Tuesday, December 17, 2013

ஜெயமோகனும் ஒரு தலை ராகமும் இசையும்

எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் “ஏ.ஏ.ராஜ்-காலம் கடந்து ஒரு அஞ்சலி” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளி வந்துள்ளது.ஏ.ஏ.ராஜ் என்ற தெலுங்குப்பட இசையமைப்பாளர் டி.ராஜேந்திருடன் இணைந்து இசையமைத்த திரைப்படம் “ஒரு தலை ராகம்”(1980).படமும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.அப்போதைய இளைஞர்கள் விழுந்துவிழுந்து பார்த்தார்கள். பாடல்களை அப்படியே கேட்டார்கள்.

நானும் விரும்பிக்கேட்டேன்.அப்போது படத்தை கடனே என்றுதான் பார்த்தேன்.பல சென்னை இளைஞர்கள் படத்தை அவ்வளவாக ரசிக்கவில்லை.தஞ்சாவூர் தலையில் வைத்துக்கொண்டாடியதாக தகவல்.

இன்றைக்கும் மூன்று பாடல்களை உறுத்தல் இல்லாமல் கேட்கலாம்.

(ஜெயமோகனுக்கு விளக்கம் பின்னால் வருகிறது)

ஏ.ஏ.ராஜ்

அதில் சந்திரசேகர் பாத்திரம்(டாஸ்மாக்) இளைஞர்களால் விரும்பப்பட்டது.

எப்போதும் புடவை தலைப்பைப் போர்த்திக்கொண்டு ஹோம்லியாக  பெண்களை ரோடில் பார்த்துவிட்டால்  உடனே ரூம் போட்டு ஒரு தலைக்காதலிப்பார்கள் அப்போதைய இளைஞர்கள்.ரொம்ப சோஷியல் பெண்களை விரும்பமாட்டார்கள்.ரூபா அப்படியான தலைப்பைப்போர்த்திய பாத்திரம்.தமிழில் அபூர்வமாக சைடு வகிடு எடுத்துவாரிய தலைமுடி கதாநாயகி.எல்லாம்  மொத்தமாக இளைஞர்களைப் படுத்தி எடுத்தது.

ரயில்வே ஸ்டேஷன் பின்னணி படத்தை வித்தியாசமாக காட்டியது..


படம்? படு அமெச்சூர்தனமும் அசட்டு+அச்சுபிச்சுத்தனமாக எடுக்கப்பட்ட திரைப்படம்.

ஒரிஜனல் போஸ்டர்
இனி விஷயத்திற்கு வருவோம்.ஜெயமோகன் எழுதுகிறார்..

//ஒருதலை ராகத்தின் இசையில் பெரும்பங்களிப்பாற்றிய ஏ.ஏ.ராஜ்//


//ஒருதலைராகத்தின் இசையில் ஒரே சமயம் ஒரு செவ்வியல்தன்மையும் ஜனரஞ்சகத்தன்மையும் இருந்தது.ராஜேந்தர் அந்த ஜனரஞ்சகத்தன்மையை மட்டும் அவருடையதாக அளித்திருக்கலாம்.பின்னர் அவர் தனியே இசையமைத்தபோது அதை மட்டும்தான் அவரால் கொண்டுசெல்லமுடிந்தது.ஒருதலை ராகத்தின் இசையின் நுட்பமான அம்சங்களை எவ்வகையிலும் அவரால் கையாள முடியவில்லை//

இசையின் ஜனரஞ்சகத்தை டிஆருக்கும் செவ்வியல்தன்மை மற்றும் நுட்பமான அம்சங்களை ராஜூக்கும் அர்பணிக்கிறார். செவ்வியல்தன்மை என்பதை கிளாசிக் என்று சொல்லலாம். இதற்கென்றே நிறுவப்பட்ட தரத்தில் இசை உள்ளது.அதாவது ஹை ஸ்டாண்டார்ட் அண்ட் குவாலிடி மற்றும் சாகாவரம் பெற்றவை.ஆத்மாவும் உண்டு.

படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் எல்லாமே ஜனரஞ்சகம்தான்.நுட்பமான அம்சங்கள் செவ்வியல்தன்மைகளை தேடிதேடிப்பார்த்து களைத்துவிட்டேன்.
இந்த ஜனரஞ்சகத்தினால்தான் மனதில் ஒன்றுகிறது.புதுமை என்று சொன்னால் மெல்லிசையை ரொம்ப மெலிதாக கொடுத்ததாக சொல்லாம்.


புதுவசந்தம் படப்பாடல்களும் இதே எளிமைக்காக வெற்றிப்பெற்றது.


பாடல்களின் வெற்றிக்கு காரணங்கள்:-

1.எளிமையான பாடல் வரிகள்.”வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை உனக்கேன் ஆசை”  ”முந்தானைப்பார்த்து முன்னூறு கவிதை” “நான் ஒரு ராசியில்லா ராஜா”போன்ற வரிகள் அப்போதைய ஒரு தலைகாதல்,சுய இரக்க  தாடிஇளைஞர்களை சுழற்றி அடித்தது.

(உணர்ச்சி உந்துதலில் ஒரு பெண்ணை பல மாதங்கள் தொடர்ந்துவிட்டு அல்லது பஸ் ஸ்டாப்பில் உற்று நோக்கிவிட்டு  அவளிடமிருந்து பதிலுக்கு ஒன்றும் வராமல் போக ”இவளுக்கு இதயமே இல்லை” காதல் தோல்வி என்று தாடி வளர்க்கும் மனோபாவம் அப்போது)


எல்லா பாடல்களையும் எழுதியவர் டி.ராஜேந்தர்.அதுவும் காதல் தோல்வி-விரக்தி. விடுவாரா?பின்னிப் பெடல் எடுத்துவிட்டார்.
படத்துல ரெண்டு வரி இந்தி பாடல்தான் எனக்கு... அதான் தாடி

2.இசை ரொம்பவும் மெலிதான மெல்லிசை.சிக்கலே கிடையாது.school boyish tune என்று சொல்வார்கள். எளிமையான மெட்டை முதலாக வைத்து எளிமையான வரிகள். குறைந்தபட்ச இசைக்கருவிகளை வைத்து கோர்க்கப்பட்டுள்ளது.”வாசமில்லா மலரிது” மற்றும் இரண்டு பாடல்களும் அப்பட்டமான உதாரணம்.

அதனால் இசையில் வித்தியாசமோ,நுட்பமோ,வேறு பரிமாணங்களோ பண்டிதத்தனமோ,அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தலோ இல்லை.எப்படி அனுமானித்தார் என்பதை ஜெயமோகன் சொன்னால் கேட்டுக்கொள்கிறேன்.

படத்தில் பலருக்கு தெரியாத சில ஆச்சரியங்கள்:-

1.இரண்டு பாடல்களைத் தவிர எல்லாமே நெகடிவ் உணர்ச்சிகளைக்கொண்டது.
2.படத்தில் டூயட்டே கிடையாது.
3.உலக மகா ஆச்சரியம் படத்தில் பெண் கதாபாத்திரங்களுக்கு ஒரு பாடல் கூட கிடையாது.
4.இளையராஜா பாதிப்பு இல்லை.கூடையிலே கருவாடு  தவிர.பதிலாக எம்எஸ்வி பாதிப்பு.

டைட்டிலில் பின்னணி இசை என்று ஏ.ஏ.ராஜ் பெயர் வருகிறது.பின்னணி இசை? படு மோசம்.

வேறு ஒரு டிவிடி கவரில் இப்படி வருகிறது


வேறு ஒரு இடத்தில்  ஜெயமோகன் சொல்கிறார்...

