அப்போது இருந்த நான்
கல்லூரி ஆண்டு விழாவில்
ஒரு பூவைப் போல்
அந்தரத்தில் மிதக்க விட்டு
உனக்கு யார் ரொம்ப பிடிக்கும்
மேஜிக் நிபுணர் கேட்டார்
ராம் குமார் என்ற என்
நண்பன் பேர் சொன்ன
பேரழகி நித்யகல்யாணியின்
பழைய போட்டோவை
காட்டி சொன்னதும்
அப்ப நான் இருந்திருந்த
வைச்சிருப்பேன் ஆப்பு என்றான்
என் எட்டு வயது மகன்
அப்ப நான் இருந்திருந்த
பதில் மேஜிக் செய்து
அப்பாவை பிடிக்க வைச்சிருப்பேன்
என்றாள் பதிலடியாக
பதிமூன்று வயது மகள்
ஆல் தி பெஸ்ட் சொல்லி
பாதியிலேயே கிளம்பினேன்
அப்போது இருந்த நான்..
ஏங்க ரவி, உங்க எல்லா படைப்பிலையும் முன்னிலையில் நீங்கள் விரும்பும் பெண், படர்க்கை நண்பனை விரும்புவதாகவே வருகிறதே..! உங்களுக்கு உண்மையிலேயே அப்படி ஏதாவது அனுபவம் இருக்கா..? :)
ReplyDeleteகடைசிவரி புரிஞ்ச மாதிரியும் புரியாத மாதிரியும் பாவ்லா காட்டுது.. இப்போதைக்கு புரிஞ்சிடுச்சுனு நம்பறேன்..
தவறு Bee'மோர்கன்.
ReplyDeleteஇரண்டு படைப்புகளில்தான் "நான்" வருவேன்.மற்றதெல்லாம் பொதுவாக வரும்.
//உண்மையிலேயே அப்படி ஏதாவது அனுபவம் இருக்கா..? //
கூடை கூடையா இருக்கு.
புரியுது ஆனா புரியல....
ReplyDelete