Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Friday, May 2, 2014

கர்நாடக இசை(கன்)பியூஷன்/சிம்பிள் சிவலிங்கம்/நிலாசோறு

கர்நாடக இசை என்பது  மரபு மீறாத அதற்குரிய இலக்கணச் சுத்தங்களுடன் பாடக்கூடிய சற்று கடினமான இசை.முக்கால்வாசி புரியாத தெலுங்கு மற்றும் வடமொழியில் புனையப்பட்ட பாடல்கள்.ஜனரஞ்கம் குறைவு.இப்படித்தான் பாட வேண்டும் என்று வரைமுறையோடு அதன் ஆதார ஆத்மாவை கலைக்காமல் தொன்றுதொட்டு பாடப்பட்டு வருகிறது.

ஆனால் அதே சமயத்தில்.........

சங்கீத மும்மூர்த்திகள்
இதை ஜனரஞ்கம்,கலப்பிசை(Fusion)அல்லது மெல்லிசைப்படுத்தி பல வருடங்களாக இளைய தலைமுறைகளால் கொடுக்கப்பட்டு வருகிறது.அதாவது இந்த இசைக்கு பின்னணி அல்லது முன்னணியாக சில சம்பிரதாய வாத்தியங்கள் தம்புரா,மிருதங்கம்,மோர்சிங்,கடம், வயலின்,வீணை,ஜலதரங்கம் உண்டு.அவைகளை நீக்கி(அல்லது குறைத்து) விட்டு கிடார்,ட்ரம்ஸ்,கீபோர்ட்,வயலின்,செல்லோ பின்னணியில் கர்நாடகப்பாடல்கள் வித்தியாசமாக பாடப்பட்டது.கிட்டத்தட்ட சினிமா மெல்லிசைக்கு அருகில் செலுத்தப்பட்டது.

கார்த்திக் ஐயர் லைவ்
இப்படி fusion செய்யப்பட்ட பாடல்கள் வெற்றிப்பெற்றதா?பலரால் ரசிக்கப்பட்டதா? பாமரமக்களிடம் அல்லது இசை புரிந்த மக்களிடம் போய் சேர்ந்ததா?இதற்காகத்தான் இப்படிச் செய்யப்பட்டதா?அல்லது இளவயது துடிப்பு பரிசோதனை முயற்சியா?

பல வருடமாக இந்த முயற்சிகளை கேட்கிறேன்.ரொம்ப வெற்றிபெற்றார் போல் தெரியவில்லை.சில பாடல்கள் ஆத்மா பிசிறாமல் கொடுக்கப்பட்டது.பல பாடல்கள் பின்னணி இசை தூக்கலாக அபத்தமாக இசைக்கப்பட்டு முகம் சுளிக்க வைத்தது.பழமையும் நவீனமும் சேராமல் அசட்டுத்தனமாக இருந்தது.கருவிகளின் சத்தம் தூக்கலாக இருந்தது.சில சமயம் சம்பிரதாயத்தை அசட்டுத்தனமாக மீறுவதுபோல் பட்டது.

சிடிக்கள் கேசட்டுகள் விற்காமல் தேங்கிக்கிடந்தது.நவீன சிற்றுண்டி உணவகங்களிலும் நீண்ட பிரயாண சொகுசு பஸ்களிலும் பயன்படுத்தப்பட்டது.

இப்போது.....

இணைய வளர்ச்சியால் உலக மாற்றத்தால் மீண்டும் இவை தனித்தனி bandகள் பெயரில் அதிகமாகிவிட்டது.ஒவ்வொரு தலைமுறையும் தாங்கள்தான் முதன்முதலாக செய்கிறோம் என்று இதைச் செய்கிறார்கள்.செய்துவிட்டு “Fusionலேயே ஒரு வித்தியாசமான Fusion" என்கிறார்கள்.உருவாக்கபவர்கள் நேமாலிஜி/நியூமராலஜி அடிப்படையில் பெயர்களை வித்தியாசமாக வைத்துக்கொள்கிறார்கள்.

