என் பள்ளி மற்றும் கல்லூரி பருவங்களில் சில மக்குத்தனமான விஷயங்களைப் பார்த்திருக்கிறேன் மற்றும் படித்திருக்கிறேன்.அப்போது எனக்குத் தெரியாது இதெல்லாம் மக்குத்தனம் என்று.சரிதான் இவங்க பண்றது என்கிற ரீதியில் இருந்தேன்.
ஆனால் இதைச் செய்தவர்கள் தலைவர்கள், படைப்பாளிகள்.
சிந்தனையாளர்கள் சுத்தமாக ஒரு தொலைநோக்குப் பார்வை ( லாங் லுக்) இல்லாத மக்குகள என்பது இப்போது அந்த விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து இவர்களைப் பார்த்து வழித்துக்கொண்டு “ஹிஹிஹி” என இளித்துக் கொண்டிருக்கிறது.
அது என்ன? பார்ப்போம்.
1.80 லில் கம்புயூட்டர் தொழில் நுட்பம் மெதுவாகத தலைக்காட்டும் நேரம்.வேலையில்லா திண்டாட்டம் வரும் என்று அதை எதிர்த்து சில யூனியன்களும்,ஒரு பெரிய தலைவரும் மவுண்ட் ரோடில் ஊர்வலம் போனர்கள்.அதே இவர்கள் சில வருடங்கள் கழித்து ”ஓகே! வரட்டும்..! ஆனா ரயில்வேயில் (ரிசர்வேஷன்)”இதைக்கொண்டு வரக்கூடாது பிடிவாதம் பிடித்துக் கொடிப்பிடித்தனர்.
ஹிஹிஹி.! தாங்க முடியல!
2.டீவி வந்த புதிதில் ஞாயிற்று கிழமைகளில் மாலையில் தூர்தர்ஷனில் திரைப்படம் போடக்கூடாது என கூட்டம் போட்டுத் தீர்மானம் போட்டார்கள் பிறகு ஊர்வலம் போனார்கள் சினிமாகாரர்கள்.போட்டாலும் “இது திரைக்கு வந்து பல பல பல வருடங்களே ஆன” படங்களைத்தான் போடவேண்டும்.அதே மாதிரி மேடை நாடகம் நடத்துபவ்ர்களூம் கொடிப் பிடித்தார்கள்.அவர்களுக்கு ஞாயிறு கிழமைகளில் சபாக்களில் ஈ ஓட்டுவதன் காரணமாக.
ஹிஹிஹி...! தாங்க முடியல!
3.வீடியோ கேசட் வந்த போது அதற்கு சினிமா உரிமையைக் கொடுக்கக்கூடாது என்று கூட்டம் போட்டார்கள்.எதிர்த்தார்கள்.சிறிது மாதம் கழித்து ஒரு படத்தின் உரிமையை இரண்டு வருடம் அல்லது மூன்று வருடம் கழித்துதான் தர வேண்டும் என்று அடுத்தக் கட்டத்திற்க்குப்போனார்கள். அப்புறம்.....?
ஹிஹிஹி...! தாங்க முடியல!
4.கருத்தடை சாதனம்.இது மதங்களுக்கு எதிரானது. கடவுள் கொடுப்பதை தடுக்கக்கூடாது.பிள்ளகள காப்பாத்தவது எங்கள் வேலை.மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்.இதுல கவர்மெண்ட் தல இடக்கூடாது.
ஹிஹிஹி...! தாங்க முடியல!
Subscribe to:
Post Comments (Atom)
ஹிஹிஹி...! தாங்க முடியல!
ReplyDeleteஅது மட்டுமில்ல, கேபிள் டிவி வந்த புதுசுல, அதனால சினிமா தொழில் பாதிக்கும்னு போராட்டம் நடத்தினாங்க, அத தலைமை ஏற்று நடத்தியது இயக்குனர் பாலசந்தர். இவரே பின்னாடி சன் டிவில சீரியல் கொடுத்தாரு. இன்னிக்கு ஒரு புது படம் வருதுன்னா, ஒரு மாசத்துக்கு முன்னாடியே எல்லா சாட்டிலைட் டிவியிலயும் ட்ரெயிலர் போடறாங்க. ஹிஹிஹிஹிஹி
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை.
ReplyDeleteபெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDelete//அது மட்டுமில்ல, கேபிள் டிவி வந்த புதுசுல, அதனால சினிமா தொழில் பாதிக்கும்னு போராட்டம் நடத்தினாங்க, அத தலைமை ஏற்று நடத்தியது இயக்குனர் பாலசந்தர். இவரே பின்னாடி சன் டிவில சீரியல் கொடுத்தாரு. இன்னிக்கு ஒரு புது படம் வருதுன்னா, ஒரு மாசத்துக்கு முன்னாடியே எல்லா சாட்டிலைட் டிவியிலயும் ட்ரெயிலர் போடறாங்க. ஹிஹிஹிஹிஹி//
சூப்பர் சார்!சூப்பர் ஹிஹிஹிஹிஹிஹிஹி!
போகிற போக்கை பார்த்தால் தியேட்டரில் வெளியிடுவதை விட டி.வி. சானல்களில் முதலில் படத்தினை வெளியிட்டு விடுவார்கள் போலிருக்கிறது.
ReplyDeleteகம்ப்யூட்டரால் க்ளார்க்குகளுக்கு வேலை போய்விடுமென ஒரு அ.நம்பிக்கை இருந்ததென்னவோ அதேப்போலத்தான் அன்றைய காலகட்டத்தினை நினைத்து பார்த்தால் இன்று ஹி..ஹி..ஹி.
