மீதி இருபதில் இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு 1.நிமித்தக்காரன்(ஸ்ரீதர் நாராயணன்)2.அப்பா சொன்ன நரி கதை(நிலா ரசிகன்)”நச்” போட்டி முடிவுகள் வெளியாகி விட்டது பரிசுப்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.இதை நடத்திய சர்வேசன் மற்றும்நடுவர்கள் சென்ஷி,ராமலஷ்மி,வெட்டிப்பயல்,CVR நன்றிகள் ஆயிரம்.
ஏற்கனவே 50 கதைகளின் விமர்சனம் வெளியாகிவிட்டது. இந்த 20 கதைகளும் அப்போதே எழுதினது்தான்.போட்டியில் இருந்ததால் வெளியிடவில்லை.
டிஸ்கி: பல வருட வெகுஜன/இலக்கிய கதை படித்த/எழுதிய அனுபவத்தில் இந்த விமர்சனங்களை எழுதுகிறேன்.சொந்த ரசனையும் வெளிப்படலாம்.பொது ரசனையும் வெளிப்படலாம்.நீங்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும். சற்று விலகி நின்று பார்த்துதான் எழுதினேன்.நீங்களும் சற்று விலகி நின்று பார்த்துசரி/தப்பு திர்மானிக்கலாம் /எடுத்துக்கொள்ளலாம்.
விமர்சனத்தில் மனம் புண்படுமானால் அட்வான்ஸ் மன்னிப்பு!
1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga)
நல்ல அருமையான வருணனை.வாசகர்களின் இன் பாக்ஸ் திங்கிங்கை வைத்து கடைசி ”நச்”.அனுபவ எழுத்தாளர் ஆயிற்றே கலாய்ப்பு முடிவு இல்லாமல் வேறு வைத்திருக்கலாமே.அதில்தான் உங்கள் திறமை இருக்கிறது.மெனக்கிட வேணும்.இந்த மாதிரி டைப்பில் நிறைய படித்தாகி விட்டது. மேலும்போட்டியிலும் இது மாதிரி நாலைந்து கதை வருகிறது.
3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன்
வித்தியாசமான நடை.ரசித்துப்படித்தேன்.பிடித்திருந்தது.
ஆனால் ரொம்ப நீளம்.அலுக்க வைக்கிறது.இந்த கவித்துவமான கதைக்கு இந்த முடிவு?கொஞ்சம் அனுபவம் இருந்தால் முடிவை யூகிக்கலாம்.
10. திருப்பம் - சின்ன அம்மிணி
இரண்டு தம்பதிகளை காட்டி ஏதோ கள்ள உறவு என்று நினைக்க வைத்து வேறு ஒரு டிவிஸ்ட் கொடுக்கிறார். கதை பல திசைகளில் பயணிக்கிறது.”நச்”சுக்கு தோதாகக் கதை அமைகிறதா?
12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன்
”நச்” எங்கே?ஒரு விதமான சோகக் கதை. ஏதோ மிஸ்ஸிங்.இந்த சீரியஸ் கதையை கையாண்டு இருக்கவேண்டாமோ?
19. இக்கணம் இக்கதை - Nundhaa
”மவனே... என்னோட கதைய படிக்கலேன்னா....தண்ணீ லாரில ஏறி சாவ...” என்பதை சர்-ரியலிசத்தில் சொன்ன கதை?கனவு,வினோதம்,அமானுஷ்யமான என நமது அன்றாட வாழ்வு லாஜிக்கில் ஒத்து வராது போகும் கதை.இதில் ஒரு வசதி இருக்கிற்து.பாசங்குத்தனமும் காட்டலாம்.கண்டுப்பிடிக்க பயிற்சி வேண்டும்.இன்னும் கூட சுவராஸ்மாக சொல்லலாம்.நச்?
30. அவரு..அவரு..ஒரு - வருண்
நண்பரே!எப்படி இப்படி?
34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன்
நல்ல நச்.நல்ல விவரிப்பு.ஈழம்?வித்தியாசமான கதை.பிடித்திருந்தது.மனதில் நின்ற கதை.
39. காமம் கொல் - Cable Sankar
நல்ல flow உள்ள எழுத்தாளர்.சுலபமாக யூகிக்கலாம்.கதையை இன்னும் மெருகுப் படுத்தி இருக்கலாம்.ஜாலி டைப் கதை.
