Thursday, November 19, 2009

ஒரு கட்டுப் ”பின்னூட்டம்” ஒரு ரூபா

சில சமயம் பதிவுகளை விட பின்னூட்டம் சுவராஸ்யமாக இருக்கிறது.பதிவர் யுவ கிருஷ்ணா ஒரு நாள் “உங்கள் பதிவை விட உங்கள் பின்னூட்டம் சுவராஸ்யமாக இருக்கிறது என்றார் பின்னூட்டத்திலேயே. நான் நொந்துப் போனேன்..


சரி... இப்போ வித விதமான பின்னூட்டங்களைப் பார்க்கலாம்.


1.மீ... பஸ்ட்பின்னூட்டம்: கண்ணாமூச்சி விளையாட்டில்”நாந்தான் பஸ்ட்” தாச்சியைத் தொடுவது மாதிரி.வைரமுத்து அல்லது வாலி டைப்.சில சமயம் பதிவுக்கு முன்னேயே வந்துவிடுகிறது.இதுக்கு தனியா சாப்டுவேர் இருக்கா?இல்லேன்னா பதிவின் "Add on" ஆ? 


2.அப்புறம் வரேன் பின்னூட்டம்: இது மீ பஸ்டின் rich cousin  என்று சொல்லலாம்.பதிவைப் பார்த்தவுடன் “திரு திரு” வென விழித்துவிட்டு என்ன போடுவது என்று தெரியாதவர் அல்லது முதலில் பதிவை ஒரு லுக் விட்டுவிட்டார்.பின்னால் விரிவான பின்னூட்டத்தில் பொளுந்து கட்டுவார் என்று அர்த்தம்.பதிவர் நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருப்பார்.

3.தேவ நகரி குறிகள் பின்னூட்டம்:அகழ்வாராய்ச்சியில் சில ஆதிவாசிகளின் குகைகளில் சில வினோத சங்கேத குறியீடுகளில் இருக்கும்.அது மாதிரி.:), ?!*?, :D,:P,?????,ம். &*???/!!!!

4.தலைக்காட்டுதல் பின்னூட்டம்: ”தெரிஞ்சவரு.. கல்யாணத்து போகாம இருக்க முடியாது தலை காட்டிட்டு கிளம்ப வேண்டிதான்”என்கிற ரீதியில்.

5.மாமியார் அல்லது டெர்ரரிஸ்ட் பின்னூட்டம்: ”ஹுக்கும்... இது நொள்ளை...இது சொட்டை...இந்த இடத்தில ரெண்டு செண்டிமீட்டர் நீளம்..இங்க வெட்டனும்...””அந்த கடைசி பாரா தேவையில்லை”(ஐய்யோ...!  இது நான் இல்ல)

6.This post has been removed by the Author பின்னூட்டம்: தப்பு தப்பா போட்டதின்
 எச்சம்(fossil)

7.பதிவின்னோட்டம் பின்னூட்டம்:”இப்படித்தாங்க...எனக்கும்.” என்று ஆரம்பித்து பின்னூட்டத்திலேயே பதிவு போடுவார்.

8.ஜாலியன்வாலாபாக்பின்னூட்டம்:வரிசையாக வெகுஜனப் பின்னூட்டம் இட்டு சிலாகிக்கையில் ஒருவர் வந்து படபடவென பதிவைக் சகட்டுமேனிக்கிச் சுட்டு பொத்தல் ஆக்குவார்..வெகுஜனங்கள் “இப்படி ஒரு ஆங்கிள் இருக்கா” என்று மண்டையைச் சொறிந்துக்கொண்டு நிற்கும்.

9.ஆலமரத்தடிப் பின்னூட்டம்:பதிவைப் பற்றி பேசாமல் இங்கு வரும் பின்னூட்டிஸ்டுகள் “கட்டிங் போடலாமா””ஆள ரொம்ப நாளா காணும்””டிக்கெட் கன்பார்ம் ஆயிட்ச்சா””நைட் ஷோ போலான்னு” தங்களுக்குள் டிவிட்டுவார்கள்.


10.பாக்சிங் ரிங்க் பின்னூட்டம்:பதிவைப் பற்றி பின்னூட்டிஸ்டுகள் தங்களுக்குள் குஸ்தி போடுவது .பதிவர் கையைக் கட்டிக்கொண்டு பார்த்திருப்பார் அல்லது வேறு வேலைப் பார்த்துக்கொண்டிருப்பார்.

11.Retail பின்னூட்டம் : மொத்தமாகப் போடாமல் நினைச்சு நினைச்சு (thoughts அ) வரிசையாகப் போடுவார்கள்.

12.ஆட்டு மந்தைப் பின்னூட்டம்:முதலில் போடுபவரை பார்த்து வரிசையாகஅதே பி.ஊ.

