Wednesday, December 9, 2009

ஜஸ்ட் மிஸ்டு திருஷ்டி - கவிதை

 உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

சந்தோஷம்தான் மூர்த்திக்கு
தன் புத்தம் புதிய வீட்டை
காணவரப்போகும் சுந்தர்ராமன் பற்றி

வீட்டைப் பார்க்கையில்
அதைப் பார்த்துவிட கூடாது
முன் திட்டம் போட்டு  தீர்மானித்தபோதும்
மறந்தே போய் விடுகிறது கழட்டி வைக்க  

சுந்தராமனும் வந்து விடுகிறார்

அலங்காரமான தேக்கு கதவைத்
திறந்து முதல் அடி வைக்கையில்
சில்லிடும் மார்பிளில்
நீண்ட ஹால்

பிரமித்துவிடுகிறார் சுந்தர்ராமன்

பெருமைப்பிடிபட்டாலும்
அதைப் பார்க்காமல் இருக்கவேண்டுமே
நெருடுகிறது மூர்த்திக்கு 

பிரமிப்பைத் தொடர்ந்துக்கொண்டே
சுற்றிப் பார்க்கிறார் சுந்தர்ராமன்

பளபளக்கும் கிரனைட்டில்
கிச்சன் மேடை
நேர்த்தியான மரவேலைப்பாட்டில்
ஷெல்புகள் கப்போர்ட்டுகள்
வசீகரமான பெட்ரூம்கள்
ரசனையோடு பூசப்பட்ட
சுவர் வர்ணங்கள்
கலை அம்சத்தோடு
வார்க்கப்பட்ட பர்னிச்சர்கள்
ஜன்னல்கள் கதவுகள்
கடைசி பிரமிப்பாக
கவர்ச்சியான பால்கனி

பார்வையிடல் முடிந்ததும்
அதைப் பார்க்காமல் இருக்க வேண்டுமே என
மூர்த்தி படபடப்பின் உச்சத்தில் இருக்க

சுந்தர்ராமனின் கண்களில் 
திருஷ்டி பொங்கி வீடு முழுவதும்
தெறிக்கிறது

கழட்டி வைக்க மறந்துப்போனதை
பார்த்தே ஆக வேண்டும் என
இப்போது  மூர்த்தி படபடக்க

விடைப்பெறுகிறார் சுந்தர்ராமன்
அதைப் பார்க்காமலேயே

 S.Lavanya  Weds G.Suresh Kumar
ஊர் மெச்ச திருமணம் செய்த 
சுந்தர்ராமன்  பெண்ணின் திருமண
தாம்பூலப் பை  

கலை நேர்த்தியுடன் சணலில்
செய்யபட்டது

பிசுக்கடைந்து தொங்குகிறது
கிரில் கேட்டில் 
பால் பாக்கெட் போடும் 
பையாய்

வருத்தத்துடன்  பையின் உள்ளே
எட்டிப்பார்க்கிறார் மூர்த்தி
சுக்கு நூறாய் இருக்கிறது
70 லட்ச ரூபாய் வீடு





44 comments:

  1. தமிழ்ப்பறவை,பிரகாஷ்,ராஜன் ராதா மணாளன் கவனத்திற்கு. முன்பு படித்தது 8 மாத வளர்ச்சி கவிதை. பார்மெட்டிங்க் பார்ப்பதற்காக பப்ளிஷ் செய்து மீண்டும்save as draft செய்யாமல் விட்டுவிட்டேன்.

    இதுதான் 10 மாத சுகப்பிரசவம்.

    So மன்னிக்க.

    பிரகாஷ்,

    //Please check your keyboard , your space bar is functioning as enter key”//

    சரியாத்தான் இருக்கு.

    ReplyDelete
  2. :-) ஐயோ பாவம் மூர்த்தி !!!!!