44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன்
வித்தியாசமான கரு.ரசித்துப்படித்தேன.நல்ல நச்.முடிவு இன்னும் கூட வித்தியாசமாக இருந்திருக்கலாம்.நாளை என்ன நடக்கப்போகிற்து என்பதை நாளைக்குப் பார்க்கலாம் என்பதாக முடித்திருக்கலாம்.
45.கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன்
இதுவும் சரி “நச்”.வித்தியாசமான கற்பனை.நல்ல விவரிப்பு.
52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar
நல்ல “நச்”.நல்ல வருணனை.ஆனால் என் அனுபவத்தில் இது மாதிரி நிறையப் படித்துவிட்டேன்.இறந்தவர் ஒரு லோயர் மிடில் கிளாஸ்,ஆனால் அவருக்கு பக்கத்துவீட்டுக்காரர் அப்பர் கிளாஸ்?
53. சட்டை - முரளிகண்ணன்
இவர் ஒரு “நச்” ஸ்பெஷலிஸ்ட்.அடுத்து சுவராஸ்மான கதாபாத்திர/சம்பவ விவரிப்புகள்.எல்லோருக்கும் குறி சொல்லும் பல்லி கடைசியில் கழுநீர் பானையில் விழுந்ததுதான் கதை.ஓகே.
55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி
கலாய்ப்பு விட்டு விட்டு நல்ல விறுவிறுப்பான கதைகள் எழுதலாமே.திறமை இருக்கிறது.
56. அபரஞ்சிதா - அடலேறு
Highly romanticized. மேகத்தில் உலவும் கதை.நம்பும்படி இல்லையே.சுருக்கி வேறு முடிவு வைத்திருக்கலாமோ?
59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV
அருமையான “நச்”.ஆனா கதையை மோல்ட் செய்து இந்த நச்சுடன் இணைப்பதில் தவறிவிட்டார்.இந்த “திடீர்”நச்சுக்கு ஏதாவது கதையில் கோடிட்டு காட்டியிருக்கலாம்.
“தண்டமா சோத்த வடிச்சி”மாப்பிளையை கெஞ்சினவர் எப்படி இந்த டயலாக் சொல்லுவார்?
63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா
அருமை. ”நச்”க்கு ஏற்றார் போல் கதையை அழகாக பின்னீருக்கிறார்.ஜாடிக்கேத்த மூடி.குறை:கதையின் கடைசி பாராவிற்கு முன் எதற்கு ஒரு சம்பந்தமே இல்லாத பாரா.கலை என்பது யார்?மர்மமா இருக்கு.
64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
நல்லா ஆரம்பித்து,ஏதோ சொல்ல வந்து,எங்கோ போய் சரியாக இல்லாமல் போய்விடுகிறது.ஹோம் வொர்க் செய்ய வேண்டும்.
அருமை. ”நச்”க்கு ஏற்றார் போல் கதையை அழகாக பின்னீருக்கிறார்.ஜாடிக்கேத்த மூடி.குறை:கதையின் கடைசி பாராவிற்கு முன் எதற்கு ஒரு சம்பந்தமே இல்லாத பாரா.கலை என்பது யார்?மர்மமா இருக்கு.
64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை
நல்லா ஆரம்பித்து,ஏதோ சொல்ல வந்து,எங்கோ போய் சரியாக இல்லாமல் போய்விடுகிறது.ஹோம் வொர்க் செய்ய வேண்டும்.
சரியான “நச்”.’நச்” லாண்ட் ஆகும் இடத்தை இன்னும் கொஞ்சம் மெருகுப் படுத்தலாம்.
எப்படி?”கோல நோட்டைப் பார்த்தவுடன் டீச்சர் முகத்தில் ஒரு பூரிப்பு” என்பதாக ஆரம்பித்து.
கதைப் பிடித்திருந்தது.ரசித்தேன்.இவர் அனுபவ எழுத்தாளர்.
ஓவர் ”சயின்ஸ்பிக்ஷண்டு”.நிறைய டெக்னிகல் சமாசாரம் இருப்பதால் “நச்”சவில்லை.
70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan
மாயஜால பெட் டைம் ஸ்டோரி.ஓபனிங்க் ஹாலிவுட் துறுதுறு.கதை சம்பந்தமான விவரணைகள் அருமை.ஆனால் நிமி-இளைஞன் பேச்சு எஸ்.எஸ்.சந்திரன் - ஓமகுச்சியாக மாறி சீரியஸ்னெஸ் நீர்க்கிறது.
சுருக்கச்சொல்லி டப்பென்று “நச்”போட வேண்டும்.கதைச்சொல்லி தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் இந்த கதையில் சொல்லிவிடுகிறார்.கதை ஏன் கேமரா மூலம் சொல்லப்படுகிறது?
