Friday, December 5, 2008

குழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.

 சென்னை அபார்ட்மெண்ட் சமவெளி நாகரிகம்

  இந்த பதிவு குழந்தைகளுக்கு பெயர்வைக்கும் விஷயம். அடுத்து இது தமிழ்நாட்டில் உள்ள சென்னை மற்றும் பெரிய நகரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்பட்டப் பதிவு. மற்ற ஊர்களைப் பற்றித்தெரியாது.

  ஹிந்து மதத்தில் ஸ்த்ரீகளின் பெயர்கள் சுகமாய் உச்சரிக்க கூடியதாகவும், கொடுரமற்றதாகவும்,  தெள்ளிய பொருள் அமைந்ததாகவும், மங்களகரமாகவும், மனதிற்கு இன்பமாகவும்,ஆசிர்வாத வாசகம் போன்று கடை எழுத்து நெடில் (நீண்ட) எழுத்தாகவும் யசோதா,சீதாபார்வதீ,கௌரீ,கல்யாணீ என்பன போன்றதாகவும் இருக்க வேண்டும்.புருஷ பிரஜைகளுக்கு வீரம் தொனிக்கும் பெயர்கள் வைக்க வேண்டும் என்ற ஒரு குறிப்பு உள்ளது.

 ஆனால் பெயர்கள் தலைமுறை தலைமுறையாக நாரீகமாகி மாறி வருகிறது.

 பெண்கள் பெயர் சமவெளி நாகரிகம்

(கொள்ளுப் பாட்டி) பார்வதி,அலமேலு,சரஸ்வதி,காமாட்சி,ருக்மணி

(பாட்டி) வைதேகி, கீதா, விமலா, வசந்தி, கமலா

(அம்மா) ப்ரியா, ரம்யா, அர்ச்சனா, தீபா, உஷா

(பேத்தி) ஷ்ருதி, ஸ்வேதா, அஷ்மிதா, வர்ஷா, ஜானவி

  இந்த கடைசி பெயர்கள் என்னவாக நாகரீகமடையும்? பெண் வலைப்பதிவர்கள் சொல்லலாம்.

  ஆண்கள் பெயர் சமவெளி நாகரிகம் 

(கொள்ளுதாத்தா) ராமலிங்கம்,சதாசிவம்,தக்ஷிணாமூர்த்தி,ராமசாமி,வைத்யலிங்கம் 

(தாத்தா) ராகவன்,ஸ்ரீனிவாசன்,நடராஜன்,மூர்த்தி,வெங்கடேசன்

(அப்பா) மோகன் , ரமேஷ், கண்ணன் ,ஸ்ரீகாந்த்,ராஜ்குமார் 

(பேரன்) அபிலாஷ், கார்த்திக், ஆதித்யா, அனிருத், சித்தார்த்.

 இப்போது புழக்கத்தில் உள்ளது கடைசி இரண்டும் அல்லது இதே மாதிரி நாகரிகமாகஉள்ள மற்ற பெயர்கள். முதல் இரண்டும் அரிதாகி வருகிறது. கலயாணப் பத்திரிக்கையில்அலமேலு (எ) ஜான்வியில்தான் அலமேலு தென்படுகிறார் .

  வைத்தாலும் கூப்பிடுவதும் மற்றும் பள்ளியிலும் வேறு மாதிரி பெயர் கொடுக்கிறார்கள். பையன் பெரியவனானவுடன் gazzetteஇல் கொடுத்து மாற்றி விடுகிறான்

  ஒரு காலத்தில் ரமேஷ்,பிரகாஷ்,வசந்த், சுரேஷ் “ஸ்டைல்” பெயர்கள்.

  எங்கள் பிளாட்டில் அயர்ன் செய்பவர் (பிறந்த போது வைத்த பெயர் முருகபூபதி) தனனை “சுரேஷ்என்றுதான் கூப்பிட சொல்லியிருக்கிறார்.

  நக்ரத்தின் மையத்தில் உள்ள ஒரு பள்ளியில் (6TH standard) மூன்று செக்‌ஷ்ன்களில் (மொத்தம் 180 பேர்.ஹிந்து 98%) அதில் ஒரு பெயர் கூட நாராயணன், ஸ்ரீதர்,கண்ணன் கிடையாது. ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் கண்ணன் இருப்பார். 

