Wednesday, December 30, 2009

வாணி ஜெயராம் Vs சாதன சர்க்கம்

பாலைவனச்சோலை என்ற பெயரில் 1981ல் ஒரு படம் வந்தது.இசை சங்கர்-கணேஷ்.இதில் சுகாசினி, சந்திரசேகர்,ராஜீவ்,ஜனகராஜ்,தியாகு,கைலாஷ் நடித்திருந்தார்கள்.டைரக்‌ஷன் ராபர்ட் ராஜசேகர்.

இவர் ஒரு நடிகர் கூட.ராஜசேகர் நிழல்கள் படத்தில் நடித்தவர்.”இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாட்டில் வருவார்.இப்போது நிறைய டீவி சீரியல்களில் வருவதாக கேள்வி.

இது ரீமேக் செய்யப்பட்டு அதே பெயரில் இப்போது வரப்போகிறது அல்லது வந்துவிட்டது(?).அதே கதைதான்.அதே சென்டிமெண்டுதான்.


கொஞ்சம் கூட யோசிக்கமாட்டார்களா?அது 1981.இது 2009. கிட்டத்தட்ட 29 வருடங்கள் தள்ளி வந்துவிட்டோம்.அப்போது தெருமுனை வெட்டிஇளைஞர்கள்,வேலையில்லாத்
திண்டாட்டம்(உச்சம்),மிமிக்ரி,காதல் த்ரில்,பஸ் ஸ்டாண்ட் வெயிட்டிங்,சென்டிமெண்ட்,பாவடை தாவணி தங்கச்சி, புடவை கதாநாயகி,என எல்லாம் இருந்த காலம்.சுத்தமாக டெக்னாலஜி முன்னேற்றம் இல்லாத காலகட்டம்.அதன் பின்னணியில் வார்க்கப்பட்ட படம். அப்போது அது ஒரு டிரெண்ட் செட்டர் . வெகுவாக ரசிக்கப்பட்டது.நான் மூன்று முறைப் பார்த்தேன்.

ஆனால் இப்போது? ஏம்பா! எடுப்பதற்கு முன்னாடி அட்லீஸ்டு   ஒரு குடிசையாவதுப் போட்டு யோசிங்கப்பா! படத்தின் ஜீவன் என்ன என்று ஸ்கேன் செய்து அப்பறம் எடுங்கப்பா!

அடுத்து பாடல்.இதில் வாணி ஜெயராம் பாடிய “மேகமே... மேகமே..” என்ற கசல் பாடல் ரொம்ப ஹிட் அப்போது.அருமையான பாட்டு.வரிகள்.இது ”சுட்ட” பாட்டு என்று கூட சொல்லுவார்கள்.இப்போதும்  இதை வாணி இசை நிகழ்ச்சிகளில் பாடுகிறார். அவ்வளவு மெலடி.அவ்வளவு உயிரோட்டம் உள்ள பாட்டு.

அட்லீஸ்டு இங்கேயாவது  ஒரு சின்ன புடலாங்காய் பந்தல் போட்டு  யோசிச்சு இருக்கலாம்.பாட்டின் ஜீவன் dead bodyஆகிவிட்டது.”எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்” என்று ஒரு வரி வரும் இந்தப் பாட்டில்.அந்த மாலையை வைத்து பாட்டிற்கு அஞ்சலி செலுத்தி விட்டார்கள்.

லேட்டஸ்ட்டில்(இசை Bobby) இதை சாதனா சர்க்கம் பாடி உள்ளார்.இந்த கசல் பாட்டுக்கு தபலா,சரோட், சாரங்கி போன்றவற்றை உபயோகித்துப் போட்டால்தான் கசலின் ஜீவன் தெரியும்.இதில் Electronic drum padல் தட்டப்படுகிறது.”தூரிகை எரிகின்ற போது  இந்த தாள்களில் எதுவும் எழுதாது”

ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டுப் படித்தால்(???) எப்படி ஜீவன் (எழுதும்) வரும்.தாங்க முடியவில்லை.அடுத்து இவர் குரலில் தட்டும்  வழக்கமான மழலை.வாணி எப்படி பாடுகிறார் பாருங்கள்.காரணம் மொழி ஆளுமை/உணர்வு.

முதலில் வாணி மேம் பாட்டுக் கேளுங்கள்.

வாணி ஜெயராம் -1981

சாதனா சர்க்கம் -2009

ஓரிஜினல் கஜல்-ஜக்ஜித் சிங்(இங்கிருந்து சுடப்பட்டது)


பத்து தடவை யோசிங்கப்பா எடுப்பதற்கு முன்னாடி!

27 comments:

 1. மேகமே மேகமே என்ன ராகம், தேஷ்??

  இது எவர்க்ரீன் பாட்டு

  ReplyDelete
 2. ments:

  சின்ன அம்மிணி said...

