Wednesday, December 23, 2009

திரைக்கு வந்து சில மாதங்களே ஆன....

சண்முகம் கலரான நல்ல சட்டைப் பேண்டைத் தேர்ந்தெடுத்துப் போட்டுக்கொண்டான்.பாடி ஸ்பிரேயும் அடித்துக்கொண்டு கண்ணாடியில் ஒரு முறைப் பார்த்துக்கொண்டான்.கலைந்த தலை முடியை இரண்டு பக்கமும் ஒரு மாதிரி ஸ்டைலாக கோதி மீண்டும் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்தான்.திருப்தியாக இருந்தது,மறக்காமல் சீப்பை எடுத்து வைத்துக்கொண்டான்.

அதே மாதிரி அவன் நண்பர்கள் குமார்,வைத்தி,பிரகாஷ், நடேசு அவரவர் வீட்டில் கிளம்புவதற்கு ரெடியானர்கள்.

உடலில் ஒரு வித நடுக்கம் இருந்தது. முதல் முறையாயிற்றே.

நண்பன் தாமு சொன்னதை ஞாபகப்படுத்திக்கொண்டான்.”நீதான் முதல் ஆளா இருக்கனும்.அவள் உன்னை அடையாளம் கண்டுவிடுவாள்.அவ பூப்போட்ட  லைட் கலர் ரெட் டீ ஷர்ட்டும், ஒரு விதமான faded ஜீன்ஸ் போட்டிருப்பா. ”சிக்”னு இருப்பா.என்னப்பத்தி தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத ,,,,எதுவும் பேசாத... படம் முடிஞ்சவுடன் ...நான் சொன்ன மாதிரி செஞ்சுட்டு வா... கொஞ்ச நேரம் கழிச்சு வந்துடு .அந்த சந்துல டயோட்டா குவாலீஸ்ல வெயிட் பண்றேன்.  நம்ம எல்லோரும் அமுக்கா கிளம்பிடலாம்.ரெண்டு VSOP புல்லு வாங்கிட்டு நேர ஈசிஆர் போயிடலாம்.”

தியேட்டரில் படம் ஆரம்பித்தது. கூட்டமே இல்லாமல் “ஈ” அடித்தது.தாங்க முடியவில்லை.படம் ஒரு வழியாக முடிந்தது. சட்டென்று வெளிவருவதற்கு தோதாக கார்னர் சீட்டுதான். தலையை வாரிக்கொண்டான்.உடலில் ஒரு நடுக்கம் இருந்தது.வெளியே வந்தான் அவளைப்பார்த்துப் புன்னகைத்தான்.பின்னாடியே அவன் நண்பர்களும்.

“சூப்பர் படம்ங்க.. அதுவும் செகண்ட் ஆப் அருமைங்க”  -சண்முகம்

“படம் பிடிச்சுருக்குங்க.கேமரா சூப்பர்” நடேசு

“படம் சூப்பருங்க.ஒரு மாதிரி பேமிலி சப்ஜட்டு.நல்லா எடுத்துருக்காரு சிவன்”--குமார்

“அருமையா இருக்கு. ஹண்ரடு டேஸ்தான் பாட்டு சூப்பர் “ -வைத்தி

“ ரொம்ப நாளைக்குப் பொறவு.. ஒரு நல்ல படம்.அருமைங்க” பிரகாஷ்.

அடுத்த ஆள் வருவதற்குள் மைக்கை ஆப் செய்தாள் மூன் டீவி தொகுப்பாளினி.அடுத்த ஆள் கடுப்பானான்.”சாரி ,,என்று புன்னகைத்துக் கிளம்பினாள்.

படத்தயாரிப்பாளர் கொடுத்த இருபதாயிரம் ரூபாய் பணத்தை தாமு, அவள், கேமரா மேனும் பிரித்துக்கொண்டு அவள் தன் காரில் புறப்பட்டாள்.

13 comments:

  1. கதை நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது..

    ReplyDelete
  2. நன்றி குணசீலன்.

    ReplyDelete
  3. வித்தியாசமான தளம் ரவி.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. தண்டோரா ...... said...

    //i think it is vsop//

    ஆமாம்.Very Superior Old Pale(VSOP)

    தல கத எப்படி?

    ReplyDelete
  5. நன்றி T.V.Radhakrishnan

    ReplyDelete
  6. நன்றி ராஜா சுப்ரமணியன்.

    ReplyDelete
  7. கதை நல்லா இருந்தது சார்... நல்ல நச்(இன்னும் பழக்கதோசம் போகலை).

    ReplyDelete
  8. நன்றி தமிழ்ப்பறவை.”நச்” போட்டியின் போது “நச்” என்று இந்த கரு தோன்றவில்லை.

    ReplyDelete
  9. உண்மையில இப்படித்தான் நடக்குதா.. பாவம் தயாரிப்பாளர்கள்...

    கதை அருமை..

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!