விடிகாலை மணி 5.30.அடையார். செளந்தர்யா அபார்ட்மெண்ட்ஸ்.ஹேமா-கணேஷ் தம்பதியர் வீடு.
“கணேஷ்! போன் அடிக்கறது..!கொஞ்சம் எழுந்து எடுங்கோளேன்.”
”ப்ச்” தூக்க அசதியில் புரண்டபடி “நீயே எடு டியர்”எனறு சொல்லிவிட்டு மீண்டும் தூக்கத்தில் விழுந்தான்.
”எவ்ளோ ரிங் போறது!உங்க பக்கத்துல வாகா இருக்கு எடுக்க...எடுக்காமா என்ன எடுக்கச் சொல்றேளே.”ஹேமா கடிந்து கொண்டே எழுந்தாள்.
அடிப்பது நின்று விட்டது.மறுபடியும் அடிக்கும் என்று உள்ளுணர்வு சொன்னது.தன் செல்லையும் பக்கத்தில் வைத்துக்கொண்டாள்.
காத்திருந்த நேரத்தில் உள்ளாடைகளைச் சரி செய்து கொண்டாள்.தலை முடியை கையால் லாவகமாக அளைந்து கோடாலி முடிச்சுப் போட்டுக்கொண்டாள்.டைம் பீசில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் ஒற்றிக்கொண்டாள்.
”டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்..” மீண்டும் அடிக்க”கமிங்...கமிங். கமிங்..”எதிர்பாட்டுப் பாடியபடி பாய்ந்து எடுத்தாள்.
“ஹலோ...!ஹேமா ஹியர்!”
“.....................”
“அட கடவுளே...நிஜமாவா...? நன்னாதானே இருந்தார்...எப்போ?”கண்களில் குபுக்கென நீர் தளும்பி கன்னத்தில் வழிந்தது.
“.....................”
”கொஞ்சம் இருங்கோ...கூப்பிடறேன்..”
போனை வைத்துவிட்டு ”கணேஷ் ..கணேஷ்” என்று இருகைகளாலும் கலவரத்துடன் அவனை உலுக்கினாள்.”பச்”புரண்டபடி எழுந்து ”என்ன?” என்றான்.
”உங்கப்பா...தவறிப்போயிட்டாராம்...”
”என்ன சொல்ற.” முகம் இறுகியது. உடைகளைச் சரி செய்து கொண்டு ரிசீவரை வாங்கிக்கொண்டான்.சலனம் இல்லாமல் செய்திகளை காதில் வாங்கினான். பதில் எதுவும் பேசவில்லை..போனை வைத்தான்.
”நா எந்த காரியமும் பண்ணப்போறதில்ல.....போயிட்டு வந்துடுவேன்.அவாளே எடுத்து செய்யட்டும்”
போனை விரோதமாக முறைத்தபடி சொன்னான்.
ஹேமா அதிர்ந்தாள். மெலிதாக விசித்தபடியே அவன் முகத்தைப் பார்த்தாள்.அப்பா சாவு பாதிப்பின் சுவடு தெரியவில்லை.சாதாரணமாகத்தான் இருந்தான்.வழக்கம் போல கொட்டாவி விட்டு முகத்தை அலம்பி பல் தேய்த்தான்.
“காபி போடேன்....”.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோளேன்...எனக்கு எதுவும் ஓடல”
“சரி..! நானே போட்டுக்குடிக்கிறேன்”சொல்லியபடி சமையலறைக்குச் சென்றான்.
ஹேமா குழந்தைகளை எழுப்பி விஷயத்தைச்சொன்னாள்.குழந்தைகள் புரியாமல் விழித்துக் கலங்கின.துக்கத்திலிருந்து விடுபட ஹேமாவிற்கு கொஞ்ச நேரம் ஆயிற்று. தானும் தயாராகி குழந்தைகளையும் தயார் செய்து கிழே போக கணேஷ் மெதுவாக அவர்களுடன் சேர்ந்துக்கொண்டான்.
