ஹாலிவுட் சினிமா எப்போதும் எல்லோரையும் பிரமிக்க வைக்கும்.Mackenna"s Gold (மெக்கென்னாவின் தங்கம்-(தமிழில்!) ஆரம்பித்து நேற்று “அவதார்” வரை பிரமிக்க வைத்து மிரட்டியும் விட்டார்கள் என்னை.இது டைட்டானிக் எடுத்த ஜேம்ஸ் கேமரூன் டைரக்ட் செய்தது.கிட்டத்தட்ட கால் பங்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் கோடி ரூபாய் பட்ஜெட்.
இதை 3D ஐமேக்ஸில் பார்க்க சென்னையில் தியேட்டர் இல்லை.
3D இருக்கிறது.அதில் பார்த்தால் அட்டகாசமாக இருக்கும் என நண்பர்கள் சொன்னார்கள்.நான் பார்த்த தியேட்டரில் 3D இல்லை.ஐநாக்ஸ்ஸில் டிக்கெட் கிடைக்கவில்லை.
அடுத்து இப்பொழுதெல்லாம் தமிழ் டப்பிங்கில் அசத்துவதால் இந்த படத்தைத் தமிழ் டப்பிங்கில் பார்க்க ஆசைப்பட்டால் எனக்குப்பிடிக்காத தியேட்டர்களில்தான் ஓடுகிறது.இதையெல்லாம் அந்தத்தியேட்டர்களில் பார்ப்பதை விட டீவி திரை விமர்சனத்தில் பார்ப்பது பெட்டர்.சென்னையின் மத்தியில் இருப்பது இது மாதிரி படங்கள் ரீலிஸ் ஆகும்போது ஒரு கஷ்டம்.
அதனால் ஒரளவுக்கு கதையின் அவுட் லைன் தெரிந்துக்கொண்டு மீதியை விஷுவலில் தெரிந்துக்கொள்ள நல்ல தியேட்டரில் பார்த்தேன்.
இது ஒரு சயன்ஸ்பிக்ஷன் கலந்த பேண்டஸி கதை.கிட்டத்தட்ட விட்டலாச்சாரியா கதைதான். கதை 2154 நடக்கிறது.நம்மூர் சமுகவிரோதிகள் இயற்கைக் கொஞ்சி விளையாடும் இடங்களை சுற்றி வளைத்து பிளாட் போட்டு விற்பது போல் "பேண்டோரா” என்னும் கிரகத்தில் இருக்கும் கனிம வளத்தை, ஒரு பூமி சுரங்க கும்பல் சுரண்ட நினைத்து அதன் இயற்கையை கற்பழிப்பது அதன் பிறகு நடக்கும் பிரச்சனைகள் போர்கள்தான் படம்.
இசை பிரமிக்க வைக்கிறது.
"பேண்டோரா” கிரகத்தில் மலைகள் /பாறைகள் வானத்தில் தொங்கிக்கொண்டு விதவிதமான இயற்கைத் தாவரங்கள்,நீர்விழ்ச்சிகள்,கொடூரமான மிருகங்கள் என அற்புதமாக இருக்கிறது.ஒரு வித லைட் நீலமும் பச்சையும் கலந்த எமரால்ட் கலர் ஐஸ் சில்லை உணர முடிகிறது.
இந்த கிரகத்தை ஏரியல் ஷாட்டில் பார்க்கும்போது சிலிர்க்கிறது.
இதே கலரில் கிழ்கிந்தா வானரப்பட்டாளம் போல இங்குள்ள நவீ என்னும் கிரகவாசிகள் 10 அடி உயரமும்,துடி இடையும்,கோலிகுண்டு பூனைக் கண்கள்,நீண்ட வாலுடன் ஒரு வித எகிப்து மம்மி முகத்துடன் இருக்கிறார்கள்.இங்கு மனிதர்கள் சுவாசிக்க முடியாது.
இவர்களுடன் கலந்து அந்த கனிவளத்தை(அன்அப்டேனியம்) கவர ஒருவனுக்கு ஜீன் மாற்றம் செய்து “அவதார்” எடுத்து அங்கு போகிறான்.ஆனால் அவர்களுடன்இயற்கையை ஒட்டி வாழ்ந்து அதே பிடித்துப் போய் ஒரு பெண்ணைக் (நேத்ரி)காதலித்து காலப்போக்கில் “ஓகேடா! இது சூப்பர்” என செட்டில் ஆகி இவர்களுடன் சேர்ந்து தலைவனாகி மனிதர்களை எதிர்க்கிறான்.இவர்களுக்கும் (இயற்கை) மனிதர்களுக்கும் (இயற்கை அழிப்பவர்களுக்கும்)நடக்கும் போரை முன்னின்று நடத்தி வெற்றி பெறுகிறான்.
பல முறை பல படங்களில் பிரமித்த போர் காட்சிகள் இதிலும் வந்தாலும் மீண்டும் பிரமிக்கத்தான் வைக்கிறது.சில நம்ப முடியாத காட்சிகளும் இருக்கிறது.தனி மனிதனாக ஆறு கொடூரமிருகங்களுடன் சண்டை இடுவது.அடுத்து எஸ்கேப் காட்சிகள்.
அடுத்து ஹாலிவுட் படத்திற்கே உண்டான கதாபாத்திரங்களுக்குள் ஏற்படும் அபத்த உணர்வு வெளிப்பாடுகள். உதாரணமாக ..கொடூர மிருகங்கள் தாக்க வரும்போது அதை வெயிட்டிங்கில் போட்டுவிட்டு கதாபாத்திரங்கள் உரையாடுவது. இன்னும் சில காட்சிகள்.
