Wednesday, December 24, 2008

இளையராஜாவின் பிரபலமாகாதப் பாடல்கள்


இளையராஜாவின் பிரபலமாகாத அற்புத 
இசையமைபுப் பாடல்கள்

படம் பாட்டு
1.ஆராதனை குங்கும செங்கமலம்

பாட்டின் சிறப்பு
SPB/தபலா - Flute combination இசை/பாடல் வரிகள்


2.மெட்டி சந்தகவிகள் பாடிடும்

பாட்டின் சிறப்பு
பிரம்மானந்தம்/ ஆரம்பத்தில் வயலின் ஆரபி ராகத்தில் இழைக்க ஆரம்பித்து பல்லவி முடிந்து ராஜாவின் ரகளைதான் அட்டகாசம் பாடல் முழுவதும்.ஆரபியை ராஜாவால்தான் இப்படி கொடுக்க முடியும். இதே ஆரபியை “மன்னவனே மன்னவனே மனசு” படம்:”தந்துவிட்டேன் என்னை” வேறு விதத்தில் வரும்.


3.ஆயிரம் நிலவே வா அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால்

பாட்டின் சிறப்பு
SPB/மேற்க்கத்திய இசையின் இனிமையான சிதறல்கள்


4. ஆனந்த கும்மி தாமரைக்கொடி

பாட்டின் சிறப்பு
SPB/ஆச்சிரியமான மேற்க்கத்திய இசை பின்னணி


5. உல்லாச பறவைகள் தெய்வீக ராகம்
பாட்டின் சிறப்பு
Jency/ பாடல் ஜென்சியின் மூக்கு ஹம்மிங்கோடு ஆரம்பிக்க.flute வருட பிறகு தபேலா சேர்ந்துக் கொள்ளும்.ஹம்மிங்/கோரஸ் வித்தியாசம்.


6.அந்த ஒரு நிமிடம் சிறிய பறவை சிறகை

பாட்டின் சிறப்பு
சாருகேசி ராகம்.. மேற்க்கத்திய கர்நாடக இசை ஒரு 
காக்டெயில்
 

7.மோகமுள் சொல்லாயோ வாய் திறந்து

பாட்டின் சிறப்பு
ஷண்முகபிரியா ராகம். ஜான்கியின் உருக்கும் குரல்.இசையின் உருக்கம் ....ராஜா.  


8.கண்ணே கலை மானே நீர் விழிச்சி தீமூட்டுதே

பாட்டின் சிறப்பு
இந்த பாட்டு,தமிழ்,மலையாளம்,தெலுங்கு,வெறும் இசை என்று பல ரூபத்தில் உள்ளது.தபேலா,கிடார் ஜானகி மூன்று பேரையும் வழி நடத்துவார் ராஜா காபி ராகத்தில்.”தென்மாங்கு மழை வந்து”கவிஞர் அறிவுமதியின் வரிகளை முதல் சரணத்தில்.....ஜானகி.. அட்டகாசம். மலையாளத்திலும் ஜானகிதான். “தும்பி வா தும்பக்குடத்தில்”


21 comments:

 1. மார்கழி மாசமா இது?அதுதான் சங்கீதப் பதிவுகள் கலை கட்டுது!

  ReplyDelete
 2. அனைத்துமே முத்துக்கள் நண்பா

  ReplyDelete
 3. ராஜ நடராஜன்,

  உங்கள் கருத்துக்கு நன்றி.ராஜாவின் இசை என்க்கு 24/7.

  கானா பிரபா

  நன்றி.

  ReplyDelete
 4. இதில் சில என்னுடைய all time favorites. ஆனால் சில நான் அறியாதவை.
  நான் பாடல்களில் இசைக் கருவிகளையும், சங்கதிகளையும் கவனித்து ரசிப்பதே 25 வயசுக்கு அப்புரம்தான். ரொம்ப லேட். ராக ஞானமெல்லாம் இல்லை. ஆனால் இளையராஜா இசை பாமரனுக்கும் விமோசனம்.

