Thursday, December 3, 2009

களுக்கென கருவறை வாசனை




 




பாதி ராத்திரியில்
சிரித்து விடுகிறது
பக்கத்தில் படுத்திருந்த
எட்டு மாதக் குழந்தை
களுக்கென







கனவில உம்மாச்சி வந்திருக்க போல
மனைவியும் சிரித்து விடுகிறாள்
களுக்கென

கருவறை வாசன அடிக்கறாப்போல
மனைவியை முயங்கிக்கொண்டிருந்த
கணவனும் சிரித்து விடுகிறான்
களுக்கென

14 comments:

  1. சார் எழுத்து பிழையா? இல்லை மொழி விளையாட்டா?

    ReplyDelete
  2. // இல்லை மொழி விளையாட்டா?//
    அம்மா அப்பா விளையாட்டு?

    நன்றி.

    ReplyDelete
  3. அருமை ரவிசங்கர்... இயல்பான எழுத்துக்கள் வாசனையை அருமையா சேர்த்து வச்சிடுச்சு..

    ReplyDelete
  4. நன்றி சென்ஷி

    ReplyDelete
  5. கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  6. நன்றி யாத்ரா.

    ReplyDelete
  7. மரமண்டைக்கு எட்டலை.... :-(
    பின்னூட்டங்களில் கவனித்துக் கொள்கிறேன்...

    ReplyDelete
  8. //மனைவியும் சிரித்து விடுகிறாள்
    களுக்கென

    கருவறை வாசன அடிக்கறாப்போல
    மனைவியை முயங்கிக்கொண்டிருந்த
    கணவனும் சிரித்து விடுகிறான்
    களுக்கென //

    Sorry.மரமண்டைக்கு எட்டலை.... :-(

    ReplyDelete
  9. நன்றி தமிழ்ப்பறவை/ஸ்ரீ

    ReplyDelete
  10. //அடிக்கறாப்போல//

    இது கொஞ்சம் சாதாரண வார்த்தையா இருக்கு. பேச்சு வழக்கில் இருக்க மாதிரி.

    ReplyDelete
  11. சின்ன அம்மிணி said...

    //இது கொஞ்சம் சாதாரண வார்த்தையா இருக்கு. பேச்சு வழக்கில் இருக்க மாதிரி//

    கரெக்டுதான்.ஆனா இது மாதிரியும் எழுதறாங்க.

    ReplyDelete
  12. //mayavaramban said...

    //நான் ஒரு தொடர் கதையை என் வலைப்பூவில் எழுத அரம்பித்துளேன்.
    அதை படித்து தங்கள் கருத்தை சொல்ல வேண்டுகிறேன். நன்றி//

    வாழ்த்துக்கள்! நன்றி.

    ReplyDelete
  13. December 6, 2009 4:11 AM
    ஆதிமூலகிருஷ்ணன் said...

    //புரியலை..//

    படியுங்கள்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!