Wednesday, December 30, 2009

வாணி ஜெயராம் Vs சாதன சர்க்கம்

பாலைவனச்சோலை என்ற பெயரில் 1981ல் ஒரு படம் வந்தது.இசை சங்கர்-கணேஷ்.இதில் சுகாசினி, சந்திரசேகர்,ராஜீவ்,ஜனகராஜ்,தியாகு,கைலாஷ் நடித்திருந்தார்கள்.டைரக்‌ஷன் ராபர்ட் ராஜசேகர்.

இவர் ஒரு நடிகர் கூட.ராஜசேகர் நிழல்கள் படத்தில் நடித்தவர்.”இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாட்டில் வருவார்.இப்போது நிறைய டீவி சீரியல்களில் வருவதாக கேள்வி.

இது ரீமேக் செய்யப்பட்டு அதே பெயரில் இப்போது வரப்போகிறது அல்லது வந்துவிட்டது(?).அதே கதைதான்.அதே சென்டிமெண்டுதான்.


கொஞ்சம் கூட யோசிக்கமாட்டார்களா?அது 1981.இது 2009. கிட்டத்தட்ட 29 வருடங்கள் தள்ளி வந்துவிட்டோம்.அப்போது தெருமுனை வெட்டிஇளைஞர்கள்,வேலையில்லாத்
திண்டாட்டம்(உச்சம்),மிமிக்ரி,காதல் த்ரில்,பஸ் ஸ்டாண்ட் வெயிட்டிங்,சென்டிமெண்ட்,பாவடை தாவணி தங்கச்சி, புடவை கதாநாயகி,என எல்லாம் இருந்த காலம்.சுத்தமாக டெக்னாலஜி முன்னேற்றம் இல்லாத காலகட்டம்.அதன் பின்னணியில் வார்க்கப்பட்ட படம். அப்போது அது ஒரு டிரெண்ட் செட்டர் . வெகுவாக ரசிக்கப்பட்டது.நான் மூன்று முறைப் பார்த்தேன்.

ஆனால் இப்போது? ஏம்பா! எடுப்பதற்கு முன்னாடி அட்லீஸ்டு   ஒரு குடிசையாவதுப் போட்டு யோசிங்கப்பா! படத்தின் ஜீவன் என்ன என்று ஸ்கேன் செய்து அப்பறம் எடுங்கப்பா!

அடுத்து பாடல்.இதில் வாணி ஜெயராம் பாடிய “மேகமே... மேகமே..” என்ற கசல் பாடல் ரொம்ப ஹிட் அப்போது.அருமையான பாட்டு.வரிகள்.இது ”சுட்ட” பாட்டு என்று கூட சொல்லுவார்கள்.இப்போதும்  இதை வாணி இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார். அவ்வளவு மெலடி.அவ்வளவு உயிரோட்டம் உள்ள பாட்டு.

அட்லீஸ்டு இங்கேயாவது  ஒரு சின்ன புடலாங்காய் பந்தல் போட்டு  யோசிச்சு இருக்கலாம்.பாட்டின் ஜீவன் dead bodyஆகிவிட்டது.”எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்” என்று ஒரு வரி வரும் இந்தப் பாட்டில்.அந்த மாலையை வைத்து பாட்டிற்கு அஞ்சலி செலுத்தி விட்டார்கள்.

லேட்டஸ்ட்டில்(இசை Bobby) இதை சாதனா சர்க்கம் பாடி உள்ளார்.இந்த கசல் பாட்டுக்கு தபலா,சரோட், சாரங்கி போன்றவற்றை உபயோகித்துப் போட்டால்தான் கசலின் ஜீவன் தெரியும்.இதில் Electronic drum padல் தட்டப்படுகிறது.”தூரிகை எரிகின்ற போது  இந்த தாள்களில் எதுவும் எழுதாது”

ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டுப் படித்தால்(???) எப்படி ஜீவன் (எழுதும்) வரும்.தாங்க முடியவில்லை.அடுத்து இவர் குரலில் தட்டும்  வழக்கமான மழலை.வாணி எப்படி பாடுகிறார் பாருங்கள்.காரணம் மொழி ஆளுமை/உணர்வு.

முதலில் வாணி மேம் பாட்டுக் கேளுங்கள்.

வாணி ஜெயராம் -1981

சாதனா சர்க்கம் -2009

ஓரிஜினல் கஜல்-ஜக்ஜித் சிங்(இங்கிருந்து சுடப்பட்டது)


பத்து தடவை யோசிங்கப்பா எடுப்பதற்கு முன்னாடி!

Tuesday, December 29, 2009

ஹைடி(Heidi) கார்டூன்...ஹைய்யோடி!





பல லட்சம் குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகளால்(!) பல தேச டீவிகளில்/சினிமாக்களில் பல வருடங்களாக ரசிக்கப்பட்டு வரும் ஒரு கார்டூன் ஹைடி(Heidi).நம்மூரிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் ரசிக்கப்படுவதுண்டு.இது சுவிஸ் நாட்டு பெண் எழுதிய கதைதான்.







இதில் குட்டியாக வரும் ஐந்து வயது சுட்டிப் பெண் பெயர்தான் ஹைடி(Heidi).Adelheid என்கிற Heidi.இவள் ஒரு அனாதை.இவள் தாத்தாதான் வளர்க்கிறார்.இவர் மிகவும் கண்டிப்பானவர்.இவள் வசிக்கும் இடம் ஸ்விட்ச்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் பனி படர்ந்தமலைஅருகில்.இவளுக்குஒருஆட்டுக்குட்டி,நாய்,பறவை,பீட்டர் என்கிற ஆட்டிடையன் நண்பர்கள்.

இவளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி வேறு உண்டு. அடுத்து இவள் பெரிய ரவுடி போல் விசில் அடிப்பாள்.

ஒரு எபிசோடில் ஹைடி-கிளாரவின் ஆழமான நட்பின் பொருட்டு அங்கு நடக்கும் குழந்தைத்தனமான உரையாடல்கள் நன்றாக இருக்கும்.அவள் நகரத்தில் உள்ள கிளாராவின் வீட்டிற்குப்போய நிறைய விஷமம் செய்து ஹைடி கிளாராவைக் கெடுக்கிறாள் என்பதாக அங்குள்ள சர்வண்ட் லேடியால் அடிக்கடி திட்டு வாங்குவாள்.


நிறைய எழுதலாம் ஆனால் பெரிய பதிவாகிவிடும்.இவள் சாயலில் உள்ளவள்தான் அமுல் பட்டரில் வரும் ஒரு குட்டிப்பெண்.


இதில் என்னைக் கவர்வது: 

இசை.  சொப்பு வாய் திறந்து பேசும் பேச்சு. கண்களில் தெரியும் மிரட்சி.கண்களில் பிரமிப்பு மின்ன வாய்பிளந்து ஆடும் உஞ்சல்.ஆட்டுக்குட்டி பின் தொடர்ந்தபடி நடக்கும் சுட்டி நடை. மேகத்தில் பறப்பது. ஒரு சிரிப்பு.அழுவது மற்றும் பயப்படுவது.


டோரா போல் எளிய தமிழ் இல்லாமல் எழுத்துத் தமிழில் பேசுவது நெருடல்.”அவளுக்கு ரொம்ப மனத் தாங்கல்” “ உடைகளை சீர் செய்து கொண்டு வா” “”ஆபத்து நீங்கி விட்டது “.



முகத்தில் குறுகுறுவென்று புன்னகையுடன் இதை ரொம்ப ரசிப்பதுண்டு.



இங்கு சென்று ஹைடியின் அராபிக் வெர்ஷன் பாருங்கள்:. சூப்பர்.

ஹைடி-அராபிக்



  

Monday, December 28, 2009

மூக்கின் நுனி மேல் கோபம் - கவிதை

பார்த்தவுடன்
மூக்கின் மேல் கோபம்
வந்துவிடுகிறது
யார் மீதோ எரிச்சல் ஏற்படுகிறது
பிரபஞ்சம் பிடிக்காமல் போகிறது
கொண்டாட்டங்களின்
சுருதி சுத்தமாக
குறையத்தான் போகிறது
பண்டிகைகளும் தேசிய விடுமுறை நாட்களும்
ஞாயிற்றுக் கிழமைகளில்
வந்துவிடும்போது





இளையராஜா-பாலுவை கேளடி கண்மணி

தி கிரேட் மெலடி கிங் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடாமல் வேறு யாராவது இந்தப் பாட்டை பாடுவதை கற்பனைச் செய்து பார்க்க முடியுமா?என்னால் சத்தியமா முடியாது.படம்: புது புது அர்த்தங்கள்.பாடல்:கேளடி கண்மணி.