13.திடீர் பின்னூட்டிஸ்ட்: அடிக்கடி இடாமல்கழுகுமாதிரி மேலேயே பறந்துக்(பார்த்துக்)கொண்டு என்றைக்காவது ஒரு நாள் சர்ரென பூமியில் இறங்கி ஒரு நச் பின்னூட்டம் இட்டு அதே வேகத்தில் மேலே போய் விடுவார்கள்.

அவ்வளவுதாம்பா!  மிச்சம் இருந்தா சொல்லுங்க பதிவர்களே!


பின் இணைப்பு:


14:விறைப்புப் பின்னூட்டம்: ஸ்டார் பதிவர்கள் ஒரு ஸ்மைலியோ, நல்லாருக்குன்னு ஒற்றை வார்த்தையோ போடுறாங்களே..... (நன்றி:kgjawarlal)


15:சுருள் பின்னோட்டம்:ஒரு பதிவில் பின்னூட்டம் போட்டுவிட்டு, அப்படியே நம்ம பதிவு முகவரியையும் கொடுத்து ‘வாங்க.. படிச்சிட்டுப் போங்க’ அப்படின்னு கூப்பிடுறது...
(நன்றி:தமிழ்ப்பறவை)


16:’வாட் எ கோ இன்சிடெண்ட்’ பின்னூட்டம்: நினைச்சேண்டா! போட்டுட்டான்!
(நன்றி:தமிழ்ப்பறவை)

17:வட போச்சே பின்னூட்டம்:  ஜஸ்ட் மிஸ்டு!


18:சோம்பேறி பின்னூட்டம்:  ரிப்பீட்டேய்!
 (நன்றி:(17&18)பாஸ்டன் ஸ்ரீராம்

47 comments:

  1. அப்புறம் வாரேன்

    ReplyDelete
  2. இன்னும் உங்ககிட்ட அதிகமா
    expect பண்றேன்

    ReplyDelete
  3. நல்ல பதிவு. 500 கிளிக்காவது விழும். அதில் 250 பேராவது குறைஞ்சபட்சம் படிச்சிருப்பாங்க! ஒரு ஆள் கூட நீங்க சொல்கிற வகைகளில் ஒரு பின்னூட்டம் கூட போடமாட்டாங்க! இதுவே உல்டாவா! மொக்கை பதிவுக்கு 50 பின்னூட்டமாவது விழுவதையும் பார்த்திருக்கிறேன். இது என் கவலை.
    //எதுவும் சொல்லாத போகாதீங்க!//
    இப்படி உங்க பிளாக்கல தான் பார்க்கிறேன். நான் பொதுவா பின்னூட்டம் நிறைய இடுவதில்லை.
    இதே மாதிரி, பதிவுகளை பற்றி ஒன்னு எழுதுங்க!

    ReplyDelete
  4. விறைப்புப் பின்னூட்டம் ன்னு ஒரு ராகம் சேர்த்துக்கலாம். ஸ்டார் பதிவர்கள் ஒரு ஸ்மைலியோ, நல்லாருக்குன்னு ஒற்றை வார்த்தையோ போடுறாங்களே.....

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  5. முதல் வருகைக்கு ந்ன்றி.கருத்துக்கும் நன்றி.

    நாராயணா இந்த கொசு(எறும்பு)த் தொல்லை தாங்க முடியலடா!

    ReplyDelete
  6. நல்லத்தேன் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க.:))

    ReplyDelete
  7. சொல்லமாட்டேன்..ஆனா போகலை

    ReplyDelete
  8. //(ஐய்யோ...! இது நான் இல்ல)// - இதுதான் அல்டிமேட் :)

    ReplyDelete
  9. நன்றி நொந்தகுமார்.யோசனைக்கும் நன்றி.

    kgjawarlal said...

    //விறைப்புப் பின்னூட்டம் ன்னு ஒரு ராகம் சேர்த்துக்கலாம். ஸ்டார் பதிவர்கள் ஒரு ஸ்மைலியோ, நல்லாருக்குன்னு ஒற்றை வார்த்தையோ போடுறாங்களே....//

    நன்றி நண்பரே.ஆமாம் சேர்த்துக்கலாம்.

    ReplyDelete
  10. கண்மணி said...
    //நல்லத்தேன் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க.:)//

    வாங்க கண்மணி.ரொம்ப நாளா ஆளக் காணோம்.
    எனக்குப் பிடித்த பதிவர் நீங்கள்.

    ReplyDelete
  11. விக்ரமன் பட பின்னூட்டங்கள்னு ஒன்னு இருக்கு தெரியுங்களா?

    ReplyDelete
  12. பின்னூட்டத்த காணோம்!