கார் சாவு வீடு நோக்கிக் கிளம்பியது.அவன் ஏதோ தீவிரமான யோசனையில் ஓட்டுவது அவளுக்கு கவலையளித்தது.என்ன அசட்டுத்தனமான பேச்சு?உண்மையாகவே அப்படி நடந்து விடுவானா?காலையில் அவன் பேசினது நெருடி இம்சைப் படுத்தியது.கவலையும் அளித்தது.
“கார்ர பாத்து ஓட்டுங்கோ..”
.“ஐ ஆம் ஆல்ரைட்...நீதான் ஓவரா பில்ட் அப் குடுக்கர...”
“நா எதும் குடுக்கல வாஙகல.அவர் போயாச்சு....பழசெல்லாம் மனசுல வச்சுக்க வேண்டாம்.அவர் காரியம் எதுவும் பண்ண மாட்டேங்கற வென்ஜன்ச மனசுலேந்து எடுத்துடுங்கோ. மனச சுத்தமாக்கி ஆக வேண்டிய பதிமூணு நாள் காரியத்த சிரத்தையாபண்ணிக்குடுங்கோ.பித்ருக்கள்ட சேத்து புண்ணியம் கட்டிக்கோங்கோ..அவாளுக்கும் நல்லது நம்ம கொழந்தைகளுக்கும் நல்லது.”
”எனக்கு எதுவும் வேண்டாம்..காரியத்த அவுட் சோர்சிங் பண்ணிட்ட பண்றவனுக்குப் புண்ணியம் உண்டு...!
” முருகா.! கார்ர கொஞ்சம் ஓரமா நிறுத்துங்கோ....ஐ வாண்ட் டு சே சம்திங்”
நிறுத்தினான்.
“நீங்க ஒண்ணாம் நம்பர் கோழைங்கிறது தெரியர்து இப்ப. யூ ஹாவ் புரூவ்டு இட் அகெய்ன்.இப்ப வக்கணையாப் பேசுங்கோ.அவர் இல்ல இப்போ...? 20 வருஷமா திட்டும் வசவும் அப்பா கிட்ட வாங்கிண்டு...அதுவும் கல்யாண ஆகறத்துக்கு முதல் மாசம் வர...எதிர்த்து பேச திராணிஇல்லாம எல்லா திட்டையும் வாங்கிண்டு.மனசுல போட்டு புழுங்கிண்டு..அப்படியே வளர்ந்து கல்யாணமாகி குழந்தையும் குட்டியுமா ஆயாச்சு.நல்ல வேள நான் தள்ளியே இருந்துட்டேன்.”
“நா செய்வேன்..என்னப்பத்தி தெரியாது..”
“வெஞ்ஜன்ஸ அவர் இருக்கும்போது சொல்லிட்டு எடுக்கரதானே?”
“அவருக்கு ஒரு பாடம் .பித்ருக்கள்ட போகமா பாதிலேயே தொங்கட்டும்”
”அச்சுபிச்சுன்னு ஏதாவது உளறிக்கொட்டாதீங்கோ.எல்லாம் தெரியும் எனக்கு.காரை ஸ்டார்ட் செய்யுங்கோ போலாம்”
காரை ஸ்டார்ட் செய்தான்.
காரை ஸ்டார்ட் செய்தான்.
குழந்தைகள்தான் தாத்தாவைப் பற்றி வாய் ஓயாமல் போகும் வழியெல்லாம் பேசிக்கொண்டிருந்தது ஆறுதலாக இருந்தது.சோகத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள்.நெய் பந்தம் பிடிப்பதுப் பற்றி ஹேமா சொல்ல குழந்தைகள் அதைப்பற்றி கற்பனையில் முழுகியபடி தாத்தாவிற்கு நெய் பந்தம் பிடிக்க ஆர்வமாய் இருந்தன.
போகும் வழியெல்லாம் மாமனாரைப் பற்றிய நினைவுகள் கண்ணாடி கதவுகள் ஊடேஓடிக்கொண்டிருந்தன.புரசவாக்கத்தை கடக்கும்போது தன் கல்யாண குரூப் போட்டோ ஞாபகம் வந்தது.