இவர் ஏற்கனவே (1977)நந்தா என் நிலா என்ற படத்தில் ”நந்தா என் நிலா” என்ற பாட்டைப் பாடி படுத்தி எடுத்தவர். (இதன் இசை மேதை வி.தக்‌ஷிணாமூர்த்தி)




மேஸ்ட்ரோவுக்கு இவர் யானை பலம். அதுக்காக இப்படி,....?



(மெதுவா சார்!  ராஜாவின் நோட்ஸ் எல்லாம் நொறுங்கிடப்போவுது!)

இசைப் பாடகன் ஒருவன் தன் மனைவியின் தாங்க முடியாத டார்ச்சரால் வேறு ஒரு பெண்ணின்(விசிறி) காதல் வயப்படுகிறான்.கீதம் இசைத்து தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொள்கிறான்.அதுதான் என்று நினைக்கிறேன்.இது ஒரு மிகவும் அபூர்வமான சூழல்.

இந்த பாட்டில் ஒரு கனிவான (காதல்?)சோகத்தை எஸ்பிபி பிழிவார்.எஸ்பிபி குரலில் படுத்தினால அதற்கு ஈடாக மேஸ்ட்ரோ தன்னுடைய செல்லங்களான இசைக்கருவிகளில் பிழிபிழியென பிழிந்துக்கொண்டே  முன்னேயும் பின்னேயும் வருவார்.என்ன ஒரு  சோக அழகுப்படுத்தப்பட்ட இசை!
மேஸ்ட்ரோவின் இசை பொதுவாகவே full of emotions.இதில் வரும் ஒவ்வொரு இசைக்கருவியும் இசைக்கும் படுத்தி எடுக்கும்.

சீட்டுக்கட்டைக் கையில் எடுத்து விசிறியாகப் பிரித்தார் போல் வரிசையாக வந்து விழும் இசைத் துளிகள்.இதனிடையே அவ்வப்போது கசியும் ஹம்மிங்குகள்.

Divine... Maestro! It is purely divine Maestro!

இந்தப் பாட்டை எழுதியவர் வாலிதான் என்று நினைக்கிறேன்.இவரும் தன் பங்குங்கு படுத்தி விட்டார்.(தமிழ்பறவை/கோபிநாத் சரியா? வாலிதானே?)

4.35 நிமிட பாட்டில் அடைத்து வைக்கப்பட்ட கனிவான காதல் சோகத்தைக் கிழே பார்ப்போம்.

0.00 to 0.12 கவுண்ட் வரை கீ போர்டில் அலசி எடுத்தத் தண்ணீரில் இருந்து ஹம்மிங் செய்துகொண்டே வெளிவந்து 0.17ல் ”கேளடி கண்மணி...” என்று கனிவான சோகத்தோடுஆரம்பிக்கிறார். அதே கனிவான கிலுகிலுப்பை கலந்த தபலா ஒத்தல்கள் பின் தொடர பல்லவியை  0.51ல்“பாடகன் சங்கதி”  என்று இனிமையாகப் பாடி முடிக்கிறார் மெலடி கிங்.

0.52ல் மேஸ்ட்ரோ அதே சோகத்துடன் ஒரு கோரஸ் வயலினில்( absolutely stunning) மென்மையான பெண் ஹம்மிங் மிக்ஸ் செய்த வலை இசை விரித்து வாங்கிக்கொண்டு பல வித இசை கருவிகளில் படுத்தியபடியே 1.26ல் புல்லாங்குழலில் உச்சஸ்தாயிக்குக் கொண்டுபோய் கடைசியில் ஒரு வயலினில் உரசலில் நிறுத்த மெலடி கிங் ”எந்நாளும்தான தேன்” என்று முதல் சரணத்தை ஆரம்பிக்க அதே  கனிவான கிலுகிலுப்பை கலந்த தபலா ஒத்தல்கள் பின் தொடருகிறது.

(நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை... நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை-சூப்பர் பாலு)

2.28ல் ஆரம்பிக்கிறது Pathosல் மயிலிறகு நடனங்கள். 2.48ல் இதில் உதித்த Humming Angels பாலுவை 3.05 வரை படுத்தி எடுக்க பதிலுக்கு பாலு “நீங்காத பாரம் என்”சோக சவால் விட்டு இரண்டாவது சரணம் பாடி முடிக்கிறார்.

மற்ற இசையமைப்பாளர் மாதிரி ஹம்மிங்கை நேரடியாக கொடுக்காமல் வித்தியாசமாக இடையிடையே ஒத்துவது மேஸ்ட்ரோவின் மேதமை.அடுத்து இதில் வரும் percussion (தபலா-கிலுகிலுப்பை) அட்டகாசம்.

மேஸ்ட்ரோ! எப்படி சார் நோட்ஸ் எழுதுறீங்க?

இந்தப் பாட்டைக் கேட்க:

கேளடி கண்மணி

மற்ற இசை தவங்களைக் கேட்க:

இளையராஜாவின் தவம்-காற்றில் எந்தன்

இளையராஜாவின் வயலின் ரங்கோலி

Friday, December 25, 2009

”அவதார் “ ஹாலிவுட் சினிமா விமர்சனம்





ஹாலிவுட் சினிமா  எப்போதும்  எல்லோரையும் பிரமிக்க வைக்கும்.Mackenna"s Gold (மெக்கென்னாவின் தங்கம்-(தமிழில்!) ஆரம்பித்து  நேற்று “அவதார்” வரை பிரமிக்க வைத்து மிரட்டியும் விட்டார்கள் என்னை.இது டைட்டானிக் எடுத்த ஜேம்ஸ் கேமரூன் டைரக்ட் செய்தது.கிட்டத்தட்ட கால் பங்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் கோடி ரூபாய் பட்ஜெட்.




இதை 3D  ஐமேக்ஸில் பார்க்க சென்னையில்  தியேட்டர் இல்லை.
3D இருக்கிறது.அதில் பார்த்தால் அட்டகாசமாக இருக்கும் என நண்பர்கள் சொன்னார்கள்.நான் பார்த்த தியேட்டரில் 3D இல்லை.ஐநாக்ஸ்ஸில் டிக்கெட் கிடைக்கவில்லை.

அடுத்து இப்பொழுதெல்லாம் தமிழ் டப்பிங்கில் அசத்துவதால் இந்த படத்தைத் தமிழ் டப்பிங்கில் பார்க்க ஆசைப்பட்டால் எனக்குப்பிடிக்காத தியேட்டர்களில்தான் ஓடுகிறது.இதையெல்லாம் அந்தத்தியேட்டர்களில் பார்ப்பதை விட டீவி திரை விமர்சனத்தில் பார்ப்பது பெட்டர்.சென்னையின் மத்தியில் இருப்பது இது மாதிரி படங்கள் ரீலிஸ் ஆகும்போது ஒரு கஷ்டம்.

அதனால் ஒரளவுக்கு கதையின் அவுட் லைன் தெரிந்துக்கொண்டு மீதியை விஷுவலில் தெரிந்துக்கொள்ள நல்ல தியேட்டரில் பார்த்தேன்.

இது ஒரு சயன்ஸ்பிக்‌ஷன்  கலந்த பேண்டஸி கதை.கிட்டத்தட்ட விட்டலாச்சாரியா கதைதான். கதை 2154 நடக்கிறது.நம்மூர்  சமுகவிரோதிகள் இயற்கைக் கொஞ்சி விளையாடும் இடங்களை சுற்றி வளைத்து பிளாட் போட்டு விற்பது போல்  "பேண்டோரா” என்னும் கிரகத்தில் இருக்கும் கனிம வளத்தை, ஒரு பூமி சுரங்க கும்பல் சுரண்ட நினைத்து அதன் இயற்கையை கற்பழிப்பது அதன் பிறகு நடக்கும்  பிரச்சனைகள் போர்கள்தான் படம்.

இசை பிரமிக்க வைக்கிறது.

