போனவாரம்தான் கேட்டேன் ஒரு ரெடிமேட் துணிக்கடையில்.
ஆஹா! வித்தியாசமான பாட்டு. இந்த படம் பார்க்கவில்லை.
பாடியவர்: செளமியா (கர்நாடக இசைப் பாடகி)
எழுதியவர்: ஆண்டாள் ப்ரியதர்ஷிணி
இசை: கார்த்திக் ராஜா
Kannil Dhagam
பாடலின் சிறப்பு:
வித்தியாசமான வரிகள்.விரகதாபம்/சோகம் கலந்த கலவை.இதில் காதலனை நண்பனாக(மித்ரா .....மித்ரா....) விளித்துப் பாடுவது அழகு கூடுகிறது.அடுத்து சில்லிடும் தமிழ் சொற்களை கூடும் வடமொழி சொற்கள் (வண்ணத்தில் இருக்கும்) பாடலின் விரகதாப உணர்ச்சியை இசைக்கிறது.”ஏதோ ஒரு படபடப்பு” என்ற வரிகள் முதல் முதலாக பாட்டில் போட்ட மாதிரி இருக்கிறது.இதற்கு முன் வந்திருக்கா?தெரியவில்லை.
செளமியா பாடலின் வரிகளில் உள்ள உணர்ச்சிகளை குரலில் இனிமையாக வெளிப்படுத்துகிறார்.ஒருஇடத்தில் ஐயர் மாமிஉச்சரிப்பு “ஷொல்லும்”
(சொல்லும்).கார்த்திக்ராஜா கவனிக்கவில்லை?.
கார்த்திக்ராஜா பாடலின் மூடுக்கேற்றார் போல் பின்னணியை சோகமாகப் பிண்ணியிருக்கிறார்.இசைக்கருவிகளும் விரகதாபம் + சோகம் கலந்த கலவையை பாடலுக்கு பின் அழகாக தொடர்கிறது.சத்தம் சற்று குறைத்திருக்கலாம்.அப்பாவின் சாயல் இசைக்கோர்ப்பில்.
பாடலின் கவுண்ட் 0.51ல் மெல்லிய தட்டல்களோடு டிரம்ஸ் சேருவதும் 1.01ல் வேறு இசைகருவிகள் பின்னணியில் மெலிதாக படர்வதும் சுகந்தம். அடுத்து 1.17ல் முதல் 1.42 வரை (வயலின்?வீணை?) கொஞ்சிக்குலாவுகிறது.2.20 - 2.52 வயலின்/கீபோர்டின் மீட்டல்கள் இனிமை.
கிழ் வரும் வரிகளை அற்புதமாகப் பாடி இருக்கிறார். Hats off Sowmya!
// ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும்
ஒரு கூடல் செய்வாய் நண்பா//
ACHCHAMUNDU ACHCHAMUNDU
தரவிறக்கம் செய்ய:
கண்ணில் தாகம்-download
பாடல் கேட்க:
கண்ணில் தாகம்
அல்லது இங்கு கேட்க
கண்ணில் தாகம் தீருமோ
இனி பாடல் வரிகள்:
கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் மாறுமோ
மித்ரா மித்ரா
கண்ணில் தாகம் கூடுமோ .........மித்ரா மித்ரா
கோபங்கள் பேசும்போது வேதனை கூடும்
ப்ரேமைகள் பேசும் போது மோகம் கூடும்
மெளனம்தான் பாடலா
வலி எல்லாம் தரும் ஊடலா
இதுபோதும் இது போதும்.
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும்
ஒரு கூடல் செய்வாய் நண்பா
கண்ணில் தாகம் தீருமோ ............மித்ரா மித்ரா
வீட்டின் தனிமையிலே
தீண்டி என்னை சுகிப்பவனே
கொஞ்சம் விலகிவிட்டால்
முத்தம் பல பறிப்பவனே
சோலை பூவெல்லாம்
ஆடையாய் சூடிபார்ப்பவன்
மாமழை நேரங்கள்
ஈரமாய் என்னை சேர்பவன்
நீயா நீயா
தனிமையில் செல்கிறாய்
மனம் களைந்து சிரித்திட
கண்ணில் தாகம் தீருமோ ............மித்ரா மித்ரா
வீட்டின் தனிமையிலே
ஏதோ ஒரு பெருநெருப்பு
பூவின் அசைவினிலே
ஏதோ ஒரு படபடப்பு
சொல்லும்வார்த்தைகள்
காற்றிலே தேய்ந்து போகுதே
சிநேகம் வேறில்லை
புன்னகை நெஞ்சம் வேண்டுதே
கண்கள் மீண்டும் .......வலிகளும் போதுமே
இனி விடியலை நினைத்திடு
நெஞ்சில் அச்சம் பொங்குதே
ஏனோ ஏனோ
கண்ணீர் மிச்சம் தங்குதே
ஏனோ ஏனோ
நல்ல ஆழந்த ரசிப்புடன் விமர்சனம். கலக்கல்
ReplyDeleteஇதுவரைக்கும் கேட்டதில்லை.கேட்கிறேன்.