மாமனாருக்கும் மாமியாருக்கும் எப்படியான திடகாத்திரமான உடம்பு.இரானியன் போல் செக்கச்செவேல் நிறம். நாத்தனார்,மைத்துனர்களும் அதே வார்ப்பு.அதே நிறம்.கணேஷ் மட்டும்தான் குடும்பத்தோடு சேராத ஒரு ஒட்டாத கருப்பு நிறம்.மாமனாரிடம் கணேஷ் ஒட்டாமல் போன காரணம்.வசவும் திட்டும்.ஆனால் ஹேமா அதைப் பற்றி அலட்டிக்கொண்டதில்லை.
கணேஷும் தனக்கும் குழந்தைகளுக்கும் இது நாள் வரை ஒரு குறையும் வைத்ததில்லை.கல்யாணம் முடிந்து தனி குடித்தனம் வந்து விட்டதால் மாமானார் மாமியாரோடு எந்த வித பிரச்சனையும் இது நாள் வரைஇல்லை ஹேமாவுக்கு.
“நம்ம கல்யாண போட்டோல எப்படி இருப்பார். பாத்தேளா இப்பயும் அதே கெத்து...”அவனை சகஜமாக்க முயன்றாள்.
”ஆமா போட்டோல கூட வசவும் திட்டும்தான். போஸ்தான்...”
”திட்டும் வசவும்..” உதடுகளில் உச்சரித்தவுடன் மனதிற்குள் கோபம் கடுகாக அங்குமிங்குமாக கொப்பளித்து வெடித்துச் சுள்ளியது. ”எதுக்கு செய்யனும்”சற்று மூர்க்கமானான்.கார் ஸ்டீயரிங்கை இறுகப் பிடித்து அழுத்த அது ராங்க் சைடில் போக,சட்டென் உணர்ந்து மோதலைத் தவிர்க்க சடன் பிரேக் அடித்தான். டயர் “கீரிச்”ட்டு ரோடில் தேய்ந்தபடி கார் நின்றது.
லாரிக்காரன் நின்று திட்ட,கணேஷ் பயந்துப்போய் மன்னிப்புக் கேட்டான்.
ஹேமாவும் குழந்தைகளும் கிலி பிடித்துப் போனார்கள்.புது மாதிரியான அனுபவம்.சே!தான்தான்அசட்டுத்தனமாக டாபிக்கை ஆரம்பித்து மூடை கெடுத்து விட்டோமோ என்று ஹேமாவிற்கு தன் மீது கோபம் கோபமாக வந்தது.சற்று நேரம் அமைதி காத்து மிரட்சியிலிருந்து விடுவிடுவென மீண்டு அவனிடம் இருந்து கார் சாவியை வாங்கி அவள் ஓட்ட ஆரம்பித்தாள்.
“வீடு போறவரையும் எதுவும் பேச வேண்டாம். மனச போட்டுக்குழப்பிக்காத சமத்தா வாங்கோ”
கணேஷ் எதுவும் பேசாமல் பின் சீட்டில் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்துக்கொண்டான்.ஒன்றா இரண்டா இந்த திட்டும் வசவும்.யோசனையில் மூர்க்கம், துக்கமாக மாறி கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது.இவ்வளவு டார்ச்சர் கொடுத்த ஆளுக்கு பதிமூணுநாள் காரியம்,பித்ரு கித்ருன்னு..? டீசண்டாக முடியாது என்று சொன்னால் என்ன?யார் என்ன செய்ய முடியும்.இறந்த அப்பா எழுந்து திட்டப்போவதுமில்லை.வசவப்போவதும் இல்லை.
வீடு வந்துவிட்டது.ஹேமா கணேஷின் காதில் மெதுவான குரலில் அவனிடம் ஏதோ சொன்னாள்.அவன் பதிலுக்கு முகத்தை ”உர்” என்று வைத்துக்கொண்டான்.ஹேமாவிற்கு பயம் பிடித்துக்கொண்டது.