இணைய தளங்களில் சுடசுட பரிமாறப்பட்டு நெருங்கிய நண்பர்களால் 'awesome" 'stunning" "nice" beautiful" என்று அப்போதே கமெண்ட் போட்டு புல்லரிக்க
வைக்கிறார்கள்.இப்போது நிறைய ரசிக்கப்படுகிறது.ரசனை மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.கேட்கும்போது இப்போதும்  பழைய உணர்வுகள் வருகிறது.சிலது நன்றாகவும் இருக்கிறது.

சமீபத்தில் கேட்ட சில பாடல்கள்.
 













S.P.JANANIY


தாமரை பூத்த தடாகமடி

_______________________________________________________

சித்திரையில் நிலாசோறு


டிவியில் இந்தப் படம் பார்த்தேன்.ஏனோதானோ என்று நம்பும்படியாக இல்லை.ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்த ஆர்.சுந்தர்ராஜன்  இயக்கம். அவர் மகன் அர்ஜீன் சுந்தர்ராஜன்,வசுந்தரா மற்றும் பிரபலமான குழந்தை நட்சத்திரம் சாரா.

”ஒரு காலத்தில்” கொடிகட்டிப்பறந்தவர்கள் மீண்டும் கொடிகட்டமுடியாதா? முடியும் ஆனால் கொடிகட்டிய காலத்தில் இருந்த டிராமத்தனத்தை விட்டுவிட்டு இப்போதைய டிரெண்டில் கதையை நகர்த்தவேண்டும்.இதே கதையை கொஞ்சம் சீரியஸ்ஸாக மகேந்திரன்/பாலு டைப்பில் சொல்ல வேண்டும்.யூத்துக்கு அப்பீல் ஆகும்.சுந்தர்ராஜன் தவறிவிட்டார்.நிறைய ரொமாண்டிக் காமெடிகள் கொடுத்தவர்.

அவர் காலத்தில் படம் பார்க்க வந்த குடும்ப மக்கள் இப்போது இல்லை.


சிவலிங்கம்

சமீபத்தில் முதன்முதலாக  பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்றிருந்தேன்.மூலவர் சிவலிங்க ரூபம்.லிங்கத்தை ரொம்ப அலங்காரம் செய்து அதன் ஒரிஜனல் உருவம் மாறி ஏதோ பிள்ளையார் பிரமை கண்ணில் தெரிந்தது.என் மனதில் படிந்துவிட்ட  சிவலிங்கம் அலங்காரம் இல்லாத சாதாரண லிங்கம். இதுமாதிரி ரொம்ப ஓவராக அலங்காரம் செய்தல் மனதில் “லிங்க” ரூபம் லிங்க ஆகமாட்டேன் என்கிறது.



என் மனதில் என்றும் உள்ள சிம்பிள் சிவலிங்கம்



அதுவும் இதுவும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு.


கிழ் இருப்பது மாதிரி சிம்பிளாக அலங்காரம் செய்யலாம்..





Tuesday, January 4, 2011

ஜோஷ்யம் பாக்கலயோ..! அடக் கடவுளே...!

வழக்கமான சாதாரண தின, வார, மாதப் பலன்களைக் கடந்து இந்தப் புத்தாண்டு  பலன்கள்  எல்லா ஊடகங்களிலும் தனித்தன்மையாக வந்து விடுகிறது.மேலை நாடுகள் போல் பலித்தவர்களின் ரிக்கார்டுகளை ஒன்று கூட்டி ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டும்.

அதுவும் பக்தி ஊடகங்களில் நிறைய
விளம்பரங்கள்.ராசிக்கல்,பெயர் பலன்,கைரேகை, பெருவிரல் ரேகைப்பலன்,நாடி,ஜாதகம்,வசியம்,எண்ஜோதிடம்,பரிகாரம்,ஹோமம்,கிளி ஜோஸ்யம் பக்தியும் ஜோஸ்யமும் இணைந்துதான் இருக்கிறது.இவர்களுக்கு கூட்டமும் வருகிறது.

சில பேர் ”கன்னத்தில் அறைகிறார்” போல் பிட்டு பிட்டு வைப்பேன் என்று விளம்பரம் கொடுக்கிறார்கள்.பயமாக இருக்கிறது. இன்னொரு கன்னத்தையும் காட்டவேண்டுமே.