//பத்தாண்டுகளுக்குப்பின் நான் தற்செயலாக கொழும்பு வானொலியில் தணியாத தாகம் படத்தின் பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய் என்ற பாட்டை கேட்டேன். ஓர் இரவு நேரம். அந்தப்பாடல் என்னை பித்துப்பிடிக்கச் செய்தது. ஒருதலைராகத்தில் இருந்து அதன் பின் காணாமல் போன அந்த செவ்வியல் நுட்பம் அந்தப்பாடலில் இருந்தது. கேட்கக்கேட்க நெஞ்சில் தித்திக்கும் இசையமைப்பு.துல்லியமான இசைக்கோர்ப்பு.//

அந்தப் பாடல்:(என் கலெக்‌ஷனில் உள்ளது)

மனதை வருடும் வரிகள்,இசைக்கோர்ப்பு,மெட்டு, இனிமை.ஆனால்  இளையராஜாவின் பாதிப்பில் உருவான பாட்டு.சில இடங்களில் தாளக்கட்ட “அந்தப்புரத்தில் ஒரு மகாராணி”(1977) சாயல்.


Check this out on Chirbit 


அடுத்தப்பாட்டு “அவளொரு மோகனராகம்”.

இதுவும் இனிமையான  இசைக்கோர்ப்பு.இதுவும் இளையராஜாவின் பாதிப்பின் உருவாக்கம். எஸ்பிபியின் வெல்வெட் குரல் இனிமை.



Check this out on Chirbit 


1970/80களில் தடுக்கி விழுந்தால் இதுமாதிரி எஸ்பிபியின்  சோலோ பாடல்கள் நிறைய உண்டு.உதாரணமாக எம் எஸ்வி இசையில்” உன்விழி ஆனந்தபைரவி” படம்: ”பெண் ஒன்று கண்டேன்” (1974)



Check this out on Chirbit 


ஏ.ஏ.ராஜின் மற்ற மூன்று தெலுங்குப்படங்களின் பாடல்களையும் கேட்டேன்.1.Devudichina Bartha-1968  2.Panchakalyani Dongalarani-1969 3.Vikramarka Vijayam-1971.புதுமைகள் ஒன்றும் இல்லை.அந்தக்காலகட்டத்திற்கு தோதுவாக இருக்கிறது.

Devudichina Bartha-1968 ல் ஒரு பாட்டு ”Aa Devudichina Pathivee".கிழே பதியப்பட்ட பாட்டு.ஆனால் இது  எம் எஸ் வியின் “பூமாலையில் ஓர் மல்லிகை” (படம்: ஊட்டி வரை உறவு-1967) பாட்டை அப்படியே ஒத்திருக்கிறது. வித்தியாசம் ஜானகி ரொம்ப கிளாசிகளாக பாடுகிறார்.ராஜாகாலத்து கதை என்பதாலோ?



Check this out on Chirbit


நானும் ”உதயமாகிறது” பாடல்களை கேட்ட ஞாபகம்(சிலோன்?).அப்படி ஒன்றும் என்னை ஈர்க்கவில்லை.


ஜெயமோகனின் இசை ரசிப்பு புல்லரிக்கிறது.
 

Thursday, December 12, 2013

ரஜினி-என் வானிலே ஒரே வெண்ணிலா

டைரக்டர் மகேந்திரன் தமிழ்த்திரையுலகில் (1978-90)ஒரு முக்கியமான ஆளுமை.சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியவர்களுள் ஒருவர்.

முக்கியமாக சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை காட்சிகளினூடே பார்வையாளனை பயணிக்க வைத்துக் கதைச் சொல்பவர்.காட்சிகளே கதாபாத்திரமாக,ஓவியமாக  திரையில் தீட்டப்பட்டு உணர்ச்சிகள் பார்வையாளனைத் தீண்டும்.அவன் கதாபாத்திரங்களுடன் உலாவுவான்.