மீதி 50 கதைகள் விமர்சனம் பார்க்க:50 கதைகள் விமர்சனம்
மாயஜால பெட் டைம் ஸ்டோரி.ஓபனிங்க் ஹாலிவுட் துறுதுறு.கதை சம்பந்தமான விவரணைகள் அருமை.ஆனால் நிமி-இளைஞன் பேச்சு எஸ்.எஸ்.சந்திரன் - ஓமகுச்சியாக மாறி சீரியஸ்னெஸ் நீர்க்கிறது.
சுருக்கச்சொல்லி டப்பென்று “நச்”போட வேண்டும்.கதைச்சொல்லி தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் இந்த கதையில் சொல்லிவிடுகிறார்.கதை ஏன் கேமரா மூலம் சொல்லப்படுகிறது?
மீதி 50 கதைகள் விமர்சனம் பார்க்க:50 கதைகள் விமர்சனம்
:-)
ReplyDeleteவிமர்சனப் பகிர்விற்கு நன்றி ரவிசங்கர்ஜி..
வலைச்சரத்தில் உங்கள் பதிவு
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2009/12/blog-post_17.html
இக்கணம் இக்கதை was experimental. Intellectual Thriller space in tamil fiction is not explored much and I wanted to try it. It is a parametrized story. Should fiction always be closer to reality and full of logic and not otherwise? Then how else do you validate other forms :)
ReplyDelete//”மவனே... என்னோட கதைய படிக்கலேன்னா....தண்ணீ லாரில ஏறி சாவ...”//
ஒரு கோணத்தில் பார்த்தால் கதையின் முடிவை இப்படியும் கொள்ளலாம் தான் ஆனால் வேறு முடிவுகளும் வேறு கோணங்களில் இருக்கின்றன :)
அப்புறம் - இந்தக் கதையில் நச் இல்லைங்கறீங்களா :)
உங்கள் விமர்சனம் பற்றி எனக்கு துளியும் வருத்தம் இல்லை. இது கூட இல்லையென்றால் அப்புறம் என்ன படைப்பு ... என்ன விவாதம் :) என் எதிர்வினையைப் பதிவு செய்திருக்கிறேன் அவ்வளவு தான்.
ஒன்று சொல்ல மறந்தேன் உங்கள் விமர்சனங்களில் தெரியும் analysis கவர்கிறது
ReplyDeleteஇன்னும் காணமேன்னு பாத்தேன். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி சென்ஷி.
ReplyDeleteநன்றி தண்டோரா.அங்கே என் கமெண்ட் போட்டுவிட்டேன்.
நன்றி நன்றி நன்றி.
ReplyDeleteஅடுத்த தடவை, வெளியிடும் முன் உங்களிடம் கருத்து கேட்டு நச்சரிக்கலாமென இருக்கிறேன்...
வாங்க Nundhaa. கருத்துக்கு நன்றி.
ReplyDelete//இக்கணம் இக்கதை was experimental. Intellectual Thriller space in tamil fiction is not explored much and I wanted to try it. It is a parametrized story.//
ஒரு செட்டான பாராமீட்டரில் சொல்லப்பட்டக் கதை என்று சொல்லலாமா?உங்களின் மற்ற கதைகள்
சிலவற்றை சிலாகித்து பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.
// Should fiction always be closer to reality and full of logic and not otherwise? Then how else do you validate other forms :)//
Not at all.,otherwise it cannot be science fiction/magical realism/surrealism/mayajaala kathai.I wrote that sentence just to explain to the readers. I have seen people writing cock and bull(shit) stories in the name of above tags
because readers can"t decipher.
//உங்கள் விமர்சனம் பற்றி எனக்கு துளியும் வருத்தம் இல்லை. இது கூட இல்லையென்றால் அப்புறம் என்ன படைப்பு ... என்ன விவாதம் :) என் எதிர்வினையைப் பதிவு செய்திருக்கிறேன் அவ்வளவு தான்//
உங்கள எதிர்வினை ந்ன்றாகத்தான் இருக்கிறது.் இ்த்் மாதிரி story எழுதுவதற்கு oru talent வேணும்.அது உங்களிடம் இருக்கிறது.
நன்றி.
இந்தப் போட்டியில் எனக்குப் ரொம்ப பிடித்த கதை
நானே நானா - சுப.தமிழினியன். படியுங்கள்.இதுவும்
ஒரு மாதிரி டைப் கதைதான்.
அதி பிரதாபன் said...