இவர்களில் நிறைய போலிகள்.மிகக் குறைவான அசல்கள்.பார்த்தாலே சொல்லிவிடலாம்.

ஒரு பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் (இரவு 12.30) பெயர் ராசி பற்றிய பிரிவில் ஒரு பிரபலத்தைப் பற்றிச் சொல்லி அவர் ஏன் பிரபலமானர் என்று கரும்பலகை வைத்து எழுதி ஒரு மணி நேரம் பேசினார்.

ங்கொய்யால  தாங்கமுடியல..!சாதாரண பொது அறிவு  இருந்தால்போதும் அவர் ஏன் பிரபலமானர் என்று (கன்னத்தில் அறைகிறார் போல்?)பிட்டு பிட்டு வைக்கலாம்.

மக்களின் சைக்காலஜிதான்  இந்த ஊடங்களின் மூலதனம்.

மக்களுக்கும் தெரியும் இதெல்லாம் இன்ச் பை இன்ச் அளந்துப் பார்த்து பலிக்கும் என்று நம்புவது அசட்டுத்தனம் என்று ஒரு பக்கம் ஆனால் என்னாதான் பலன் என்று பார்த்துவிடுவது என்று ஆர்வம் மற்றொரு பக்கம்.நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செகண்ட் எல்லாம் கடவுள் பாத்துப்பாரு என்று சமாதானமும் படுத்திக்கொள்ளும்.

எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.இது ஒரு கணக்கு,விஞ்ஞானம்,கவுண்டர் பாயிண்ட்,
அது, இது, எது என்று எப்படிச் சொன்னாலும் நான் நம்புவதில்லை.நம்புகிறவர்கள் என்னைப் பற்றி கவலைப்படப் போவதில்லை.அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

அடக் கடவுளே...!

சாஸ்தோத்திரமான அய்யர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடவுள் பக்தி ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மிதான்.கடவுள் பக்தி உண்டு. நேரடியான கடவுள் தொடர்புதான். இடைத்தரகர்கள்   கிடையாது.சத்தியமாக Split A/C சாமியார்களும்  பின்நவீனத்துவ காஸ்ட்யூம் கார்பரேட் சாமியார்கள் கிடையாது.

சாஸ்திரம் சம்பிராதயம் என்று ரொம்ப போய் அப்பிக்கொள்வதில்லை.ஏதோ ஒரு தலைமுறையில் ஒரு பெரிசு ”சிம்பிள் பக்தி” கான்செப்டை ஜீனில் கலந்து விட்டிருக்கிறது.சின்ன வயதில் சபரிமலைக்கு போக ஆசைப்பட்டு தயாராக “போய் முதல்ல படி” என்று ஒரு பெரிய தாத்தா விரட்டி விட்டார்.

இதைச் சித்தர் வாக்காக பின்னாளில் புரிந்துகொண்டேன்.

பல வருடங்களுக்கு (நான் சிறுவன்) முன் சென்னையில் ஏதோ ஒரு மறைவான  இடத்தில் ஒரு யோகி இருப்பதாக  கேள்விப்பட்டு போனோம்.பொட்டல் காடு. பயமாக இருந்தது.

பெரியவர்கள்(என் வீட்டார் யாரும் இல்லை) நான்கு நான் மற்றும் மூன்று சிறுவர்கள் நான்கு பேர். அவரைக் கண்டுபிடித்தோம்.

பார்த்தவுடன் கோபம் கொண்டு “கிட்ட வராதே. கிட்ட வராதே...போ போ”  என்று விரட்டிவிட்டார் அந்த ஒல்லியான தாடி யோகி.ஓடிவிட்டோம். அவர் வாயால் விரட்டியதே பெரிய பாக்கியமாக நினைத்து பெரிசுகள் முக்தி அடைந்தன.

பல வருடங்களுக்குப் பிறகு புரிந்தது ஏன் விரட்டினார் என்று.

