ஒரு காலத்தில் தீபாவளிக்கு வாங்கும் அயிட்டங்களில் லேகியத்திற்க்கு அடுத்து தீபாவளி மலர்களும் அடக்கம். தீபாவளி மலரை, தீபாவளி அன்றுதான் படிப்பேன்.கங்கா ஸ்நானம் செய்து, பட்டாசு எல்லாம் வெடித்துவிட்டு காலையில் எழுந்த கண் எரிச்சலில் தடித்துப் போய் சாப்பாடு முடித்துப் படிப்பேன். மீதி பேர் தூங்கிவிட்டுப் படிப்பார்கள்.அதைப் படிப்பதும் தீபாவளி விழாக்கால கொண்டாட்டம்தான்.ஒரு ஹோம்லி பீலிங்.
ஆனால் இப்போது எல்லா சேனல்களிலும் “நடுவர் அவர்களே” “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்” ”சிந்து மேனனின் “ஈரம்” மான தீபாவளிப் பேட்டி”போன்ற அத்தியாவசியமானவைகள் வந்து மலர்களின் முக்கியத்துவம் போய்விட்டது.
இந்த வருடம் எனக்குப் பதிவு போடுவதற்கு ஒரு வாய்ப்பு.மலரும் ரொம்ப சீக்கிரம் வந்துவிட்டது.இதுதவிரகலைமகள்,அமுதசுரபி,குண்டூசி,கல்கி,தீபம்என்று வேறு மலர்கள் வரும் அப்போது.பண்டமாற்று முறையில் வாங்கி படித்து புளகாங்கிதம் அடைவது உண்டு.இப்போது உண்டா?
இந்த வருடஆவி மலரின் விலை பேட்டா செருப்பு மாதிரி 99/-(பைசா கிடையாது).லாப் டாப் மாதிரி கனம்.பழைய மலர் மாதிரி கனம் ரொம்ப இல்லை.பழைய மலர்களை மடியில் வைத்து தான் படிக்கமுடியும்.
இனி உள்ளே போவோம்.........
<தீபாவளி மலர்களில் ஒரு வசதி உள்ளது. அ முதல் ஃ வரை விஷயங்களை கவர் பண்ணலாம்.எதுவும் விட்டுப்போகாது.
அட்டைப்படம் சினேகா.முந்தியெல்லாம் கோபுலு கார்டூன் ஜோக் வரும்.ஒரு தலைத் தீபாவளி ஜோக் இருக்கும். படிப்பவர்களுக்கு வசதியாக விளம்பரதாரர் மற்றும் உள்ளடக்கம் இண்டெக்ஸ் இருக்கிறது.பக்கங்களில் கம்பூயட்டர் மாதிரி ட்ராப் டெளன் மெனு படம் இருக்கிறது.
சிறுகதைகள்: இதில் எழுத்தாளர்களின் மனைவிகளின் கதைகள் எழுதி இருக்கிறார்கள். சாந்தி(ப்.கோ.பிரபாகர்),ஜெயந்தி-யசோதா(சுபா) கமலா(ராகி
ரங்கராஜன்),விஜயலட்சுமி,(பாக்கியம் ராமாசாமி), னலட்சுமி(ராஜேஷ்குமார்) பிராங்க் பென்னட்(கீதா பென்னட்) சுந்தரம்(வாஸந்தி.இதில் விஜயலட்சுமி,கமலாவின் கதைகள் நல்லா இருக்கு.மீதி சுமார்.ரொம்ப நாளைக்குப்பிறகு ஒரு கதைக்கு ஓவியர் மாருதியின் படம். சூப்பர்.
கட்டுரைகள்:பஸ்ஸில் பள்ளி கூடம்,செல்லப்பிள்ளையார்,கையெழுத்து (எழுத்தாளர்கள்)நல்லா இருக்கு.நா.பார்த்தசாரதியின் கையெழுத்துதான் பெஸ்டாம்.டெல்லியில் தெரு குழந்தைகளுக்கு பஸ்ஸில் வந்து கல்வி கொடுக்கிறார்கள்.
சினிமா:காத்தாடி ராமமூர்த்தி,”பசங்க”பாண்டிராஜ்.சமுத்ரகனி (நாடோடிகள்)பற்றிய கட்டுரைகள் நன்றாக இருந்தது.
”If I Get It" என்ற நாடகத்தில் கார்டூனிஸ்ட் கேரக்டர்.பெயர் “காத்தாடி”.அதுவே நிலைத்து விட்டதாம்.சமுத்ரகனி ”பார்வைகள்”ன்னு சிலுக்கு ஸ்மிதாவை வைத்து சீரியல்செய்திருக்கிறாரம்.அண்ணி,ஜன்னல்,பந்தயம் சீரியல்கள் செம்ம ஹிட்.