ReplyDelete//நன்றி நன்றி நன்றி.
அடுத்த தடவை, வெளியிடும் முன் உங்களிடம் கருத்து கேட்டு நச்சரிக்கலாமென இருக்கிறேன்...//
பார்ட்டிக் கொடுங்கப்பா!கட்டிங்(பார்ல, டாஸ்மாக் அல்ல) போட்டு ரொம்ப நாளாச்சு.
சுயமாவே நிறைய திறமை இருக்குங்க.எழுதி வச்சுட்டு ஒரு வாரம் கழித்துப் படிங்க.இது மாதிரி
நாலு வாட்டி செய்யுங்க.ஐடியா பறந்துட்டு வரும்.
என்ன செய்வது பாரதியார் கூட முதலில் தோற்றுப்போனார்.
பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க...
ReplyDeleteஎன் கதையே அடுத்தடுத்து வரப்போற கதைகளுக்கான ஹோம்வொர்க்காத்தான் நான் எடுத்துக்கிட்டேன் சார்...
கதையே முடிவு பண்ணாமல் எழுத ஆரம்பித்தேன். அதன் போக்கிலேயே சென்று ஒரே சிட்டிங்கில் முடித்தேன்.தங்கள் விமர்சனத்தை நான் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கிறேன் சார்.
ஒரு கதை விமர்சனம் குறையுது. ஆதியோட ‘கறுப்பு ஞாபகம்’...
எனக்குப் பிடிச்சது ஸ்ரீதேவியோட ‘ஹோம்வொர்க்’ கதை.
ஷக்திப்ரபாவின் கதை ஏற்கனவே படித்த ஞாபகம்.மற்றபடி சிறந்த நச்தான். நிலாரசிகனின் கதையில் கதைஆசிரியரின் புத்திசாலித்தனம்தான் தெரிந்தது. அது ஸ்ரீதரின் கதையில் கொஞ்சம் மட்டுப் பட்டதால் அவர் கதை பிடித்திருந்தது.
சின்ன அம்மணியின் கதை உங்களின் கருத்தே எனக்கும்.’கடைசி இரவு’ நல்ல கதை. ஆனால் இதே போல் கேபிளாரின் ஒரு குறும்படம் இருக்கிறது. அதனால் யூகித்துவிட்டேன்..
’நிபுணன்’ சராசரிக்கும் கீழ்.
’நெல்லிமரம்’ நன்றாக இருந்தாலும் முன்பே படித்த உணர்வு.
’இக்கணம் இக்கதை’- அதெல்லாம் கவிஞர்கள் உலகம். எனக்கு வேலையில்லை.
’அவரு..அவரு..ஒரு’- கதாசிரியர் ஒரு பின்னவீனத்துவவாதின்னு நினைக்கிறேன்.:-)
’ஈழம்’- நன்று.
‘காமம் கொல்’-சுஜாதா.
‘நறுமண தேவதை’- நல்ல நச். நல்ல கதை.
‘அடலேறு’- எனக்குப் பிடித்த கதை.சுகமாய் இருந்தது வாசிக்கையில்..
’அடுத்த வீட்டுப் பெண்’-ஓகே
’சட்டை’- நன்றாக இருந்தது.
‘வெள்ளை உருவத்தில் வில்லன்’- :-)
’இயந்திரம்’-பரவாயில்லை./
‘கறுப்பு ஞாபகம்’-பரவாயில்லை.
க்ரேட் வொர்க்...
நல்ல அலசல்....
ReplyDeleteஆனா.. 20ல ஒண்ணு குறையுதே....
//ஒரு கதை விமர்சனம் குறையுது. ஆதியோட ‘கறுப்பு ஞாபகம்’//
ReplyDeleteசுட்டிக்காட்டியதற்கு நன்றி. பதிவிட்டு விட்டேன்.
உங்கள் விமர்சனமும் சூப்பர்.சிரத்தையாகப் படித்ததற்கு ரொம்ப சந்தோஷம். நல்ல அனுபவம் கிடைக்கும்.
நன்றி
ஸ்வர்ணரேக்கா said...
ReplyDelete//நல்ல அலசல்....
ஆனா.. 20ல ஒண்ணு குறையுதே//
சுட்டிக்காட்டியதற்கு நன்றி. பதிவிட்டு விட்டேன்.
நன்றி.
Ravishankar!
ReplyDeleteI can justify my story beutifully with living examples. We always pretend different from what we really are.
Like I said, some silly issues are serious too. There is nothing wrong in choosing a like-minded partner.
