Monday, December 28, 2009

இளையராஜா-பாலுவை கேளடி கண்மணி

தி கிரேட் மெலடி கிங் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடாமல் வேறு யாராவது இந்தப் பாட்டை பாடுவதை கற்பனைச் செய்து பார்க்க முடியுமா?என்னால் சத்தியமா முடியாது.படம்: புது புது அர்த்தங்கள்.பாடல்:கேளடி கண்மணி.

இவர் ஏற்கனவே (1977)நந்தா என் நிலா என்ற படத்தில் ”நந்தா என் நிலா” என்ற பாட்டைப் பாடி படுத்தி எடுத்தவர். (இதன் இசை மேதை வி.தக்‌ஷிணாமூர்த்தி)




மேஸ்ட்ரோவுக்கு இவர் யானை பலம். அதுக்காக இப்படி,....?



(மெதுவா சார்!  ராஜாவின் நோட்ஸ் எல்லாம் நொறுங்கிடப்போவுது!)

இசைப் பாடகன் ஒருவன் தன் மனைவியின் தாங்க முடியாத டார்ச்சரால் வேறு ஒரு பெண்ணின்(விசிறி) காதல் வயப்படுகிறான்.கீதம் இசைத்து தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொள்கிறான்.அதுதான் என்று நினைக்கிறேன்.இது ஒரு மிகவும் அபூர்வமான சூழல்.

இந்த பாட்டில் ஒரு கனிவான (காதல்?)சோகத்தை எஸ்பிபி பிழிவார்.எஸ்பிபி குரலில் படுத்தினால அதற்கு ஈடாக மேஸ்ட்ரோ தன்னுடைய செல்லங்களான இசைக்கருவிகளில் பிழிபிழியென பிழிந்துக்கொண்டே  முன்னேயும் பின்னேயும் வருவார்.என்ன ஒரு  சோக அழகுப்படுத்தப்பட்ட இசை!
மேஸ்ட்ரோவின் இசை பொதுவாகவே full of emotions.இதில் வரும் ஒவ்வொரு இசைக்கருவியும் இசைக்கும் படுத்தி எடுக்கும்.

சீட்டுக்கட்டைக் கையில் எடுத்து விசிறியாகப் பிரித்தார் போல் வரிசையாக வந்து விழும் இசைத் துளிகள்.இதனிடையே அவ்வப்போது கசியும் ஹம்மிங்குகள்.

Divine... Maestro! It is purely divine Maestro!

இந்தப் பாட்டை எழுதியவர் வாலிதான் என்று நினைக்கிறேன்.இவரும் தன் பங்குங்கு படுத்தி விட்டார்.(தமிழ்பறவை/கோபிநாத் சரியா? வாலிதானே?)

4.35 நிமிட பாட்டில் அடைத்து வைக்கப்பட்ட கனிவான காதல் சோகத்தைக் கிழே பார்ப்போம்.

0.00 to 0.12 கவுண்ட் வரை கீ போர்டில் அலசி எடுத்தத் தண்ணீரில் இருந்து ஹம்மிங் செய்துகொண்டே வெளிவந்து 0.17ல் ”கேளடி கண்மணி...” என்று கனிவான சோகத்தோடுஆரம்பிக்கிறார். அதே கனிவான கிலுகிலுப்பை கலந்த தபலா ஒத்தல்கள் பின் தொடர பல்லவியை  0.51ல்“பாடகன் சங்கதி”  என்று இனிமையாகப் பாடி முடிக்கிறார் மெலடி கிங்.

0.52ல் மேஸ்ட்ரோ அதே சோகத்துடன் ஒரு கோரஸ் வயலினில்( absolutely stunning) மென்மையான பெண் ஹம்மிங் மிக்ஸ் செய்த வலை இசை விரித்து வாங்கிக்கொண்டு பல வித இசை கருவிகளில் படுத்தியபடியே 1.26ல் புல்லாங்குழலில் உச்சஸ்தாயிக்குக் கொண்டுபோய் கடைசியில் ஒரு வயலினில் உரசலில் நிறுத்த மெலடி கிங் ”எந்நாளும்தான தேன்” என்று முதல் சரணத்தை ஆரம்பிக்க அதே  கனிவான கிலுகிலுப்பை கலந்த தபலா ஒத்தல்கள் பின் தொடருகிறது.

(நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை... நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை-சூப்பர் பாலு)

2.28ல் ஆரம்பிக்கிறது Pathosல் மயிலிறகு நடனங்கள். 2.48ல் இதில் உதித்த Humming Angels பாலுவை 3.05 வரை படுத்தி எடுக்க பதிலுக்கு பாலு “நீங்காத பாரம் என்”சோக சவால் விட்டு இரண்டாவது சரணம் பாடி முடிக்கிறார்.