  உங்கள் லிஸ்டை youtube-ல் தேடி கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிரேன் :)

  ReplyDelete
 5. அட, அடா, அருமையான படம், பிரம்மானந்தம்! அப்படியே மரநிழலில் கீழே எதுவுமே போட்டுக்காமல் உட்காரணும் போல இருக்கு! நன்றி படத்துக்கு!

  ரொம்ப நன்றி வரவுக்கும், கருத்துக்கும்!

  ReplyDelete
 6. பதிவை அப்புறமாப் படிச்சுக்கறேன்! :)))))

  ReplyDelete
 7. எல்லாம் நல்ல பாடல்கள்..உல்லாசப் பறவைகள் தெய்வீக ராகமும், அந்த ஒரு நிமிடம் சிறிய பறவையும் பிரபலமானவைதானே...

  அந்தரங்கம் யாவுமே பாடலில் பாலு சிரிக்கும் சிரிப்பு..அடடா..

  ReplyDelete
 8. சுகுமார்,

  நன்றி.ஒரு சின்ன வேண்டுகோள்.”காற்றில் எந்தன் கீதம்”
  (ஜானி) வரும் முதல் interlude இரண்டாவது interlude ஹெட் போனில் கேளுங்கள்.
  It is amazing! Musical brilliance to the core.

  ReplyDelete
 9. கீதா சாம்பசிவம்,
  ஸ்வாகதம்!முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

  அப்படியே என் கதை/கவிதையையும் படிச்சிட்டு எதனா கூவிட்டுப் போங்க.
  (ஹிஹிஹிஹி)

  ReplyDelete
 10. வாங்க பாச மலர்,

  நாம ரசிச்ச பாட்ட இன்னொருத்தரும் ரசிக்கிறாங்க என்பது ஒரு டபுள் சந்தோஷம்.

  நான் ஜென்சியின் ஆதர்ச ரசிகன்.

  “ஆயிரம் மலர்களே மலருங்கள்”
  //அந்தரங்கம் யாவுமே பாடலில் பாலு சிரிக்கும் சிரிப்பு..அடடா//

  இந்த பாட்ல இது ஒரு முக்கியமான அயிட்டம்.சே! நான் பதிவில் விட்டு விட்டேன்.(தலையில்
  குட்டிக்கொள்கிறேன்)

  ReplyDelete
 11. ஆராதனையில் "இளம் பனி துளி" பாடலும் பிரபலமாகாத ஒன்று. நான் ஒரு பதிவில் அந்தப் பாடலை ஒலி"பரப்பி"யிருக்கின்றேன்...
  +
  பாசமலர் சொன்னதை வழிமொழிகிறேன்...

  ReplyDelete
 12. கார்த்திக்,

  //ஆராதனையில் "இளம் பனி துளி"//

  நண்பா ஆல்ரெடி கேட்டதுதான். ராதிகா
  (நடிகை அல்ல)பாடியது.இந்தப்பாட்டை
  சிறப்பு லிஸ்டில் நாங்கள் போட்ட வருடம் 1983.

  ReplyDelete
 13. //நீர் விழிச்சி தீமூட்டுதே//

  இது கவிஞர் அறிவுமதி

  ReplyDelete
 14. "அந்தரங்கம் யாவுமே சொல்வதென்றால் பாவமே
  ஏழையின் காதலை மாளிகை அறியுமா"

  அருமையான பாடல் ஆனால் ஏனோ அவ்வளவாக பிரபலம் ஆகவில்லை.
  இந்த பாடலில் எஸ்.பி.பி "ம்ஹூஹூம் அறியுமா" என ஒரு இடத்தில் சிரித்துக்கொண்டே பாடுவார்.சூப்பரா இருக்கும்.

  இதை பற்றி நானும் ஒரு பதிவிட வேண்டுமென நினைத்திருந்தேன்.நீங்கள் முந்தி கொண்டு கலக்கி விட்டீர்கள்.

  //தெய்வீக ராகமும், அந்த ஒரு நிமிடம் சிறிய பறவையும் பிரபலமானவைதானே...//

  repeateeeeee...!