மிக முக்கியமாக காட்சிகளில் விரவிக்கிடக்கும் மெளனம் அர்த்தபுஷ்டியானது.
வெள்ளை உடையில் மகேந்திரன்
இப்படிப்பட்ட படைப்பைப் படைப்பவன்தான் உண்மையான படைப்பாளி. சிருஷ்டி கர்த்தா.டைரக்டர் மகேந்திரன் ஒரு சிருஷ்டி கர்த்தா.பார்த்துப் பார்த்துச் செதுக்கும் ஓவியர்.இப்படி இவருடன் இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் கைக்கோர்த்து ஒரு கவிதையை  ஓவியமாக தீட்டி இருக்கிறார்கள் அல்லது ஒரு ஓவியத்தைக் கவிதையாக எழுதி இருக்கிறார்கள்.

அந்தக் கவிதை  ஜானி திரைப்படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்ற பாடல் காட்சி.இவருடன் இணைந்த மற்ற இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் இசைஞானி இளையராஜா ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.

இந்தப் பாடலின் காட்சி உள்ளும் புறமுமாக விரிக்கப்படுவதில் அசோக்குமாரும் ராஜாவும் தங்கள் கற்பனைத் திறனை அள்ளித்
தெளித்திருக்கிறார்கள்.பாடலை எழுதிய கங்கை அமரனும் பாராட்டுக்குரியவர்.நேரடியாக எதையும் சுட்டாமல் கவித்துமாக உள்ளது.

காட்சி நேர்த்தியாக romanticise செய்யப்பட்டு இருக்கிறது.




இந்தக் கவிதைக்கு  யதார்த்தமான  பின்னணி உண்டு.

குற்றப் பின்னணி உள்ள கதாநாயகன் ஜானி ஒரு இசை ரசிகன்.பிரபல பாடகி அர்ச்சனாவின் ரசிகன்.அன்று கேட்ட”ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்” பாடல் இவனுக்காகவே பாடப்பட்டதுபோல் உணர்கிறான்.மனம் குதூகலிக்கிறது.இசை நிகழ்ச்சி முடிவில் அவளைப் பாராட்டி பூங்கொத்து கொடுக்க முடியாமல் கூட்டம் இவனை தடுத்து விடுகிறது.

மறு நாள் அவள் வீட்டிற்கு தொட்டி தொட்டியாக வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டமே அனுப்பி வைக்கிறான்.மற்றொரு நாள் இருவருக்கும்  இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.கடற்கரையில் அர்ச்சனா உலா போகையில் தான் பாடிய  “ஒரு இனிய மனது” பாடல் காற்றில் அலைந்து வருகிறது.அதை நோக்கி போகையில்  ஒரு படகில் ஜானி மெய் மறந்துப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறான்.பரஸ்பர அறிமுகத்தில் இவன்தான் பூக்கள் அனுப்பியவன் என்று தெரிகிறது.தானும் அர்ச்சனாவைப் போல தனி இருவருக்கும் தங்களைத் தவிர யாரும்இல்லை என்பதில் இருவருக்குள்ளும் மெலிதான பிணைப்பு ஏற்பட்டு ஒரத்தில் ஒரு மொட்டு அவிழ்கிறது.

”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை... எனக்கு மட்டும் எனக்காக மட்டும்.. தனியாக நீங்க பாடனும்.தனியா கேட்கனும்.எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப் படனும்” ஜானி ஆர்வத்துடன் கேட்கிறான்.

”நிறைவேறுவது கஷ்டம்தான்...மாட்டேன்னா என்ன செய்வீங்க....” செல்லமாக சீண்டிவிட்டு ...”நாளைக்கு வீட்டுக்கு வாங்க" புன்னகையுடன் சம்மதிக்கிறாள்.ஜானியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

(ஒரு பாமர ரசிகனின் வெகுளித்தனமான ஆசையை நிறைவேற்றுவதில் அர்ச்சானவுக்கு ஒரு fatal attraction இருக்கிறது)


மறுநாள்: ஜானி சட்டைக்குள்ளே “MUSIC THE LIFE GIVER" என்ற வாசகம் எழுதிய மஞ்சள் பனியன் (பாமரத்தனமாக??) அணிந்து அவளை சந்திக்கச் செல்கிறான்.