சகாப்தம்:கக்கன், அண்ணா பற்றிய கட்டுரைகள்.கக்கன் எளிமையானவர்எனபது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.உள்துறை அமைச்சராக இருந்தபோது அவர் சம்பளம் 1500/.இதில் டிரைவர்க்குக் கொடுப்பது 300/-.இவரைப் பற்றிப் படிக்கும் போது நல்ல கண்ணு ஞாபகம் வருகிறது.
பயணம்:ஆந்திராவில் இருக்கும் மிரட்டும் குகைகள்,நாகாலாந்து,டென்மார்க்,மற்றும் வைசாலி பற்றி கட்டுரைகள்.”
உலகத்திலேயே மகிழ்ச்சியாக வாழ்பவர்கள்” டென்மார்க் மக்கள்தானாம்.ஏன் இருக்காது?சுற்று சுழல் மாசு கிடையாது.சுத்தமான நகரம்,சுறுசுறுப்பான மக்கள்.குழந்தை/முதியவர்களுக்கு அரசு தரும் மான்யம்.மக்கள் தொகை குறைவாக இருப்பதால்குழந்தைப்பெற்றுக்கொள்ள அரசு உதவித்தொகை வழங்குகிறது.நாகாலாந்தில் நாய் கறி கிடைக்குமாம்.
மொழிபெயர்ப்பு கதைகள்: கடல்கன்னி,நீதிபதியின் மனைவி,இரவு உணவு.மொழிபெயர்த்தவர்கள் சாரு,அமர்ந்தா,சி,மோகன்.
எனக்குப் பிடித்த கதைடெடுயூஸ் ப்ரோவ்ஸ்கி(சி,மோகன்) எழுதிய “இரவு உணவு”.ஒரு நாஜி பற்றிய ஹாலிவுட் படம் பார்ப்பது போல் action packed. சூப்பர்.
ஜோக்குகள்: விகடன் ஜோக்குகளுக்குப் பெயர் போன பத்திரிக்கை.தரமாகவும் இருக்கு.
ஆன்மீகம்:பெரிய சங்க்ராச்சாரியார் இளமைகால அபூர்வ படங்கள்.அடுத்து ஐயனார் சிலைகள் பற்றி,ஆச்சரியமான விவரங்கள்.ஐயனார் என்றால் நிலம்,நீர்,காற்று,நெருப்பு,
ஆகாயம் என்கிற ஐந்தும் இணைந்ததுதான் உலகம். இந்த ஐந்திறனையும் கண்டுபிடித்ததால்தான் அவருக்கு ஐயனார் என்ற பெயராம்.ஆதிகவி வால்மீகி பற்றி ஆருர்தாஸ்.
சந்திப்பு:தீபாவளி சீர்,சாலமன் பாப்பையா,காபி வித் அனு,வி.ஐ.பி.பொக்கிஷம் தலைப்பில் அனுபவங்கள்.ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி தனக்கு எழுதிய கடிதத்தை பொக்கிஷமாகப் பாதுகாக்கிறாரம் வெ.இறையன்பு.
கலை: தீபாவளி மலர் என்றதும் உடனே நினைவுக்கு வருபவர் ஓவியர் சிற்பி.இவரின் சித்திரங்கள் இல்லாமல் தீபாவளி மலர் ஏது அந்த காலத்தில்.நான் சிறுவானக இருந்தபோது வியந்திருக்கிறேன்.இவர் இயர்பெயர் பி.எம். சீனிவாசன்.
அடுத்து “ஆண் சலங்கை”.28 வருடமாக சூர்ய நாராயண மூர்த்தி பரதம் ஆடுகிறார்.ஆண்கள் ஆடுவதற்கு அவ்வளவு மரியாதை மற்றும் சான்ஸ் கொடுப்பதில்லை என்று வருத்தப்படுகிறார்.
கடவுளர்களின் கலர் கலரான மேக்கப் போட்டு(அனுமார்,ராமர்,சீதை, இலட்சுமணன்) வீடுதோறும் வாசலில் நின்று பாட்டுக்கள் பாடிகாசு பெறுவது.”பகல்வேடம்” என்று அழைக்கப்படும் இந்த கலை ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்திருக்கிறது.மக்கள் இந்த புராண கேரக்டர்களை அருகில் பார்ப்பதால் ஒரு மரியாதை மகிழ்ச்சி உண்டாவுதுதான சைக்காலஜி.
