இளையராஜாவின் பிரபலமாகாத அற்புத
இசையமைப்புப் பாடல்கள் - 2
படம் பாட்டு
மணிப்பூர் மாமியார் ஆனந்தத் தேன்காற்று தாலட்டுதே
பாட்டின் சிறப்பு
ஹிந்தோளம் ராகத்தில் அமைந்த பாட்டு.
ராஜா இந்த ராகத்தை அதிகமாக
பயன்படுத்தியது இல்லை. S.P.ஷைலஜா
/மலேசியா வாசு,(C.S.ஜெயராமன்
குரலில் பாடுவார்...ஆஷை காதலிலே).இனிமையான
ஆரம்ப ஹம்மிங் by SPS,”மான்கள் தேடும் பூவை
அவளோ...”ஹை பிச்சில்.by .MV. சூப்பர்....
படம் பாட்டு
மணமகளே வா கன்னிமனம் கெட்டுப்போச்சு
பாட்டின் சிறப்பு
இதில் ஜானகிக்கு 100 மார்க்.அட்டகாசம்.
ஏக்கத்தோடு(மஞ்ச தேச்சு குளிக்கியல..)
பாடியிருக்கிறார்.பாடலை எழுதியவர்க்கு
100 மார்க்.ஆபாசம் இல்லாத எழுத்துக்கள்.
கிராம பாட்டு.ஆனால் western beats.
ராஜாவின் வழக்கமான வயலின் உரசல்கள்/தபேலா தட்டல்கள்
படம் பாட்டு
மஞ்சள் நிலா இளம் மனதினில் எழும்
கனவினில் விழி மலர்கிறதே
பாட்டின் சிறப்பு
பெரிய்ய்ய்.........ய பாட்டு.பாட்டில் கவிநயம்.
KJY/Sasi Rekha.சசிரேகா ஹை பிட்சில் தடுமாறுவது
தெரியும்.உமா ரமணனை பாட வைத்திருக்கலாம்.
சிறப்பு மிருதங்கம். இதில் பின்னணி முழுவதும்
மிருதங்கத்தில் குமறு குமறு என்று ராஜாவின்
குமுறல்தான்.ராகம்...மாயா மாளவ கெளள?
(பூங்கதவே தாழ்/மதுர மரிக்கொழுந்து)
படம் பாட்டு
பூந்தோட்டம் மீட்டாத வீணை
பாட்டின் சிறப்பு
ராகம் - ரீத கெளள(சின்ன கணணன்)
ஹரிஹரன்/மஹாலஷ்மி.ஆரம்பமுதல் கடைசி வரை
ராஜாவின் மேற்கத்திய இசை கிடார் (மற்றும் வீணை?)
ரகளை.முதல் சரண ஆரம்பத்தில் ரீத
கெளளயின்(ஸ்வரங்கள்?)கிடாரில் fireworks.
Highly romantic music.
என்னுடைய இளையராஜாவின் பிரபலமாகாத அற்புத
இசையமைப்புப் பாடல்கள் -1 க்குப் போக.
(அந்த பதிவில்பாட்டைக் கேட்க இப்போது லிங்க்
கொடுத்துவிட்டேன்.அப்போது மறந்து விட்டேன்.)
கலக்கல் பாட்டுக்கள், ஆனா ஆனந்ததேன் காற்று பிரபலமான பாட்டாச்சே
ReplyDelete//படம் பாட்டுபூந்தோட்டம் மீட்டாத வீணைபாட்டின் சிறப்புராகம் - ரீத கெளள(சின்ன கணணன்)ஹரிஹரன்/மஹாலஷ்மி.ஆரம்பமுதல் கடைசி வரை ராஜாவின் மேற்கத்திய இசை கிடார் (மற்றும் வீணை?)ரகளை.முதல் சரண ஆரம்பத்தில் ரீத கெளளயின்(ஸ்வரங்கள்?)கிடாரில் fireworks. Highly romantic music.//
ReplyDeleteநல்ல தொகுப்பு! எனக்கு ராகங்கள் பற்றித் தெரியாது! இதில் குறிப்பாக பூந்தோட்டம் பட பாடல்கள் உயிரைக் கரைக்கும் பேரலாதியான மெல்லுணர்வை தந்திருக்கும். அடர்ந்த மலைப்பகுதியில் சுற்றும் பசுமை சூழ்ந்திருக்கும் வனத்தில் பொழுயும் மழைத்துளி போல ரம்யமாக இருக்கும் பாடல் மீட்டாத ஒரு வீணை. என்னுடைய மிக விருப்பமான பாடல்! அப்படி ஒரு அற்புதமான இசை கோர்வை. இலை மேல் துளிர்த்திருக்கும் பனித்துளி போல இசையின் மீது ஹரிஹரனின் குரலும் மகாலட்சுமி அய்யரின் குரலும் படர்ந்து இருக்கும். ஹரஹரனின் மிக இனிமையான குரலை இப்பாடலில்/ இப்படத்தின் பாடல்களில் கேட்க முடியும். இந்த பாடலில் நீங்கள் குறிப்பிட மறந்த ஒரு விசயம் ராஜாவின் அற்புதமான வயலின்! மேற்கத்திய இசையும், கர்நாடக இசையும் பிண்ணிப் பிணைந்திருக்கும் கவித்துவமான இசைக் கலப்பு.