ReplyDeleteதெள்ளிய நடை, திகட்டாத சொல்லும் முறை .
ReplyDeleteவாழ்த்துக்கள்
looking for this song long time but can't find. tks ravi
ReplyDeleteநன்றி முரளிகண்ணன்.
ReplyDeleteநன்றி ஸ்ரீ.
ReplyDeleteநன்றி நேசமித்ரன்.
ReplyDeleteபாடல் கேட்டேன் சார். நன்றாக இருக்கிறது. அறிமுகத்திற்கும், லின்க் கொடுத்ததற்கும் நன்றி.நல்ல பாடல்கள்,பின்னணி இசை கொடுத்துக் கொண்டிருந்தாலும் கார்த்திக் ராஜாவின் பக்கம் காற்று இன்னும் வீசவில்லை. :-(
ReplyDeleteநன்றி யாசவி.
ReplyDeleteநன்றி தமிழ்பறவை.
ReplyDelete//”ஏதோ ஒரு படபடப்பு” என்ற வரிகள் முதல் முதலாக பாட்டில் போட்ட மாதிரி இருக்கிறது.இதற்கு முன் வந்திருக்கா?தெரியவில்லை.//
வந்திருக்கா சார்?
பாடல் வரிகள் மற்றும் பாடல் உண்மையிலேயே நல்லா இருக்கா.ஏன்னா சொந்த ரசனை வேறு.உங்கள் ரசனை வேறு.
கார்த்திக் ராஜா சற்று அதிர்ஷ்டம் இல்லாதவர்.
yep. a good song. listened to it yesterday.
ReplyDelete//ஏதோ ஒரு படபடப்பு//
ReplyDeleteஇதற்குமுன் கேட்டிருக்கலாம்.,ஆனால் ஞாபகமில்லை சார்.
என் ரசனையில் பாடல் சூப்பர்.இன்னும் பாடல் வரிகளுக்குள் சென்று ரசிக்க விடாமல் இசையிலேயே லயித்து விட்டேன்.
பாடலின் பின்புற இசையில் தொடர்ந்து வரும் ஒரு சிறு இசை(இசைக் கருவி தெரியவில்லை..பேஸ் கிட்டாராகக் கூட இருக்கலாம்) நன்றாக இருக்கிறது.
பாடல் வரிகள் இன்னொரு தாமரை டைப் பாடல் என எண்ணுகிறேன்.
‘ஷொல்லும்’ நல்லாச் சொல்லியிருக்கீங்க.
’ஆல்பம்’ படத்தில் எல்லாப் பாடலுமே நன்றாக இருக்கும்.
‘செல்லமாய் செல்லம்’,’காதல் வானொலி’-கார்த்திக் ராஜா இசையில்...
SurveySan said...
ReplyDelete//yep. a good song. listened to it yesterday.
October 6, 2009 11:33 AM//
நன்றி சர்வேசன்.
தமிழ்ப்பறவை,
ReplyDelete//சிறு இசை(இசைக் கருவி தெரியவில்லை..பேஸ் கிட்டாராகக் கூட இருக்கலாம்)//
கரெக்ட்.ஆமாம் இப்போதுதான் இது ஞாபகம் வருகிறது.
//‘செல்லமாய் செல்லம்’,’காதல் வானொலி’-கார்த்திக் ராஜா இசையில்...//
கேட்டு இருக்கேன்.
//பாடல் வரிகள் இன்னொரு தாமரை டைப் பாடல் என எண்ணுகிறேன்//
எனக்கென்னவோ தாம/நா.மு/பா.வி/விவேகா இன்னும் மற்றவர்களை விட தனித்துக் காணப்படுகிறது.ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய வேறு பாட்டு ஏதாவது இருக்கிறதா?. இவங்க டீவி கவி மேடைகளில் பார்த்திருக்கிறேன்.கல்கியில் கவிதைகளைப் படித்திருக்கிறேன்.
கிழ் வரும் வரிகள் really haunting.மனதைப் பிசைகிறது.
//
இதுபோதும் இது போதும்.
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும்//
இந்த வரிகளைத்தான் முதலில் ரெடிமேட் கடையில் கேட்டேன்.
செளமியா அற்புதமாகஇந்த வரிகளை பாடியிருக்கிறார் தமிழ்ப்பறவை.
Hats off Sowmya!