Tuesday, December 2, 2008

திக் திக் திகில்.. அறிவியல் புனைக் கதை


அறிவியல் புனைக் கதை

அனாதை

குமார் காலையில் எழுந்தான். பால் பையில் பால் இல்லை. பேப்பர் வரவில்லை.பல் தேய்த்து முடித்து கிழ் வந்து பார்த்தான். கிழே பிளாட் ஆட்கள் காணவில்லை. ரோடிலும் ஆட்கள் இல்லை. நிசப்தமாக இருந்தது. மயான அமைதி என்று சொல்லலாம். பக்கத்து பிளாட் எதிர் பிளாட் எங்குமே யாருமே இல்லை. போன் யாரும் எடுக்கவில்லை.அவன் நண்பர்கள் /உறவினர்கள் எல்லோருக்கும் போன் செய்தான். ஒரு பதிலும் இல்லை. குமார் கனவும் காணவில்லை. உறுதி செய்துக்கொண்டான்.என்ன ஆச்சு? முகம் வாட்டமிழந்து ஒரு மாதிரி திகில் பிடித்துக்கொண்டது. திகிலுடன் பசியும் சேர்ந்து கொண்டது. 

வண்டியை எடுத்தான். ஒரு ஹோட்டலுக்கு சென்றான்.அங்கும் யாரும் இல்லை.மாவாட்டும் இடம் வரை கூட சென்று பார்த்தாகி விட்டது.யாரும் இல்லை.எல்லாம் இளம் சூட்டில்தான் இருந்தது. தானே எடுத்து போட்டுக்கொண்டு ஒரு வித கலக்கத்துடன் சாப்பிட்டான். பெட்ரோல் பங்க் வந்தான். அங்கும் யாரும் இல்லை. போலீஸ் ஸ்டேஷன்.இல்லை.

மறுபடியும் உறுதி செய்தான். தான் மட்டும்தான் இந்த உலகில் இருப்பதாக நிச்சியம் செய்து கொண்டான். தனககு பைத்தியம் பிடித்து விட்டதா? ஏன் நான் மட்டும் இருக்கிறேன்? ஏன்? எல்லோரும் எங்கே போனார்கள்.

பூகம்பம் /சுனாமி ஒன்றும் இல்லையே? இரண்டு நாள் காத்திருந்தான் ஏதாவது தெரியும் என்று. மூன்றாவது நாள் நொந்து போனான்.வாழ்க்கை போரடித்தது.

தான் வாழ்வது அர்த்தமில்லை என்று முடிவு எடுத்தான். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான். தூக்கில் தொங்கி முழி பிதுங்கி செத்தான்.

அடுதத வினாடி பூமி சுற்றுவது நின்றது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா கோள்களும் ஒன்றன் பின் ஒன்றாக நிற்க இயக்கம் ஸ்தம்பித்தது. இருட்டு.


முற்றும்

5 comments:

  1. OK. Last sentence might be odd for the flow.

    Kadavul Kaanavillai!

    ReplyDelete
  2. வினிதா,

    நன்றி,

    கடைசி வரி எடுத்தாச்சு.

    ஆக்‌ஷுவலா இதற்கு மூன்று முடிவுகள் வைத்திருந்தேன்.

    ReplyDelete
  3. எல்லாம் சரி. இதை விவரிப்பது யாரு? ஒருவேளை நாம் வேறு கிரகத்தில் இருக்கிறோமா?

    ReplyDelete
  4. the last man on earth , I am Legend மற்றும் the omega man படத்தின் ஆரம்பக்காட்சிகள் இப்படித்தான் இருக்கும்..

    __________________________________

    குமார் கடவுளா? அல்லது பிரபஞ்சத்தின் கடைசி உயிரா?

    குழப்பத்தோடு முடிச்சிட்டீங்களே..

    ReplyDelete
  5. //பிரபஞ்சத்தின் கடைசி உயிரா?
    //
    அப்படித்தான் நான் புரிந்து கொண்டேன்...
    கதை ஓ.கே.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!