  அது மாதிரி “கீதா,கெளரி,லக்‌ஷ்மி ஆபுர்வமாகி வருகிறது. இதுவே இந்த கதைஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவாக உள்ள பெயர்கள்...ஜோதி,ரமணி,செந்தாமரை போன்றவை?

  காரணங்கள் என்ன:- 1.கர்நாடகம் (out of fashion)  2.பெரிசு வாடை அடிக்குது 3.சில பெயர்கள், பூயுன்கள், வேலைக்காரிகள், பாட்டிகள்,.நீதிபதிகள்,railway clerk  ஞாபகம் வருகிறது.4.நீயுமாராலஜி படுத்தும் பாடு.


  எனக்கு பையன் பிறந்தால்(?) "சிவ கடாட்சம்' பெண் பிறந்தால்(?) "அபித குஞ்சம்மாள்" என்று வைக்கலாம் என்று உள்ளேன்.  கொஞ்சும் போது "அபித குஞ்சு" அல்லது "சிவ கடாச்சு" என்று கொஞ்சலாம். 

  கடைசியாக என் வீட்டு வேலைக்காரியின் பெயர் "சிம்ரன்"

  

15 comments:

  1. என்னங்க வேலைக்காரர்கள் எல்லாம் பேன்சி பெயர் வைக்க கூடாதா?

    சென்னையில் ஊசி பின் வாங்கும் போது, விற்ற நரி குறவ பெண், அவர் மகளை அழைத்தது... "சிம்ரன்".

    ReplyDelete
  2. //என்னங்க வேலைக்காரர்கள் எல்லாம் பேன்சி பெயர் வைக்க கூடாதா?//

    வனிதா சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  3. அபித குஞ்சம்மாள் என்று யாரும் வைப்பதில்லை;அபித குஜலாம்பாள் என்று வேண்டமானால் வைப்பார்கள் !

    ReplyDelete
  4. என் மனசில(எல்லார் மனசிலயும்) இருந்ததை பதிவாக்கிட்டீங்க.. நன்றி...
    எனக்கும் மனசுக்குள்ள இந்தப் பிரச்சினை இருந்துக்கிட்டுதானிருக்கு...

    ReplyDelete
  5. வினிதா, யோகன் பாரிஸ்(Johan-Paris)
    தாராளமா வச்சுகலாங்க.எனக்கு ஒரு
    ஆட்சேபனணயும் இல்லை.

    வரவுக்கு நன்றி யோகன் பாரிஸ்.

    அறிவன்#11802717200764379909
    வரவுக்கு நன்றி.
    //அபித குஞ்சம்மாள் என்று யாரும்//

    எங்க கொள்ளுப் பாட்டி பெயர் ’அபித குஜலாம்பாள்” இது வந்து ஒரு (கோவில்பெயர்தெரியவில்லை)அம்பாளின் பெயர்.

    நான் purpose ஆகத்தான்’அபித குஞ்சம்மாள்” என்று எழுதினேன்.

    ReplyDelete
  6. Good one ... u missed all the fun original tamil names ... like Pughazenthi, PoyyaMozhi or Pannimathi or Vetriselvan ... Of course i have all these in my family but no one is called these names ...
    PS: My name is Reenga ... originally from Reengaree/Reengaram (pure tamil)..
    PPS: I have not changed my name in a gazzaette and am happy to note that i am called Reenga by one and all ....

    ReplyDelete
  7. "அபித குஞ்சு" மற்றும் "சிவ கடாச்சு" வுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். என் பெயரை வைத்துக்கொண்டு நான்படும் பாடு சொல்லி மாளாது. நல்ல பெயராய் வைத்துவிடுங்கள் உங்கள் குழந்தைகளுக்கு.

    காந்தி

    ReplyDelete
  8. அபீத குஜலாம்பாள் என்பதும் தவறு. சரி பாருங்கள். உங்கள் பாட்டியின் பெயர் அபீதகுசாம்பாளாக இருக்கும். அது திருவண்ணாமலையில் வாழும் உண்ணாமுலையம்மையின் வடமொழிப்பெயர்.

