Wednesday, October 7, 2009

அது............!




நான்
உன்னை சந்தித்த
அந்த முதல் கணத்தில்தான்
”அது” நிகழ்ந்தது
எனக்கு மட்டும்





அதற்கு பிறகும்
நிறைய நடந்து விட்டது
உனக்கான உன் திருமணமும்
எனக்கான என் திருமணமும்

மீண்டும் ஒரு நாள்
உன்னை சந்திக்கப்போகும்
அந்த முதல் கணத்தை
அடி வயிற்றுக் கிலியோடு
தவிர்க்கிறேன்

அந்த முதல் கணத்தில்

நலம் விசாரித்து
உரையாடல்களினூடே
கசியப்போகும் உன் புன்னகையில்
தெரிந்துவிடும்

உனக்கும் நிகழ்ந்த அது

13 comments:

  1. மிக ரசித்தேன்...
    “அழகி”... ?!

    ReplyDelete
  2. நன்றி தமிழ்ப்பறவை.”அழகி” கதையா?

    ReplyDelete
  3. அதே... இதுபோல சேராத காதல் பற்றிப் படிக்கையில்,நினைக்கையில் அழகியும்,ஒளியிலே தெரிவதுவும் மின்னிவிட்டுப் போகும்...

    பதிவுக்குச் சம்பந்தமில்லாத ஒன்று,...
    ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் “காதல் உன் லீலையா” பாடல் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். நண்பர் நாடோடி இலக்கியன் சொன்னபின் இரு நாட்களுக்கு முன் தான் கேட்க ஆரம்பித்தேன். வெகுவாகப் பிடித்துஇருக்கிறது...கேட்டுக் கொண்டே இருக்கிறேன்...ராஜா பாடியது...கேட்டிருந்தால் பகிரவும். இல்லையேல் மிஸ் பண்ணாமல் கேட்டுப் பார்க்கவும். (திரைப் பாடல்.காம்,கூல் டோடில் இருக்கிறது)

    ReplyDelete
  4. //தமிழ்ப்பறவை said...
    அதே... இதுபோல சேராத காதல் பற்றிப் படிக்கையில்,நினைக்கையில் அழகியும்,ஒளியிலே தெரிவதுவும் மின்னிவிட்டுப் போகும்...//

    ஆமாம்.

    //ராஜா பாடியது...கேட்டிருந்தால் பகிரவும். இல்லையேல் மிஸ் பண்ணாமல் கேட்டுப் //

    கேட்டு இருக்கிறேன்.நல்ல வரிகள்.ராஜாவிற்குப் பதிலாக வேறு யாராவது பாடி இருக்கலாமா?

    ReplyDelete
  5. பிரியத்தை சொல்லிக் கொள்ளாத கணம் வரை இருக்கும் பரவசமும் அது எதிர் தேவதையிடமும் இருக்குமா இருக்க வேண்டுமே என்ற தவிப்பும் கடந்து வரும் நடுக்கம் மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது உங்கள் கவிதையில்
    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சூப்பர்.அருமை. அதிலும் இந்த வரி,
    //நலம் விசாரித்து
    உரையாடல்களினூடே
    கசியப்போகும் உன் புன்னகையில்
    தெரிந்துவிடும்

    உனக்கும் நிகழ்ந்த அது //
    அருமை....

    ReplyDelete
  7. நன்றி ஜாக் அண்ட் ஜில்லு.

    நன்றி நேசமித்ரன்.

    ReplyDelete
  8. //உனக்கும் நிகழ்ந்த அது //

    கவிதை அழகான உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுதுகிறது.

    ReplyDelete
  9. நன்றி ஸ்ரீ.

    நன்றி சின்ன அம்மிணி.

    ReplyDelete
  10. அருமையான கவிதை ரவிஷங்கர். மிகவும் ரசித்தேன்.:))

    ReplyDelete
  11. உமா,
    What a coincidence! இப்போதுதான்(5 நிமிடம் முன்னால்) உங்களைப் பற்றி(குமுதம்)காபி ஷாப் விஷயம் படித்தேன்.

    நன்றி உமா.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!