Tuesday, December 15, 2009

செல் பேச்சு..பத்து குழந்தைகள் போச்சு!




குரூரமான நேரடி பாதிப்பு -1.


குளத்தைச்சுற்றி என்ன கூட்டம்?
குளத்தில் முழ்கிய குழந்தைகளைத் தேடுகிறார்கள்
ஏன்  குழந்தைகள் முழுகியது?
பள்ளி வேன் விழுந்ததால்
பள்ளி வேன் ஏன் விழுந்தது?
டிரைவரின் கவனக் குறைவால்
என்ன கவனக் குறைவு?
வேன் ஓட்டுகையில் செல் போன் பேச்சு
______________________________
 
கவலையான 
மறைமுக பாதிப்பு -2.
நான்காவது வகுப்பு மாணவி லஷ்மி வேன் பிக்-அப் செய்யும் இடத்தில் தனியாக அழுதபடி இருக்கிறாள்.(எல்லோரும் வீட்டிற்குப் போயாயிற்று).இவள் கிரெஷ்க்குப்போக(creche) வேண்டும்.

ஏன் தனியாக அழுதபடி இருக்கிறாள்?
 ஸ்கூல் விட்டதும் வேன் பிக் அப் செய்யவில்லை 
ஏன் வேன் பிக் அப் செய்யவில்லை? 
டிரைவர் மறந்து விட்டார் 
ஏன் டிரைவர் மறந்து விட்டார்? 
புது  டிரைவர்.புது டாட்டா சுமோ. 
ஏன் புது  டிரைவர்.புது டாட்டா சுமோ? 
வழக்கமான பிக்-அப் வேன் ஸ்ட்ரைக் 
ஏன்  வேன் ஸ்ட்ரைக்? 
எல்லா பள்ளி வேன்களையும் அரசு ஆய்வு செய்வதை எதிர்த்து? 
ஏன் ஆய்வு?
பள்ளி வேன்களின் கண்டிஷன்,ரிஜிஸ்டிரேஷன்,டிரைவர் லைசன்ஸ் செக் செய்வது தொடர்பாக
ஏன் பள்ளி வேன்களின் கண்டிஷன்......etc.,etc.,?
கத்திரிபுலத்தில்  வேனில் சென்ற குழந்தைகள் குளத்தில் முழுகி சாவு

ஏன் சாவு?
வேன் டிரைவர் ஓட்டுகையில் செல் பேசியதால் கவனக் குறைவு 
                                            ___________

இந்த drill down analysis ல் வெளிவரும் பிரச்சனையின் ஆணி வேர்:

வண்டி ஓட்டுகையில்  செல் பேச்சு. 10 குழந்தைகள் போச்சு. 


9 comments:

  1. அந்தக் கொடுமையைத் தொடர்ந்து அரசு நடவடிக்கை எடுப்பதே பெரிய விஷயம். அதுவும் கூடாது என்று ஸ்ட்ரைக் வேறு செய்கிறார்கள்.எல்லா வண்டி ரெஜிஸ்ட்ரேஷனையும் கேன்சல்பண்ணனும்.

    ReplyDelete
  2. :(

    மிகக் கொடுமையான விஷயம். எரிச்சல்தான் வருகிறது. வேறு என்ன செய்ய என்று தெரியவில்லை.

    இன்னொன்று : போன வாரம் ஐந்து நாட்கள் அவர்கள் ஸ்ட்ரைக் செய்தபோது குழந்தைகளைப் பள்ளியில் கொண்டுவிடப் பலர் சிரமப் பட்டார்கள். இதற்கு என்னதான் தீர்வோ?

    ReplyDelete
  3. மிக மிக அநியாயம்.
    நேரத்திற்குச் சரியான பதிவு. பத்துக் குழந்தைகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்.

    ReplyDelete
  4. எது செய்தாலும் திருந்தாத ஜென்மங்கள்.

    ReplyDelete
  5. பதிவில் குறிப்பிட்ட குழந்தை லஷ்மிக்கு நடந்தது உண்மை. நன்றி சுந்தர்.

    ReplyDelete
  6. //பத்துக் குழந்தைகளுக்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்//

    சொல்ல மாட்டார்கள். அவர்களும் மறந்துவிடுவார்கள். நாமும் மறந்து விடுவோம்.

    ReplyDelete
  7. Option 1 : we should admit our children in a school which is walkable from our residence.
    Option 2 : Govt. should make it mandatory for all schools to provide transportation on their own(impractical, though)

    ReplyDelete
  8. கருத்துக்கு நன்றி அழகன்.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!