Wednesday, December 23, 2009

டி.எம்.செளந்தர்ராஜன் - Ctrl + Alt + Del





என்னை சிறுவயதில் தன் குரலால் மிகவும் பாதித்தவர் டிஎம்எஸ் என்கிற டி.எம்.செளந்திரராஜான் ஆளுமை.1960/70களில் சிறுபிராயத்தைக் கடந்தவர்கள் இவர் இசைக் கேட்டுதான் வளர்ந்திருப்பார்கள் இவர் தாக்கம் இல்லாமல் கடக்க முடியாது.பக்தி/சினிமா என்று இரு இடங்களிலும் கரகாட்டம் ஆடினார்.இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள்.



நான் தாக்கப்பட்டது முதலில் முக்கியமாக பக்திப் பாடல்களால்.”அழகென்ற சொல்லுக்கு முருகா” “கற்பனை என்றாலும்” “முருகனைக் கும்பிட்டு” போன்ற பக்தி பிரவாகம் எடுககும் பாடல்கள soul stirring .எங்கோ லவுட் ஸ்பீக்கரில் படர்ந்த வந்த இவர் குரல் இன்னும் காதில் ரீங்காரம் இடுகின்றன.என்னுடைய இசை ரசனைக்கு அடித்தளம் போட்டது.

மறுபடியும் சொல்கிறேன் “என் இசை ரசனைக்கு அடித்தளம் போட்டது”.காரணம் முதலில் தாக்கப்பட்டப்போதே நல்ல குரல் வளத்தால் தாக்கப்பட்டேன்.இவரைக் கேட்டு விட்டு பாகவதர்,பி.யூ.சின்னப்பா, தண்டபாணி தேசிகர்,எஸ்.ஜி.கிட்டப்பா மற்றும் கேட்டுருக்கிறேன்.

எனக்குத் தெரிந்து “ஆண் குரல்” உடைய ஒரே பாடகர்.குரலின் ஸ்தாயி,ஏற்றஇறக்கம்,உணர்வு உச்சரிப்பு,குழைவு எல்லாம அருமை.மதுரை சோமு மற்றும் சீர்காழி குரல்கள் அருமையாக இருந்தாலும் இவர் குரல் போல் வராது.இவர் பாகவதரைப் பின் பற்றித்தான் பாடினார்.இவருக்கு பின் வந்த பாடர்கள் எல்லாமே பெண் சாயல்.

”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி” “சொல்லடி அபிராமி””கல்வியா செல்வமா” “மதுரையில் பறந்த மீன்” “தம்பி நான் பொறந்தேன் காஞ்சியிலே””எங்கே நிம்மதி”பாடல்களை எடுக்கும்போதே கம்பீரக் குரலில் அசத்துவார்.அட்டகாசம்.எம்ஜியாருக்கு பாடினால எம்ஜியார் பாடுவது போலவும் சிவாஜிக்குப் பாடினால சிவாஜி பாடுவது போலவும் இருக்கும்.


மரபிசையான கர்நாடக இசையிலிருந்து மெல்லிசைக்கு வந்து கொடிப் பறக்கவிட்டவர்.அடுத்து இவரின் பன்முகத்திறமை.காதல்,வீரம்,சோகம்
கொள்கை,பக்தி,கிராமியம்,கர்நாடகம்,யூத்,சரித்திரம் என்று சிலம்பாட்டம் ஆடியவர்.இவருக்கு பலம் சேர்த்தவர் கண்ணதாசன் மற்றும் பல இசை ஜாம்பவான்கள்..அப்போதைய திரைக் கதைகளும் இவருக்குத் தோதாக வந்தது.
இவருக்கே எல்லா பெருமையும் கொடுக்க முடியாது.