  //மேகமே மேகமே என்ன ராகம், தேஷ்??//

  தெரியவில்லை சின்ன அம்மிணி.

  நன்றி

  ReplyDelete
 3. அருமையான பாட்டு.வாணிஜெயராமின் `என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்'(ரோசாப்பூ ரவிக்கைக்காரி) என்கிற பாட்டும் என்னோட பேவரிட்.

  ReplyDelete
 4. December 30, 2009 2:04 PM
  ஸ்ரீ said...
  //வாணிஜெயராமின் `என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்'(ரோசாப்பூ ரவிக்கைக்காரி) என்கிற பாட்டும் என்னோட பேவரிட்//

  ஆஹா! என்னோடதும் கூட.மறக்க முடியாதப் பாட்டு.

  ReplyDelete
 5. ஸ்ரீ .,
  அது ஜென்சி பாடியது என நினைக்கிறேன்..

  ReplyDelete
 6. கும்க்கி said...

  //ஸ்ரீ .,
  அது ஜென்சி பாடியது என நினைக்கிறேன்..
  December 30, 2009 8:05 PM//

  ஆஹா! வாணி ஜெயராம் பாடியது கும்க்கி.சத்தியமா ஜென்சி இல்லை.

  நன்றி

  ReplyDelete
 7. December 30, 2009 8:05 PM
  Ilan said...
  //its Jency friends//

  இல்லீங்க.அது வாணி.

  ReplyDelete
 8. சாதனா சர்கமைக் குறை சொல்லாதீர்கள் சார்...அவரைச் சரியாகப் பாடவைப்பது இசையமைப்பாளர்தானே...
  ராஜாவின் இசையில் எவ்வளவு அழகாகப் பாடுகிறார்...’ஆலாபனை செய்யும் மாலைப் பொழுது’(படம்:பொன்மேகலை) கேட்டிருப்பீர்களெனெ நினைக்கிறேன்...
  மற்றபடி 1981 ‘பாலைவனச் சோலை’ பாடல் ‘மேகமே மேகமே’
  2009 ‘பாலைவனச்சோலை’பாடல் வெகு ‘சோகமே சோகமே’
  இன்னொரு விசயம் சொல்ல வந்தேன்.பி.எஸ். சசிரேகா பேட்டியில் சொன்னது...’காயத்ரி’ படத்தில் ராஜாண்ணா இசையில் பாடுகையில் முதலில் கஷ்டமாக இருந்ததாம், ட்யூனின் ஏற்ற இறக்கங்கள் புரியாமல். ஆனால் கம்போஸிங்கில் ராஜாவின் கையாட்டல்களுக்கேற்பப் பாடியதில் அதுவே பழகிவிட்டதாம்.
  இதே ஸ்டேட்மெண்டை சமீபத்தில் ‘பா’ படத்திற்காகப் பாடிய அமிதாப்பும் சொல்லியிருக்கிறார்.
  அதனால்தான் அவரின் கம்போஸிங் ‘தவமாகவும்’ மற்றவர்களின் கம்போஸிங்’சவமாகவும்’ படுத்து விடுகிறது...

  ReplyDelete
 9. December 31, 2009 10:20 AM
  தமிழ்ப்பறவை said...
  //சாதனா சர்கமைக் குறை சொல்லாதீர்கள் சார்...அவரைச் சரியாகப் பாடவைப்பது இசையமைப்பாளர்தானே...
  ராஜாவின் இசையில் எவ்வளவு அழகாகப் பாடுகிறார்...’ஆலாபனை செய்யும் //

  தல,

  இவர்கள்(ஷ்ரேயா மற்றும் பலர்) குரலைப் பற்றி எனக்கு எந்த வித மாற்று கருத்து இல்லை.

  ஆனால்...

  இவர்களை உன்னிப்பாகக் கேட்டதில் இரண்டு விஷயங்கள்.1.மழலை 2.வீரியம் இல்லாத உச்சரிப்பு
  காரணம் மொழி.மொழி தெரிந்துப் பாடும்போது கட்டாயம் உணர்வை பாட்டில் போட்டுப் பாடலாம்.
  என்னதான் இசையமைப்பாளர் சீர் படுத்தினாலும்
  மொழி உணர்வு வேண்டும்.

  இதிலேயே “தூரிகை எரிகின்ற போது” வரிகளை கவனியுங்கள்.வாணி Vs சாதனா.

  //மற்றபடி 1981 ‘பாலைவனச் சோலை’ பாடல் ‘மேகமே மேகமே’
  2009 ‘பாலைவனச்சோலை’பாடல் வெகு ‘சோகமே சோகமே’//

  சூப்பர்.

  ராஜா சிரத்தையாக கவனித்து செய்கிறார். மற்றவர்கள் “பருவாயில்லை” என்று விட்டுவிடுகிறார்கள்.

