராக ஸ்வர பின்னணியில் பின்னிப் பிணைந்து வானத்தில் பறக்க , இந்த தேவதைகளுடன்  கவுண்ட் 0.12ல் தாளங்கள் சேர்ந்துக்கொண்டு ஒரு ஜுகல் பந்தியாகி, ஒரு “வி” ஷேப் உருவாக, கவுண்ட் 0.21ல் புல்லாங்குழல் இந்த “வி” ஷேப் தேவதைகளை குஷியாக lead செய்ய ஆரம்பிக்கிறது

Musical riot of colours started!

0.39ல் “டிங்...டிங் டிங்” என பன்னீர் செண்டில் பன்னிர் தெளித்து வரவேற்க, 0.44ல் “காதல்.... கவிதைகள் படித்திடும் நேரம்” என்று The king of காதல் singing எஸ்பிபி கனிவோடு   பல்லவியை ஆரம்பித்து பாடி முடித்து 1.04ல் ”இதம் தரும்” என்று பாடி விட்டுவிட, சின்னகுயில் (சித்ரா)  இந்த புறாக்களுடன் சேர்ந்துக்கொள்கிறார்.தொடர்ந்து மீண்டும் பல்லவி பாடி “இதம் தரும்” என்ற வரிகள் வரும்  இடத்தில்  மீண்டும் சேர்ந்துக்கொள்கிறார் எஸ்பிபி.பிறகு பல்லவி முடிகிறது.


1.32 முதல் 2.03 வரை மேஸ்ட்ரோவின் இசை ங்கோலி தெறிக்கிறது.ரங்கோலி சிலம்பாட்டம்.What a spectacular display!  பட்டைய கிள்ப்புகிறார் மேஸ்ட்ரோ.பார்ப்போம் அதை.




1.32........................................................................2.03

 கீ போர்ட்/பியானோ காதல் மொழி மெலிய புன்னகையோடு ஆரம்பிக்க, புல்லாங்குழல் அதை அமோதித்துக்கொண்டே வர 1.47 ல் வயலின் தீற்றல்கள் வெள்ளப்பெருக்கெடுத்து முழுகடிக்க  புல்லாங்குழல் மீன் துள்ள்ல் துள்ளி நுரையோடு வெளி வர ,ok...ok... என் மீண்டும் செல்லமாக வயலின் பன்னீர் பீச்ச ரங்கோலி முடிய மீண்டும் எஸ்பிபி/சித்ரா ”கை வீசிடும் தென்றல்” முதல் சரணம்.

Landing at Gateway of India என 3.12 ல் டட்டும் டட்டும் என congo வில் அறிவிக்க 3.17 முதல் 3.40 வரை  ஒரு புல்லாங்குழல் புன்னகையோடு  வரவேற்க 3.41 -3.43ல் ஒரு சின்ன சலசலக்கும் ஓடையைக் கடந்து பிறகு  வயலின் ஜோதியில் கலக்கிறது எல்லா இசைகளும்.

(3.40 முடிந்து 3.41 to 3.43ல் ஒரு மெலிதான இடையிசை. பிறகு வரும் transition பிரமிக்க வைக்கும் மேதமை.   Hats off Maestro!)

3.59 மீண்டும் தங்கள் தேனினும் இனிய குரலில் எஸ்பிபி/சித்ரா இரண்டாவது  சரணம் பாட முடிக்க ஒரு இசை ரங்கோலி முடிகிறது.எஸ்.பி.பி அட்டகாசம்.


இந்த பாடல் கேட்க:காதல் கவிதைகள் படித்திடும்


Yes..! I love that lovable genius Maestro!


கேட்க: இளையராஜாவின் தவம்-காற்றில் எந்தன்







13 comments:

  1. Wow. A brilliant song. One of my all time favourites of Isaignani. We are also great fans of the Maestro. Keep writing about his other hits also. I know, the list is tooooooooo long, but we should try :-)

    ReplyDelete
  2. நன்றி அழகன்.

    ReplyDelete
  3. ஒருவராலும் வெறுக்க முடியாத பாடல் இது.அதற்கு நீங்கள் இட்ட பதிவும் அழகு.பாடலோடு பதிவு படிக்கையில், இன்னும் சுகம்.இன்னும் வேணும் இது போல பாடல் பதிவுகள்....

    //3:44 மீண்டும் தங்கள் தேனினும் இனிய குரலில்//
    அது 3:59... மாற்றிவிடுங்கள் சார்.
    //0.39 இல் வரும் பன்னீர் செண்டில் ‘டிங் டிங்’ அது என்ன இசைக்கருவி சார்...
    சந்தூர் என நினைக்கிறேன். உறுதிபடுத்தக் கேட்கிறேன்.

    ReplyDelete
  4. இந்தப்படத்தில் எல்லாப்பாடலும் சுகம்தான். தேவதை போல் ஒரு பெண்ணிங்கு பாட்டு என் சாய்ஸ்.

    ReplyDelete
  5. தமிழ்ப்பறவை said...