ஆனால் ஒரு கட்டத்தில்இரண்டு பேருக்கும் பாடிப்பாடி stereotype ஆகி    என்னை மாதிரி ரசிகர்களை நொந்து போகவும செய்தார்.
(பணம் என்னடா... பணம்..! குணம்தானடா...” என்பது  மாதிரி தத்துவ பாடல்கள் படத்துக்குப் படம் பாடி, எங்களை Ctrl + Alt+Del போட வைத்தார்)

இவரின் தமிழ் உச்சரிப்பு, கம்பீரம்,ஆண்குரல் இதெல்லாம் இப்போது அவுட் ஆப் பேஷனாகி சாதனா,ஷ்ரேயா,உதித் தமிழை மாறி மாறி என்கெளண்டர் செய்து “ம்ய்க்கம்”“ நெர்க்கம்””துடங்கட்டும் உர்வு” “பருவாயில்லை””சொன்னஹா””மெதுவாஹ்” என்று இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதி தமிழில் பாடுவது பேஷனாகி விட்டது. மற்றும் காட்டுத்தனமானப் பாடல்களுக்குதான் ஆண்குரல் என்றாகிவிட்டது இப்போது (1979) இவரும் “நான் ஒரு ராசியில்லாத ராஜா” என்று பாடி அவுட் ஆப் பேஷனாகினார்.

தலைமுறையும் மாறுகிறது.சினிமாவும் மாறுகிறது.
 டப்பா பாடல்களைப் பாடிவிட்டு டீவியில் எதோ ஒரு“போவது யாரு”வில் மைக் பிடித்து நடுவர் ஆகிவிடுவது தாங்க முடியவில்லை.”உன்னைச் சொல்லி குற்றமில்லை ,...என்னைச் சொல்லிக் குற்றமில்லை..காலம் செய்த கோலமடி”

என்னை இன்னும் பிரமிக்க வைக்கும் பாடல்கள்:-(எல்லோரும் சொல்லும் வழக்கமான பாடல்களும் எனக்கும் பிடிக்கும்..ஆனால் அதை தவிர்க்கிறேன்)

1.நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்( நான் ஏன் பிறந்தேன்) - ஒரு வித சோகம்

2.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா-(ஆலய மணி) -காதல் வடியும கண்ணதாசன் அசத்தல்.

3.குயிலாக நான் இருந்தென்ன-(செல்வ மகள்) -இளமை பொங்கும்

4. ஓராயிரம் பார்வையிலே-(வல்லவனுக்கு வல்லவன்)-புலம்பல்?

5.பள்ளியறைக்குள் வந்த புள்ளி -(தர்மம் எங்கே)-அசத்தும் இசை

5.யார் அந்த நிலவு (சாந்தி) ஸ்டைல் - சிவாஜி அசத்துவார்

6.ஆகாயப்பந்தலிலே பொன் -(பொன்னூஞ்சல்) இனிமை

7.ஒடும் மேகங்களே - (ஆயிரத்தில் ஒருவன்) -அமர்க்களம்

8.சந்தரோதயம் ஒரு பெண்ணானதோ - (சந்தரோதயம்) -வருணனை

9.எங்கே அவள் (குமரிகோட்டம்)

10.பல்லாக்கு வாங்க போனேன் (பணம் படைத்தவன்)

11.நான் காற்று வாங்க போனேன் (கலங்கரை விளக்கம்)

12.நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே(சதாரம்) 


13. வாடாமலரே தமிழ்த்தேனே (அம்பிகாபதி)

14.ராதே உனக்கு கோபம் ( குலமகள் ராதை)


15.இசை கேட்டால் புவி அசைந்தாடும் ( தவப்புதல்வன்)


16.விழியே விழியே உனக்கென்ன வேலை (புதிய பூமி)


இன்னும் எவ்வளவோ பாடல்கள் இருக்கு. எழுதிக்கொண்டே இருக்கலாம்.

இவர் ரஜினி, கமலுக்கும் பாடி இருக்கிறார்.

பிரமிக்க வைக்கும் தமிழில் சாதனா சர்க்கம்,உதித் நாராயன் பாட்டைக் கேளுங்கள் :-

விடிய விடிய

பிறகு இந்த ”விடிய விடிய” கேளுங்கள்:

விடிய விடிய

10 comments:

  1. //இசை கேட்டால் புவி அசைந்தாடும் ( //

    ஏதோ ஒரு போவது யாருல இந்தப்பாட்டு ரவின்னு ஒருத்தர் நல்லா பாடினார். மத்தபடி இந்திப்பாடகர்கள் தமிழ் உச்சரிப்புக்கும் இவர் உச்சரிப்புக்கும் ... எ.கொ.ச தான்.