ReplyDelete//0 லில் கம்புயூட்டர் தொழில் நுட்பம் மெதுவாகத தலைக்காட்டும் நேரம்.//
ReplyDeleteகோவைல நான் வேலை பாத்த அலுவலகத்தில ஒருத்தர் கம்ப்யூட்டர் கைநாட்டு. கம்ப்யூட்டர் பழகிட்டு இருந்தார். கம்ப்யூட்டர் Yes/No கேட்டுச்சு ஒரு கேள்விக்கு. ஆமாம்னா Y தட்டுங்க இல்லைன்னா N தட்டுங்கன்னு சொன்னேன். கீபோர்ட் முழுக்கப்பாத்துட்டு Yன்னு ஒண்ணு கீபோர்ட்ல இல்லைன்னுட்டார். இவர் எல்லாம் கப்யூட்டர் வேணாம்னு போராடினதில என்ன அதிசயம் :)
//1.80 லில் கம்புயூட்டர் தொழில் நுட்பம் மெதுவாகத தலைக்காட்டும் நேரம்.வேலையில்லா திண்டாட்டம் வரும் என்று அதை எதிர்த்து சில யூனியன்களும்,ஒரு பெரிய தலைவரும் மவுண்ட் ரோடில் ஊர்வலம் போனர்கள்.//
ReplyDeleteஅண்ணே அவங்க பார்வைல இது சரி தான. உண்மையிலேயே பல பேர் வேல போச்சு!!அத கொஞ்ச நாள் தள்ளி போட பார்த்தாங்க..அவ்ளோ தான். ஏனோ இத ஒரு நகைசுவையா ரசிக்க முடியல. நெருக்கமான யாராவது கணினி காரணமா தங்கள் வேலைய இழந்திருந்தா உங்களுக்கு புரியுமோ என்னமோ!!
இது பெரிய புரட்சி, இத தவிர்க்க முடியாது அப்படின்னு சொல்லாதிங்க.. தோற்போம் அப்படின்னு தெரிஞ்சாலும் நாம பல தடவ போராடுறது கிடையாதா?
கும்க்கி said...
ReplyDelete// போகிற போக்கை பார்த்தால் தியேட்டரில் வெளியிடுவதை விட டி.வி. சானல்களில் முதலில் படத்தினை வெளியிட்டு விடுவார்கள் போலிருக்கிறது//
ஆமாம் இதுவும் ஒரு நாள் வரும் கும்க்கி.
சின்ன அம்மிணி said...
ReplyDelete// இவர் எல்லாம் கப்யூட்டர் வேணாம்னு போராடினதில என்ன அதிசயம் :)//
இன்னும் கூட சில அரசு அலுவலங்களில் கம்புயூட்டர்
கொண்டு வர யோசிக்கிறார்கள்.காரணம் ஊழல் செய்ய முடியாது.
செந்தில்நாதன்,
ReplyDeleteஅண்ணே ஒரு கதவு(தொழில்நுட்பம்)திறந்தால் மற்றொரு கதவு மூடத்தான் செய்யும்.அந்த திறந்த கதவால் வேலை வாய்ப்பு பெருகும்.பாதிப்பும் இருக்கும்.சிலேட்டு,அம்மி,விறகடுப்பு,கொரியர்,
போஸ்ட்கார்ட்போன்றவை பெருமளவுக்கு
(கிராமங்களில் கூட கிஸான் கார்டு) மாறி நாம் எங்கோ வந்துவிட்டோம்.
இந்தியா மாத்திரமின்றி உலகம் முழுவதும் தொலைநோக்கு பார்வை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட பல பொன்மொழிகள் இருக்கிறது. முன்பு மெயிலில் சேமித்து வைத்திருந்தேன். கிடைத்தால் பின்னூட்டத்தில் இடுகின்றேன்.
ReplyDeleteகிடைச்சிடுச்சு.. ஆங்கிலத்தில் இடுவதற்கு மன்னிக்க ரவிசங்கர்ஜி! :)
ReplyDeleteGolden Oldies
"This 'telephone' has too much disadvantages to be seriously considered as a means of communication"
- internal memo, Western Union, 1876.
"Who the hell wants to hear movie actors speak?"
- H.M. Warner, Warner Brothers, 1927.
"We don't like this sound. Nobody is interested in guitar music any more"
- Decca Recording Company, rejecting The Beatles, 1962.
"640 kilobytes are sufficient for every PC user" – Bill Gates, Microsoft, 1981.
"I think there is a world market for maybe five computers"
- Thomas Watson, IBM, 1943.
கல்ஃப் நியுஸ் செய்திகளில் முன்பு வந்த பொன்மொழிகள் இவை.... நன்றி கல்ஃப் நியுசிற்கு ;)
ReplyDeleteசென்ஷி,
ReplyDeleteசில சமய்ம நமது கண்டுபிடிப்புகளே “பிராங்கென்ஸ்டெயின்” மாதிரி ஆகிவிடும்.உதாரணம்
blog addiction.
"Change" is the only permanent thing. அதை எதிர்க்கும் அனைவரும் முதலில் எதிர்த்து, பின் we give in. அரிசி விலை முதல், அணுகுண்டு கண்டுபிடிப்பு வரை இதே தான்.
ReplyDeleteநன்றி ஷக்திப்ரபா.
ReplyDeleteada udatekku vaangappa
ReplyDelete