    -சுந்தர ராமன்

    ReplyDelete
  3. நல்ல பொறி அய்யா...! இதை தாங்கள் ஒரு நல்ல சிறுகதையாக்க முயற்சித்திருக்கலாமே.

    ReplyDelete
  4. உரையாடல் சிறுகதைப் போட்டிதான் முடிஞ்சிருச்சே!

    ReplyDelete
  5. நன்றி சக்திவேல்.

    ReplyDelete
  6. அது ஒரு கனாக் காலம் said...

    //:-) ஐயோ பாவம் மூர்த்தி !!!!!

    -சுந்தர ராமன்
    December 11, 2009 2:26//

    இதுவே நல்லா இருக்கே... சுந்தர்ராமன்!

    ReplyDelete
  7. சித்ரன் said...

    //நல்ல பொறி அய்யா...! இதை தாங்கள் ஒரு நல்ல சிறுகதையாக்க முயற்சித்திருக்கலாமே//

    500% சதவீதம் தெரியும் சிதரன்.ஆனா ஒரு கவிதையா முயற்சி பண்ணலாமேன்னுதான்.

    ReplyDelete
  8. அதிஷா said...

    //உரையாடல் சிறுகதைப் போட்டிதான் முடிஞ்சிருச்சே!
    December 11, 2009 4:28 PM//

    சூப்பர்!சும்மா ஒரு சிறு கதையை கவிதை லெவலுக்கு ட்ரைப் பண்ணினேன்.

    ReplyDelete
  9. சித்ரன் /அதிஷா.. பின்னூட்டத்தில் விட்டுப்போனது.

    போட்டி விதிமுறையில் ஒன்று கிழ்:

    //இந்தத் தலைப்பு அல்லது இந்தப் பொருள் என்று எதுவும் கிடையாது. எந்தத் தலைப்பிலும் கவிதைகள் எழுதலாம்//

    இது ஒரு காரணம்.

    நன்றி

    ReplyDelete
  10. காணுமேன்னு பார்த்தேன் , நான் சொன்னதை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம். :P

    ReplyDelete
  11. நல்லாயிருக்குங்க சிறுகதை :)

    ReplyDelete
  12. December 11, 2009 4:53 PM
    யுவகிருஷ்ணா said...

    //அருமையான சிறுகதை//

    ஏம்பா..என்னோட நம்பிக்கைய குலைக்கிறீங்க.

    நன்றி யூவகிருஷ்ணா.

    ReplyDelete
  13. ember 11, 2009 5:02 PM
    Prakash said...

    // காணுமேன்னு பார்த்தேன் , நான் சொன்னதை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம். :P//

    இப்ப தெரியுதா? நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  14. நன்றி அஷோக்.

    ReplyDelete
  15. அழகாக இருக்கிறது...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. கதை போலத் தோணும் கவிதை. மாறுபட்ட நடையில் இருக்கிறது. நச்சென்ற முடிவு நன்றாக உள்ளது.
    வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  17. நன்றி தமிழ்ப்பறவை,கமலேஷ்,அரவிந்தன்.

    ReplyDelete
  18. //வருத்தத்துடன் பையின் உள்ளே
    எட்டிப்பார்க்கிறார் மூர்த்தி
    சுக்கு நூறாய் இருக்கிறது
    70 லட்ச ரூபாய் வீடு//

    எப்படிங்க திருஷ்டி கழிந்தது..புரியலயே..:((

    ReplyDelete
  19. //எப்படிங்க திருஷ்டி கழிந்தது..புரியலயே..:((//

    கழியலங்க.அதான் ஜஸ்டு மிஸ்டு.

    ReplyDelete
  20. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. பலரும் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள். கடைசி ரெண்டு வரிகளைத்தவிர நீங்கள் எண்டர் தட்டவில்லையென்றால் ஒரு நல்ல கதை கிடைத்திருக்கும். ஹிஹி.

    ReplyDelete
  22. நல்லா இருக்கு ரவிஜி.ரொம்ப நாள் ஆகி போச்சு நான் இங்கு வந்து.வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. நன்றி S.A. நவாஸுதீன்.