"பேண்டோரா” கிரகத்தில் மலைகள் /பாறைகள் வானத்தில் தொங்கிக்கொண்டு விதவிதமான இயற்கைத் தாவரங்கள்,நீர்விழ்ச்சிகள்,கொடூரமான மிருகங்கள் என அற்புதமாக இருக்கிறது.ஒரு வித லைட் நீலமும் பச்சையும் கலந்த எமரால்ட் கலர் ஐஸ் சில்லை உணர முடிகிறது.

இந்த கிரகத்தை ஏரியல் ஷாட்டில் பார்க்கும்போது சிலிர்க்கிறது.



இதே கலரில் கிழ்கிந்தா வானரப்பட்டாளம் போல இங்குள்ள நவீ என்னும் கிரகவாசிகள் 10 அடி உயரமும்,துடி இடையும்,கோலிகுண்டு பூனைக் கண்கள்,நீண்ட வாலுடன் ஒரு வித எகிப்து மம்மி முகத்துடன் இருக்கிறார்கள்.இங்கு மனிதர்கள் சுவாசிக்க முடியாது.

இவர்களுடன் கலந்து அந்த கனிவளத்தை(அன்அப்டேனியம்) கவர ஒருவனுக்கு ஜீன் மாற்றம் செய்து “அவதார்” எடுத்து அங்கு போகிறான்.ஆனால் அவர்களுடன்இயற்கையை ஒட்டி வாழ்ந்து அதே பிடித்துப் போய் ஒரு பெண்ணைக் (நேத்ரி)காதலித்து காலப்போக்கில் “ஓகேடா! இது சூப்பர்” என செட்டில் ஆகி இவர்களுடன் சேர்ந்து தலைவனாகி மனிதர்களை எதிர்க்கிறான்.இவர்களுக்கும் (இயற்கை) மனிதர்களுக்கும் (இயற்கை அழிப்பவர்களுக்கும்)நடக்கும் போரை முன்னின்று நடத்தி வெற்றி பெறுகிறான்.

பல முறை பல படங்களில் பிரமித்த போர் காட்சிகள் இதிலும் வந்தாலும் மீண்டும் பிரமிக்கத்தான் வைக்கிறது.சில நம்ப முடியாத காட்சிகளும் இருக்கிறது.தனி மனிதனாக ஆறு கொடூரமிருகங்களுடன் சண்டை இடுவது.அடுத்து எஸ்கேப் காட்சிகள்.

அடுத்து ஹாலிவுட் படத்திற்கே உண்டான கதாபாத்திரங்களுக்குள் ஏற்படும் அபத்த உணர்வு வெளிப்பாடுகள். உதாரணமாக ..கொடூர மிருகங்கள் தாக்க வரும்போது அதை வெயிட்டிங்கில் போட்டுவிட்டு கதாபாத்திரங்கள் உரையாடுவது. இன்னும் சில காட்சிகள்.

அசத்தும் காட்சிகள்: இந்த நவிகள் Tree of Soul கிழ் உட்கார்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்வது, திடீரென விசித்தர மிருகங்கள் இவர்களுடன் சேர்ந்து மனிதர்களை எதிர்த்து போர் புரிவது. மலைப் பாறைகளில் ஓடி ராட்ச்ச பறவையை செல்லப்படுத்துவது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

Wednesday, December 23, 2009

டி.எம்.செளந்தர்ராஜன் - Ctrl + Alt + Del





என்னை சிறுவயதில் தன் குரலால் மிகவும் பாதித்தவர் டிஎம்எஸ் என்கிற டி.எம்.செளந்திரராஜான் ஆளுமை.1960/70களில் சிறுபிராயத்தைக் கடந்தவர்கள் இவர் இசைக் கேட்டுதான் வளர்ந்திருப்பார்கள் இவர் தாக்கம் இல்லாமல் கடக்க முடியாது.பக்தி/சினிமா என்று இரு இடங்களிலும் கரகாட்டம் ஆடினார்.இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள்.



நான் தாக்கப்பட்டது முதலில் முக்கியமாக பக்திப் பாடல்களால்.”அழகென்ற சொல்லுக்கு முருகா” “கற்பனை என்றாலும்” “முருகனைக் கும்பிட்டு” போன்ற பக்தி பிரவாகம் எடுககும் பாடல்கள soul stirring .எங்கோ லவுட் ஸ்பீக்கரில் படர்ந்த வந்த இவர் குரல் இன்னும் காதில் ரீங்காரம் இடுகின்றன.என்னுடைய இசை ரசனைக்கு அடித்தளம் போட்டது.

மறுபடியும் சொல்கிறேன் “என் இசை ரசனைக்கு அடித்தளம் போட்டது”.காரணம் முதலில் தாக்கப்பட்டப்போதே நல்ல குரல் வளத்தால் தாக்கப்பட்டேன்.இவரைக் கேட்டு விட்டு பாகவதர்,பி.யூ.சின்னப்பா, தண்டபாணி தேசிகர்,எஸ்.ஜி.கிட்டப்பா மற்றும் கேட்டுருக்கிறேன்.

எனக்குத் தெரிந்து “ஆண் குரல்” உடைய ஒரே பாடகர்.குரலின் ஸ்தாயி,ஏற்றஇறக்கம்,உணர்வு உச்சரிப்பு,குழைவு எல்லாம அருமை.மதுரை சோமு மற்றும் சீர்காழி குரல்கள் அருமையாக இருந்தாலும் இவர் குரல் போல் வராது.இவர் பாகவதரைப் பின் பற்றித்தான் பாடினார்.இவருக்கு பின் வந்த பாடர்கள் எல்லாமே பெண் சாயல்.

”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி” “சொல்லடி அபிராமி””கல்வியா செல்வமா” “மதுரையில் பறந்த மீன்” “தம்பி நான் பொறந்தேன் காஞ்சியிலே””எங்கே நிம்மதி”பாடல்களை எடுக்கும்போதே கம்பீரக் குரலில் அசத்துவார்.அட்டகாசம்.எம்ஜியாருக்கு பாடினால எம்ஜியார் பாடுவது போலவும் சிவாஜிக்குப் பாடினால சிவாஜி பாடுவது போலவும் இருக்கும்.


மரபிசையான கர்நாடக இசையிலிருந்து மெல்லிசைக்கு வந்து கொடிப் பறக்கவிட்டவர்.அடுத்து இவரின் பன்முகத்திறமை.காதல்,வீரம்,சோகம்
கொள்கை,பக்தி,கிராமியம்,கர்நாடகம்,யூத்,சரித்திரம் என்று சிலம்பாட்டம் ஆடியவர்.இவருக்கு பலம் சேர்த்தவர் கண்ணதாசன் மற்றும் பல இசை ஜாம்பவான்கள்..அப்போதைய திரைக் கதைகளும் இவருக்குத் தோதாக வந்தது.
இவருக்கே எல்லா பெருமையும் கொடுக்க முடியாது.


ஆனால் ஒரு கட்டத்தில்இரண்டு பேருக்கும் பாடிப்பாடி stereotype ஆகி    என்னை மாதிரி ரசிகர்களை நொந்து போகவும செய்தார்.
(பணம் என்னடா... பணம்..! குணம்தானடா...” என்பது  மாதிரி தத்துவ பாடல்கள் படத்துக்குப் படம் பாடி, எங்களை Ctrl + Alt+Del போட வைத்தார்)

இவரின் தமிழ் உச்சரிப்பு, கம்பீரம்,ஆண்குரல் இதெல்லாம் இப்போது அவுட் ஆப் பேஷனாகி சாதனா,ஷ்ரேயா,உதித் தமிழை மாறி மாறி என்கெளண்டர் செய்து “ம்ய்க்கம்”“ நெர்க்கம்””துடங்கட்டும் உர்வு” “பருவாயில்லை””சொன்னஹா””மெதுவாஹ்” என்று இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதி தமிழில் பாடுவது பேஷனாகி விட்டது. மற்றும் காட்டுத்தனமானப் பாடல்களுக்குதான் ஆண்குரல் என்றாகிவிட்டது இப்போது (1979) இவரும் “நான் ஒரு ராசியில்லாத ராஜா” என்று பாடி அவுட் ஆப் பேஷனாகினார்.