அடுத்து வந்த தலைமுறைகளும் “நம் பிரச்சனைக்களுக்கு நாம்தான் தீர்வு சொல்லவேண்டும்” என்று கண்டுபிடித்து ஜோஸ்ய/ பக்தி ஏஜெண்டுகளிடம் போவதில்லை.நேரடி ஆன்மீகம்தான். மனசுக்கும்  ரொம்ப திருப்தியாக இருக்கிறது. வரவு இல்லாவிட்டாலும் இழப்புக்கள் ரொம்ப ரொம்ப கம்மி.
செலவும் கம்மி.

அடுத்து அடுத்தவனுக்கு தொந்திரவு இல்லாத பக்தி ரொம்ப உயர்வானது.


வேலைக்கு ஏதும் போகாமல் தொலைக்காட்சியில் ”சாமி”
பிசினஸ் SSN(சாமி ஷாப்பிங்க் நெட்வொர்க்) செய்யும் போலிச்சாமியார்களைக் கண்டால் கடுப்பாக இருக்கிறது.கடவுள் இருப்பது நமக்கு இல்லாவிட்டாலும் இவர்களுக்கு ரொம்ப வசதியாக இருக்கிறது.

உழைக்காமல் சாமி எதுவும் தொப்பென்று போடாது.கடவுளுடன் நேரடித் தொடர்பு உழைப்பதற்கு மனோதிடம் கொடுக்கும்.

.

Thursday, March 4, 2010

ஓ...! பரமஹம்ஸ நித்யானந்(ரஞ்சி)தா..!

”என்னைக் கட்டுப்படுத்த முயற்சித்து மீண்டும் மீண்டும் தோற்கிறேனே!!” சரி நம்மால்தான் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று விட்டால், என் ஆசைகள் என்னை வாட்டி, வதைத்துவிடுகின்றன.நான் என்னதான் செய்வது? வீரனாகவும் இருக்க முடியவில்லை. கோழையாகவும் இருக்க முடியவில்லை.

இனி நான் தோற்கக்கூடாது.அதற்கு எனக்கு வழி வேண்டும் என்ற ஆழ்ந்த தேடுதல் உடைய ஒவ்வொருவருக்குமான வெற்றிக்கட்டுரை இது”

- ”இனி தோற்கமாட்டீர்கள்!” பரமஹம்ஸ நித்யானந்தா- பாகம்-137,குமுதம் 24-02-2010

வார வாரம் “குட்டி”க் கதைகளை சொன்னவர் "ஜட்டி”த்தெரிய தோற்றுவிட்டார்.நிஜங்கள் புனைவுகளை விட வினோதமானவை.(Facts are stranger than fiction).

ஞானியும் படகுக்காரனும் என்ற ஒரு ஞானக் கதை மிகப் பிரபலம்.படகுக்காரனுடன் பிரயாணம் செய்யும் ஒரு துறவி அவனிடம் “இது தெரியுமா, அது தெரியுமா,இது படித்திருக்கிறாயா,அது படித்திருக்கிறாயா,என்று இறுமாப்புடன் கேட்பார். அவன் எல்லாவற்றிற்கும்”இல்லை” என்பான்.

ஒவ்வொரு ”இல்லை”க்கும் “அடப்பாவி...பல வருட வாழ்க்கையை வீணடித்து விட்டாயே! தொலைத்துவிட்டாயே என்பார்!”.

கொஞ்ச தூரம் போனதும் “சாமி...உங்களுக்கு நீச்சல் தெரியுமா” படகுக்காரன் கேட்பான். “தெரியாதே...” என்பார்.”இந்த சின்ன விஷயம் தெரியதனால உங்க முழு வாழ்க்கையே அம்பேல் ஆகப்போவுது..படகுல ஓட்டை.தண்ணீ உள்ள வருது. நான் எஸ்கேப்’

எல்லாவற்றையும் உபதேசித்த நித்யானந்தர் "sting operation"என்ற ஒன்று இருப்பது தெரியாமல் நாடோடித் தென்றலாய் உள்ள வந்த ரஞ்சிதா “சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே.... ஓ.... மதி! ஓ....மதி!” பாடுவது(இங்கேயேயும் மேஸ்ட்ரோவா?) உலக முழுவதும் ரீலிசாகி வழித்துக்கொண்டு சிரித்தது உலகம்.













ஆசிரம் என்பதற்கு ரொம்ப ”சிரமம்” எடுத்துக்கொள்ளும் நிலமை என்பார்கள்.

