Friday, February 24, 2012

வங்கிக் கொள்ளை- எதிர்பாராத அதிர்ச்சி கிளைமாக்ஸ்

வழக்கமாக இது போன்ற குற்றங்களில் போலீஸ் குற்றவாளிகளைப் பிடிப்பார்கள்.பிடித்தவுடன் பிடிப்பட்ட பணத்தை மைசூர்பாக் போல் டேபிளில் அடுக்குவார்கள்.பின் பக்கம் குற்றவாளிகள் முகத்தில் துண்டு அல்லது முகமூடி அணிந்து தலைகுனிந்து நிற்க போலீஸ்காரர்கள் மிடுக்காக
போஸ் கொடுப்பார்கள்.கமிஷனர் அல்லது எஸ்பி பேட்டிக்கொடுப்பார்.

சேனல்கள் இதையே மாறிமாறி கோழிகூவும் வரை காட்டிக்கொண்டே இருப்பார்கள்.எப்போது டிவியை ஆன் செய்தாலும் இதுதான் வரும்.
ஆனால் நேற்று வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர் ரத்தம்தெறிக்க சுட்டக்கொல்லப்பட்டது அதிர்ச்சி கிளைமாக்ஸ்.சென்னை மக்கள் எதிரே பார்க்கவில்லை.சேனல்களும் மக்களின் நாடி அறிந்து அடக்கி வாசித்தன.

யோசித்தால் இதில் முக்கியமான செய்தி ஒன்று சொல்லப்படுகிறது.அது சமீபத்தில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டுக்கொண்டிருக்கும் வட இந்திய குற்றவாளி கும்பலுக்கா?

அடுத்த விஷயம்.....
எந்த குற்றவாளியுமே தனக்குத்தெரியாமல் ஏதாவொறு
தடயத்தை குற்றம் நடந்த இடத்தில் விட்டுச் செல்வான் என்பது
எழுதப்படாத விதி.இதிலும் தவறாமல் நடந்திருக்கிறது.வீடியோவில் மாட்டிக்கொண்டது.

கடந்த பல வருடங்களாக பீஹார்,சட்டீஸ்கர் மற்றும் வேறு மாநிலத்தவர்கள் இங்கு பிழைப்புக்காக வந்து கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறார்கள்.கண்கூடாகப் பார்க்கிறேன்.ஆனால் இந்த வட இந்திய வங்கிக் கொள்ளையர்கள் அமெச்சூர்த்தனமாக் ஏதோ செய்துவிட்டு ரத்தம் கக்கி இறந்துப்போனார்கள். தேவையா?

Wednesday, February 15, 2012

தோனி - சினிமா விமர்சனம்

தோனி திரைப்படம் Shikshanachya Aaicha Gho என்ற மராத்திப் படத்தின் தாக்கம் என்று சொல்லப்படுகிறது.பிரகாஷ்ராஜின் இயக்கத்தில் முதல் படம்.வெற்றி பெற்றுவிட்டார்.சொல்ல வந்த விஷயத்தை பலமான காட்சி அமைப்புகளுடன் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.
பிடிக்காத ஏட்டுப்படிப்பை பிள்ளைகளின் மண்டையில் ஏற்றி அவர்களின் மற்ற துறை ஆர்வத்தை கண்டுக்கொள்ளாமல் அவர்களை சீரழிப்பதுதான் கதை.

பிரகாஷ்ராஜ மிடில்கிளாஸ் மாதவனாக வந்து பிரச்சனையை மிடில் கிளாஸ்தனமாகவே கையாண்டு நொந்து நூலாகும் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். நடிகராகவும் வெற்றி.அடுத்து பையன் ஆகாஷ் அற்புதம்.



முகத்தில் எப்போதும் ஒரு சோகம்.பக்கத்துவீட்டுக்காரியாக வரும் ராதிகா ஆப்தே கோலிவுட்டுக்குப் புது வரவு.தோற்றமும் அடுத்தவீட்டுப் பெண் தோற்றம்தான்.இந்தத் தோற்றத்தில் எல்லா படங்களிலும் நடிக்க முடியுமா. நடிக்கத்தான் விடுவார்களா.பாலிவுட்டில் வேறு மாதிரி இருக்கிறார்.


மொழி படத்தின் வசன கர்த்ததான் இதிலும்.ஞானவேல்.காமெடி வசனங்கள் கலக்கல்.படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.எல்லா பிரச்சனைகளும் பாசீட்டிவாக முடிவதாக காட்டப்படுவது ஒரு புது முயற்சி.

இரண்டுமொழியில் எடுக்கப்பட்டு இருப்பதால் பாத்திரங்கள் இரண்டுக்கும் பேலன்ஸாக இல்லாமல் தெலுங்கு சாயல்.போலீஸ் ஸ்டேஷன் ஆபிஸ் எல்லாம் பளிச் பளிச்சென்று இருக்கிறது.கந்துவட்டிக்காரராக வருபவர் ஒட்டவே இல்லை.

கடைசி கால் படம் ஓவர் மிகை.விசுவின் அரட்டை அரங்கம் பார்ப்பது போல இருந்தது.

படத்தின் அடுத்த பலம் இளையராஜா. பின்னணி இசை படத்தோடு இசைந்துப் போகிறது.”விளையாட்ட படகோட்டி” பாடல் வைத்த இடம் அற்புதம்.



Monday, February 13, 2012

பார்க்காமலே ஒரு காதல் delete





ஏதோ ஒரு நாட்டைச் சேர்ந்த
ஹேன்னா ஸோய்ஸ்
400 மில்லியன் டாலர்
சொத்துடன்
என்னைக்காதலிப்பதாக சொல்லி
மெயில் செய்தாள்
தவிர்க்கமுடியாத காரணங்களால்
அவள் காதலை
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை
டெலீட் செய்யும்போது
அவள் மீது கொஞ்சம் காதல்
இருக்கத்தான் செய்தது