Tuesday, November 24, 2009

பழசி ராஜா -சினிமா விமர்சனம்

1838 இல் பிரிட்டிஷ் ஈஸ்ட் இண்டியா கம்பேனியை எதிர்த்துப் போராடிய கேரள வர்மா பழசி தம்புரானைப்(ராஜா) பற்றிய படம்.(எனக்குத் தெரிந்தது “தம்புராட்டியின் ராவுகள்”).அவர்கள் கோட்டயத்தை விட்டு வெளியேறவும், வரி வசூலை எதிர்த்தும் புரட்சி செய்தான் பழசி.இது ஒரு பிரியட் பிலிம் என்பதால பீலா நிறைய விடமுடியாது.பட ஆரம்பத்தில் உன்னைப் போல் ஒருவன் மொட்டை மாடி குரலில் கமல் கதையைப் பற்றி வாய்ஸ்(கதைச் சுருக்கம்)கொடுக்கிறார்.படத்தின் நடுவே ஈழம் ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.    
 நான கடைசியாகப் பார்த்த மலையாளப் படம் “சங்கரன்குட்டிக்கு பொண்ணுவேனம்”.சமூகப் படங்களைப் பார்த்து அலுத்துப் போனவர்களுக்கு இது ஒரு வித்தியாசமான படம்.நன்றாக எடுத்திருக்கிறார்கள்.ஆனால் மெதுவாகப்போகிறது.என் மகன் வாய்பிளந்தபடிப் பார்த்தான்.காரணம் பிரியட் பிலிம்.

இதிலும்பழசியின்சமகாலகுறுநிலமன்னர்கள்,நண்பர்கள்,ஆள்காட்டிகள்,கட்டிங்குக்காக சோரம் போகிறவர்கள் என்று வருகிறார்கள்.


தமிழ் டப்பிங் வசனங்கள் ஜெயமோகன். டப்பிங்கும் நன்றாக இருக்கிறது.சரத்,மம்மூட்டி சொந்தகுரல்.மம்மூட்டி வழக்கமான தமிழாளம்(எனிக்கி)படம் கிட்டத்தட்ட மூணு மணி நேரம்.முதல் ஒரு மணி நேரத்தில் இடைவேளை.


அந்த நாளின் இயற்கை எழில்,கேரள வீடுகள் /மரசாமன்கள் பார்க்கும் போது, 2009க்கு வராமல் அங்கேயே கேரள வேலைப்பாடு கட்டிலில் உட்கார்நதபடி விவசாயம் பார்க்கலாம்  என்று மனம் ஏங்குகிறது.இந்தப் பிரபஞ்சத்தில் கடவுள் தனக்காக அமைத்துக்கொண்டு நாடு கேரளா என்று சொல்லுவார்கள்.

நடிகர்கள் பத்மப்ரியா(நீலி),கனிகா,திலகன்,கேப்டன் ராஜூ,நெடுமுடிவேணு,ஜெயன்(கைத்திரி அபு) பிஜூ மேனன்(சாந்து),ஜகதி ஸ்ரீகுமார்(காந்தன்மேனன்).கேமரா ராம்நாத் ஷெட்டி,சவுண்ட் மிக்ஸிங் ரசூல் பூக்குட்டி,டைரக்‌ஷன் ஹரிஹரன்,எம்.டி.வாசுதேவன் நாயர்,சண்டை ராஜூ.

மம்மூட்டி சாந்தமான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.முகத்தில் ஆல்வேஸ் ஒரு சீரியஸ்னஸ் .கருப்பு உடை பாந்தமாக பொருந்தி வந்து அட்டகாசமாக இருக்கிறார்.அடுத்து மனதைத் தொடுபவர் சரத்குமார்.வாழ்நாள் ரோல்.உக்கிரமாக ஒரு படைத் தளபதியைப் போல் மிடுக்கான தோரணை/நடிப்பு.கட்டான உடம்பு.பத்மப்ரியா.”சிக்” என்று வடித்தாற் போல் இருக்கிறார்.”நீலியாக வாழ்ந்திருக்கிறார்.கேரளாவின் Martial Art ஆன களரிபயாட்டு சண்டையில் பின்னுகிறார்.நல்ல நடிப்பு.

சரியான திரைக்கதை அமைப்பினால் ஒழுங்கோடு குழப்பமில்லாமல் போகிறது.மழை காட்சிகள் அருமை.சண்டைக்காட்சிகள் அதை விட அருமை.கேரளாவின் களரி பயாட்டுவைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.நம்ம ஊரில் விஜய காந்த் வானில் பறந்து சுழற்றி அடித்துப் வில்லன்களைப் பந்தாடுவார் அது மாதிரி.இது கேப்டனின் “சரி ப்பை(யா)ட்டு”

டப்பிங்கில் “திருவாசகம் ஒதுவது” என்று ஒரு இடத்தில் வருகிறது.கேரளாவில் ஏது திருவாசகம்?அடுத்து ஒரு இடத்தில்(மம்மூட்டி வீட்டு முற்றத்தில்)ஆண்டாள் திருப்பாவைக் கேட்கிறது. ஒரிஜனல்படியே விட்டிருக்கலாமே!