  ReplyDelete
 15. //ராஜாவின் இசை எனக்கு 24/7.//

  //நான் ஜென்சியின் ஆதர்ச ரசிகன்.//

  எப்படி உங்களை இத்தனை நாள் தவற விட்டேன்!

  ரெம்ப கரைஞ்சு உருகிற மனசனா நீங்க!

  ReplyDelete
 16. //ராஜாவின் இசை எனக்கு 24/7.//

  //நான் ஜென்சியின் ஆதர்ச ரசிகன்.//


  ரெம்ப கரைஞ்சு உருகிற மனுசனா நீங்க!

  எப்படி உங்களை இத்தனை நாள் தவற விட்டேன்!

  ReplyDelete
 17. முத்துகுமரன்,


  நான் எந்த இனிமையான இசையையும்
  ரசிப்பவன்.ராஜா ஒரு சகாப்தம்.சினிமா இசை ராஜாவுடன் முடிந்து விட்டதாக
  என் சொந்தக் கருத்து.

  //ரெம்ப கரைஞ்சு உருகிற மனுசனா நீங்க!//

  சார்! என்ன மாதிரி லட்சக்கணக்கில இருக்காங்க.

  //எப்படி உங்களை இத்தனை நாள்//

  ஒரு சண்டையே நடந்தது. பார்க்க:-

  http://raviaditya.blogspot.com/2008/10/blog-post_12.html“என்னாச்சு ஏ ஆர் ரகுமானுக்கு?

  ReplyDelete
 18. இவை எல்லாமே நான் மிகவும் விரும்பும் பாடல்கள். எனக்கென்னவோ.. இதெல்லாம் அப்படி ஒன்றும் பிரபலமாக பாடல்கள் இல்லை என்று தோன்றுகிறது..

  ReplyDelete
 19. Wonderful choices of songs :)

  I would like to give my favt numbers too !

  Etho Ninaivugal from agal vilakku

  Oru vaanavil pole from kaatrinile varum geetham

  thavikkuthu thayanguthu from nadhiyai thEdi vandha kadal

  kalidasan kannadasan from soorak kOttai singakkutty.

  aasai nenjin kanavugaL from mugathil mugam paarkkalaam.

  geetha sangeetha from anbE sangeetha.

  poonthendRalE from bhuvana oru kELvikkuRi.

  naan oru ponnOviyam from kaNNil theriyum kadhaigaL.

  mayilE mayilE from kadavuL amaitha mEdai.

  MounamE nenjil nALum nI ezhuthum from uRangAtha ninaivugaL.

  thEnaruviyil from AgAya gangai.

  manjaL veyyil from naNdu.

  sandhak kavigaL from metti.

  iLam pani thuLir vidum nEram from Aradhanai.

  mELam kotta nEram varum from Lakshmi.

  antharangam yaavumE from aayiram nilavE vaa.

  ithO ithO en nenjilE from vattathukkuL sathuram.

  naan pEsa vandhEn from paalootti vaLartha kiLi.

  uravugaL thodarkathai from avaL appadiththaan

  engum niraindha iyarkaiyil from idhu eppadi irukku.

  engengO sellum from pattakkaththi bhairavan.

  uravenum pudhiya vaanil from nenjaththaik kiLLaadhE.

  kaadhal Oviyam kaNdEn from kavikkuyil.

  athikaalai nEramE from meeNdum oru kaadhal kadhai.

  ManjaL nilaavukku indru orE sugam from Mudhal Iravu.

  Thiruth thEril varum silaiyO from Naan vaazhavaippEn.

  Ponvaanam panneer thoovudhu innEram from Indru nee naaLai naan.

  kaalaip paniyil from Gayathri.

  Hope you also like these :)

  ReplyDelete
 20. செளமியா,

  ரொம்ப நன்றி.ஜல்லி லாரில கொண்டுவந்து ஜல்லிய கொட்டுகிற
  மாதிரி பாட்டெல்லாம் கொட்டிட்டீங்க.

  என்னோட பேவரைட்டும் இருக்கு.

  ஆமா “நந்தா என் நிலா” பாட்டு பத்தி
  ஒன்னும் சொல்லலியே.

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!