இவர் ரொம்ப ஈசியாகஎடுத்துக்கொண்டுவிட்டார்.துறவு நிலை என்பது அவ்வளவு சுலபம் அல்ல.அதற்குத்தான் பிரம்மச்சரியம்,கிருகஸ்தன்(குடும்பவாழ்க்கை),வானபிரஸ்தம்(காட்டில் மனைவியோடு வாழ்வது), என்று மூன்று நிலைகளில் பயணித்து நாலாவது நிலையான சன்னியாசம்(துறவு) வர வேண்டும்.

அடுத்த உச்சக் கட்ட காமெடி.வாழ்க்கையில் எல்லாவற்றையும் வண்டி வண்டியாக நெட்டுரு செய்து உபதேசித்த போலி சாமியார் விவேகமில்லாமல் ”ஆத்மா” வைவிட “உடம்பு”தான் முக்கியம் என்று தலை மறைவு ஆகிவிட்டார்.

உடம்புதான் “பிரத்யக்‌ஷமாக” கண்ணுக்கு தெரிகிறது அவருக்கு.ரொம்ப நாளாக வெயிட் லிஸ்டில் இருந்து மாட்டிக்கொண்டார்.

எனக்கும் கடவுள் பக்தி உண்டு.என் தாத்தா காலத்திலிருந்து சீரியஸ் முரட்டு பக்தி லெவல் கொஞ்சம் கொஞ்சமாக உருகி “போலிபைனான்ஸ் கம்பெனி” “போலிச் சாமியார்” பற்றிய விழிப்புணர்ச்சியானால் புத்திசாலித்தனமான பக்தியாகி நேரடி கடவுள் பிரார்த்தனைதான்.

1.“இடைத் தரகர்கள் அனுமதியில்லை”

2. “சாமியார்களுக்கு அனுமதியில்லை
கண்டிப்பாக Split A/C சாமியார்களுக்கு”


எங்கள் மனதில் போர்டு மாட்டிக்கொண்டு கிட்டத்தட்ட 20 வருடம் ஆகிவிட்டது.

ஆனால் மறக்காமல் Split A/C  போலி சாமியார்களை டீவியில் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பதுண்டு.வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்.இதற்காக நன்றி செலுத்துவதுண்டு இவர்களுக்கு.

.

Monday, December 8, 2008

இரட்டை அர்த்த பாடல்கள்-காள மேக புலவர்

 
      ”இம்” என்பதற்க்குள் எழுநூறு பாடல்கள்

நம் ஊரில் மெட்டுக்குப் பாட்டு, பாட்டுக்கு மெட்டு உண்டு.
ஆனால் ”இம்” என்பதற்க்குள் எழுநூறு கவிகள் எழுதும் வல்லமை உண்டு காள மேக புலவர்க்கு. கரு மேகம் உடைத்துக்கொண்டு மழை பொய்வது போல்
கவிதையை பொழிவார். அதான் காள மேகம்.இவர் ஒரு ஆசு கவி. ஆசு(விரைவு)


அடுத்து இவர் விசித்தரமாய் பாடுவதிலும் வல்லவர்.நினைத்தே பார்க்க முடியாதபடி விசித்தர விசித்திரமாக எதையாவது சொல்லி தலைப்பை கொடுத்து பாட வைப்பார்க்ள்.

நம்ம ஊர் கவிஞ்சர்கள் “ஒரு” வைத்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார்கள்
(ஒரு மாலை,ஒரு பொன்னு,ஒருஅழகான,ஒரு நாள் ஒரு கனவு என்ற ரீதியில்)


ஒரு முறை ஒன்றை (1)விட சின்னபின்னங்களான(fractions)
முக்கால்,அரை,கால்,அரைக்கால்(1/8)இருமா(1/16),மாகாணி(1/32), ஒரு மா(1/64),கிழரை(1/128) வருமாறு ஒரு வெண்பா பாடச்சொன்னார்க்ள்.(நான் கொடுத்திருக்கும் அளவு சும்மா ஒரு referenceக்குதான்.சரியான அளவா தெரியாது)


காள மேக புலவர்  பின்னி எடுத்தார் பின்னங்களை வைத்து.