நுழைந்ததும் அப்பாவின் பிணத்தைப் பார்த்தான்.மிரண்டான்.எப்பேர்பட்ட உருவம்.சாப்பிட்டு விட்டு ஒரு மத்தியான தூக்கம் போடுகிற மாதிரிதான் படுத்திருந்தார்.தூக்கம் கலைந்தால் வசவும் திட்டும்தான்.
மிரட்சியோடு நழுவி பின்பக்கம் சென்றான்.
பின்பக்கம் சென்றவன் அப்படியே அடுத்த வந்த 13 நாள் காரியங்களும் சிரத்தையாக நடத்தினான்.இடையில் அப்பாவின் சாம்பலை ராயபுரத்தில் ஆரம்பித்து அடையார்,பெசண்ட் நகர்,திருவான்மியூர்,,ஈசிஆர்,விஜிபி,
பாண்டிச்சேரி எல்லா சமுத்திரகரைகளிலும் கரைத்து அப்பாவின் அன்னமயகோசத்தை ஒரு துளி இல்லாமல் கரைத்து வசவும் திட்டும் இல்லாமல் நிம்மதியானான்.
முற்றும்
நல்லா வந்திருக்கு. கடைசில கடைசிக்காரியம் கூட திட்டுக்கும் வசவுக்கும் பயந்து தானா !!!
ReplyDeleteநன்றி சின்ன அம்மிணி.
ReplyDeleteநல்லா இருக்கு சார் கதை...
ReplyDeleteதமிழ்ப்பறவை said...
ReplyDelete//நல்லா இருக்கு சார் கதை.//
நன்றி தமிழ்ப்பறவை.
இயல்பான விவரிப்பு அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteரொம்ப இயல்பா நல்லா வந்திருக்குங்க.
ReplyDeleteசதங்கா (Sathanga) said...
ReplyDelete//இயல்பான விவரிப்பு அருமை. வாழ்த்துக்கள்//
வாங்க சதங்கா.கருத்துக்கு நன்றி.வருகைக்கும் நன்றி.
உங்கள் கதையும் படித்தேன்.பின்னூட்டம் போடவில்லை.காரணம் தெரியும் என்று நினைக்கிறேன்.
நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.
ReplyDeleteஇப்படி பில்டப் கொடுத்தால் சின்னக் குழந்தை கூட முடிவை கண்டுபிடித்து விடும் என்று நான் நினைக்கிறேன்.
ReplyDeleteபெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeleteவருகைக்கு நன்றி.கருத்துக்கு நன்றி.நேர்மையான் விமர்சனத்திற்கு நன்றி
//இப்படி பில்டப் கொடுத்தால் சின்னக் குழந்தை கூட முடிவை கண்டுபிடித்து விடும் என்று நான் நினைக்கிறேன்//
“இவன்தான் பண்ணப்போகிறான்”யூகிப்பது நீங்கள் சொல்லும் குழந்தைக் கூட சொல்லும்.ஆனால் எதனால் செய்கிறான் என்பதை?சாம்பல் ஒரு காரக்டர் என்று உங்களால் யூகிக்க முடியுமா?
ஆனால் முடிவை லாண்டிங் செய்யும் போது கதையின் மூடின்படி கொண்டு வரவேண்டும்.அதில்தான் கதையின் வெற்றி.குமுதம் டைப்பில் இதை லாண்ட் செய்தால்...?அசடு வழியும்.
இதற்கு வேறு ஒரு முடிவு முதலில் வைத்தேன்.
அவன் வீட்டிற்குள் போனதும் மிரளாமல் தானே எடுத்துச் சொன்னவன் செய்யமுடியவில்லை.ஏன்?
திருத்தம்:
ReplyDelete//எடுத்துச் சொன்னவன் செய்யமுடியவில்லை.ஏன்?//
”எடுத்துச் செய்வேன் என்று சொன்னவன் செய்யமுடியவில்லை.ஏன்?” ------- என்று படிக்கவும்
கதை மிக இயல்பாக, நன்றாக இருக்கிறது. -- கே.பி.ஜனா
ReplyDeleteநன்றி கே.பி.ஜனார்த்தனம்.