மற்ற இசையமைப்பாளர் மாதிரி ஹம்மிங்கை நேரடியாக கொடுக்காமல் வித்தியாசமாக இடையிடையே ஒத்துவது மேஸ்ட்ரோவின் மேதமை.அடுத்து இதில் வரும் percussion (தபலா-கிலுகிலுப்பை) அட்டகாசம்.

மேஸ்ட்ரோ! எப்படி சார் நோட்ஸ் எழுதுறீங்க?

இந்தப் பாட்டைக் கேட்க:

கேளடி கண்மணி

மற்ற இசை தவங்களைக் கேட்க:

இளையராஜாவின் தவம்-காற்றில் எந்தன்

இளையராஜாவின் வயலின் ரங்கோலி

6 comments:

  1. நல்ல பாடல்.மறக்க முடியாததும் கூட.

    ReplyDelete
  2. //(மெதுவா சார்! ராஜாவின் நோட்ஸ் எல்லாம் நொறுங்கிடப்போவுது!)//
    க்ளாஸ் கமெண்ட்...
    பதிவு சரிதான் சார்... பாட்டுக்கு லிங்க் கொடுக்கலை.. இல்லை எனக்குத் தெரியலையா?
    சரின்னு நேரா ‘திரைப்பாடல்’க்கே போய்க் கேட்கலாம்னு பார்த்தா, செர்வர் டவுன்...
    நாளைக்கு பாடலைக் கேட்டுக்கிட்டே பதிவைப் படிக்கிறேன் சார்.அதுதான் சுகமே...
    முன்பு கேட்டதில் சொன்னால், அந்த சோக ஹம்மிங் எனக்கு மிகப் பிடிக்கும்...
    இந்த கானமயிலாடக் கண்டுதான் ,எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி போன்ற வான்கோழிகள் லாலாலா போட்டுக் காதைப் பதம் பார்த்துவிட்டனர்...
    அந்தப் பாடல் வாலிதான் என 98 சதம் நினைக்கிறேன் சார்...
    நீங்கள் முன்பு என்னிடம் சொல்லிய ‘யாரைக் கேட்டு நீர்தான்’ பாடல் தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அறிமுகத்திற்கு மிக்க நன்றி.
    என்ன பிஜிஎம்... ஒரு சோகவயலின் ஒற்றையாய் முடிய அதற்கு ஆறுதல் சொல்லும் புல்லாங்குழல்,பின் சில வயலின்கள்....(முதல் பிஜிஎம்மில்) ஹய்யோ...சரணங்களில் மிகவும் அடக்கி வாசிக்கப் பட்ட தபேலாக்கள் சோகத்தின் சுருதி கூட்டுவது சுகம்...(இந்தப் பக்கம் வந்தா உங்களை மாதிரிதான் வார்த்தைகள் வருது.. என்ன பண்ண?)
    ‘ஊரடங்கும் சாமத்திலே’ பாடல் ரசனை எப்போது வருகிறது? (நேயர் விருப்பம்)

    ReplyDelete
  3. தமிழ்ப்பறவை,

    //பதிவு சரிதான் சார்... பாட்டுக்கு லிங்க் கொடுக்கலை.. இல்லை எனக்குத் தெரியலையா?//

    முதல்ல கொடுக்கல.இப்ப கொடுத்திருக்கேன்.

    //(இந்தப் பக்கம் வந்தா உங்களை மாதிரிதான் வார்த்தைகள் வருது.. என்ன பண்ண?)//

    நான் சொன்ன மாதிரி மேஸ்ட்ரோ பாட்டுக்கள் full of emotions. ஆத்மாவை நெருடும்.அவர் ஒவ்வொரு
    இசைக் கருவிகளும் இதை உணர்ந்து இசைக்கிறார்.அதுதான் காரணம்.


    //‘யாரைக் கேட்டு நீர்தான்’//

    இது சிவரஞ்சனி ராகத்தில் போடப்பட்டது.
    1.அடி ஆத்தாடி 2.வா வா அன்பே 3.பொன் மானே கோபம் ஏனோ 4.சோலைப் புஷ்பங்களே

    இந்தப் பாட்டெல்லாம் ஒரு நேர்க்கோட்டில் பயனிக்கும்.அடைப்படை “புலம்பல்”.அவ்வளவுதான்.

    ReplyDelete
  4. நல்ல பாடல். நல்ல அலசல்.

    ReplyDelete
  5. நன்றி வித்யா

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!