Wednesday, December 16, 2009
இடது புஜம் - ஸ்திரீ சம்போகம் - கவிதை
முழங்கால்-சுகம், கணைக்கால் -சுபம்
பாதம்-பிரயாணம்,வலது புஜம்-ஆரோக்கியம்
முகம்-பந்து தரிசனம்,இடது மணிக்கட்டு-கீர்த்தி
பஞ்சாங்கப் பல்லி விழும் பலன்களுக்கு
சிறு வயதில் ரொமப ஆசைப்பட்டு
எதுவும் நடக்கவில்லை
வாலிப வயதில்
ஆண் குறி - தரித்திரத்திற்கு பயந்து
இடது புஜம்-ஸ்திரீ சம்போகம்,புட்டம்-சுபம்
மார்பு - தனலாபம்,வயிறு - தான்ய லாபம்
பலன்களுக்கு ஆசைப்பட்டு
அதுவும் நடக்காமல் ஏமாந்து
நானும் பல்லிகளும் பிரிந்து விட்டோம்
பழைய வீட்டை விற்று விட்டு
புது ப்ளாட்டில்
வலது செவி-தீர்க்காயுசு பலனுக்கு
ஒரு பல்லியும் இல்லை என்றாலும்
மனதில் குறுக்கும் நெடுக்கும்
டைனோசர் மாதிரி ஒடுகிறது
மிருத்தியு(எமன்)பயம்
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல கவிதை.
ReplyDelete:-))))
நல்லாயிருக்கு சார்
ReplyDeleteநன்றி ஸ்ரீ.
ReplyDeleteநன்றி தண்டோரா.
ReplyDeleteபுரிந்த கவிதை.. நல்லாவும் இருக்கு சார்...
ReplyDeleteநன்றி தமிழ்ப்பறவை
ReplyDeleteமரண பயம்பற்றிப் படித்திருக்கிறேன்.
ReplyDeleteடைனோசார் மாதிரி மனதில் குறுக்கும் நெடுக்குமாகப் பாயும் மரணபயம் என்பது அற்புதமான கற்பனை.
வாழ்த்துக்கள்.
இடது புஜம் மேலே எத்தனை
ReplyDeleteபல்லியைப் போட்டேன் !
ஏமாந்த சோனகிரி என்ன
பல்லியோ பல்லி !
நன்றி எஸ்.கிருஷ்ணமூர்த்தி சார்.
ReplyDelete//இடது புஜம் மேலே எத்தனைபல்லியைப் போட்டேன் !ஏமாந்த சோனகிரி என்ன
ReplyDeleteபல்லியோ பல்லி !//
பிளாஸ்டிக் பல்லியா?
நன்றி தமிழன்.
ஸ்திரீ சம்போகம் என்றால் என்ன??
ReplyDeleteஸ்திரீ சம்போகம் என்றால் என்ன??
ReplyDelete