”இம்” என்பதற்க்குள் எழுநூறு பாடல்கள்
நம் ஊரில் மெட்டுக்குப் பாட்டு, பாட்டுக்கு மெட்டு உண்டு.
ஆனால் ”இம்” என்பதற்க்குள் எழுநூறு கவிகள் எழுதும் வல்லமை உண்டு காள மேக புலவர்க்கு. கரு மேகம் உடைத்துக்கொண்டு மழை பொய்வது போல்
கவிதையை பொழிவார். அதான் காள மேகம்.இவர் ஒரு ஆசு கவி. ஆசு(விரைவு)
அடுத்து இவர் விசித்தரமாய் பாடுவதிலும் வல்லவர்.நினைத்தே பார்க்க முடியாதபடி விசித்தர விசித்திரமாக எதையாவது சொல்லி தலைப்பை கொடுத்து பாட வைப்பார்க்ள்.
நம்ம ஊர் கவிஞ்சர்கள் “ஒரு” வைத்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார்கள்
(ஒரு மாலை,ஒரு பொன்னு,ஒருஅழகான,ஒரு நாள் ஒரு கனவு என்ற ரீதியில்)
ஒரு முறை ஒன்றை (1)விட சின்னபின்னங்களான(fractions)
முக்கால்,அரை,கால்,அரைக்கால்(1/8)இருமா(1/16),மாகாணி(1/32), ஒரு மா(1/64),கிழரை(1/128) வருமாறு ஒரு வெண்பா பாடச்சொன்னார்க்ள்.(நான் கொடுத்திருக்கும் அளவு சும்மா ஒரு referenceக்குதான்.சரியான அளவா தெரியாது)
காள மேக புலவர் பின்னி எடுத்தார் பின்னங்களை வைத்து.
அந்த பாடல்
முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண்(டு) அஞ்சாமுன் - விக்கி
இருமா முன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழ்ரைஇன் றோது.
எல்லா fraction ம் வந்துவிட்டது. அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்.
அர்த்தம்:
முக்காலுக் கேகாமுன்: (இரண்டு காலோடு மூன்றாவது காலாகக் கொம்பை பிடித்துக்கொள்ளும்
வயதான காலம் வருவதற்கு முன்)
முன்னரையில் வீழாமுன்:(முன்னுச்சி மயிரில் நரை ஏற்படுவதற்க்கு முன்)
அக்கா லரைக்கால்கண்(டு)
அஞ்சாமுன்: (எமனின் கால் அடிச்சுவடியைக் கண்டு அஞ்சுவதற்க்கு முன்)
விக்கி இருமா முன்:(வயதான காலத்தில் விக்கல்,இருமல் வருவதற்கு முன்)
மாகாணிக் கேகாமுன்:(மயானத்திற்கு போகும் முன்)(மாகாணி-மயானம்)
கச்சி ஒருமாவின் கீழ்ரை:(காஞ்சிபுரம் ஒரு மாம்பழம் விட்ட மரத்தின் கிழே வசிப்பவரை(சிவன்))
(ஏகாம்பரம்(ஏக-ஒரு,ஆம்ரம்-மாம்பழம்)
இன் றோது:இப்பவே துதி
நம்ம ஊர் “நாக்க மூக்க நாக்க மூக்க” என்று கொடுத்தால்
கூட ஏதாவது அர்த்தம் வருமாறுஎழுதுவாரோ?
அட.....!
ReplyDeleteஅடேங்கப்பா.....!
சார் ஆசு கவினா என்ன ?
!!!!!!!!!!!
ReplyDeleteஅற்புதம் ரவி.....
ReplyDeleteபள்ளிக்கூடத்தில் “காக்கை காகூ கை” என்று ஒரு பாடல் படித்ததாக நினைவு. முடிந்தால் அந்த பாடலையும் போடுவீர்களா?
This comment has been removed by the author.
ReplyDeleteஇப்போ ஆருங்க கவிதை எழுதுறாங்க; பலர் எழுதுவது அவர்களுக்கே என்ன? என்று தெரியாதே!
ReplyDeleteகாளமேகப் புலவர் பாட்டுக்கு நன்றி
இது தான் என் தாய் மொழியின் சிறப்பு என்ன வாழ்க தமிழ்
ReplyDelete