தலைமுறையும் மாறுகிறது.சினிமாவும் மாறுகிறது.
 டப்பா பாடல்களைப் பாடிவிட்டு டீவியில் எதோ ஒரு“போவது யாரு”வில் மைக் பிடித்து நடுவர் ஆகிவிடுவது தாங்க முடியவில்லை.”உன்னைச் சொல்லி குற்றமில்லை ,...என்னைச் சொல்லிக் குற்றமில்லை..காலம் செய்த கோலமடி”

என்னை இன்னும் பிரமிக்க வைக்கும் பாடல்கள்:-(எல்லோரும் சொல்லும் வழக்கமான பாடல்களும் எனக்கும் பிடிக்கும்..ஆனால் அதை தவிர்க்கிறேன்)

1.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்( நான் ஏன் பிறந்தேன்) - ஒரு வித சோகம்

2.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா-(ஆலய மணி) -காதல் வடியும கண்ணதாசன் அசத்தல்.

3.குயிலாக நான் இருந்தென்ன-(செல்வ மகள்) -இளமை பொங்கும்

4. ஓராயிரம் பார்வையிலே-(வல்லவனுக்கு வல்லவன்)-புலம்பல்?

5.பள்ளியறைக்குள் வந்த புள்ளி -(தர்மம் எங்கே)-அசத்தும் இசை

5.யார் அந்த நிலவு (சாந்தி) ஸ்டைல் - சிவாஜி அசத்துவார்

6.ஆகாயப்பந்தலிலே பொன் -(பொன்னூஞ்சல்) இனிமை

7.ஒடும் மேகங்களே - (ஆயிரத்தில் ஒருவன்) -அமர்க்களம்

8.சந்தரோதயம் ஒரு பெண்ணானதோ - (சந்தரோதயம்) -வருணனை

9.எங்கே அவள் (குமரிகோட்டம்)

10.பல்லாக்கு வாங்க போனேன் (பணம் படைத்தவன்)

11.நான் காற்று வாங்க போனேன் (கலங்கரை விளக்கம்)

12.நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே(சதாரம்) 


13. வாடாமலரே தமிழ்த்தேனே (அம்பிகாபதி)

14.ராதே உனக்கு கோபம் ( குலமகள் ராதை)


15.இசை கேட்டால் புவி அசைந்தாடும் ( தவப்புதல்வன்)


16.விழியே விழியே உனக்கென்ன வேலை (புதிய பூமி)


இன்னும் எவ்வளவோ பாடல்கள் இருக்கு. எழுதிக்கொண்டே இருக்கலாம்.

இவர் ரஜினி, கமலுக்கும் பாடி இருக்கிறார்.

பிரமிக்க வைக்கும் தமிழில் சாதனா சர்க்கம்,உதித் நாராயன் பாட்டைக் கேளுங்கள் :-

விடிய விடிய

பிறகு இந்த ”விடிய விடிய” கேளுங்கள்:

விடிய விடிய

திரைக்கு வந்து சில மாதங்களே ஆன....

சண்முகம் கலரான நல்ல சட்டைப் பேண்டைத் தேர்ந்தெடுத்துப் போட்டுக்கொண்டான்.பாடி ஸ்பிரேயும் அடித்துக்கொண்டு கண்ணாடியில் ஒரு முறைப் பார்த்துக்கொண்டான்.கலைந்த தலை முடியை இரண்டு பக்கமும் ஒரு மாதிரி ஸ்டைலாக கோதி மீண்டும் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்தான்.திருப்தியாக இருந்தது,மறக்காமல் சீப்பை எடுத்து வைத்துக்கொண்டான்.

அதே மாதிரி அவன் நண்பர்கள் குமார்,வைத்தி,பிரகாஷ், நடேசு அவரவர் வீட்டில் கிளம்புவதற்கு ரெடியானர்கள்.

உடலில் ஒரு வித நடுக்கம் இருந்தது. முதல் முறையாயிற்றே.

நண்பன் தாமு சொன்னதை ஞாபகப்படுத்திக்கொண்டான்.”நீதான் முதல் ஆளா இருக்கனும்.அவள் உன்னை அடையாளம் கண்டுவிடுவாள்.அவ பூப்போட்ட  லைட் கலர் ரெட் டீ ஷர்ட்டும், ஒரு விதமான faded ஜீன்ஸ் போட்டிருப்பா. ”சிக்”னு இருப்பா.என்னப்பத்தி தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத ,,,,எதுவும் பேசாத... படம் முடிஞ்சவுடன் ...நான் சொன்ன மாதிரி செஞ்சுட்டு வா... கொஞ்ச நேரம் கழிச்சு வந்துடு .அந்த சந்துல டயோட்டா குவாலீஸ்ல வெயிட் பண்றேன்.  நம்ம எல்லோரும் அமுக்கா கிளம்பிடலாம்.ரெண்டு VSOP புல்லு வாங்கிட்டு நேர ஈசிஆர் போயிடலாம்.”

தியேட்டரில் படம் ஆரம்பித்தது. கூட்டமே இல்லாமல் “ஈ” அடித்தது.தாங்க முடியவில்லை.படம் ஒரு வழியாக முடிந்தது. சட்டென்று வெளிவருவதற்கு தோதாக கார்னர் சீட்டுதான். தலையை வாரிக்கொண்டான்.உடலில் ஒரு நடுக்கம் இருந்தது.வெளியே வந்தான் அவளைப்பார்த்துப் புன்னகைத்தான்.பின்னாடியே அவன் நண்பர்களும்.

“சூப்பர் படம்ங்க.. அதுவும் செகண்ட் ஆப் அருமைங்க”  -சண்முகம்

“படம் பிடிச்சுருக்குங்க.கேமரா சூப்பர்” நடேசு

“படம் சூப்பருங்க.ஒரு மாதிரி பேமிலி சப்ஜட்டு.நல்லா எடுத்துருக்காரு சிவன்”--குமார்

“அருமையா இருக்கு. ஹண்ரடு டேஸ்தான் பாட்டு சூப்பர் “ -வைத்தி

“ ரொம்ப நாளைக்குப் பொறவு.. ஒரு நல்ல படம்.அருமைங்க” பிரகாஷ்.

அடுத்த ஆள் வருவதற்குள் மைக்கை ஆப் செய்தாள் மூன் டீவி தொகுப்பாளினி.அடுத்த ஆள் கடுப்பானான்.”சாரி ,,என்று புன்னகைத்துக் கிளம்பினாள்.

படத்தயாரிப்பாளர் கொடுத்த இருபதாயிரம் ரூபாய் பணத்தை தாமு, அவள், கேமரா மேனும் பிரித்துக்கொண்டு அவள் தன் காரில் புறப்பட்டாள்.

Monday, December 21, 2009

பணம் பர்முடாஸ் வரை பாயும்

காத்திருக்க நேரமுண்டு

டிராபிக் சிக்னல் நிறுத்த
மோட்டர் பைக் பில்லியனில்
குல்லா போட்ட குழந்தை
அம்மா மடியில் உடகார்ந்து
கையாட்டிச் சிரித்து
சந்தோஷப்படுத்தி விடுகிறது
அன்றைய பொழுது முழுவதையும்

__________________________________

கருகத் திருவுளமோ?

வாஷிங்மெஷினால் நுரை பொங்க
வேக சுத்தல்களில்
கசக்கி அலசப்பட்டு கும்மப்பட்டு
கடைசியாக அசுர சுத்தலில்
ஈரம் உலற தோய்க்கப்பட்டு
சோப் வாசனையோடு கசங்கிபோய்
வெளி வந்த 100 ரூபாய் நோட்டில்
ஒரு காயமும் இல்லை
வழக்கமாக சிரித்தபடிதான்
இருக்கிறார் மகாத்மா காந்தி.
_____________________________________

வானமே எல்லை

பெர்முடாசின்
ஏதோ ஒரு உபரி பாக்கெட்டில்
கைவிடுகையில்
நன்றாகத் தோய்க்கப்பட்டு
சோப்பு வாசனையுடன்
அகப்பட்ட கசங்கிய
ஒரு 100 ரூபாய் நோட்டு
மற்ற உபரிகளிலும் கை
நுழைக்க வைத்துவிடுகிறது

Sunday, December 20, 2009

இளையராஜாவின் வயலின் ரங்கோலி

படம்:கோபுர வாசலிலே  பாடல்: காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.அற்புதமான பிரமிக்க வைக்கும் இசைக்கோர்ப்பில் காதல் கவிதை படிக்கிறார்(இசைக்கிறார்) இசைஞானி ராஜா.




