Saturday, October 24, 2009

மொட்டை மாடி நிலவு - கவிதை








மொட்டை மாடியில்
நிலவு காட்டி
உனக்கொரு வாய்
அதுக்கொருவாய் என
அம்மா அன்புடன் 
சாதம் ஊட்டுகையில்
 நிலவைஉரசிக்கொண்டு
கடக்கும்
மேகங்களில் 
ஒட்டிக்கொண்டுப்போகும்
சில பருக்கைகள் பார்த்து
வாய் துடைக்கிறது
குழந்தை

28 comments:

  1. கவிதை அருமை. அருமையான கற்பனை.Super.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. புகைப்படம் சூப்பர்.

    ReplyDelete
  4. பிரகாஷ் கருத்துக்கு நன்றி. முதலில் வேறு ஒரு
    புகைப்படம் வைத்திருந்தேன்.அது மொட்டை மாடி லுக் இல்லாததால் எடுத்து விட்டேன். நன்றி.

    ReplyDelete
  5. Natchathiram parukkai aanathaa, atheetha karpanai :) Beautiful again !

    ReplyDelete
  6. Sowmya said...

    //Natchathiram parukkai aanathaa, atheetha karpanai :) Beautiful again //!

    போட்டோல ஓயிட் புள்ளிகள் பாத்துச்சொல்றீங்களா?அது என்னன்னு தெரியல.

    நன்றி செளமியா.

    ReplyDelete
  7. "பறந்த வானம் போன்ற உங்கள் கற்பனைகள்
    அதில் பொழியும் சொற்களோ நட்சத்திரங்கள்..."

    எனக்கு உங்கள் கவிதையில் ஒரு சந்தேகம்,
    இதில் பருக்கைகளை தான் நட்சத்திரத்துடன் ஒப்பிட்டது போல் தெரிகிறது, அப்போது 'இந்த' தலைப்பை தர காரணம் என்னவோ???

    ReplyDelete
  8. Hmm..atleast achu pk felt like me !!

    Athu enna nu theriala nu solliteenga...natchathram theriala athula !!

    ReplyDelete
  9. Achu pk said...

    //எனக்கு உங்கள் கவிதையில் ஒரு சந்தேகம்,
    இதில் பருக்கைகளை தான் நட்சத்திரத்துடன் ஒப்பிட்டது போல் தெரிகிறது, அப்போது 'இந்த' தலைப்பை தர காரணம் என்னவோ???//

    எழுதபவனை விட படிப்பவர்களுக்கு பல பரிமாணங்கள் தெரியும்.நட்சத்திரங்கள் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.ஊன்றி கவனித்தால் புலப்படலாம்.எனக்கு உவமை உவமேயம் முடிந்தவரை தவிர்ப்பேன்.

    தலைப்பு மொட்டை மாடி என்று வைத்தால் கொஞ்சம்
    homely ஆ இருக்கும்னுதான்.Vவேறு ஒன்றும் இல்லை.

    நன்றி.

    ReplyDelete
  10. ctober 25, 2009 8:29 PM
    Sowmya said...
    //Hmm..atleast achu pk felt like me !!

    Athu enna nu theriala nu solliteenga...natchathram theriala athula !!//.

    அப்படி நினச்சு எழுதல.

    ReplyDelete
  11. கவிதை நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  12. சின்ன வயசில மேகங்கள்ல யானை, குதிரை, ராட்சசன் எல்லாம் கற்பனை பண்ணிக்குவோம். நல்லா கவிதை.

    ReplyDelete
  13. நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்.

    ReplyDelete
  14. நன்றி சின்ன அம்மிணி.

    நன்றி நாடோடி இலக்கியன்.

    ReplyDelete
  15. உங்களின் கருத்தை நான் ஆதரிக்கிறேன், நீங்கள் கூறுவதும் சரி தான்...

    ReplyDelete
  16. நன்றி Achu pk.

    //ஊன்றி கவனித்தால் புலப்படலாம்//இந்த வரி அந்த இடத்தில் சம்பந்தமில்லாமல் இருப்பதாக எனக்கு ஒரு நெருடல்.இதை நான் சொன்னதன் அர்த்தம் அதாவது கவிதையை வேறு பரிமாணத்தில் எழுதியது பற்றி.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. நானும் அந்த வரியை நீங்கள் கருதிய பரிமாணத்தில் தான் கருதினேன், எனவே நீங்கள் தயக்கம் கொள்ள வேண்டியதன் அவசியமே இல்லை... :-) --

    கருத்துகளுக்கு உடனுக்குடன் பதில் தருவதற்கு நன்றி...

    ReplyDelete
  19. கவிதை ரொம்ப அழகு!

    ReplyDelete
  20. சுந்தரா said...

    ///கவிதை ரொம்ப அழகு!//

    நன்றி சுந்தரா.

    ReplyDelete
  21. ரசனையான கவிதை ரவி.
    இப்பவும் நிலாவக் காட்டி சோறூட்டறாங்களான்னு தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு. ஆனாலும் கவிதைக்கு கற்பனை தானே அழகு :)

    ReplyDelete
  22. அரவிந்தன் said...

    //ரசனையான கவிதை ரவி.//

    நன்றி அரவிந்தன்.

    //இப்பவும் நிலாவக காட்டி சோறூட்டறாங்களான்னு
    தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு.//

    ஊட்றாங்க ஆனா கிராமத்துப்பக்கம்.சிட்டில 2%.ஊட்டிய தலைமுறை போய்விட்டது.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!