    ReplyDelete
  13. ஹா ஹா. அட்டகாசம். ஜாலியன்வாலாபாக் - ultimate. மிக மிக ரசித்த இடுகை.

    அனுஜன்யா

    ReplyDelete
  14. துளசி கோபால் said...

    // ))))))))))))))))//

    எகோ(echo)அல்லது ஸ்டிரியோ பின்னூட்டம்?

    நன்றி.

    ReplyDelete
  15. தண்டோரா ...... said...

    //சொல்லமாட்டேன்..ஆனா போகலை//
    ”கலைஞர்”பின்னூட்டம்?


    TKB காந்தி said...

    //(ஐய்யோ...! இது நான் இல்ல)// - இதுதான் அல்டிமேட் :)

    நன்றி.

    ReplyDelete
  16. அதிஷா said...

    // விக்ரமன் பட பின்னூட்டங்கள்னு ஒன்னு இருக்கு தெரியுங்களா?//

    என்ன அது? சொல்லுங்க.

    //பின்னூட்டத்த காணோம்!//

    நான் சொல்ற(புலம்பற?)வசனம் ஆச்சே!

    ReplyDelete
  17. நர்சிம் said...

    /”நச்”//

    கடுகைத் துளைத்துதேழ் கடலைப் புகுத்தி குறுகத்
    தரித்த ”நச்”ர்சிம்

    ReplyDelete
  18. அனுஜன்யா said...

    // ஹா ஹா. அட்டகாசம். ஜாலியன்வாலாபாக் - ultimate. மிக மிக ரசித்த இடுகை//

    வாஙக் அனுஜன்யா.
    மொக்கப் பதிவு போட்டாதன் இந்தப் பக்கம் வறீங்க.
    முதுக வ்லிக்க கவிதை/கதை எழுதின நாலு வார்த்தைச் சொன்ன திருத்திக்கலாம்.

    நன்றி

    அனுஜன்யா

    ReplyDelete
  19. சூப்பர் பதிவு....
    //”ஹுக்கும்... இது நொள்ளை...இது சொட்டை...இந்த இடத்தில ரெண்டு செண்டிமீட்டர் நீளம்..இங்க வெட்டனும்...”(ஐய்யோ...! இது நான் இல்ல)//

    எங்கப்பன் குதிருக்குள் இல்லை...:-)

    இன்னொரு வகைப் பின்னூட்டம் இருக்கு...’சுருள் வைக்கிற பின்னூட்டம்’-- ஒரு பதிவில் பின்னூட்டம் போட்டுவிட்டு, அப்படியே நம்ம பதிவு முகவரியையும் கொடுத்து ‘வாங்க.. படிச்சிட்டுப் போங்க’ அப்படின்னு கூப்பிடுறது...(எங்க ஊர்ப் பக்கம் பத்திரிக்கை கொடுக்கிறப்போ, அவசியம் வரணும்கிற மாதிரியான, மாமன்,மச்சான் உறவுள்ளவர்களுக்கு பத்திரிக்கையோடு வெற்றிலை பாக்கும், ரூபாயும் வைத்துத் தருவார்கள். இதற்கு ‘சுருள் வைப்பது’ என்று பெயர்.)

    ’வாட் எ கோ இன்சிடெண்ட்’ பின்னூட்டம் ஒண்ணு இருக்கு...

    ReplyDelete
  20. இதுல சொல்லாத வகையில ஒரு பின்னூட்டம் போடமுடியுமான்னு யோசிக்கிறேன்.ஒன்னும் தோணல,ஐடியா கெடச்சதும் வந்து பின்னூட்டம் போடறேன்.இப்போதைக்கு என்னோட டெம்பிளேட் பின்னூட்டம்- நல்ல பதிவு,வாழ்த்துகள்.

    ReplyDelete
  21. எனக்குத் தெரிந்த 2 பின்னூட்டங்க
    1. வட போச்சே பின்னூட்டம் - நானும் இதப் பத்தி எழுதணும்னு நெனச்சி, எழுதி, Draft ல வெச்சிருக்கேன், நீங்க எழுதிட்டீங்க

    2. அப்புறம் முக்கியமா, “ரிப்பீட்டேய்” பின்னூட்டத்த எப்படி மிஸ் பண்ணீங்க
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  22. kgjawarlal said...
    விறைப்புப் பின்னூட்டம் ன்னு ஒரு ராகம் சேர்த்துக்கலாம். ஸ்டார் பதிவர்கள் ஒரு ஸ்மைலியோ, நல்லாருக்குன்னு ஒற்றை வார்த்தையோ போடுறாங்களே.....
    //

    :-))

    ReplyDelete
  23. போன பின்னூட்டத்தப்பத்தி என்ன நினைக்கிறீங்க.? நான் ஸ்டார் பதிவர்தானே.?
    ஹிஹி..

