Monday, December 21, 2009

பணம் பர்முடாஸ் வரை பாயும்

காத்திருக்க நேரமுண்டு

டிராபிக் சிக்னல் நிறுத்த
மோட்டர் பைக் பில்லியனில்
குல்லா போட்ட குழந்தை
அம்மா மடியில் உடகார்ந்து
கையாட்டிச் சிரித்து
சந்தோஷப்படுத்தி விடுகிறது
அன்றைய பொழுது முழுவதையும்

__________________________________

கருகத் திருவுளமோ?

வாஷிங்மெஷினால் நுரை பொங்க
வேக சுத்தல்களில்
கசக்கி அலசப்பட்டு கும்மப்பட்டு
கடைசியாக அசுர சுத்தலில்
ஈரம் உலற தோய்க்கப்பட்டு
சோப் வாசனையோடு கசங்கிபோய்
வெளி வந்த 100 ரூபாய் நோட்டில்
ஒரு காயமும் இல்லை
வழக்கமாக சிரித்தபடிதான்
இருக்கிறார் மகாத்மா காந்தி.
_____________________________________

வானமே எல்லை

பெர்முடாசின்
ஏதோ ஒரு உபரி பாக்கெட்டில்
கைவிடுகையில்
நன்றாகத் தோய்க்கப்பட்டு
சோப்பு வாசனையுடன்
அகப்பட்ட கசங்கிய
ஒரு 100 ரூபாய் நோட்டு
மற்ற உபரிகளிலும் கை
நுழைக்க வைத்துவிடுகிறது

21 comments:

  1. இப்படிப் பட்ட சாதாரண அன்றாடச் சம்பவங்களையும் நீங்கள் கவிதையாக்கி விடுகிறீர்கள். உங்களது சிறப்பே இதுதான்!

    இந்த மூன்று கவிதைகளும் பிடித்திருக்கின்றன.

    ReplyDelete
  2. முதற்கவிதைக்கும் நூறு ரூபாய் நோட்டுக்கும் என்ன தொடர்பு?

    மற்றவிரண்டு கவிதைகளுக்கும் ஒரு continuity இருக்கிறதே அந்த 100 ரூபாய் நோட்டால் ?

    ReplyDelete
  3. //கையாட்டிச் சிரித்து
    சந்தோஷப்படுத்தி விடுகிறது
    அன்றைய பொழுது முழுவதையும்//
    அங்கு மட்டுமில்லை எந்த இடத்தில் பார்த்தாலும் இப்படிக் கையசைத்துச் சிரிக்கும் ரோஜாக்கள் அன்றைய பொழுதை அர்த்தமுள்ளதாக்கிவிடும்
    நல்ல இரசனை உங்களுக்கு.

    ReplyDelete
  4. //பெர்முடாசின்
    ஏதோ ஒரு உபரி பாக்கெட்டில்//

    ம்ம்ம் பணம் பாதாளம் வரை என்பது போல பெர்முடாஸ் முக்கோணம்னு சொல்லப் போறிங்கன்னு நெனச்சிட்டேன்;((

    //அன்றாடச் சம்பவங்களையும் நீங்கள் கவிதையாக்கி விடுகிறீர்கள். உங்களது சிறப்பே இதுதான்!//
    ரிப்பீட்டு

    ReplyDelete
  5. தொடர்கவிதைச்சரத்த்திற்கு ஒரு continuity கொடுப்பது வழக்கம். அல்லாவிடில், அவைகள் தனித்தனி தலப்புகளில் போடலாம்.

    ‘பணம் பர்முடாஸ் வரை பாயும்’ என்பது மூன்று கவிதைகளுக்கும் சேர்ந்தே வந்த தலைப்பு. பின்னர் உள்ளே தனித்தனி தலைப்புகள் எதற்கு?

    ஒன்று, சேர்ந்த தலைப்பு, அல்லாவிடில் தனித்தனி தலைப்புகள்.

    ஏமாற்றத்தைத் தவிர்த்திருக்கும்.

    ReplyDelete
  6. கவிதைகளைப்பற்றி:

    அவ்வளவாகச் சொல்லமுடியாது.

    This is a subject opinion. I mean, they did not impact me - both aesthetically and meaningfully (thought-wise)

    ReplyDelete
  7. ஒண்ணும் மூணும் ரொம்ப பிடிச்சிருக்கு

    ReplyDelete
  8. நன்றி ஜ்யோவ்ராம் சுந்தர்

    ReplyDelete
  9. கள்ளபிரான் said...

    //முதற்கவிதைக்கும் நூறு ரூபாய் நோட்டுக்கும் என்ன தொடர்பு//

    ஒரு தொடர்பும் இல்லை.எல்லாம் தனிதான்.

    //மற்றவிரண்டு கவிதைகளுக்கும் ஒரு continuity இருக்கிறதே அந்த 100 ரூபாய் நோட்டால் ?//

    ஒரு நிகழ்வு ரெண்டு கவிதை எழுதினேன்.

    //‘பணம் பர்முடாஸ் வரை பாயும்’ என்பது மூன்று கவிதைகளுக்கும் சேர்ந்தே வந்த தலைப்பு. பின்னர் உள்ளே தனித்தனி தலைப்புகள் எதற்கு?

    ஒன்று, சேர்ந்த தலைப்பு, அல்லாவிடில் தனித்தனி தலைப்புகள்.//

    ‘பணம் பர்முடாஸ் வரை பாயும்’ சும்மா வச்சேன் சார்!

    ரொம்ப தீவரமா யோசிக்காதீங்க சார். இதெல்லாம் சும்மா ஒரு மென்மையான கவிதைகள்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  10. மூன்று கவிதைகளும் பிடித்திருக்கின்றன.

    ReplyDelete
  11. தீவிரமாக யோசித்தால் எதுவுமே பிடிக்காது என்பது உண்மைதான்.

    To dissect is to destroy.

    உங்கள் வரும் கவிதைகளை மென்மையாக யோசித்துப் படிக்கிறேன். பிடிக்குதா என்று பார்க்கலாம்.

    நன்றி.

    ReplyDelete
  12. கண்மணி said...

    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  13. சின்ன அம்மிணி நன்றி.

    T.V.Radhakrishnan நன்றி

    ReplyDelete
  14. ரசித்தேன் சார்...

    ReplyDelete
  15. //பெர்முடாசின்
    ஏதோ ஒரு உபரி பாக்கெட்டில்
    கைவிடுகையில்
    நன்றாகத் தோய்க்கப்பட்டு
    சோப்பு வாசனையுடன்
    அகப்பட்ட கசங்கிய
    ஒரு 100 ரூபாய் நோட்டு
    மற்ற உபரிகளிலும் கை
    நுழைக்க வைத்துவிடுகிறது//

    சூப்பர் தலைவரே.

    ReplyDelete
  16. அருமையான தருணங்கள், மூன்று கவிதைகளுமே ரொம்பப் பிடித்திருக்கிறது.

    ReplyDelete
  17. நன்றி தமிழ்ப்பறவை

    நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  18. கையாட்டிச் சிரித்து
    சந்தோஷப்படுத்தி விடுகிறது
    அன்றைய பொழுது முழுவதையும்//

    அழகு!
    அழகு!
    அழகு!

    மிகவும் நன்றாகவுள்ளது நண்பரே..

    ReplyDelete
  19. நன்றி இரா.குணசீலன்.

    ReplyDelete
  20. கடைசிக்கவிதை கிளாஸ்.!

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!