Anyway, we always think childmolesting stories and superstitious stories are higher qulaity. Personally, I hate child-molestesting stories, never beleived in astrology to appreciate them. Personalities like me only can come up with silly stories but please dont tell me such characteres dont exist in real life. They do!
Take it easy!
It should read beautifully :)
ReplyDeleteவருகைக்கு நன்றி.கருத்துக்கும் நன்றி.
ReplyDelete//I can justify my story beutifully with living examples. We always pretend different from what we really are.//
எந்த கருவில் வேண்டுமானுலும் எழுதுங்கள்.ஆனால்
கதையில் லாஜிக்,கதாபாத்திரத்தின் குணாதிசயம்
(characterisation),சுவராஸ்யம்,மூட்,எல்லாம் பொருந்திவர எழுதுங்கள்.
//லதாவுக்கு காதல் கல்யாணத்திலெல்லாம் நம்பிக்கை இல்லை. அதுவும் இந்த கம்ப்யூட்டர் ஆண்-லைன் காதல் தலைவிரித்தாடும் இந்தக்காலத்தில்! நேற்றைய காதல் ஜோடிகளெல்லாம் இன்று பிரிந்து தியானமும் மெடிட்டேஷனும் செய்துகொண்டிருக்கிற இந்த நவீன உலகத்தில், காதல் எல்லாம் சும்மா கொஞ்ச நாள் உடல்ப்பசிக்குத்தான் என்று நம்பினாள், லதா//
அவளை புத்திசாலியாக காட்டுகிறீர்கள். ஆனால்....ரஜினி ரசிப்பு என்பது மட்டும்தான் வாழ்நாள் கூட வரும் என்று நம்புகிறாள். வருமா?
//அது ரொம்ப சில்லியான விஷயம் என்பதால அதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை//
அவளுக்கே தெரிகிறது சில்லி என்பது.
//ஒரு மாதிரி நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் 3 மாதத்தில் திருமணம் என்று கல்யாணத்தேதியும் முடிவானது. நிச்சயம் செய்யப்பட்டு முடிந்து//
அப்பறம்தான் தனியாக பேசுகிறாள்.பெண் பார்க்கும்போது தனியாக பேசத் தோன்றவில்லை. ஏன்? பேசி இருக்கலாமே புத்திசாலியாயிற்றே.
பின்னால் பேசியதால் எவ்வளவு பேருக்கு மன உளைச்சல்.
//வேலைபார்க்கும் அறிவாளி மகள். புன்முறுவலுடன் அவள் ரூமிலும் அவள் கம்ப்யூட்டர் ஸ்க்ரினிலும் உள்ள ஸ்டெயிலானா போஸ்களை பார்த்தார், தந்தை.//
???????????????? தந்தை அவளை விட ஒரு படி மேலே(?) இருக்கிறார்.
கதை குழந்தைத்தனமாக இருக்கிறது.வருண் இதை நீங்கள் வேறு விதமாக எழுதி இருக்கலாம். உங்கள் பின்னூட்டங்களை கவனியுங்கள்.you should read between the lines of comments.
நிறைய எழுதுங்கள்.அனுபவம் வரும்.
நன்றி.
***அவளை புத்திசாலியாக காட்டுகிறீர்கள். ஆனால்....ரஜினி ரசிப்பு என்பது மட்டும்தான் வாழ்நாள் கூட வரும் என்று நம்புகிறாள். வருமா?**
ReplyDeleteWhy not?
An extremely intelligent person can have silly weaknesses. I see people of that sort as well.
Anyway, I can go on debate on this but I dont think it will get us anywhere.
Take care
நன்றி வருண்.
ReplyDeleteநான் முதலிலேயே படித்துவிட்டேன். ஆபீஸில் இருந்ததால் 'காணவில்லை' பின்னூட்டம் போடமுடியவில்லை. லீவு முடிஞ்சு இன்னைக்கு வந்து பார்த்தால் இருக்கிறது.
ReplyDeleteஎன் கதையை 'பரவாயில்லை'ரகம் என்று சொன்ன தமிழ்பறவையை நேறில் சந்திக்கும்போது 'கவனித்து'க்கொள்கிறேன்.
இப்போது நீங்கள் சொல்லுங்கள்.. இந்த ஒற்றை வரிதான் விமர்சனமா? நல்லாயிருக்கே கதை.!
ரொம்ப நன்றி ரவிசங்கர்... உங்கள் விமர்சனத்திற்கு...
ReplyDeleteநன்றி ராம்குமார் - அமுதன்.
ReplyDeleteவருகைக்கும் நன்றி