Wednesday, July 27, 2016

குரல்கள் -ரஜினி அங்கிள் " அதிர்ச்சி”-பார்க்கிங் இம்சை-முகங்கள்


சமீபத்தில் அப்பா படத்தில் நடித்த சிறுமியின் டிவி பேட்டியைக் கேட்டேன். நன்றாக ஒரு வித பக்குவமாக பேசினாள்.

இந்தத் தலைமுறை சிறுமி சிறுவர்களுக்கு தங்களுடைய திறமையைக் காட்ட
தங்கள் கருத்துக்களைப் பொதுவெளியில் சொல்ல பலவித ஊடகங்கள் இருக்கிறது ஏதோ ஒரு துறையில். போன தலைமுறையை விட கொடுத்து வைத்தவர்கள். ஆனால் அதே சமயம் புகழ் வெளிச்சம் ஓவராக விழுந்து பொய்யான உலகத்தில் மிதக்க ஆரம்பிக்கிறார்கள்.ஊடகங்கள் அதை ஊதிப் பெருக்குகின்றன.

கருத்துக்களை வெளியிடும் போதும் மிகைப்படுத்தல் அதிகமாக இருக்கிறது.இது உலகம் தெரியாமை.



___________________________________________________________


”டமால் டூமில்.....டப் டப் டப் டுப் டமார்....டிஷ்க் டிஷ்க்......டியுங் டியுங்...டமால் டூமில் டப் டப் டப் படார்......”
ரஜினீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....... அங்கிள் கைல இருக்கிற காம்போ ஆஃபர் பாப்கார்ன்லாம் எல்லாம் சைடும் செதறது. ”ஏ” ன்னு போட்டிருக்கிலாம்ல. நாங்க வந்திருக்க மாட்டோம்ல. பேரெண்ட்ஸும் பீல் பண்றாங்க...”
டொய்ங் டொய்ங் டொய்ங்...டங்டன் டங்டன் ..டொய்ங் டொய்ங் டொய்ங்...டங்டன் டங்டன் ..டொய்ங் டொய்ங் டொய்ங்...டங்டன் டங்டன் ..
“அதிர்ச்சி” அங்கிள்



____________________________________________________________________

இது ஒரு இம்சை(வன்முறை) பல வருடமாக நடக்கிறது.
தியேட்டரில் படம் முடிந்ததும்(எல்லா) வாகனப் பார்க்கிங் டிக்கெட்டை கவனமாக வாயில் கவ்விக்கொண்டோ கையில் இடிக்கிக்கொண்டோ பாண்ட்பாக்கெட்டில் வைத்துக்கொண்டோ வண்டியில் சொருகிக்கொண்டோ
ஊர்ந்து ஊர்ந்து ட்ராபிக் ஜாமாகி பார்கிங் attendantடிடம்
காட்டிவிட்டு குறுகிய வாசல் வழியாக வெளியேறுவது.
இதற்கு காரணங்கள் இருக்கலாம்.
1. வண்டி திருடுவது(நிர்வாகம் பொறுப்பா?)
2.தேதி இல்லாத வெறும் கலர் டிக்கெட்
3.டிக்கெட் எடுக்காமல் பார்க் செய்வது




திருப்பதி தரிசன வரிசையை மேம்படுத்த ஒரு வித விஞ்ஞான பூர்வ அல்லது
நடைமுறை அணுகுமுறையை பின்பற்றியது போல் இங்கும் செய்ய வேண்டும்.

__________________________________________________________________


சொன்னா கேட்டாதானே?
நண்பர் ஒருவர் அடிக்கடி கூகுளில் வியாதிகள்...... மருந்துகள்.... என்று ”பொது அறிவு” மற்றும் ”விழுப்புணர்ச்சி”க்காக தேடித் தேடி பார்ப்பதுண்டு.
அப்புறம் திகில் அடித்து ஒரே வாரத்தில் தெளிந்தார்.
”சாதாரண ஜூரம் வந்தாலே கூகுள்ள சொல்லப்படும் எல்லா வியாதியும் எனக்கே இருக்கறா மாதிரி ஒரு பீலிங்.படங்கள், மருந்துகள் அதன் பக்க விளைவுகள் ... ஒரே திகிலா இருக்கு.கொடுத்த மருந்த சீட்ட பத்துவாட்டி படிச்சு அந்த மருந்தா இந்த மருந்தான்னு ஒவ்வொரு வாட்டியும் திங்கிங் போகுது. வேண்டாத வேல எதுக்கு
Ignorance is blissப்பா. பெஸ்ட் நம்ம பேமிலி டாக்டர்தான்”.
சொன்னா கேட்டாதானே? நாங்களும் மூணு வருஷம் முன்னாடி திகில் அடிச்சு வெளில வந்தோம்.



____________________________________________________________

பல வித முகங்கள்

______________________________________________________