இசை Master Blaster மேஸ்ட்ரோ ராஜா.பின்னணி இசை அபாரம்.ஓவர் இசை இல்லை.அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் அமைதி காக்கிறார்.ரெண்டு பாட்டுக்கள்தான் இதில் வருகிறது. மீதி? வெட்டப்பட்டுவிட்டது?”ஆதிஉஷஸ்சந்தியா பூத்தது”பாட்டின்preludeக்கு ஏற்ப ஒரு வெள்ளைக்குதிரை தண்ணீரைக் கிழித்துக்கொண்டு வருகிறது.”குன்னத்தே குன்னகையும்” பாட்டும் நன்றாக படம் பிடித்து உள்ளார்கள்

டப்பிங் பாடல்கள் மலையாளம் போல வீர்யமாக இல்லை.ஜுனூன் டப்பிங்.இதில் காமெடி என்னவென்றால் தமிழ் டப்பிங் பாடல்களைப் பாடினவர்கள் முக்கால்வாசி மலையாளிகள்.

2.5 வருடம் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை.

ஹாலிவுட் பிரியட் படங்கள் மாதிரி இன்னும் விறுவிறுப்போடு காட்சி அமைப்புகளில் கம்பீரம்,நறுக் எடிட்டிங் என பொளுந்துக்கட்டி இருக்கலாம்.

பழசி ராஜா பாடல் விமர்சனம் கேட்க இங்கே:

இளையராஜா சாரே!.Soங்க்ஸ் மதுரமாயி!

13 comments:

 1. படம் பாக்கணும்ங்கற ஆசையைக்கிளப்பி விட்டிருக்கீங்க.

  ReplyDelete
 2. //என் மகன் வாய்பிளந்தபடிப் பார்த்தான்.காரணம் பிரியட் பிலிம்//

  ஒருவேளை இது குழந்தைகள் படமோ. (ஹிஹி சும்மாத்தான்)

  ReplyDelete
 3. கருத்துக்கு நன்றி.பாடல்கள் கேட்டிங்களா.

  //என் மகன் வாய்பிளந்தபடிப் பார்த்தான்.காரணம் பிரியட் பிலிம்//
  டீவி/சினிமாவில் ஹாலிவுட் பிரம்மாண்டம் பார்த்துவிட்டு லோக்கல் பிரியட் பிலிம் ஆனதால் சற்று வினோதம்.அதுவும் கேரளா சூழ்நிலை.

  ReplyDelete
 4. குன்னத்தே குன்னகை பாட்டு செம்பூவே பாட்டு மாதிரியே இருந்துச்சே! ஏதாவது ராகம் சம்பந்தப்பட்ட விசயமா இருக்குமோ

  ReplyDelete
 5. அதிஷா said...

  //குன்னத்தே குன்னகை பாட்டு செம்பூவே பாட்டு மாதிரியே இருந்துச்சே! ஏதாவது ராகம் சம்பந்தப்பட்ட விசயமா இருக்குமோ//

  அதன்(செண்பூவே) ராகம் மாறி தெரியவில்லை.இது(குன்னத்தே) ஆபேரி/பீம்பளாஸ் மாதிரி இருக்கு.இரண்டுமே சித்ரா.பின்னணியில் தட்டல்.ரொம்ப நாளைக்குப் பிறகு சித்ரா ராஜா இசையில் பாடுகிறார்.அதான் சாயல்.

  ReplyDelete
 6. நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 7. பதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே,

  இந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்….

  http://idhayame.blogspot.com/2009/11/blog-post_12.html

  அன்புடன்

  செல்லத்துரை…..

  ReplyDelete
 8. நல்லா இருக்கு சார்... எனக்குத்தான் பார்க்ககொடுத்து வைக்கவில்லை...டொராண்டில் டவுன்லோடு செய்ய வேண்டும்...
  விமர்சனம் கொஞ்சம் நீளளம்...
  //ஆதிஉஷஸ்சந்தியா பூத்தது”பாட்டின்preludeக்கு ஏற்ப ஒரு வெள்ளைக்குதிரை தண்ணீரைக் கிழித்துக்கொண்டு வருகிறது// மிக ரசித்தேன்....
  //”குன்னத்தே குன்னகையும்” பாட்டும் நன்றாக படம் பிடித்து உள்ளார்கள்//
  மிக மிக ரசித்தேன்..(கனிகா...)
  pls read this http://meedpu.blogspot.com/2009/11/blog-post_7419.html

  ReplyDelete
 9. //..

  சின்ன அம்மிணி said...

  படம் பாக்கணும்ங்கற ஆசையைக்கிளப்பி விட்டிருக்கீங்க. ..//

  ரிப்பீட்டு..

  ReplyDelete
 10. \\ஹாலிவுட் பிரியட் படங்கள் மாதிரி இன்னும் விறுவிறுப்போடு காட்சி அமைப்புகளில் கம்பீரம்,நறுக் எடிட்டிங் என பொளுந்துக்கட்டி இருக்கலாம்.\\

  மிக சரி...தல.

  ReplyDelete
 11. நன்றி செல்லதுரை வருகிறேன்.

  ReplyDelete
 12. நன்றி தமிழ்ப்பறவை.கோபிநாத் முன்னமே லிங்க் கொடுத்திருந்தார். படித்து விட்டேன்.

  நன்றி பட்டிக்காட்டன்.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!