Sunday, December 14, 2008

குழந்தையின்மையும் சில யதார்த்தங்களும்


தவமாய் தவமிருந்து... (சிறு கதை)


அபார்ட்மெண்டில் அழகு அழகான குழந்தைகள். வித விதமான யூனிபார்ம்களில். வழியனுப்ப ஹவுஸ் கோட் அம்மாக்கள். வேன் வந்தது. ஆங்கிலமும் தமிழுமுமாக கலந்த விடை அனுப்புதலோடு குழந்தைகள் இளித்துக்கொண்டும் கத்திக்கொண்டும் ஏறின. அம்மாக்களின் ப்ளையிங் கிஸ், கையசைப்பு. குழந்தைகளும் ஜன்னல் வழியே கை நீட்டி அசைத்தார்கள். வேன் புழுதியோடு "கிங்க் கிங்க்" என்று புறப்பட்டது.




பிளாட்டில் அன்றாட காட்சி. லலிதா ஜன்னல் வழியாக பார்த்தாள். இந்த அன்றாட காட்சி முடிந்தவுடன் அன்றாட குழந்தை ஏக்கம் தலைத் தூக்கி வாட்டி எடுக்கும். அப்படியே கொஞ்ச நேரம் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் ஜன்னலில் சாய்ந்திருப்பாள்.


அடுத்து, அம்மாக்கள் வழியனுப்பிய கையோடு, பழக்காரியிடம் பழம் வாங்குவார்கள். வாங்கும்போது "இது அச்சுக்கு பிடிக்கும்' "இது சோனுக்கும் பிடிக்கும்" என்று பொறுக்கி பொறுக்கி செல்லமாக வாங்குவார்கள். மாலை அதே வேன்,கத்தல்,சிரிப்பு,டிபன்,டியூஷன், பாட்டு கிளாஸ், படிப்பு,தாலாட்டு, தூக்கம், எதிர்காலம் என்று ஒரு அர்த்தபுஷ்டியோடு வாழ்க்கை அவர்களுக்கு நகரும். சுகமான சுமைகள்.

ஆனால் லலிதா வாழ்க்கை எதுவும் இல்லாமல் மொன்னையாக. கண்களில் நீர் முட்டியது.


திருமணம் ஆகி பல வருடங்கள் ஓடி விட்டது. எல்லோருக்கும் வாய்த்த மாதிரி பள்ளி,காலேஜ், வேலை, பணம், கல்யாணம், நல்ல கணவன், குழந்தை என்று வரிசையாக தானகவே வரும் என்று நம்பினாள். நல்ல கணவன் வரை வரிசை கலையாமல் வந்தது. குழந்தை? இல்லாமை ஒரு தாங்க முடியாத குறைதான். நேற்று கூட புதுசா வந்த வேலைக்காரி “இன்னம்மா.. பசங்க வெளியுர்ல படிக்குதுங்களா?” என்றாள்.


முதல் சில வருடங்கள் ஒன்றும் தெரியவில்லை. அவளோடு திருமணம் செய்துக்கொண்டவர்கள் இரண்டாவது குழந்தை கூட பிறக்க ஆரம்பித்தப் போது ஏக்கம் பிறாண்டி எடுக்க ஆரம்பித்தது.


“பிளானிங் அது இதுன்னு... அசட்டுத்தனமா ...இருக்காதீங்க.. காலகாலத்துல அது அது நலலா நடக்கனம்..” லலிதாவை அம்மா அரிக்க ஆரம்பித்தாள். அப்பா தன் பங்குக்கு அடிக்கடி ஜாதகத்தை எடுத்துப் போய் ஜோசியரிடம காட்டி “நல்லது சீக்கிரம் நடக்கும்” என்று ஆறுதல் படுத்திக்கொண்டார். நண்பர்கள் உறவுக்காரர்கள் அக்கம்பக்கத்தவர்கள் ஜாடை மாடையாக கேட்க ஆரம்பித்தார்கள்.