”Yes..! I love that... idiot. I love that lovable idiஏஏஏஏஏஏot...! கதாநாயகி காதல் பசலையில் கூச்சலிட, அடுத்த வினாடி... கவுண்ட் 0.06ல் மேஸ்ட்ரோவின் இசை குறிப்புகளிலிருந்து வயலின் இசை தீற்றல்கள் grand ஆக சிலிர்த்து சிறகடித்துப் பறக்கத் தொடங்குகிறது.  அதைத் துரத்தி காதலித்தவாறே ஒரு  புல்லாங்குழல் மாயா மாளவ கெளள ராக ஸ்வர பின்னணியில் பின்னிப் பிணைந்து வானத்தில் பறக்க , இந்த தேவதைகளுடன்  கவுண்ட் 0.12ல் தாளங்கள் சேர்ந்துக்கொண்டு ஒரு ஜுகல் பந்தியாகி, ஒரு “வி” ஷேப் உருவாக, கவுண்ட் 0.21ல் புல்லாங்குழல் இந்த “வி” ஷேப் தேவதைகளை குஷியாக lead செய்ய ஆரம்பிக்கிறது

Musical riot of colours started!

0.39ல் “டிங்...டிங் டிங்” என பன்னீர் செண்டில் பன்னிர் தெளித்து வரவேற்க, 0.44ல் “காதல்.... கவிதைகள் படித்திடும் நேரம்” என்று The king of காதல் singing எஸ்பிபி கனிவோடு   பல்லவியை ஆரம்பித்து பாடி முடித்து 1.04ல் ”இதம் தரும்” என்று பாடி விட்டுவிட, சின்னகுயில் (சித்ரா)  இந்த புறாக்களுடன் சேர்ந்துக்கொள்கிறார்.தொடர்ந்து மீண்டும் பல்லவி பாடி “இதம் தரும்” என்ற வரிகள் வரும்  இடத்தில்  மீண்டும் சேர்ந்துக்கொள்கிறார் எஸ்பிபி.பிறகு பல்லவி முடிகிறது.


1.32 முதல் 2.03 வரை மேஸ்ட்ரோவின் இசை ங்கோலி தெறிக்கிறது.ரங்கோலி சிலம்பாட்டம்.What a spectacular display!  பட்டைய கிள்ப்புகிறார் மேஸ்ட்ரோ.பார்ப்போம் அதை.




1.32........................................................................2.03

 கீ போர்ட்/பியானோ காதல் மொழி மெலிய புன்னகையோடு ஆரம்பிக்க, புல்லாங்குழல் அதை அமோதித்துக்கொண்டே வர 1.47 ல் வயலின் தீற்றல்கள் வெள்ளப்பெருக்கெடுத்து முழுகடிக்க  புல்லாங்குழல் மீன் துள்ள்ல் துள்ளி நுரையோடு வெளி வர ,ok...ok... என் மீண்டும் செல்லமாக வயலின் பன்னீர் பீச்ச ரங்கோலி முடிய மீண்டும் எஸ்பிபி/சித்ரா ”கை வீசிடும் தென்றல்” முதல் சரணம்.

Landing at Gateway of India என 3.12 ல் டட்டும் டட்டும் என congo வில் அறிவிக்க 3.17 முதல் 3.40 வரை  ஒரு புல்லாங்குழல் புன்னகையோடு  வரவேற்க 3.41 -3.43ல் ஒரு சின்ன சலசலக்கும் ஓடையைக் கடந்து பிறகு  வயலின் ஜோதியில் கலக்கிறது எல்லா இசைகளும்.

(3.40 முடிந்து 3.41 to 3.43ல் ஒரு மெலிதான இடையிசை. பிறகு வரும் transition பிரமிக்க வைக்கும் மேதமை.   Hats off Maestro!)

3.59 மீண்டும் தங்கள் தேனினும் இனிய குரலில் எஸ்பிபி/சித்ரா இரண்டாவது  சரணம் பாட முடிக்க ஒரு இசை ரங்கோலி முடிகிறது.எஸ்.பி.பி அட்டகாசம்.


இந்த பாடல் கேட்க:காதல் கவிதைகள் படித்திடும்


Yes..! I love that lovable genius Maestro!


கேட்க: இளையராஜாவின் தவம்-காற்றில் எந்தன்







Saturday, December 19, 2009

வேட்டைக்காரன் - படம் பிடிச்சுருக்கு

வேட்டைக்காரன் விஜய் நடித்து அப்படி இப்படி என்று ஒரு வழியாக படம் ரீலிஸ் ஆகி விட்டது.வலையிலும் வருமா வராத என்று பரபரத்தார்கள்.இந்த வேட்டைக்காரன் டைட்டில்தான் பார்க்கத்தூண்டியது. அடுத்து வலையில் வரும் விமர்சனங்களும்.ரொம்ப நாள் வெயிட் செய்ய வைத்த படம். கடைசியாகப் பார்த்துவிட்டேன்.நேற்றுதான் பார்த்தேன். ஒரு ஆச்சரியம் என் மகனுக்குப் பிடிக்கவில்லை.எனக்குப் பிடித்துவிட்டது.

இதன் பாடல்கள்தான் என்னைக் கவர்ந்தன.
ஒரு பாடலில் கிடார்அருமையாகயூஸ்செய்திருக்கிறார் இசையமைப்பாளர்.அருமையான கதை.முதல் சீனே அதிரடியாக இருக்கு.வில்லனின் அந்த பார்வை.ஒருவித சஸ்பென்ஸ்.காமெடியும் சூப்பர்.ஒரு பாடல்  தத்துவம் கூட சொல்கிறது.அந்த டூயட் கூட அருமையா இருக்கு.


1964ல் வந்தாலும் அருமை. எம்.ஜி.யார், சாவித்திரி, எம்.ஆர்.ராதா,நாகேஷ், நம்பியார்,அசோகன்.இசை கே.வி.மகாதேவன்.டைரக்‌ஷன் எம்.ஏ.திருமுகம்.

1.மெதுவா மெதுவா தொடலாமா(என்ன கவிநயம்.விரசம் இல்லை)(ம்.உம்.ஊகூம் என்ற ஹம்மிங் சூப்பர்.)

2.உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்(முதலில் வரும் பேஸ் கிடார் அட்டகாசம்)(தத்துவம் அட்டகாசம்)( “மா..ஊ ஆ” என்று குதிரைஇசை சூப்பர்)

3.மஞ்சள் முகமே வருக(அருமையான் டூயட்)



4. சீட்டுகட்டு ராஜா (இது ஒரு மாதிரி கெளபாய் பாட்டு.சூப்பர்) இதன் இன்ஸ்பியரேஷனில்தான் ராஜராஜசோழன் பாட்டு ராஜா போட்டார்.

விஜய் நடித்த வேட்டைக்காரன் 2009 பார்த்துவிட்டுதான் எந்த வேட்டைக்காரன் பெஸ்ட் என்று சொல்லமுடியும்.

 படம் பார்க்க: வேட்டைக்காரன்


பாடல் கேட்க: வேட்டைக்காரன் பாடல்கள்

Thursday, December 17, 2009

சர்வேசன் “நச்” போட்டி மீதி 20 கதைகள்


மீதி இருபதில் இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு 1.நிமித்தக்காரன்(ஸ்ரீதர் நாராயணன்)2.அப்பா சொன்ன நரி கதை(நிலா ரசிகன்)”நச்” போட்டி முடிவுகள் வெளியாகி விட்டது பரிசுப்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.இதை நடத்திய சர்வேசன் மற்றும்நடுவர்கள் சென்ஷி,ராமலஷ்மி,வெட்டிப்பயல்,CVR  நன்றிகள் ஆயிரம்.

 ஏற்கனவே 50 கதைகளின் விமர்சனம் வெளியாகிவிட்டது. இந்த 20 கதைகளும் அப்போதே எழுதினது்தான்.போட்டியில் இருந்ததால் வெளியிடவில்லை.


டிஸ்கி:  பல வருட வெகுஜன/இலக்கிய கதை படித்த/எழுதிய அனுபவத்தில் இந்த விமர்சனங்களை எழுதுகிறேன்.சொந்த ரசனையும் வெளிப்படலாம்.பொது ரசனையும் வெளிப்படலாம்.நீங்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும். சற்று விலகி நின்று பார்த்துதான் எழுதினேன்.நீங்களும் சற்று விலகி நின்று பார்த்துசரி/தப்பு திர்மானிக்கலாம் /எடுத்துக்கொள்ளலாம்.



விமர்சனத்தில் மனம் புண்படுமானால் அட்வான்ஸ் மன்னிப்பு!