    ReplyDelete
  24. //.. ஆதிமூலகிருஷ்ணன் said...
    போன பின்னூட்டத்தப்பத்தி என்ன நினைக்கிறீங்க.? நான் ஸ்டார் பதிவர்தானே.? ..//

    ஆமா, ஆமா,

    ஆனா, எத்தனை ஸ்டார்னு தான் தெரியல.. :-)

    ReplyDelete
  25. //.. ஆதிமூலகிருஷ்ணன் said...
    போன பின்னூட்டத்தப்பத்தி என்ன நினைக்கிறீங்க.? நான் ஸ்டார் பதிவர்தானே.? ..//

    அடுத்த பின்னூட்டத்த போட்டதுனால உங்க ஸ்டார் போச்சு!! :)

    ReplyDelete
  26. //11.Retail பின்னூட்டம் : மொத்தமாகப் போடாமல் நினைச்சு நினைச்சு (thoughts அ) வரிசையாகப் போடுவார்கள்.//

    நான் பெரும்பாலும் இப்படித்தான். மறந்து போகும். அப்பறம் வரிசையாப்போட வேண்டியதுதான். :)

    ReplyDelete
  27. //
    .ஆலமரத்தடிப் பின்னூட்டம்:பதிவைப் பற்றி பேசாமல் இங்கு வரும் பின்னூட்டிஸ்டுகள் “கட்டிங் போடலாமா””ஆள ரொம்ப நாளா காணும்””டிக்கெட் கன்பார்ம் ஆயிட்ச்சா””நைட் ஷோ போலான்னு” தங்களுக்குள் டிவிட்டுவார்கள்.
    //

    இது டாப்பு :0)))))...அதை விடுங்க.....கட்டிங் போட்டுட்டு நைட் ஷோ போலாமா...

    ReplyDelete
  28. எப்போது படித்தாலும் ஊட்டம் தரும் வகையில் அமையப் பெறவேண்டும் என்று தான் பின்னூட்டம் என்ற பெயர் வைத்தார்களோ?
    எதார்த்தமாக எந்த ஊட்டமும் உங்களுக்கு கொடுக்கப்படவில்லையோ - எதார்த்த விளம்புதல் பின்னூட்டம் - அதை சேர்க்கவில்லையே !

    ReplyDelete
  29. நன்றி தமிழ்ப்பறவை.உங்கள் யோசனையை பதிவில் சேர்த்து விட்டேன்.பார்க்கவும்.

    ஸ்ரீ said...
    //இதுல சொல்லாத வகையில ஒரு பின்னூட்டம் போடமுடியுமான்னு யோசிக்கிறேன்//

    யோசிங்க. நன்றி.

    ReplyDelete
  30. நன்றி ஆதிமூலகிருஷ்ணன்

    நன்றி சின்ன அம்மிணி

    நன்றி அது சரி

    ReplyDelete
  31. sriram said...

    நன்றி ஸ்ரீராம்.உங்கள் யோசனையை பதிவில் சேர்த்துவிட்டேன்.

    நன்றி அன்புடன் அருணா

    நன்றி பட்டிக்காட்டான்

    ReplyDelete
  32. செந்தில் நாதன் said...

    //அடுத்த பின்னூட்டத்த போட்டதுனால உங்க ஸ்டார் போச்சு!! :)//

    இது சூப்பர் பின்னூட்டம். நன்றி.

    ReplyDelete
  33. Sowmya said...

    //எப்போது படித்தாலும் ஊட்டம் தரும் வகையில் அமையப் பெறவேண்டும் என்று தான் பின்னூட்டம் என்ற பெயர் வைத்தார்களோ?//

    அப்பா! புல்லரிக்க வச்சுட்டீங்க! ஆமாங்க.

    ReplyDelete
  34. இதுக்கு பின்னூட்டம் போடணுமா?

    :)

    ReplyDelete
  35. நன்றி கிறுக்கல் கிறுக்கன்.

    நன்றி தமிழன் - கறுப்பி.போடுங்க.

    ReplyDelete
  36. //5.மாமியார் அல்லது டெர்ரரிஸ்ட் பின்னூட்டம்: ”ஹுக்கும்... இது நொள்ளை...இது சொட்டை...இந்த இடத்தில ரெண்டு செண்டிமீட்டர் நீளம்..இங்க வெட்டனும்...””அந்த கடைசி பாரா தேவையில்லை”(ஐய்யோ...! இது நான் இல்ல)//

    ************

    Point No.5 is surely RAVI's Style....

    ReplyDelete
  37. Thanks Ravi, I feel honoured!!!!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!