வீட்டில் நுழைந்ததும் ஒருஅழகான  பியானவும் அதைச் சற்றி அவன் கொடுத்த வண்ணப் பூக்களும்  பார்வையில்பட்டு ”பியூட்டி புல்... பியூட்டி புல்...” நெகிழ்ந்துப்போய்விடுகிறான்.

பியானோ வாசிக்க முயற்சிக்கச் சொல்லி அவனும் மொன்னையாக  மெட்டுவாசிக்க முயற்சிக்க ” no.. no... just listen..!" என்று பியானவில் அவள் விரல்கள் மீட்ட நாதங்கள்  மீன்களாய் துள்ளி  கவிதையாக எழ ஆரம்பிக்கிறது.

பாடல் முழுவதும் அவன்  உடல்மொழி இயல்பாக இருக்கிறது.

காட்சி......



கேமரா ஊர்ந்து தூரிகையால் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்க  உயிர் துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது காட்சி.இசை மென்மையான வெஸ்டர்ன் கிளாசிகலில் காட்சியை நகர்த்துகிறது.அர்ச்சனாவின் வானில்  வெண்ணிலாவும் காதல் மேகங்களும் கவிதை தாரகைகளும் ஊர்வலம் போக ஆரம்பிக்கிறார்கள்.

அர்ச்சனாவின் உடை ஒரு தனி மொழியே பேசுகிறது.காட்சியின் பின்னணி ஒரு பாத்திரமாக பரவசப்படுத்துகிறது.காட்சிகள் உள்ளேயும் வெளியேயுமாக வழுக்கிக்கொண்டு பயணித்தப்படி போகிறது.ஜானி ” எல்லாம் எனக்குத்தான் எனக்குத்தான் ... எனக்குத்தான்...”கற்பனைச் சிறகடித்துப் பறக்கிறான்.

அர்ச்சனாவின் குரலில்(ஜென்சி) இருக்கும் மழலைத்தனத்தில் காதல் இருக்கிறது.காட்சியை ஆழப்படுத்துகிறது.


முதல் இடை இசையில் ரஜினி மனம் குதூகலித்தப்படி மேகத்தில் பறக்கிறது. உச்சக்கட்டமாக 1.22 ல் சொர்க்கத்திலிருந்து ஆசிர்வதிக்கப்படுகிறான்.Absolutely bliss..!


முதல் சரணத்தில் ”நீரோடை போலவே’ 1.30 -1.56 ஆரம்பித்து முடியும் வரை ரஜினி,ஸ்ரீதேவி,பிரேமி மூவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக 1.46-1.47ல் கேமரா திரும்ப, படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தபடி பிரேமி ஸ்ரீதேவியைப் பார்க்கும் (பெருமிதம்?) பார்வை யதார்த்தம்.

அடுத்து 1.56ல் ”நீராட வந்ததே என் மென்மை” என்று ஸ்ரீதேவி தன் குண்டு விழிகளில் எதையோ தேக்கி (காதல்?காமம்?)புன்சிரிப்போடு காட்டிவிட்டு தலைகுனிவது அருமை.

3.26ல் வாசித்துக்கொண்டே பிரேமியை எட்டிப்பார்க்கும் இடம் ரொம்ப சுட்டி.



இளையராஜாவின் வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்/பியானோ இழைகள் காட்சி  முழுவதும் சில்லென்று வீசிக்கொண்டே இருக்கிறது.

பாட்டை அதன் பரிமாணத்தில் உள்வாங்கி மகேந்திரனும் அசோக்குமாரும்  கவிதையாக செதுக்கி இருக்கிறார்கள்.

காவியக் காதல்களில்இரவு, நிலவு,பூஞ்சோலை, அருவி,அன்னம், புறா,மயில்,உப்பரிகை என்று காதலர்கள் உலா வருவார்கள்.