1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
 நல்ல அருமையான வருணனை.வாசகர்களின் இன் பாக்ஸ் திங்கிங்கை வைத்து கடைசி ”நச்”.
அனுபவ எழுத்தாளர் ஆயிற்றே கலாய்ப்பு முடிவு இல்லாமல் வேறு வைத்திருக்கலாமே.அதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.மெனக்கிட வேணும்.இந்த மாதிரி டைப்பில் நிறைய படித்தாகி விட்டது. மேலும்போட்டியிலும் இது மாதிரி நாலைந்து  கதை வருகிறது.


3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
வித்தியாசமான நடை.ரசித்துப்படித்தேன்.பிடித்திருந்தது.
ஆனால் ரொம்ப நீளம்.அலுக்க வைக்கிறது.இந்த கவித்துவமான கதைக்கு இந்த முடிவு?கொஞ்சம் அனுபவம் இருந்தால் முடிவை யூகிக்கலாம்.

10. திருப்பம் - சின்ன அம்மிணி
இரண்டு தம்பதிகளை காட்டி ஏதோ கள்ள உறவு என்று நினைக்க வைத்து வேறு ஒரு டிவிஸ்ட் கொடுக்கிறார். கதை பல திசைகளில் பயணிக்கிறது.”நச்”சுக்கு தோதாகக் கதை அமைகிறதா?

12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
”நச்” எங்கே?ஒரு விதமான சோகக் கதை.  ஏதோ மிஸ்ஸிங்.இந்த சீரியஸ் கதையை கையாண்டு இருக்கவேண்டாமோ?


19. இக்கணம் இக்கதை - Nundhaa

”மவனே... என்னோட கதைய படிக்கலேன்னா....தண்ணீ லாரில ஏறி சாவ...” என்பதை சர்-ரியலிசத்தில் சொன்ன கதை?கனவு,வினோதம்,அமானுஷ்யமான என நமது அன்றாட வாழ்வு லாஜிக்கில் ஒத்து வராது போகும் கதை.இதில் ஒரு வசதி இருக்கிற்து.பாசங்குத்தனமும் காட்டலாம்.கண்டுப்பிடிக்க பயிற்சி வேண்டும்.இன்னும் கூட சுவராஸ்மாக சொல்லலாம்.நச்?

30. அவரு..அவரு..ஒரு - வருண்
 நண்பரே!எப்படி இப்படி?

34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
 நல்ல நச்.நல்ல விவரிப்பு.ஈழம்?வித்தியாசமான கதை.பிடித்திருந்தது.மனதில் நின்ற கதை.

39. காமம் கொல் - Cable Sankar
நல்ல flow  உள்ள எழுத்தாளர்.சுலபமாக யூகிக்கலாம்.கதையை இன்னும் மெருகுப் படுத்தி இருக்கலாம்.ஜாலி டைப் கதை.


44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
 வித்தியாசமான கரு.ரசித்துப்படித்தேன.நல்ல நச்.முடிவு இன்னும் கூட வித்தியாசமாக இருந்திருக்கலாம்.நாளை என்ன நடக்கப்போகிற்து என்பதை நாளைக்குப் பார்க்கலாம் என்பதாக முடித்திருக்கலாம்.

45.கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
இதுவும் சரி “நச்”.வித்தியாசமான கற்பனை.நல்ல விவரிப்பு.


52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
நல்ல “நச்”.நல்ல வருணனை.ஆனால் என் அனுபவத்தில் இது மாதிரி நிறையப் படித்துவிட்டேன்.இறந்தவர் ஒரு லோயர் மிடில் கிளாஸ்,ஆனால் அவருக்கு பக்கத்துவீட்டுக்காரர் அப்பர் கிளாஸ்?
 

53. சட்டை - முரளிகண்ணன்
இவர் ஒரு “நச்” ஸ்பெஷலிஸ்ட்.அடுத்து சுவராஸ்மான கதாபாத்திர/சம்பவ விவரிப்புகள்.எல்லோருக்கும் குறி சொல்லும் பல்லி கடைசியில் கழுநீர் பானையில் விழுந்ததுதான் கதை.ஓகே.



55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
 கலாய்ப்பு விட்டு விட்டு நல்ல விறுவிறுப்பான கதைகள் எழுதலாமே.திறமை இருக்கிறது.



56. அபரஞ்சிதா - அடலேறு
Highly romanticized. மேகத்தில் உலவும் கதை.நம்பும்படி இல்லையே.சுருக்கி வேறு முடிவு வைத்திருக்கலாமோ?



59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
அருமையான “நச்”.ஆனா கதையை மோல்ட் செய்து இந்த நச்சுடன் இணைப்பதில் தவறிவிட்டார்.இந்த “திடீர்”நச்சுக்கு ஏதாவது கதையில் கோடிட்டு காட்டியிருக்கலாம்.
 
“தண்டமா சோத்த வடிச்சி”மாப்பிளையை கெஞ்சினவர் எப்படி இந்த டயலாக் சொல்லுவார்?


63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
அருமை. ”நச்”க்கு ஏற்றார் போல் கதையை அழகாக பின்னீருக்கிறார்.ஜாடிக்கேத்த மூடி.குறை:கதையின் கடைசி பாராவிற்கு முன் எதற்கு ஒரு சம்பந்தமே இல்லாத பாரா.கலை என்பது யார்?மர்மமா இருக்கு.



64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
நல்லா ஆரம்பித்து,ஏதோ சொல்ல வந்து,எங்கோ போய் சரியாக இல்லாமல் போய்விடுகிறது.ஹோம் வொர்க் செய்ய வேண்டும்.
சரியான “நச்”.’நச்” லாண்ட் ஆகும் இடத்தை இன்னும் கொஞ்சம் மெருகுப் படுத்தலாம்.
எப்படி?”கோல நோட்டைப் பார்த்தவுடன் டீச்சர் முகத்தில் ஒரு பூரிப்பு” என்பதாக ஆரம்பித்து.
கதைப் பிடித்திருந்தது.ரசித்தேன்.இவர் அனுபவ எழுத்தாளர்.    


ஓவர் ”சயின்ஸ்பிக்‌ஷண்டு”.நிறைய டெக்னிகல் சமாசாரம் இருப்பதால் “நச்”சவில்லை.

70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan
 
மாயஜால பெட் டைம் ஸ்டோரி.ஓபனிங்க் ஹாலிவுட் துறுதுறு.கதை சம்பந்தமான விவரணைகள் அருமை.ஆனால் நிமி-இளைஞன் பேச்சு எஸ்.எஸ்.சந்திரன் - ஓமகுச்சியாக மாறி சீரியஸ்னெஸ் நீர்க்கிறது.
சுருக்கச்சொல்லி டப்பென்று “நச்”போட வேண்டும்.கதைச்சொல்லி தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் இந்த கதையில் சொல்லிவிடுகிறார்.கதை ஏன் கேமரா மூலம் சொல்லப்படுகிறது?





 மீதி 50  கதைகள் விமர்சனம் பார்க்க:50 கதைகள் விமர்சனம்






Wednesday, December 16, 2009

இடது புஜம் - ஸ்திரீ சம்போகம் - கவிதை




முழங்கால்-சுகம், கணைக்கால் -சுபம்
பாதம்-பிரயாணம்,வலது புஜம்-ஆரோக்கியம்
முகம்-பந்து தரிசனம்,இடது மணிக்கட்டு-கீர்த்தி
பஞ்சாங்கப் பல்லி விழும் பலன்களுக்கு
சிறு வயதில் ரொமப ஆசைப்பட்டு
எதுவும் நடக்கவில்லை

வாலிப வயதில்
ஆண் குறி -  தரித்திரத்திற்கு பயந்து
இடது புஜம்-ஸ்திரீ சம்போகம்,புட்டம்-சுபம்
மார்பு - தனலாபம்,வயிறு - தான்ய லாபம்
பலன்களுக்கு ஆசைப்பட்டு
அதுவும் நடக்காமல் ஏமாந்து
நானும் பல்லிகளும் பிரிந்து விட்டோம்
பழைய வீட்டை விற்று விட்டு

புது ப்ளாட்டில்
வலது செவி-தீர்க்காயுசு பலனுக்கு 
ஒரு பல்லியும் இல்லை என்றாலும்
மனதில் குறுக்கும் நெடுக்கும்
டைனோசர் மாதிரி ஒடுகிறது
மிருத்தியு(எமன்)பயம் 