    ReplyDelete
  2. இவர் பாடியதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் என்று ஏராளம். இருப்பினும் `ஆறு மனமே ஆறு', நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு',மலர் கொடுத்தேன் ' போன்றவை என்னுடைய விருப்பப் பாடல்கள். என்னைப் பொறுத்தவரையில் டி.எம்.எஸ் ஒரு legend.நல்ல இடுகை ரவி.நன்றி.

    ReplyDelete
  3. //இவரும் “நான் ஒரு ராசியில்லாத ராஜா” என்று பாடி அவுட் ஆப் பேஷனாகினார்.//

    இந்தப் பாடலை சும்மா பாடினாலே வீட்டில் அம்மாவிடம் திட்டுவிழும்.

    ஆலமரமா நிண்ண மனுஷனையே சாய்ச்சப் பாட்டுடா அது, அதை ஏன் பாடுறேன்னு.

    டி.எம்.எஸ் பாடலை ஓடவிட்டு காரோட்டிச் செல்வது ஒரு சுகம். அதுவும் அது எம்ஜிஆர் பாடலாக இருந்துவிட்டால் குதிரையில் செல்லும் கம்பீரம் கூடவே வந்து ஒட்டிக்கொள்ளும்.

    ReplyDelete
  4. எந்த ஒரு பிண்ணணியுமில்லாமல் முன்னுக்கு வந்த சிலரில் ஒருவர்.ந,ன,ண உச்சரிப்பைக் கூட மிகச் சரியாகச் செய்தவர்.நாணமோ....இன்னும் நாணமோ!பாடலைக் கேளுங்கள் புரியும்!.....

    ReplyDelete
  5. சாதனா சர்கம் & ஷ்ரேயா கோஷல் இருவரும் ராஜாவின் இசையில் பாட ஆரம்பித்ததால் என்கவுண்டர் இருக்காது! ராஜா நன்றாக் train பண்ணியிருப்பார்! ஆனால் திலீப் a.k.a. அல்லாஹ் ரக்கா ரஹ்மான் பாடல்களில் கொலை உச்சத்துக்குப் போகும்! தமிழ்ப்பாடல்களில் தமிழ்க் கொலைக்கு வித்திட்டவர் ரஹ்மான்! அதனாலேயே எனக்கு அவர்மேல் ரொம்பவே கோபம்!

    ReplyDelete
  6. நேசன்..., said...

    //எந்த ஒரு பிண்ணணியுமில்லாமல் முன்னுக்கு வந்த சிலரில் ஒருவர்.ந,ன,ண உச்சரிப்பைக் கூட மிகச் சரியாகச் செய்தவர்.நாணமோ....இன்னும் நாணமோ!பாடலைக் கேளுங்கள் புரியும்!....//

    ஆமாம்.சூப்பர் பாட்டு.

    ReplyDelete
  7. //ஆனால் திலீப் a.k.a. அல்லாஹ் ரக்கா ரஹ்மான் பாடல்களில் கொலை உச்சத்துக்குப் போகும்! தமிழ்ப்பாடல்களில் தமிழ்க் கொலைக்கு வித்திட்டவர் ரஹ்மான்! அதனாலேயே எனக்கு அவர்மேல் ரொம்பவே கோபம்!//

    உண்மைதான்.ஆனால் நல்ல பாடகர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. இப்போது மெலோடி போய் fast beat ஆகி ஒரு மாதிரி ஆகிவிட்டது.ஆளுக்கொரு பாடல் பாடி விட்டுப் போய்விடுவதால் உச்சரிப்பில் சிரத்தை இல்லை.

    நன்றி.

    ReplyDelete
  8. டி.எம்.எஸ் எனக்கும் ரொம்ப பிடித்த பாடகர். உணர்ச்சி பூர்வமாகபாடினார்.
    என்னுடைய இந்தப் பதிவை படித்து விட்டு பின்னூட்டமிடுங்களேன்.

    vedivaal.blospot.com/2009/04/blog-spot_22.html

    சகாதேவன்

    ReplyDelete
  9. Blogger சகாதேவன் said...

    // டி.எம்.எஸ் எனக்கும் ரொம்ப பிடித்த பாடகர்.உணர்ச்சி பூர்வமாகபாடினார்.என்னுடைய இந்தப் பதிவை படித்து விட்டு பின்னூட்டமிடுங்களேன்.//

    வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!