    ReplyDelete
  9. குமரன் (Kumaran)நன்றி,


    திருவண்ணாமலையில் வாழும் உண்ணாமுலையம்மையின் வடமொழிப்பெயர்."அபித குஜலாம்பாள்" தான் " அபிதகுசாம்பாள் "இல்லை.இது மாதிரி சென்னையிலும் ஒரு கோவில் இருக்கிறது. அபிதா என்றாள் "பயமில்லாத' என்று அர்த்தம்.

    "குஜாம்பாள்" என்றால் "ஸ்தனம்".(முலை) நீங்கள் சொன்ன "உண்ணாமுலை" பொருந்தி வருகிறார் போல் தெரிகிறது. இந்த கருத்தை மறு உறுதி செய்ய வேண்டும். முடியுமா?

    ReplyDelete
  10. சும்மா சொல்லக் கூடாது நல்ல ஆராய்சி பண்ணி இருக்கீங்க!.
    //சென்னையில் ஊசி பின் வாங்கும் போது, விற்ற நரி குறவ பெண், அவர் மகளை அழைத்தது... "சிம்ரன்".//

    பொதுவாகவே குற இனத்தைச் சேர்ந்தவர்கள் நடிகர்களின் பெயரையோ நடிகைகளின் பெயரையோ வைப்பது அவர்களின் விசித்திர வழக்கம்.50 வயதுக்கு மேல் உள்ள பெண்மனியிடம் பெயரைக் கேட்டால் ஜெயலலிதா,கே.ஆர்.விஜயா,என்பார்கள்,40 வயதுக்கு மேல் உள்ளவர்களைக் கேட்டால் ஸ்ரீபிரியா,ஸ்ரீதேவி என்பார்கள்.அவர்கள் இடையே குஷ்பூ,நக்மா கூட உண்டு!

    ReplyDelete
  11. திரு ரவிஷங்கர்,

    உங்கள் கருத்துக்கள் அருமை.

    திருவாரூர் தியாகராஜரின் துணைவியார் பெயர் அபிதகுஜலாம்பாள்.

    உங்கள் குழந்தைகள் பெயர் சொல்லும் குழந்தைகளாக மாறுவார்கள் என எண்ணுகிறேன்.

    :)

    உங்கள் தளத்தில் உள்ள கவிதைகள் அருமை.

    இவ்வாறு ரசிப்புதிறன் உள்ளவர்கள் குழந்தைக்கு அபிதகுஜலாம்பாள் என்றோ சிவகடாசம் என்றோ வைக்க மாட்டார்கள்.நல்ல பெயரே வைப்பார்கள் என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  12. இன்னிக்கு ரமேஷ் சுரேஷ் இருக்கிற மரியாதைதான் நாளைக்கு அனிருத்க்கு இருக்கும். இன்னிக்கு ஃபேஷன் பார்த்து வைத்தால் 20 வருடம் கழித்து அவுட் ஆஃப் ஃபேஷன் தான்.



    டாக்டர் ரிகில். சஞ்சனா டீச்சர் போன்ற பெயர்களை எதிர்கொள்வது கொஞ்சம் கஷ்டம்தான்.

    ReplyDelete
  13. ரஜினி சூப்பர் ஆவதற்கு முன்பு அது பெண் பெயர்.


    சிவாஜி, எம்ஜியார் பேர்கூட நல்லா இல்லைன்னு சொன்ன மக்கள் நாம்.

    அவங்க திறமைல ஹிட் ஆகிட்டா அது சூப்பர் பேர் ஆகிவிடும்

    ReplyDelete
  14. ஸ்வாமி ஓம்கார்,
    என் அழைப்பை மதித்து முதல் வருகையாக
    என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி

    //எனக்கு பையன் பிறந்தால்(?) "சிவ கடாட்சம்' //
    சும்மா ஒரு நகைசுவைக்காகஎழுதினது. இதில் உண்மை இல்லை.அதனால்தான் "'பையன் பிறந்தால்(?) " ஒரு பிராக்கெட் போட்டேன்.

    போனஸ்ஸாக என் கவிதைகளை ரசித்தற்கு நன்றி.

    ReplyDelete
  15. வாங்க சுரேஷ்,

    கருத்துக்கு நன்றி.நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியைத்தான் நானும் கேட்டிருந்தேன்.

    //இந்த கடைசி பெயர்கள் என்னவாக நாகரீகமடையும்?//

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!