Tuesday, December 15, 2009

ஜபம் - கவிதை



 

கொத்துக் கொத்தாக
கொள்ளுப்பேரன்களும் எள்ளுப்பேரன்களுமாக
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து
விமர்சையாக திருக்கடையூரில்
சதாபிஷேகமும் ஆகிவிட்டது
88 வயது காமாட்சி மாமிக்கு

எல்லோரோடும் நட்ட நடுவில் 
எல்லா கல்யாணங்களிலும்
ஆத்துக்காரருடன் உட்கார்ந்து குரூப் போட்டோவும்
எடுத்துக் கொண்டாயிற்று

ஒவ்வொரு  தடவையும்
ஏதோ ஒன்றை விட்டுவிட்டு
மகா திருப்தி அடைவதுண்டு
காசிக்குப் போய் திரும்பிய போதெல்லாம்

அனாவசிய பேச்சும் கிடையாது
டீவி சிரியலும் பார்ப்பதில்லை
ரேடியோவும் கேட்பதில்லை
அனாவசிய வம்பும் நிறுத்தியாயிற்று
வெறும் காட்டன் புடவைதான்
நகைகளும் துறந்தாயிற்று

சும்மா இருக்கும் நேரத்தில்
ராமா கிருஷ்ணா கோவிந்தா
ஜப மாலையை உருட்டியபடி
காலத்தை கழித்தாலும்
 
இதையெல்லாம் விட்டிருக்க வேண்டாமே
என்றும் நெருடுவதுண்டு
ஜப மாலையின் வரிசையில்
9,10,11,12 ருத்ராட்ச கொட்டைகளை
உருட்டி ஜபிக்கும்போது
 

செல் பேச்சு..பத்து குழந்தைகள் போச்சு!




குரூரமான நேரடி பாதிப்பு -1.


குளத்தைச்சுற்றி என்ன கூட்டம்?
குளத்தில் முழ்கிய குழந்தைகளைத் தேடுகிறார்கள்
ஏன்  குழந்தைகள் முழுகியது?
பள்ளி வேன் விழுந்ததால்
பள்ளி வேன் ஏன் விழுந்தது?
டிரைவரின் கவனக் குறைவால்
என்ன கவனக் குறைவு?
வேன் ஓட்டுகையில் செல் போன் பேச்சு
______________________________
 
கவலையான 
மறைமுக பாதிப்பு -2.
நான்காவது வகுப்பு மாணவி லஷ்மி வேன் பிக்-அப் செய்யும் இடத்தில் தனியாக அழுதபடி இருக்கிறாள்.(எல்லோரும் வீட்டிற்குப் போயாயிற்று).இவள் கிரெஷ்க்குப்போக(creche) வேண்டும்.

ஏன் தனியாக அழுதபடி இருக்கிறாள்?
 ஸ்கூல் விட்டதும் வேன் பிக் அப் செய்யவில்லை 
ஏன் வேன் பிக் அப் செய்யவில்லை? 
டிரைவர் மறந்து விட்டார் 
ஏன் டிரைவர் மறந்து விட்டார்? 
புது  டிரைவர்.புது டாட்டா சுமோ. 
ஏன் புது  டிரைவர்.புது டாட்டா சுமோ? 
வழக்கமான பிக்-அப் வேன் ஸ்ட்ரைக் 
ஏன்  வேன் ஸ்ட்ரைக்? 
எல்லா பள்ளி வேன்களையும் அரசு ஆய்வு செய்வதை எதிர்த்து? 
ஏன் ஆய்வு?
பள்ளி வேன்களின் கண்டிஷன்,ரிஜிஸ்டிரேஷன்,டிரைவர் லைசன்ஸ் செக் செய்வது தொடர்பாக
ஏன் பள்ளி வேன்களின் கண்டிஷன்......etc.,etc.,?
கத்திரிபுலத்தில்  வேனில் சென்ற குழந்தைகள் குளத்தில் முழுகி சாவு

ஏன் சாவு?
வேன் டிரைவர் ஓட்டுகையில் செல் பேசியதால் கவனக் குறைவு 
                                            ___________

இந்த drill down analysis ல் வெளிவரும் பிரச்சனையின் ஆணி வேர்:

வண்டி ஓட்டுகையில்  செல் பேச்சு. 10 குழந்தைகள் போச்சு. 


Saturday, December 12, 2009

இளையராஜாவின் தவம்-காற்றில் எந்தன்

This song is meditation of Maestro Ilayaraja என்று சொல்லலாம்.  ஜானி திரைப்படத்தில் “காற்றில் எந்தன் கீதம் காணாத”.ரிலீஸ் வருடம் 15-08-1980.பாடியவர் எஸ்.ஜானகி இந்தப் பாட்டை எழுதியவர் கங்கை அமரன்.டைரக்‌ஷன் மகேந்திரன்.இது ஒரு romantic crime thriller.


கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின்(தியாகராஜார்,முத்துசாமி தீட்சிதர்,சியாமா சாஸ்திரி) கீர்த்தனைகள்(பாட்டுக்கள்) என்பது  மாதிரி  ராஜாவின் இசையின் உச்சக்கட்ட கீர்த்தனை.மேற்கத்திய இநதிய இசைக்கலநத ஒரு இசைமேஜிக்.தனக்காகப் போட்டுக்
கொண்டதோ?


உலகம் அடங்கிப்போய் நடுநிசியில் இதைக் கேட்டுப்பாருங்கள்.முதலில் வரும் இசைத் தீற்றல்கள் சிலிர்க்க வைக்கும்.கேட்கும் போது நாமும் தியானத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு.பாட்டில் ஒரு அமைதி/ஏக்கம் கவ்விக்கொண்டிருக்கும்.

படையப்பா படத்தில் ரம்யா ரஜனியின் கல்யாண கேசட்டை பைத்தியம் பிடித்தாற் போல் தனியாக ரூமில் போட்டு போட்டு பார்ப்பது போல் நான் இந்தப்பாட்டை பல ஆயிரம் முறைக் கேட்டிருக்கிறேன் இந்த 29 வருடத்தில்.ஆனால் ஒரு ரசனையோடு but ஒரு இடைவெளி விட்டு விட்டுத்தான்.

எனக்குத் தெரிந்து இந்த பிரபஞ்சத்தில் இது மாதிரி பிரமிக்கத்தக்க orchestration பாட்டின்Prelude,First and Second interludeல் போட்டது கிடையாது.It is awesome,stunning and soul stirring.It is highly magical also.சரஸ்வதி கடாட்சம்.பாட்டின் உணர்ச்சிகளை உள் வாங்கிய பின்னணி இசைக்கோர்ப்புகள்.

பாமர ரசனை,பண்டித ரசனை,சும்மா ரசனை,சாதா ரசனை எல்லாவற்றிற்கும் ஒத்துப்போகும் பாட்டு.அறிவு பூர்வமாகவும் சரி உணர்வு பூர்வமாகவும் சரி இது ஒரு soul stirring song தான். பண்டித ரசனையை தவிர மற்ற  ரசனைக்காரர்கள் சற்று உன்னிப்பாக கவனித்தால் மேஸ்ட்ரோவின் மெடிடேஷன் புரியும்.


இந்த பாட்டு கீரவாணி என்ற ராகத்தில் (கேள்வி ஞானம்தான்)
போடப்பட்டிருக்கிறதாம்..இதன் கிழ் ஸ்தாயிகள்(minor melody?) மேற்கத்திய இசைஒத்துப்போகும் என்று சொல்கிறார்கள்.ரொம்ப ஆழமான ராகம்.தன்னத்தானே நொந்துக்கொள்ளும் உணர்வு(பாவத்தில்) இந்த ராகத்தில் வெளிப்படுமாம.மேல் விவரம் விக்கிப்பீடியாவில்,

இந்த நொந்துக்கொள்ளும் ராகத்தில்தான் “கீரவாணி” என்ற பாட்டைப் போட்டிருக்கிறார் மேஸ்ட்ரோ. படம்: பாடும் பறவைகள். இதில் வயலினில் சிலம்பாட்டம் ஆடுவார் மேஸ்ட்ரோ.இன்னும் நிறைய பாட்டுக்கள் உள்ளன.இது கல்யாணிக்குப் பிறகு ராஜாவின் குதூகலம்(delight) என்று சொல்லலாம்.

