குழந்தைகள் நெருக்குகிறார்கள்
ரோஜா மாலைகள் கழுத்தில் நெருட
இடது கையில் ஒரு சங்கிலியும்
வலது கையில் ஒரு சங்கிலியும்
பிடிக்க முடியாமல் பலகையில்
சறுக்கி விழுந்து சரியாக உட்காருகையில்
முஹுர்த்தத்திற்கு நேரமாகிவிடும்
கல்யாண கன்னூஞ்சல்
பிடிக்காவில்லை --
பிடித்திருக்கிறது என் கைகள்
மிருதுவான மருதாணி கைகளை
நழுவ விடாமல்.
அபார்ட்மெண்ட் ஊஞ்சல்
கீழ் வானத்தில் மறைந்து
கொண்டிருக்கும் சூரியனை
பிஞ்சு பாதங்களால் எத்தி விட்டு
திரும்பி வருகையில் இரவாகி
நிலாவை தோள் உரசி
நிலவில் விழுந்த துப்பட்டாவை
எடுக்க மறந்தாள்.................
வேலைக்காரி தனலஷ்மி
பத்து பாத்திரம் தேய்க்கப்போகும்
அவசரத்தில்
ஊஞ்சல் தேவதைகள்
சிறுவர்கள், சிறுமிகள்
இளம் பெண்கள், மனைவிகள்
எல்லோரும் ஆட
இளம் பெண்கள் மட்டும்
தனியாக தெரிகிறார்கள்
ஊஞ்சல் கயிறுகள்
மேகத்திலிருந்து
தொங்குவதால்.
முதல் கவிதை பிடித்திருக்கிறது. மூன்றாவது கவிதை கொஞ்சம் குழப்புகிறது.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதலைவா ! சூப்பர்! இன்னொரு கவிதை எழுதலாமே .
ReplyDeleteஊஞ்சல் தேவதைகள் கவிதையை ரொம்ப ரசித்தேன் ....
ReplyDeleteஜ்யோவ்ராம் சுந்தர்,
ReplyDeleteபெண்கள் ஆடும்போது ஒரு மிதப்பில் இருப்பார்கள். அல்லது ஒரு ரொமான்டிக் மூட் .
பூங்குழலி,
முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
தொடர்ந்து வாருங்கள். வாழ்த்தலாம்/சாத்தலாம் திருத்திக்கொள்ள முடியும்.
முதலும் மூன்றும் நல்லாருக்கு.இரண்டாவது புரியலை.
ReplyDeleteஒருவேளை தனலஷ்மி அபார்ட்மெண்ட் முழுக்க ஊசலாடுகிறாளோ[பல வீட்டுக்கு]
முதல் கவிதை க்யூட்
ReplyDeleteமூன்றாம் கவிதை வித்யாசமான நோக்கு.
இரண்டாம் கவிதை, எனக்கு புரிந்ததை வைத்துப் பார்த்தால், அழகான உவமைகள், உவமேயங்கள், இருப்பினும், child labour, மெத்தனமாய் வேலை செய்பவர்கள் என்று பல கோணங்கள் வந்து போகின்றது.
இரண்டாம் கவிதை 3 முறை படித்த பின் தான் புரிந்து கொண்டேன் :embarassed:
தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.
கண்மணி,
ReplyDeleteஎன் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.
//இரண்டாவது புரியலை.ஒருவேளை தனலஷ்மி அபார்ட்மெண்ட் முழுக்//
இது என் பிளாட்டில் வழக்கமாக நான் பார்க்கும் காட்சி. அந்த வேலைக்காரிப் பெண்
ஆடும் போது ரொம்ப அனுபவித்து ஆடுவாள்.(வாட்ச்மேன் கண்ணில் படாத சமயத்தில்)
ஒரு நாள் "என்ன கழுத ஆட்டம் வேண்டிருக்கு .. பாத்தரம் தேய்க்க வான்னு " ஒருவர் கூப்பிட துப்பட்டாவை மறந்து பயந்து ஓடினாள். நான்தான் துப்பட்டாவை எடுத்து கொடுத்தேன். அதில் விம் வாசனை.
Shakthiprabha ...
கருத்துக்கு நன்றி.