  ReplyDelete
 10. yes, its not jency, sorry for the wrong info.

  ReplyDelete
 11. தேனொளி== கெட்ட வார்த்தை மாதிரி இருக்கிறது  பாவையின் ராகம் சோகங்களோ...,

  ReplyDelete
 12. முதலில் 2009 ’மேகமே மேகமே’ பாட்டை டி.வி.யில் பார்த்தபோது அது சாதனாதான் என்று தெரியாமலிருந்தது. ஆனால் கேட்டுவிட்டு நொந்தவர்களில் நானும் ஒருவன். பொருந்தாத ஒரு ட்ரம்ஸ் தட்டலுடன் கொடுமையாக இருந்தது.

  (மழலையாய் கொஞ்சம் தப்பாகப் பாடினாலும் சாதனாவின் குரல் எனக்கு ஏனோ பிடிக்கும்.)

  ReplyDelete
 13. SUREஷ் (பழனியிலிருந்து) said...

  //தேனொளி== கெட்ட வார்த்தை மாதிரி இருக்கிறது//

  அப்படியா! எனக்குத் தெரியவில்லை.மறுபடி கேட்கிறேன்.


  // பாவையின் ராகம் சோகங்களோ...,//
  // தினம் கனவு, எனது உணவு...,//

  நீங்கள் ரசித்த வரிகளோ? வாணி மேம் அற்புதமாகப் பாடுவார்.

  ReplyDelete
 14. சித்ரன் said...
  // (மழலையாய் கொஞ்சம் தப்பாகப் பாடினாலும் சாதனாவின் குரல் எனக்கு ஏனோ பிடிக்கும்.)//

  ஆமாம்.ஒத்துப்போகிறேன்.இது ஒரு ரசனைதான்.எனக்குப் பிடிக்கவில்லை.இதே மழலை
  ஷரேயாவிடம் இருக்கிறது.எனக்குப் பிடிக்கிறது.

  சார்! உச்சரிப்பில் வீரியல் இல்லாதது மிகப்பெரிய குறை.

  நன்றி

  ReplyDelete
 15. ரசனையான பதிவு தலைவா. மேகமே மேகமே நிஜமாவே என்ன ராகம்னு தெரியலையா இல்ல சும்மா கேட்குறாங்களா சின்ன அம்மிணி? ரொம்ப பேமஸ்ங்க.

  ReplyDelete
 16. இந்த ரீமேக் ரீமிக்ஸ் இந்த கொடுமை எல்லாம் நிட்ரால் தேவலை.பாட்டை போல படமும் படு திராபை

  ReplyDelete
 17. கும்க்கி said...
  ஸ்ரீ .,
  அது ஜென்சி பாடியது என நினைக்கிறேன்.//


  கும்மு.. அது வாணியம்மாதான்..

  ரவிசார் பின்னறீங்க..

  ReplyDelete
 18. ரவி சார்.. அது டெக்னிக்கல் ராகம் மிக்ஸிங். தர்பாரி கானடா.இந்துஸ்தானி கலந்த.அந்த “ம்ம்ம்”

  ReplyDelete
 19. ஆமா தண்டோரா தல.. அது ஒரு கஜல் மாதிரியான தர்பாரி,

  ReplyDelete
 20. இரும்புதிரை/நர்சிம்

  இருவருக்கும் நன்றி.ஒரு வழியா பிரச்சனை ஓய்ந்தது.

  ReplyDelete
 21. Blogger இரும்புத்திரை said...

  //இந்த ரீமேக் ரீமிக்ஸ் இந்த கொடுமை எல்லாம் நிட்ரால் தேவலை.பாட்டை போல படமும் படு திராபை//

  ஆஹா! இது மிக்சிங் கிடையாதுங்க.”ரா”ங்க.அடுத்து ஒண்ணு தெரியுமா “சின்ன தம்பி”
  என்னும் காவியத்தை ரீமேக் பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்.
  கேபிள் சங்கர் உதவியுடன்.

  ReplyDelete
 22. தண்டோரா & நர்சிம்:

  //சின்ன அம்மிணி said...
  மேகமே மேகமே என்ன ராகம், தேஷ்??//

  சத்தியமா இது தேஷ் இல்லை அம்மிணி.

  ஒரு நண்பர் சொன்னது:

  ஹிந்துஸ்தானி காபி.

  ’ஜகதோ தாரண..” பாடிப் பார்த்து
  எங்கேயாவது மாட்ச் ஆவுதான்னு பாருங்க்ப்பா.

  ReplyDelete
 23. எனது வலைப் பூவானது
  கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
  http://kondralkatru.blogspot.com

  அன்பின் ராஜன் ராதாமணாளன்

  ReplyDelete
 24. உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!