ReplyDelete:)
ReplyDeleteதூக்கம் கலைஞ்சு எழுந்துண்டுரப் போறாரேன்னு, எல்லாத்துலயும் கரைச்சு, பிராணன் போனதை நிச்சயிச்சுக்கிறான் போலருக்கு. :)
ஹும்ம்... என்னன்னு எழுதறது.
--வித்யா
முதல் வருகை(?)க்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteகதை எப்படி இருக்கு வித்யா?
//“கழுவும்பொழுது தான் தாவு புரியும்.இரவே கழுவி வைப்பது சால சிறந்தது”//
ReplyDeleteகழுவிட்டப்போச்சு.நன்றி பிரகாஷ்.
//ஆனால் முடிவை லாண்டிங் செய்யும் போது கதையின் மூடின்படி கொண்டு வரவேண்டும்.அதில்தான் கதையின் வெற்றி.குமுதம் டைப்பில் இதை லாண்ட் செய்தால்...?அசடு வழியும்.
ReplyDelete//
இது முற்றிலும் சரி :)
கதை எதார்த்தமாக வந்திருக்கிறது. சுஜாதா எழுத்து போல சில நேரம் தோன்றுகிறது. பிராமண மொழி இருப்பதால் அப்படி இருக்குமோ ! எப்படி இருந்தாலும் கதைக்களத்துக்கு உதவியிருக்கிறது.
ஒரு கதை போட்டிக்கு போட்டிருக்கேன். ஆனா அது போட்டிக்கு ஏற்றதானு பாத்துச் சொல்லுங்க :)
http://vennilapakkangal.blogspot.com/2009/10/500-2009.html
நன்றி அரவிந்தன்.படிக்கிறேன்.
ReplyDeleteஅப்பாவிடம் அவனுக்குள்ள பயத்தை அருமையாக காட்டியிருக்கிறீர்கள். சிலருக்கு ஒருவரை நேரில் பார்த்தால் பேச்சு வராது. அதுவே அந்த நபர் இல்லாத போது வீரம் வரும். மனித இயல்பை நன்றாக சித்தரித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteநெஞ்சை நெகிழ வைக்கும் கதை..,
ReplyDeleteநன்றி பின்னோக்கி.
ReplyDeleteநன்றி SUREஷ்
நல்ல கதை. அழகிய நடை . யாராலும் இதில் ஒன்ற முடியும். உடலை பார்த்தும் வரும் மாறுதல் மிக சரி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteகதை போட்டியில் "அடுத்த வீட்டு பெண்" என்ற எனது கதை படிக்க blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/.
மோகன் குமார்
ரொம்ப நல்லா வந்திருக்கு ரவிஷங்கர். குமுதம் டைப் முடிவு இல்லாம ரொம்ப இயல்பா எழுதி இருக்கீங்க. எனக்கு பிடிச்சி இருக்கு. போட்டியில் உங்கள் கதைக்கு நான் வோட் போடறேன். வெற்றிக்கு வாழ்த்துக்கள். நானும் இதே போட்டிக்கு ஒரு கதை எழுதி இருக்கேன். அது இல்லாட்டி நீங்க தான் கண்டிப்பான வின்னர் :)-
ReplyDeleteநல்லா இருக்கு கதை...
ReplyDeleteநன்றி மோகன்குமார்.படிக்கிறேன்.கருத்துச்
ReplyDeleteசொல்கிறேன்.
நன்றி மணிகண்டன்.உங்க கதையைப் படிக்கிறேன்.
ReplyDeleteநன்றி டிவிஆர்.
அருமையாக உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள். முன்னரே கதை படித்தேன். நல்ல கதைகள் மெளனம் கொள்ள செய்வதால்.. எதுவும் சொல்ல முடியவில்லை.
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்திற்கு என் பதிவில் பதிலளித்து இருக்கிறேன். அப்படி சொல்ல முடியாது.. பதில் அளிக்க முயற்சி செய்திருக்கிறேன். வருகைக்கு நன்றி.
நன்றி சாம்ராஜ் ப்ரியன்.
ReplyDelete