தமிழ் திரையுலகில் இப்படி உணர்வுபூர்வமாக மென்மையாக மிகைப்படுத்தாமல் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை பின்னணியுடன் பின்னி பினைந்து இசை வழியாக சொல்லி காட்சியை ஆழப்படுத்தியது அபூர்வமான ஒன்று.



Thursday, December 5, 2013

நீயா நானா நீலம் ரகசிய ராத்திரி குரல் டைரி பலன்கள் இளையராஜா

வருடா வருடம்  உலகம் உருண்டு புதுபுது வருடம் வந்து முன்னேறினாலும் டைரிகளில்  இன்னும் சில அவசியமற்ற தகவல்களை சம்பிரதாயமாக பிரசுரிக்கிறார்கள்.அதுவும்  லோகல் இன்ஜினியரிங் கம்பெனிகளில்.

அவை: இண்டர்நேஷனல் பேப்பர் சைஸ்,பல நாட்டின் நேரங்கள், உஷ்ண நிலை,டயர் பிரஷர், பலநாட்டின் கரன்சி பெயர்கள்,விமான தூரங்கள்,மெட்ரிக் அளவு கன்வெர்ஷன்கள்,உணவுகளில் கலோரி கணக்கு,அமெரிக்க,பிரிட்டிஷ்,ஆஸ்திரேலிய கோட்/சர்ட்/பேண்ட்/ஷூ சைசுகள்.


தேவையா?

நல்லவேளை போஸ்டல் பின்கோடு,இன்காம்டாக்ஸ் ரேட்ஸ்,வாழ்த்து தந்தி விவரங்கள்,இன்லெண்ட் கவர்,கார்டு, ரிஜிஸ்டர்டு தபால் விவரங்கள்,ரோமன் நம்பர்கள் வேறு வழி இல்லாமல் தவிர்த்திருக்கிறார்கள்.




ஒரு சிறுகதை:  Guest Role


தன் பெயரை டைப் செய்தாலே நெட் முழுவதும் தன்னைப்பற்றிய செய்திகள் போட்டோக்கள் சினிமா ஸ்டில்கள் போட்டோக்கள் மீண்டும் சினிமா ஸ்டில்கள் குடும்ப போட்டோக்கள்.அதிலும் இவள்தான்.ரொம்ப அலுப்பாகவும் கூடவே திகட்டவும் செய்தது.

வித்தியாசமாக ஒன்றும் இல்லை முகத்தைச் சுருக்கினாள் இன்றைய சினிமா ரசிகர்களின் 22 வயது கனவுகன்னி.

நொந்துக் கொண்டே லேப்டாப்பை மடியிலிருந்து சரிக்கையில் குறுகுறுப்பாக ஒரு எண்ணம் மின்னல் போல் தோன்ற தன் பெயரையும் அதனுடன் சில ஆபாச சொற்களை சேர்த்து டைப் செய்தாள்.

கூகுள் அட்ரஸ்களை கொட்டியது.முதலில் அதிர்ந்து பிறகு ஆர்வத்துடன் கிளிக்கினாள்.கண்கள் விரிந்தது.வெட்கம் பிடுங்கித்தின்றது. சீ.... போ...புன்னகை கலந்த லஜ்ஜையுடன் முறைத்தாள்’.பச்சையான ஆபாச உடல் உறவு காட்சிப்படங்கள்.

எல்லாவற்றிலும் இவள்தான் கதாநாயகி.

மிகவும் கட்டுமஸ்தான எட்டு கருப்பு இளைஞர்களும் ஒரு வெள்ளை ஆணும்.அவன் பின் ஒரு கருப்பு டீன் வயது பெண். எல்லோரும் பச்சை நிர்வாணம்.இவர்களின் நடுவில் இவளும் நிர்வாணமாக படுத்திருந்தாள்.வேறு ஒரு மேல் நாட்டின் பெண்ணின் முகத்தில் தன் முகம் நேர்த்தியாக மார்ப் செய்யப்பட்டிருந்தது.

