Tuesday, December 15, 2009
ஜபம் - கவிதை
கொத்துக் கொத்தாக
கொள்ளுப்பேரன்களும் எள்ளுப்பேரன்களுமாக
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்து
விமர்சையாக திருக்கடையூரில்
சதாபிஷேகமும் ஆகிவிட்டது
88 வயது காமாட்சி மாமிக்கு
எல்லோரோடும் நட்ட நடுவில்
எல்லா கல்யாணங்களிலும்
ஆத்துக்காரருடன் உட்கார்ந்து குரூப் போட்டோவும்
எடுத்துக் கொண்டாயிற்று
ஒவ்வொரு தடவையும்
ஏதோ ஒன்றை விட்டுவிட்டு
மகா திருப்தி அடைவதுண்டு
காசிக்குப் போய் திரும்பிய போதெல்லாம்
அனாவசிய பேச்சும் கிடையாது
டீவி சிரியலும் பார்ப்பதில்லை
ரேடியோவும் கேட்பதில்லை
அனாவசிய வம்பும் நிறுத்தியாயிற்று
வெறும் காட்டன் புடவைதான்
நகைகளும் துறந்தாயிற்று
சும்மா இருக்கும் நேரத்தில்
ராமா கிருஷ்ணா கோவிந்தா
ஜப மாலையை உருட்டியபடி
காலத்தை கழித்தாலும்
இதையெல்லாம் விட்டிருக்க வேண்டாமே
என்றும் நெருடுவதுண்டு
ஜப மாலையின் வரிசையில்
9,10,11,12 ருத்ராட்ச கொட்டைகளை
உருட்டி ஜபிக்கும்போது
Subscribe to:
Post Comments (Atom)
:-)
ReplyDeleteஉங்கள் கவிதைகளில் எப்போதும் ஒரு சிறுகதைக்கான களத்தையும், அப்புறம் மெல்லியதாய் ஆனால் லேசாய் திருகலான humour-ஐயும் பார்க்கிறேன்.
9,10,11,12 - சும்மாவா அல்லது ஏதாவது விஷயம் இருக்கிறதா?
எட்டாவதோட படிப்பை நிறுத்திட்டாங்களோ?
ReplyDelete//ஜப மாலையின் வரிசையில்
ReplyDelete9,10,11,12 ருத்ராட்ச கொட்டைகளை
உருட்டி ஜபிக்கும்போது//
அருமை.
:-)))
நல்லா இருந்தது...
ReplyDeleteசித்ரன் said...
ReplyDelete//உங்கள் கவிதைகளில் எப்போதும் ஒரு சிறுகதைக்கான களத்தையும், அப்புறம் மெல்லியதாய் ஆனால் லேசாய் திருகலான humour-ஐயும் பார்க்கிறேன்//
ஆமாம்.பாராட்டுக்கு நன்றி.
//9,10,11,12 - சும்மாவா அல்லது ஏதாவது விஷயம் இருக்கிறதா?//
ஒன்றும் இல்லை.சும்மா ஒரு ஸ்பெஷல் எபெக்ட்டுக்குதான்.
நன்றி.
தண்டோரா ...... said...
ReplyDelete//எட்டாவதோட படிப்பை நிறுத்திட்டாங்களோ?//
வாங்கோண்ணா!கவிதைப் பத்தி ஏதாவது சொல்லுங்கோண்ணா!
நன்றி.
நன்றி ஸ்ரீ
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை