Monday, November 2, 2009

யாருக்குத்தான் பிராப்ளம் இல்லை..?

கேள்வி: நான எங்கள் வகுப்பில் மானிட்டர்(கிளாஸ் லீடர்).டீச்சர் இல்லாத சமயத்தில் நான்தான் வகுப்பைச் சத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.யாராவது பேசினால் பெயர் எழுதி டீச்சரிடம் காட்ட வேண்டும்.என் நண்பர்களின் பெயர்களை எழுதினால் அவர்கள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு எமோஷனலாக பிளாக் மெயில் செய்கிறார்கள். நான என்ன செயவது ?அவர்கள்பெயர்களை எழுதி என் நட்பை இழக்கலாமா?
                                                     - மும்பையிலிருந்து ஒரு பள்ளி மாணவன்


பதில்:நீங்கள் இருக்கும்  நிலமை தர்மசங்கடமான ஒன்று.நீங்கள் உங்கள் மனசாட்சிக்கும் நண்பர்களுக்கும் நியாமாக நடக்கவேண்டிஇருப்பதால் ,உங்கள் நண்பர்களிடம் சொல்லி விடுங்கள் ,இந்த விஷயத்தில் கண்டிப்பாக இருக்கப்போகிறேன் என்று.ஏனென்றால் நீங்கள் டீச்சரை ஏமாற்ற விரும்பவில்லை.

வகுப்பில் பேசாமல் அமைதியாக ஏதாவது ஒரு புத்தகத்தை வாசிக்கச் சொல்லுங்கள் டீச்சர் வரும் வரையில்.இந்த யோசனையையும் கண்டிப்பையும் மீறி இவர்கள் நடந்தால் உங்களுக்கு ஒரே வழி அவர்கள் பெயரை எழுதுவதுதான். உங்களுக்கு குற்ற உணர்ச்சி இருக்காது.

                                                            நன்றி: கோகுலம்.The Magazine for Children

குழந்தைகள் எப்படியெல்லாம் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

_______________________________________________________________________

நான் ரசித்த லாஜிகல் ஜோக்ஸ்:

செந்தில்: அண்ணே! என்ன பத்தி இப்போ எதுவும் தெரியாது.போகப்போத்தான் என்னப் பத்தித் தெரியும்.

கவுண்டமணி: என்னது போகப்போகவா... போகப்போக போரதுதான் தெரியும்.வேற என்னடா தெரியும்
                                       _____________________
செந்தில்: அண்ணே! ஆத்துல போட்டாலும் அளந்துப் போடணும்
கவுண்டமணி:டேய்...! ஆத்துல போடறதே தப்பு.இதுல அளந்து வேற போடனுமா?
                                       _____________________
                                     
செந்தில்: அண்ணே!எல்லா மனிதனுக்கும்மறுபக்கம் உண்டுண்ணே!

என்னோடமறுபக்கத்தயும்  ஒரு நாள பாக்கப்போறீங்க.

கவுண்டமணி:டேய்! பிளேடுக்குக் கூட மறு பக்கம் இருக்கு. ஒரு பக்கம் சேவிங் முடிச்சாலும் அதோட மறுபக்கத்த அடுத்த சேவிங்க்கு யூஸ் பண்ணலாம். உன்னோட மறுபக்கத்த வைச்சு நான் என்னடா பண்றது.

16 comments:

  1. கவுண்டமணி at his best.. :)

    //Labels: நொறுக்குத் தீனி //
    (i thought u are bit different, Not seems to be so..)

    ReplyDelete
  2. Well, I actually had a hearty laugh after reading the answer!

    enna super solution kudukaraanga! (vera enna thaan kudukka mudiyum, athu vera vishayam)

    Yeah children go thro lot of stress. My daughter sometimes elaborates some random situations she has to go thro, amidst friends ( though laughable and can be dismissed off) and I try to give some solution (temporarily)!

    I think we would have faced similar situations back then, who knows probably would have dealt it with it even more pathetically!

    avaravar vazhkaiyil aayiram aayiram problem-ngaL!!

    ReplyDelete
  3. ப்ரியமானவள் said...

    //இதுவும் சரிதானோ?//

    நன்றி.உங்கள் பதிவு படித்தேன்.நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. Karthikeyan G said...


    //Labels: நொறுக்குத் தீனி //
    (i thought u are bit different, Not seems to be so..)//

    I don"t get you.Are you taking about naming this post as "நொறுக்குத் தீனி" or something else?

    Thanks.

    ReplyDelete
  5. கவுண்டமணி செந்தில் நகைச்சுவை துணுக்குகள் அருமை

    ReplyDelete
  6. Shakthiprabha said...

    கருத்துக்கு நன்றி. ஒரு ஆறுதலான விஷயம் இவர்கள் சண்டைகள் சீக்கிரம் மறக்கப்பட்டுவிடும்.டீச்சர்களும்
    ”பேசுவதை” சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்வதில்லை.

    ReplyDelete
  7. Karthik said...

    //interesting..://

    நன்றி கார்த்திக்.

    ReplyDelete
  8. பெருபான்மையான டீச்சர்கள் இதனை சீரியாசாக எடுத்துக் கொள்வதில்லை...

    ReplyDelete
  9. நன்றி கோவி.கண்ணன்.

    ReplyDelete
  10. நன்றி அமுதா கிருஷ்ணா.

    ReplyDelete
  11. கவுண்டமணி-செந்தில் மறுபக்கம் சூப்பர்

    ReplyDelete
  12. நன்றி சின்ன அம்மிணி.

    ReplyDelete
  13. க்ளாஸோ, வீடோ, நாடோ எங்கிருந்தாலும் சரி, லீடர் போஸ்ட் கெடச்சாலே பெரிய பிரச்சனைதாம்பா. சமாளிக்கிறதுக்குள்ளே போதும் போதும்ன்னு ஆயிடும்.
    கருத்துக்களும், ஜோக்ஸும் அருமை ரவி.

    ReplyDelete
  14. //நாடோ எங்கிருந்தாலும் சரி, லீடர் போஸ்ட் கெடச்சாலே பெரிய பிரச்சனைதாம்பா//

    சூப்பர்.

    கருத்துக்கு/வருகைக்கு நன்றி ஆர்.வி.ராஜி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!