    //ஒருவராலும் வெறுக்க முடியாத பாடல் இது.அதற்கு நீங்கள் இட்ட பதிவும் அழகு.பாடலோடு பதிவு படிக்கையில், இன்னும் சுகம்.இன்னும் வேணும் இது போல பாடல் பதிவுகள்....//

    நன்றி தமிழ்ப்பறவை.ராஜாவின் இசை இது மாதிரி கற்பனைகளைத் தோற்றுவிக்கிறது.

    //3:44 மீண்டும் தங்கள் தேனினும் இனிய குரலில்//
    அது 3:59... மாற்றிவிடுங்கள் சார்.
    //0.39 இல் வரும் பன்னீர் செண்டில் ‘டிங் டிங்’ அது என்ன இசைக்கருவி சார்...சந்தூர் என நினைக்கிறேன். உறுதிபடுத்தக் கேட்கிறேன்.//

    மாற்றியாகி விட்டது. தெரியவில்லை. நீங்கள் சொல்வது கூட இருக்கலாம்.ராஜா எதில் வேண்டுமானலும் இசைக் கொண்டுவருவார்.

    நன்றி.

    ReplyDelete
  6. நன்றி கோபிநாத்.

    ReplyDelete
  7. சின்ன அம்மிணி said...

    //இந்தப்படத்தில் எல்லாப்பாடலும் சுகம்தான். தேவதை போல் ஒரு பெண்ணிங்கு பாட்டு என் சாய்ஸ்.
    December 21, 2009 4:15 AM//
    ஆமாங்க அதுவும் நல்ல பாட்டுதான்.ஆனா ஒரு
    “தாலாட்டும் பூங்காற்று” சூப்பர்.

    ReplyDelete
  8. .39 இல் வருவது சந்தூர் இல்லை! கோவில் மணி (bell) இசை! சந்தூரின் டோன் (tone) ரொம்ப ஹை! மற்றபடி, அந்த பாடல் நீங்கள் சொல்வதுபோல, haunting one!

    அதுவும் அந்தி சாயும் நேரத்தில் மாடியிலோ அல்லது
    ஜன்னல் அருகிலோ வைத்து கேட்டுப் பாருங்கள்! அந்த வயலின் ஆர்க்கெஸ்ட்ரேஷனும் மாலையின் மங்கும் வெயிலும் நம்மை மேலும் இதமாக்கும்!

    ”அம்மன் கோவில் கிழக்காலே” படத்தில் வரும் “காலை நேரப் பூங்குயில்” பாட்டை கேட்டிருக்கிறீர்களா? காலை என்றாலே பூபாளம் அல்லது பௌலி ராகத்தில் தான் என்றில்லாமல் “ஆபோகி” ராகத்தில் போட்டிருப்பார் நம்ம சாமி! காலை விடியும்போது அந்த பாடலை கேளுங்கள்! சுகமோ சுகம்!

    ReplyDelete
  9. நன்றி ரவிஷா விளக்கத்திற்கு...

    ReplyDelete
  10. தினமும் 3 தடவையாவது இந்தப் பாடல் கேட்பேன். அவ்வளவு காதல் இந்தப் பாடலில். பாடலைப் போலவே உங்கள் பதிவும் அருமை. இருங்கள் மீண்டும் ஒரு தடவை பாடலைக் கேட்டுவிட்டு வருகின்றேன்.

    இது கனியோ கவியோ அமுதே சிலை அழகோ!!! என்ன அழகான வரிகள், எஸ்பிபியின் குரல் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
  11. ரவிஷா said...
    //.39 இல் வருவது சந்தூர் இல்லை! கோவில் மணி (bell) இசை! சந்தூரின் டோன் (tone) ரொம்ப ஹை! மற்றபடி, அந்த பாடல் நீங்கள் சொல்வதுபோல, haunting one!//

    நன்றி ரவிஷா.

    //காலை என்றாலே பூபாளம் அல்லது பௌலி ராகத்தில் தான் என்றில்லாமல் “ஆபோகி” //

    இந்த மாதிரி “லொள்ளு” நிறைய பண்ணுவார்.அழுகை “சுப பந்துவராளி” ஆயிரம் தாமரை மொட்டு””கண்டு பிடிச்சேன் கண்டு பிடிச்சேன்”பிறகு “அமிர்தவர்ஷினி” ராகத்தை “இப்போது என்ன தேவை”(மக்கள் ஆட்சி-மம்மூட்டி)
    ஒரு காபரே நடனம்.

    ரவிஷா “kochu kochu santhoshangal" படத்தில்
    Ganashama Vrindhavanyam கேட்டீர்களா? தபலா பிறகு ட்ரம் பேட் பின்னிட்டார்.எவ்வளவு காம்பினேஷனில் பொளக்கிறார்.

    ReplyDelete
  12. December 21, 2009 10:14 PM
    வந்தியத்தேவன் said...

    //தினமும் 3 தடவையாவது இந்தப் பாடல் கேட்பேன்//
    அதான் ராஜா.


    //இருங்கள் மீண்டும் ஒரு தடவை பாடலைக் கேட்டுவிட்டு வருகின்றேன்//

    சூப்பர். நன்றிங்க.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!