அந்த பாடல்

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண்(டு) அஞ்சாமுன் - விக்கி
இருமா முன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழ்ரைஇன் றோது.

எல்லா fraction ம் வந்துவிட்டது. அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்.

அர்த்தம்:

முக்காலுக் கேகாமுன்: (இரண்டு காலோடு மூன்றாவது காலாகக் கொம்பை பிடித்துக்கொள்ளும்
வயதான காலம் வருவதற்கு முன்)

முன்னரையில் வீழாமுன்:(முன்னுச்சி மயிரில் நரை ஏற்படுவதற்க்கு முன்)

அக்கா லரைக்கால்கண்(டு)
அஞ்சாமுன்: (எமனின் கால் அடிச்சுவடியைக் கண்டு அஞ்சுவதற்க்கு முன்)

விக்கி இருமா முன்:(வயதான காலத்தில் விக்கல்,இருமல் வருவதற்கு முன்)

மாகாணிக் கேகாமுன்:(மயானத்திற்கு போகும் முன்)(மாகாணி-மயானம்)

கச்சி ஒருமாவின் கீழ்ரை:(காஞ்சிபுரம் ஒரு மாம்பழம் விட்ட மரத்தின் கிழே வசிப்பவரை(சிவன்))
(ஏகாம்பரம்(ஏக-ஒரு,ஆம்ரம்-மாம்பழம்)

இன் றோது:இப்பவே துதி

நம்ம ஊர் “நாக்க மூக்க நாக்க மூக்க” என்று கொடுத்தால் 
கூட ஏதாவது அர்த்தம் வருமாறுஎழுதுவாரோ?


 

Saturday, November 22, 2008

சலங்கை ஒலி நாத வினோதங்கள் நடன

சலங்கை ஒலி படத்தில் "நாத வினோதங்கள் நடன" என்ற பாட்டிற்க்கு முன் ஓரு வட மொழி ஸ்லோகம் வரும் . அது :

//வாகர்தாவிவ  ஸ்ம்ப்ருக்தெள வாகர்த – ப்ரதிபத்தயே  

ஜகத: பிதரெள வந்தே பார்வ்தீ-பரமேச்வரெள//

எழுதியவர் "காளி தாசன் ". நூல் "ரகு வம்சம்" .இந்த ஸ்லோகம் முதலில் கடவுள் வாழ்த்தாக வருகிறது.

பொருள் : "சொல்லும் பொருளும் போல இணைந்த்திருப்பவர்களும் ,உலகங்களுக்கெல்லாம் தாய்-தந்தை ஆன பார்வதி பரமேஸ்வரர்களை சொல் பொருள் ஆகியவை பற்றிய அறிவு உண்டாகும் பொருட்டு வணங்குகிறேன் "

 

இந்த ஸ்லோகத்தை சொல்லும் SPB "பார்வ்தீ-பரமேச்வரெள" என்பதை உச்சரிக்கும் போது " பார்வ்தீ-பரமேச்வரெள என்று சேர்த்து உச்சரிக்காமல் "பார்வதீப" என்று சொல்லி  சற்று இடைவெளி விட்டு  "ரமேச்வரெள" என்பார்.  பிறகு ராஜாவின் வயலின் ரகளையோடு பாட்டு ஆரம்பிக்கும்.

ஏன் பிரித்து உச்சரிக்கிறார்.

பார்வ்தீபரமேச்வரெள  என்றால்  பார்வதியையும் சிவனையும் வணங்குகிறேன். இங்கு இரண்டு பேர்தான் (பார்வதி/சிவன்)

பார்வ்தீப ------ ரமேச்வரெள என்றால் (பார்வ்தீப) பார்வதியின் பதியான பரமேஸ்வரனையும் (ரமேச்வரெள) ரமை(மஹா ல்ஷ்மி)க்கு ஈசவரனாகிய மஹா விஷ்ணுவை குறிக்கும். இங்கு நான்கு  பேர் (பார்வதி&சிவன், மஹாவிஷ்ணு & மஹாலஷ்மி)

 

 Add on’s? அல்லது ஒரே கல்லில் நான்கு மாங்காய்