க்ளிக்:கறுப்பு ராஜாக்கள் என்ற கட்டுரை யானையைப் பற்றி.சுவராஸ்யமான கட்டுரை.யானைக்கு ஜீரண சக்தி குறைவாம்.அதனால்தான் கோவில் மற்றும் சர்க்கஸ் யானைகள் தலையாட்டிகொண்டே இருக்கிறது. தன் உணவை ஜீரணிப்பதற்கு இப்படி செய்கிறதாம்.இல்லாவிட்டால் 35 கி.மி. நடக்கவேண்டுமாம்.காட்டுயானைக்குத்தான் இது சாத்தியம்.
போட்டோகிராபராக 40 ஆண்டுகாலம் இருக்கும் யோகா எடுத்த படங்கள். எல்லாம் கலைஞரின் படங்கள். லுங்கியோடு மற்றும் கம்புயூட்டர் மவுஸ் பிடித்தபடி...வித்தியாசமான போஸ்கள்.இதைத் தவிர கவிதைகளும் இருக்கிறது.எல்லாம் சுமார் ரகம்.ஒவ்வொரு இண்டெக்ஸில் இருக்கும் எல்லாவற்றிலும் சாம்பிள்தான் கொடுத்துள்ளேன்.
இன்னும் நிறைய இருக்கிறது.மொத்தம் 400 பக்கம் விளம்பரங்களும் சேர்த்து.
அடுத்து வழக்கமான (தீபாவளி மலர்) இந்த வார விகடனும் கொஞ்சம் குண்டு சைசில். 99 ரூபாய் கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கு ரெண்டு சாதா கம்பி மத்தாப்புப் போல.
Subscribe to:
Post Comments (Atom)
சுடச் சுட படிச்சு எழுதிட்டீங்க. நான் தீபாவளி ஸ்பெசல் புக் மட்டும் தான் வாங்கினேன்
ReplyDeleteபடிச்சு ஒரு வாரம் ஆச்சு.இந்த பதிவு எழுதத்தான் ரெண்டு நாள் ஆச்சு. நன்றி முரளி.
ReplyDelete99 ரூபாய்க்கு எல்லாமா புக்கு வருது ??? அவ்வ்
ReplyDeleteவழக்கம் போலவே விகடன் தீபாவளி மலர் கலக்கலா இருக்கு.ஆனா ஜெயேந்திரர் "அருள் வாக்கு " 4-5 பக்கம் வந்துருக்கு ..Ok..பிரேமானந்தாவுக்கும் சான்ஸ் கொடுத்து இருக்கலாம்..
ReplyDeleteKrish
//ஆனா ஜெயேந்திரர் "அருள் வாக்கு " 4-5 பக்கம் வந்துருக்கு ..Ok..பிரேமானந்தாவுக்கும் சான்ஸ் கொடுத்து இருக்கலாம்..//
ReplyDelete:-))))))))
//99 ரூபாய்க்கு எல்லாமா புக்கு வருது ??? அவ்வ்//
ReplyDeleteஆமாங்க.தீபாவளி மலர் ஆச்சே.
இப்பொழுது அமெரிக்காவில் இருக்கும் எனக்கு மலரைப் புரட்டிப் பார்த்த உணர்வையே ஏற்படுத்திவிட்டீர்கள். விகடன் கூட இதை மலருக்கான விளம்பரமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்று சொல்லும் அளவுக்கு.
ReplyDeleteகிருஷ்குமார் said...
ReplyDelete// வழக்கம் போலவே விகடன் தீபாவளி மலர் கலக்கலா இருக்கு.ஆனா ஜெயேந்திரர் "அருள் வாக்கு " 4-5 பக்கம் வந்துருக்கு ..Ok..பிரேமானந்தாவுக்கும் சான்ஸ் கொடுத்து இருக்கலாம்..//
???????????
4 வது 5 வது பக்கத்துல இல்ல ..கிட்டத்தட்ட ஒரு 5 பக்கம் அவரோட article வந்து இருக்குறத தான் அப்படி mention பண்ணி இருக்கேன் ...
ReplyDeleteநன்றி ஸ்ரீ.
ReplyDeleteஓகே கிருஷ்குமார்.நன்றி.
நன்றி ஜீவி.
ReplyDeleteசுருக்கமான விமர்சனம். போதும்.
ReplyDeleter.selvakkumar said...
ReplyDelete//சுருக்கமான விமர்சனம். போதும்//
நன்றி செல்வகுமார்.