ஆறாவது வருடத்திலிருந்து ஒரு வெறித்தனமாக குழந்தை பாக்கிய முயற்ச்சிகளைத் தொடங்க ஆரம்பித்தாள்.ஒரு நாள் விடாமல் அரச மரம் சுற்றினாள்.அவள் சொன்னாள் இவள் சொன்னாள் என்று பல கோவில்களை லீவு போட்டு கணவனுடன் போனாள்.


அல்லோபதி,சித்தா,ஆயுர்வேதம் என்று பல டாகடர்கள்.பல மெடிக்கல் செக் அப்புகள். பைல் நெறைய பேப்பர்கள்,படங்கள். இரண்டு பேரிடமும் குறைகள் இருப்பதாக ரிப்போர்ட். மருந்துகள், மாத்திரைகள். மறுபடியும் கோவில் குளங்கள்,விரதங்கள்.... பணம் தண்ணீராக செலவழிந்தது. 


இந்த அனுபவம் தந்த ஒரே ஆறுதல் தன்னை மாதிரி குழந்தை இல்லா தம்பதிகள் உலகத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதுதான். 

இதற்கிடையில் பேரன/பேத்திக்களுக்கு காத்திருந்து ஏமாந்து கடந்த போன வருடங்களில் அம்மா, அப்பா, மாமியார்,மாமனார் ஒருவர் பின் ஒருவராக இறந்து போனார்கள்.


லலிதா தன் முயற்ச்சியை நிறுத்துவதும் தொடங்குவதுமாக இருந்தாள்.
போன வருடம் செயற்கை முறை கருத்தரிப்பற்றிக் கேள்விப்பட அதையும் லலிதா ஒரு கை பார்த்திட முடிவு செய்தாள். 

மறுபடியும் மெடிக்கல் செக் அப்.ரிப்போர்ட் செயற்க்கை முறை கருத்தரிக்க வாய்ப்புக்கள் அதிகம் என்றது.மறுபடியும் மருந்துகள், மாத்திரைகள்.


எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும். குழந்தை பிறக்க வேண்டும்.ஸ்கூல் செல்லும் போது “டாட்டா” சொல்ல வேண்டும்.. நானும் பழங்களை பொறுக்கி பொறுக்கி செல்லமாக வாங்க வேண்டும். குட்டியான ஸாக்ஸ்,யூனிபார்ம், டை,உள்ளாடைகள் ஆசையுடன் தோய்த்துக் கொடியில் போட வேண்டும்.

அடுத்த இரண்டு மாதத்தில் செயற்கை முறை கருத்தரிப்பு மெடிக்கல் செக் அப் எல்லாம் நடந்து முடிந்து லலிதா கருவுற்றாள்.


சில மாதங்களுக்குப் பிறகு ஸ்கேன் எடுக்க ஹாஸ்பிடல் ரிச்ப்ஷனில் காத்திருக்கும் போது இது நாள் வரை வராத சில எண்ணங்கள் தோன்றியது.


“அடுத்த மாதம் 50வது பிறந்த நாள். குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியுமா? குழந்தையின் டீன் பருவத்தில் இருவரும் உயிரோடிருப்பமா? இருவரும் இல்லாவிட்டால் யார் காப்பாற்றுவார்கள். இவ்வளவு சொத்து சுகம் குழந்தைகள் அனுபவிக்குமா? பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது. ”நீங்க இரண்டு பேரும் ஒருத்தொருகொருத்தர் குழந்தையா இருங்க”. இருந்திருக்கலாமோ?  

அடி வயிற்றில் திகில் பிடிக்க ஸ்கேனுக்கு உள்ளே போனாள்.

ஸ்கேனில் அவளுக்கு இரட்டை குழந்தை உண்டாகியிருப்பது காட்டியது.