இதே படத்தின் இன்னொரு பாடலான வானத்து தாரகையோவிலும் இளையராஜா மெல்லிசையின் உச்சம் தொட்டிருப்பார்.
கானா பிரபா,
ReplyDeleteஎனக்குத் தெரிஞ்சு பிரபலமாகாதப் பாட்டு.கருத்துகு நன்றி.
முத்துகுமரன்
கருத்துகு நன்றி.
//நீங்கள் குறிப்பிட மறந்த//
எதை விடுவது எதை சேர்ப்பது?
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே... மிகவும் பிரபலமான பாடல். மணிப்பூர் மாமியார் படத்தில் சமையல் பாடமே என்றொரு பாடல் வந்து...பின்னாளில் உன்னால் முடியும் தம்பி படத்தில் என்ன சமையலோ என்று வந்தது.
ReplyDeleteமஞ்சள் நிலா படத்தில் பி.சுசீலாவும் ஜெயச்சந்திரன் பாடும் பூந்தென்றல் காற்றே வா - நல்ல பாடல். மிக இனிமையானது.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் "" பாடல் சுமார் ரகம். அதில் சசிரேகா தடுமாறுவது போலத் தெரியவில்லை. பாட்டே அவ்வளவுதான். ஜேசுதாஸ் கூட அலுப்பூட்டுகிறார். கேள்வியின் நாயகனே பாட்டைப் பாடிய சசிரேகாவிற்கு இந்தப் பாட்டு கடினமாக இருந்திருக்கும் என்று நம்ப முடியவில்லை.
ராகவன்,
ReplyDeleteகருத்துக்கு நன்றி.
//மஞ்சள் நிலா படத்தில் பி.சுசீலாவும் ஜெயச்சந்திரன் பாடும் பூந்தென்றல்//
அற்புதமான இசை.அப்போது வந்துக்கொண்டிரிந்த அலுப்பூட்டும் இசைக்கு இது ஒரு அதிர்ச்சி இசை.ரசிகர்கள் ஆடிபோய்விட்டார்கள்.
”இளம் மனதினில்” ஏன் சிற்ப்பு என்று
பதிவிலேயே சொல்லிருக்கிறேன் ராகவ்ன்.
நன்றி
நன்றி ரவிஷங்கர்,
ReplyDeleteஎனக்கு மணமகளே வா படத்தில் 'கன்னிமனம் கெட்டுப்போச்சு' பாடல் மிகவும் பிடிக்கும்..
http://thenkinnam.blogspot.com/
மேலே சொன்ன தளத்திலும் நிறைய பாடல்கள் வரிகளுடன் கிடைக்கிறது..நானும் சமீபத்தில்தான் பார்த்தேன்..
சென்று பாருங்கள்...
சார், எங்கேந்து சார் பிடிக்கிறீங்க இந்த பாடல்களை எல்லாம், ஆனந்த பூங்காற்று எம்.பி.3 வடிவில் கிடைக்குமா?
ReplyDeleteவாங்க நாகூர் இஸ்மாயில்.முதல் வருகைக்கு நன்றி.
ReplyDelete//சார், எங்கேந்து சார் பிடிக்கிறீங்க //
ராஜா சார் ரசிகன் ஆனதால் எல்லா பாடல்களும் ஓரளவுக்கு மோப்பம் பிடித்து வைத்துள்ளேன்.
// ஆனந்த பூங்காற்று எம்.பி.3 வடிவில் //
ஆனந்த தேன்காற்று.. தரவிரக்கம் செய்ய கிழ் சென்று ரிஜிஸ்டர் செய்து
www.cooltoad.com உள் நுழைந்து மெனுவில் Music கிளிக் செய்து பிறகு worldஇன் கிழ் tamil கிளிக் செய்து searchல் Anantha Then Kaatru அல்லது Manipoor Mamiyaar
டைப் செய்து தேடி தரவிரக்கம் செய்யவும்.
நன்றி