    ஆதிமுலகிருஷ்ணன்,

    வேறு எழுதிவிடலாமா? விதிகள் என்ன சொல்லுகின்றன? பார்க்கலாம்.

    பா.ராஜாராம்,

    நன்றி.

    ReplyDelete
  24. வித்தியாசமான கவிதை,வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. நல்லாயிருக்கு! ஆனால் கொஞ்சம் சுருக்கி, கோர்ப்பை கொஞ்சம் கவனிச்சிருந்தா அற்புதமாயிருந்துருக்குமோன்னு தோன்ற வைக்குது!
    வெற்றி பெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. ரொம்ப நல்லா இருக்கு ரவிஷங்கர்
    உங்க வீட்டுக்கு திருஷ்டி படாது
    ஒரு த்ருஷ்டி பொம்மை மாட்டுங்க போதும்

    என்ன ஒரு அமைதியான வன்முறை..

    எல்லா மனுஷங்களுக்குள்ளேயும் இருக்குறதை அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க

    வெற்றி பெற வாழ்த்துக்கள் ரவிஷங்கர்

    ReplyDelete
  27. பூங்குன்றன்.வே said...

    //வித்தியாசமான கவிதை,வெற்றி பெற வாழ்த்துக்கள்.//

    நன்றி.

    ஷங்கி said...

    //கொஞ்சம் சுருக்கி, கோர்ப்பை கொஞ்சம் கவனிச்சிருந்தா//

    எனக்கு அது மாதிரி தோன்றவில்லை.வீடு விவரிப்புகளை சுருக்கினால் கடைசி தாக்கம் போகும் என்பதால். நன்றி.

    ReplyDelete
  28. thenammailakshmanan said...

    என் “வீட்டுக்கு” முதல் வந்தமைக்கு நன்றி.

    // என்ன ஒரு அமைதியான வன்முறை//

    அருமை.

    //ரொம்ப நல்லா இருக்கு ரவிஷங்கர்
    உங்க வீட்டுக்கு திருஷ்டி படாது
    ஒரு த்ருஷ்டி பொம்மை மாட்டுங்க போதும்//

    எதுவும் கிடையாது.ஆனா பால் பை “உமா பதிப்பகம்” புத்தகைப்பைதான் பால் பை.திருமந்திரம்
    500 பக்கம் புத்தகம் வாங்கினப்போ கொடுத்தாங்க.
    இதுதான் இன்ஸ்பிரேஷன்.ஹிஹிஹிஹிஹிஹி!

    நன்றி.


    எல்லா மனுஷங்களுக்குள்ளேயும் இருக்குறதை அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க

    வெற்றி பெற வாழ்த்துக்கள் ரவிஷங்கர்

    ReplyDelete
  29. nicely written. a different kind of poem. best of luck

    vidhya

    ReplyDelete
  30. நன்றி விதூஷ்.

    ReplyDelete
  31. இதை சிறுகதையாகவே இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் ... கவிதை வடிவம் நெருடலாக இருக்கிறது ... வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. Nundhaa said...

    //இதை சிறுகதையாகவே இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் ... கவிதை வடிவம் நெருடலாக இருக்கிறது ... வெற்றி பெற வாழ்த்துகள்//

    சரிதான்.எனக்கு முடிஞ்சபின்னாலேதான் ஞானம் வரும். நன்றி நுந்தா.

    ReplyDelete
  34. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

    அன்புடன்
    உழவன்

    ReplyDelete
  35. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ரவிஜி! :-)

    ReplyDelete
  36. நன்றி உழவன் & பா.ராஜாராம்.
    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் ரவிஷங்கர்!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  38. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  39. நன்றி ராஜாராம்
    நன்றி சேரல்
    நன்றி பத்மா
    நன்றி யாத்ரா
    நன்றி அஷோக்

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!