முற்றும்

11 comments:

  1. :)

    :)

    :)

    ( இதையும் கமெண்ட் ன்னு எடுத்துப்பிங்க என்ற நம்பிக்கையில்... )

    ReplyDelete
  2. ///“அடுத்த மாதம் 50வது பிறந்த நாள். குழந்தையை வளர்த்து ஆளாக்க முடியுமா? குழந்தையின் டீன் பருவத்தில் இருவரும் உயிரோடிருப்பமா? இருவரும் இல்லாவிட்டால் யார் காப்பாற்றுவார்கள். இவ்வளவு சொத்து சுகம் குழந்தைகள் அனுபவிக்குமா? பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது. ”நீங்க் இரண்டு பேரும் ஒருத்தொருகொருத்தர் குழந்தையா இருங்க”. இருந்திருக்கலாமோ? ///

    எதார்தமான உண்மை... வாழ்த்துக்கள்! தொடருங்கள்

    ReplyDelete
  3. ஷக்திப்ரபா,

    முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ஆனால் இந்த சங்கேத குறியிடு புரியவில்லை. இது என்ன?

    ஆ.ஞானசேகரன்

    நீங்களும் முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete
  4. என்னங்க இப்பிடி முடிச்சுட்டீங்க????
    அன்புடன் அருணா

    ReplyDelete
  5. வாங்க அருணா,

    ரொம்ப நாளைக்கு முன்னால டீச்சர் கவித படிச்சு ரொம்ப கோவிச்சிட்டு போயிட்டிங்க.


    //என்னங்க இப்பிடி முடிச்சுட்டீங்க//

    அதாங்க எதார்த்தம்! இதுக்கு மூணு முடிவு இருந்ததுங்க. வீட்ல மேடம் இத வைங்கன்னு சொன்னாக. நான் உடனே ஒத்துகிடல. நானும் ரொம்ப யோசிச்சு வச்சேன்.

    ReplyDelete
  6. ரொம்ப ரசித்துப்படித்தேன் என்று "ரசனை" என்ற வார்த்தை சொல்ல முடியாத sensitive topic உங்கள் கதை. அதனால் தான் "ரசித்தேன்" என்று எழுதவில்லை.

    கதையின் கருவில் இருந்த கனம் நன்றாக மனதில் பதிந்தது என்பது தான் நான் சொல்ல வந்தது.

    கடவுள் என்றோ இயற்கை என்றோ நாம் வணங்கும் ஷக்திக்கோ "வந்தா வரட்டும் வராட்டி போகட்டும் போ" என்ற வெறுமை வரட்டு மனநிலை வந்த பின் தான் பெரிதாக அருள் புரிந்து பெருமை பட்டுக்கொள்ளும்.

    (குழந்தையின்மை என்றில்லை இது பலவிஷயங்களுக்கும் பொருந்தும்)

    அதை நினைத்து போட்ட குறியீடு தான் அது :)

    பி.கு: என் வலைப்பதிவை எப்படி கண்டுபிடித்தீர்கள் :shocked:

    வருகைக்கு நன்றி.

    அன்புடன்,
    ஷக்தி

    ReplyDelete
  7. நன்றி ஷக்தி பிரபா,

    உங்கள் பெயர் டபுள் கிளிக்கினால் உங்கள் வலைக்கு போகிறது.

    உங்கள் பெயர் என் மறுமொழியில் mask செய்யப்படவில்லை.It was open.

    ReplyDelete
  8. நன்றி. :)

    நான் வலைப்பதிவுகளுக்கு மிகப் புதியவள். Anyway my name is showing live link, I could have waited before asking :)

    ReplyDelete
  9. உண்மை...எனக்கும் குழந்தையில்லை.
    50 க்குப் பின் நீங்கள் குறிப்பிட்ட விடயங்களை எண்ணி; மறந்தே விட்டேன்.
    முகப்பில் உள்ளவர்களா??? என்பேத்திகள் (அக்கா வழி) அபிராமி;பூமிகா
    தொலைபேசியில் பாட்டா என்ன செய்யுறீங்க?; சாப்பிட்டீங்களா;எப்போ லண்டன் வருவீர்கள் என்பார்கள்.
    ஆனால் நாம் ஈழத்தில் இருந்தால் உயிருடன் சொல்லால் கொல்வார்கள் -

    ReplyDelete
  10. nalla kadhai kadvulai nambinor kai vidappadar

    ReplyDelete
  11. யோகன் பாரிஸ்,

    கருத்துக்கு நன்றி.அக்கா வழி பேத்திகள் சூட்டிகையாக இருக்கிறார்கள்.

    ஷாபி,
    முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!