அசத்தும் காட்சிகள்: இந்த நவிகள் Tree of Soul கிழ் உட்கார்ந்து கூட்டுப்பிரார்த்தனை செய்வது, திடீரென விசித்தர மிருகங்கள் இவர்களுடன் சேர்ந்து மனிதர்களை எதிர்த்து போர் புரிவது. மலைப் பாறைகளில் ஓடி ராட்ச்ச பறவையை செல்லப்படுத்துவது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
saw the film yesterday.excellent movie.you must watch it in 3D.
ReplyDeleteநன்றி ஸ்ரீ.எங்கு பார்த்தீர்கள்?ஹைதராபாத்திலா?
ReplyDeleteINOX இல் 3D என்று சொன்னார்களே? நீங்கள் அங்கே சென்று பார்க்கவில்லையா?
ReplyDeleteஅண்ணாத்தே.. நமக்கு கன்னியாகுமரி... நாகர்கோவில்லயும் அவதார் ரிலீஸ் ஆயிருக்கு. ஆனா இங்கே 3டி இல்லை. அதனால கிறிஸ்துமஸ் அன்னிக்கு திருவனந்தபுரம் பத்மனாபா தியேட்டர்ல மனைவி, பையன் அபிஷேக்குடன் போய் அவதார் 3டி கண்ணாடி போட்டு பார்த்தேன் ஆங்கிலத்தில்.... 3டி பிரமிப்பா இருக்குது. 1986ல் காலேஜ் படிக்கிறப்ப
ReplyDeleteநாகர்கோவில் சக்கரவர்த்தி தியேட்டர்ல மை டியர் குட்டிச்சாத்தான்பார்த்தேன். அதை ஒப்பிடும்போது ஆயிரம் மடங்கு டெக்னிக்கலா இந்த படம் முன்னேறி இருக்குது. கண்ணாடி போட்டு பார்க்கிறப்ப எல்லாமே நம்ம கண் முன்னாடி நேரடியா பார்க்கிறாப்ல இருக்கு. 2012 ஐ விட ஆச்சரியாமா இந்தப்படம் இருக்கு.. டைட்டானிக்கை பனிரெண்டு வருசமா பேசிக்கிட்டிருக்கிறமாதிரி இதையும் ஒரு 25 வருசத்துக்கு திரையுலகம் கொண்டாடும்.
திருவட்டாறு சிந்துகுமார்
kumudamsindhu@gmail.com
ஆதவா said...
ReplyDelete//INOX இல் 3D என்று சொன்னார்களே? நீங்கள் அங்கே சென்று பார்க்கவில்லையா?//
ஆமாம் தெரியாமல் எழுதிவிட்டேன்.அது வெறும் 3D.ஆனால் 3D ஐமேக்ஸ் இல்லை.INOX இல் கிடைக்கவில்லை.
நன்றி.
அண்ணாத்தே! வருகைக்கு நன்றி. கருத்துக்கு நன்றி.
ReplyDeleteஆமாம் தெரியாமல் எழுதிவிட்டேன்.சென்னையில் வெறும் 3D.ஆனால் 3D ஐமேக்ஸ் இல்லை.INOX இல் டிக்கெட் கிடைக்கவில்லை.
//டைட்டானிக்கை பனிரெண்டு வருசமா பேசிக்கிட்டிருக்கிறமாதிரி இதையும் ஒரு 25 வருசத்துக்கு திரையுலகம் கொண்டாடும்//
சத்தியம்.
good review....படம் இன்னும் பார்க்கலை.
ReplyDelete//கிட்டத்தட்ட கால் பங்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் கோடி ரூபாய் பட்ஜெட்.//
:-)
பாருங்க.ஆனால் தியேட்டர்ல போய் பாருங்க.எபெக்ட் ஜாஸ்தி.
ReplyDeleteஇல்லை தலைவரே ,மதுரையில்.
ReplyDeleteஆர்வம் தாங்காமல் படம் பார்த்தாச்சு, 3Dயில் பார்த்துவிட்டுதான் பதிவெழுதுவதாக முடிவுசெய்துள்ளேன், எவ்வளவு நாளானாலும் சரி.!
ReplyDeleteநன்றி ஸ்ரீ.
ReplyDeleteஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDelete//ஆர்வம் தாங்காமல் படம் பார்த்தாச்சு, 3Dயில் பார்த்துவிட்டுதான் பதிவெழுதுவதாக முடிவுசெய்துள்ளேன், எவ்வளவு நாளானாலும் சரி.//
யாரு ஆதிமூலகிருஷ்ணன்? எங்கேயோ கேள்விப்பட்ட பேர் மாதிரி இருக்கு.ஓ! காற்றில் எந்தன் கீதம் ஆதியா?(ஹிஹிஹிஹிஹிஹிஹி)
படம் புடிச்சுதா? பாருங்க.பாத்துட்டு எழுதுங்க.
நன்றி ஆதி.
அருமையான இடுகை வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி தியாவின் பேனா
ReplyDeleteஅருமையான படம்தான். குட்டி imaxல் பார்த்தேன்.
ReplyDelete3D ப்ரமை கொஞ்ச நேரம்தான் இருக்கு. அப்பரம், நாமும் நாவி கும்பலில் ஒருத்தர் மாதிரி ஐக்கியம் ஆயிடறோம்.
நன்றி சர்வேசன்.
ReplyDelete