வெரி நைஸ்... குறுகுறுப்பு கலந்த லஜ்ஜையுடன் தொடர்ந்து பக்கங்களை பிரவுஸ் செய்ய ஆரம்பித்தாள்.

                                       முற்றும்

ராத்திரி நேரத்து ரகசிய குரல்:

கடந்த பத்து ஆண்டுகளாக  பல தமிழ்த் திரைப்பாடல்கள் டூயட்டோ சோலோவோ “பாப்” அல்லது ”கிளப்டான்ஸ்” பாடல்கள் போல் போதை கலந்த அல்லது ராத்திரி நேரத்து ரகசிய குரலில் பாடப்படுகிறது.ஆங்கிலத்தில் husky voice என்று சொல்லலாம்.இதை ஆரம்பித்து வைத்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்? தொடர்பவர்கள் விஜய் ஆண்டனி,ஜிவி பிரகாஷ் மற்றும் பலர்.

தமிழ்ப்பட விதிகள்படி விரகதாபப் பாடலுக்குத்தான் இப்படிப் பாடுவார்கள்.வி.தாபம் இல்லாமலேயே நிறைய பாடல்கள் வருகிறது.

உதாரணம் 1. காக்க காக்க “ தூது வருமா”  2. உன்னாலே உன்னாலே “ஜூன் போனால் ஜுலை” 3. காதலி விழுந்தேன் “உன் தலை முடி உதிர்வதை இப்போது லேட்டஸ்ட்டாக 4. என்றென்றும் புன்னகை ”கடல் நான் தான்”

தூது வருமா

ஜூன் போனால்

உன் தலைமுடி

கடல் நான்தான்

இளையராஜாவின் நீஎபொ  “சாய்ந்து” “ சற்று முன்பு” “முதல் முறை” பாடல்களை ராத்திரி நேரத்து ரகசிய குரலுக்கு மாற்றிவிட்டார்.”அந்தப்புரத்தில் ஒரு மகாராணி அவன் அன்புக்கரங்களில்” என்கிற ரேன்ஞக்கெல்லாம் பாடமுடியாது.

ஏன்?


கதாநாயகன் - நாயகிகள் மாறிவிட்டார்கள்.உடைகள் மாறிவிட்டது.புடவை ஜாக்கெட் இல்லை.தலைவாரி பின்னல் இல்லை பொட்டு இல்லை. நாயகன் கடுக்கன்போட்டு தலைமுடியில் சாயம் அடித்து எண்ணெய் அப்பி குச்சிகுச்சியாய் நிற்கவைத்தபடி தோன்றுகிறான்.திருமணத்தில் தாலிகட்டும் நேரத்தில் மட்டும் புடவை-வேஷ்டி.மொததத்தில் சினிமா மாறிவிட்டது.அதனால் டிரெண்ட் மாறிவிட்டது.

 கிழே சேட் ரேவதிதான் இப்போதைய கதாநாயகி பேஷன் டிரெண்ட்

ஆனால் அவ்வப்போது ரகசிய குரல் இல்லாமுலும் பாடுகிறார்கள்.

இளையராஜாவும் ஆத்மாவும்

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு....பூத்திருச்சு  வெட்கத்தவிட்டு...

ஹாப்பி

”பொத்தி வச்ச மல்லிகை மொட்டு....வாடுதடி வாசனை கெட்டு..
ரொம்ப சேட்(தேங்க்ஸ் த்ரிஷா)
இது சோகத்தில் பாடும் பாட்டு (மண்வாசனை).மகிழ்ச்சியான தருணத்தை அப்படியே உல்டாவாக சோகமாக்க வேண்டும்.

ஆக்கிவிட்டார். ஆனால் இதில் என்ன ஸ்பெஷல்? 