காட்சி: சற்று லாஜிக் உதைத்தாலும் சினிமாவாச்சே பொறுத்துக்
கொள்ளலாம்..பிரபல பாடகியின் இசைகச்சேரிக்கு ஒரு கிரிமினல் குற்றவாளி(இவன் இவளின் ரசிகன் கம் காதலன்)எப்படியும் வருவான் என்று போலீஸ் பிடிக்கக் காத்திருக்கிறது.மழை கொட்டோ கொட்டன கொட்டுகிறது. ஆனாலும் அவன் கட்டாயம் வருவான் என்று இவள் பாடுகிறாள். ஒரு பக்கம் வரக்கூடாது இன்னோருப் பக்கம் வர வேண்டும் என்ற மன நிலை.வேறு யாரும் இல்லை கூட்டத்தில்.இவன் ஒருத்தனுக்காகப் பாட்டு பாடுகிறாள்.

கங்கைஅமரன்,மகேந்திரன்,அசோக்குமார் எல்லோருமே பாட்டிற்கு உணர்வு சேர்த்திருக்கிறார்கள்.இதில் துணை நடிகையாக வரும் பிரேமியும் கவிதைதான்.ஜானகி 31 அடி பாய்ந்தால் ஸ்ரீதேவி 32.5அடி பாய்ந்து இருக்கிறார் தன் முகபாவங்களில்.

Master Blaster  மேஸ்ட்ரோவிற்கு செம்ம....செம்ம...  team work.

இனி தியானம்.........!

தியானம்: 4.24 நிமிடங்கள்.இந்த 4.24 நிமிடங்களில் வேறு ஒரு கிரகத்திற்கு கொண்டுபோவார்.

சின்னச் சின்ன கம்பி ஊசி மழைத் தூறலாக (புது இசைக்கருவிஅல்லது கிடார்?) இசைத் தீற்றல்கள் leadல் ஆரம்பிக்க 0.05 ல் ஜானகி ஒரு கிடார் “திடுக்”கில் உள்ளே வந்து  மனதை வருடும் கீரவாணி ஹம்மிங்கை ஆரம்பித்து 0.27ல் மேல் சுருதிக்குப் போய்  0.32 ல் “காற்றில் எந்தன் கீதம் ” என்று பல்லவி ஆரம்பித்து பிறகு நிறுத்தி “காணாத ஒன்றைத் தேடுதே” என்று ஆரம்பிக்க 0.41ல் தபலாவின் தாளக் கட்டுகள் தாலாட்ட ,0.43ல் மீண்டும் ஒரு “காற்றில்”இறகு பறப்பது போல் ஒரு மெல்லிய உச்சரிப்பு.  பின்னணியில் கம்பி ஊசி மழைத் தீற்றலகள்  ஜோடியாக 1.12 வரை ஏகாந்தமான heavenly ecstasy!

1.12ல் மீண்டும் அந்த கம்பி ஊசி மழைத் தீற்றலகள் லீடுக்கு வர கருமேகங்கள் சுழ்வது போல் இடையில் ஒரு புல்லாங்குழல். இதைத்தொடர்வது மிதமான இசை.1.37  to 1.45l மயில் தோகை விரிப்பதுப் போல் வித விதமான வர்ண இசைக்கோர்ப்புகள்.  1.46ல் முதல் 1.57 வரைஅலை அலையான அமானுஷ்யமான வயிலின் ஓலங்கள் முடிய ஜானகியின் ஏக்க தொனியோடு கங்கை அமரனின் அற்புதமான வரிகளில் முதல் சரணம்.இசையின் உச்சம்.

 2.38 முதல் 3.08 வரை தியானத்தின் அடுத்த கட்டம்.2.47 to 3.16 வரை இசை தேவதைகளின்,ரீங்காரங்கள், புன்னகைகள்,பாலே நடனங்கள்,தியானங்கள் (அதுவும் 2.47 to 2.58  பிறகு 3.01 to 3.07 ராஜாவின் அசாத்திய மேதமை..stunning) etc., etc., முடிய மீண்டும் ஜானகி தன் மதுரமான குரலில் இரண்டாவது சரணம்.
 
 பின்னணி இசை (அதுவும் 2.47 to 2.58  பிறகு 3.01 to 3.07 )ஒரு மெலடியிலிருந்து இன்னோரு மெலடிக்கு ஸ்கேட்டிங் போல்  வழக்கிக்கொண்டு போகிறது. இந்த transition  பிரமிக்க வைக்கிறது.

இதில் பங்குகொண்ட எல்லா இசைக்கலைஞர்களுக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள்.வருடம் 29 ஆனாலும் இன்னும் இந்த பாட்டு freshஆக இருக்கிறது.ஒபேரா,சிம்போனி என்றால் மேலை நாட்டில் எழுந்து நின்று கைத்தட்டிப் பாராட்டுவார்கள்.

 இசை இருக்கும் வரை இந்தப் பாடல் இருக்கும்.
 பாடல் கேட்க:



Link: காற்றில் எந்தன் கீதம்

Wednesday, December 9, 2009

ஜஸ்ட் மிஸ்டு திருஷ்டி - கவிதை

 உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

சந்தோஷம்தான் மூர்த்திக்கு
தன் புத்தம் புதிய வீட்டை
காணவரப்போகும் சுந்தர்ராமன் பற்றி

வீட்டைப் பார்க்கையில்
அதைப் பார்த்துவிட கூடாது
முன் திட்டம் போட்டு  தீர்மானித்தபோதும்
மறந்தே போய் விடுகிறது கழட்டி வைக்க  

சுந்தராமனும் வந்து விடுகிறார்

அலங்காரமான தேக்கு கதவைத்
திறந்து முதல் அடி வைக்கையில்
சில்லிடும் மார்பிளில்
நீண்ட ஹால்

பிரமித்துவிடுகிறார் சுந்தர்ராமன்

பெருமைப்பிடிபட்டாலும்
அதைப் பார்க்காமல் இருக்கவேண்டுமே
நெருடுகிறது மூர்த்திக்கு 

பிரமிப்பைத் தொடர்ந்துக்கொண்டே
சுற்றிப் பார்க்கிறார் சுந்தர்ராமன்

பளபளக்கும் கிரனைட்டில்
கிச்சன் மேடை
நேர்த்தியான மரவேலைப்பாட்டில்
ஷெல்புகள் கப்போர்ட்டுகள்
வசீகரமான பெட்ரூம்கள்
ரசனையோடு பூசப்பட்ட
சுவர் வர்ணங்கள்
கலை அம்சத்தோடு
வார்க்கப்பட்ட பர்னிச்சர்கள்
ஜன்னல்கள் கதவுகள்
கடைசி பிரமிப்பாக
கவர்ச்சியான பால்கனி

பார்வையிடல் முடிந்ததும்
அதைப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என
மூர்த்தி படபடப்பின் உச்சத்தில் இருக்க

சுந்தர்ராமனின் கண்களில் 
திருஷ்டி பொங்கி வீடு முழுவதும்
தெறிக்கிறது

கழட்டி வைக்க மறந்துப்போனதை
பார்த்தே ஆக வேண்டும் என
இப்போது  மூர்த்தி படபடக்க

விடைப்பெறுகிறார் சுந்தர்ராமன்
அதைப் பார்க்காமலேயே

 S.Lavanya  Weds G.Suresh Kumar
ஊர் மெச்ச திருமணம் செய்த 
சுந்தர்ராமன்  பெண்ணின் திருமண
தாம்பூலப் பை  

கலை நேர்த்தியுடன் சணலில்
செய்யபட்டது

பிசுக்கடைந்து தொங்குகிறது
கிரில் கேட்டில் 
பால் பாக்கெட் போடும் 
பையாய்

வருத்தத்துடன்  பையின் உள்ளே
எட்டிப்பார்க்கிறார் மூர்த்தி
சுக்கு நூறாய் இருக்கிறது
70 லட்ச ரூபாய் வீடு





Thursday, December 3, 2009

களுக்கென கருவறை வாசனை




 




பாதி ராத்திரியில்
சிரித்து விடுகிறது
பக்கத்தில் படுத்திருந்த
எட்டு மாதக் குழந்தை
களுக்கென







கனவில உம்மாச்சி வந்திருக்க போல
மனைவியும் சிரித்து விடுகிறாள்
களுக்கென

கருவறை வாசன அடிக்கறாப்போல
மனைவியை முயங்கிக்கொண்டிருந்த
கணவனும் சிரித்து விடுகிறான்
களுக்கென