உதாரணமா பாண்டியன் ரேவதியை கயிற்றில் இழுப்பது (0.18-0.33) எப்படி சோகமாக இசைக்கப்படுகிறது.0.18-0.28 வரை பெரிய  விஷயம் இல்லை.


 0.29-0.33ல்  ஒரு வித்தியாசமான உணர்ச்சி உந்தப்படுகிறது. இது தமிழ்சினிமாவிற்கு புதுசு.




தலைமுறை இடை.............................வெளி் (generation......gap):

01-12-13  விஜய் டிவி நீயா நானாவில் “ எழுபதுகளின் (1970)  திரைஇசையை இப்போதைய இளையதலைமுறையுடன் பகிர்தல்”.ஒரு பக்கம்  அந்தக்கால இசைப்பிரியர்கள்.பிரியைகளே கிடையாது. மறுபக்கம் நவீன இசைப்பிரி(யை)யர்கள்..

 நாங்க டி எம் எஸ் மட்டும்தான்

கோட் கோபிநாத்தும் இவர்களுடன்(70) இடைவெளி இருந்தது.இசை  ஜாம்பவான் ஜி.ராமநாதன்பற்றிக் குறிப்பிடவே இல்லை.

இரண்டாம் உலகம் படம் ரெண்டாவது தடவை போயிருக்கலாமோ?

மூத்த குடிமகன்கள் இவர்களுக்காகவே போட்டுவைத்த நீண்டகால வைப்பு நிதி மாதிரியான  டி எம் எஸ் பாடல்களைப் பாடினார்கள்.பெண்குரல் பாடல்கள் 99% இல்லை.இவர்களே நிறைய நேரம் பாடிக்கொண்டிருந்தார்கள்.

கேட்ட நவீன இசைப்பிரியர்களிடம் விளக்கெண்ணெய் குடித்தாற்போல் முகபாவம்.மயான அமைதி.இன்னும் கேப் ஜாஸ்தியாயிற்று.திடீரென்று ஒரு  பெண் “ நான் பார்த்ததிலே உன்” பாடலைப் பாடி போர்ரைக் குறைத்தார்.ஆறுதலாக இருந்தது.இன்னொரு பெண்ணும் “ இலந்தபயம்” பாடலைப் பாடி அசத்தினார்.

அந்தக்கால சுதர்சன்,கோவர்தன்,சலபதிராவ்,குமார்,விஜயபாஸ்கர்,
சங்கர்-கணேஷ்,எஸ்.தக்‌ஷிணாமூர்த்தி  பாடல்களைப் பற்றி அந்தக்கால இசைப்பிரியர்கள் ஏன் பாடவில்லை. 

இவர்களுக்கும் இந்தக்கால இசையைப்பற்றி தெரியவில்லை. தெரிந்துக்கொள்ளவும் ஆர்வம் இல்லை.எப்போதுமே எந்தக்காலத்திலுமே தலைமுறை இடைவெளி இருந்துக்கொண்டேதான் இருக்கும்.இல்லாவிட்டால் வாழ்க்கை சுவராஸ்யமாக இருக்காது.

இப்போதைய தலைமுறை இவர்கள் மாதிரி இருந்தால் ஏதோ கோளாறு என்று அர்த்தம்.

ஹைலைட்: 
கோவை முரளி
மூச்சு விடாமல் பாடுவதை(அம்பிகாவதி-1957) படத்தில் வரும் “வடிவேலும் மயிலும் துணை”) பற்றி டி எம் எஸ் சொன்னதாக இவர் சொன்னது: 

“மூச்சு பிடிச்செல்லாம் பாடல.தமிழ்ல நமக்கு சில வசதிகள் இருக்கு. ச், ப் த், ன், ட், க்  இதிலெல்லாம் ரெஸ்ட் எடுத்திட்டு அப்படியே ஜெர்க் பண்ணி போயிடலாம்”

மூச்சு விடாம நான் பாடலீங்க..பின்னாடி(playback)தான் டி எம் எஸ் பாடி அசத்திட்டாரு

 அந்தப்பாடல்: