Tuesday, December 23, 2008

சிதைக்கப்படும் குழந்தைப் பெயர்கள்

       வைப்பது ஒன்று கூப்பிடுவது வேறு

சின்ன வயதில் என் பாட்டியை யாராவது சுலோச்(சி)சு அல்லது ரங்கி(சுலோச்சனா ரங்கநாயகி)என்று சுருக்கிக் கூப்பிட்டால் கோபம் பொத்துக்கொண்டு வருமாம்.முழுப் பெயரோடுதான் கூப்பிட வேண்டும் என்று ஒரு standing instruction இருந்ததாக என் அம்மா சொல்லுவாள். செல்லமா கூப்பிட்டு அம்பாள நொண்டியாக்கிடாதங்கடி என்று கத்துவாளாம். 

பெயர்களை ஏன் சுருக்கி கூப்பிட்டு சிதைக்கக்கூடாது என்று பாட்டி சொல்லி அம்மாவிடம் கேட்டு எழுதினது.

குழந்தைக்கு பெயர் வைக்கும் போது ஒரு அர்த்தம் தொனிக்க இந்து மதத்தில் பெயர்வைக்கும் வழக்கம் உண்டு. 1.மங்களகரம் 2.கடவுள் பெயர் 3.காதுக்கு ரம்யம் 4.முன்னோர்கள் ஞாபகம் 5.வீர்யம் 6.குல தெய்வம் 7.தேசத்தலைவர்கள்8.நியூமராலஜி என காரணங்கள் அடுக்கிக்கொண்டே போகலாம்.


 
ஆனால் கூப்பிடும்போதுகீது(கீதா),அச்சு(அர்ச்சனா)கெளச்சி(கெளசிகா)சீனு(ஸ்ரீனிவாசன்) தீனு (தீனதயாளன்)என்று நாய்க்குட்டியை கூப்பிடுவது போல் சிதைக்கிறோம்.அதன் உண்மையான வீர்யம் அல்லது மங்களகரம் இழந்து போய் முடமாகிவிடுகிறது. பெயர் வைக்கும் பலன நீர்த்துப்போய் விடுகிறது என்பது முன்னோர்கள் வாக்கு. புராண்ங்களில் கூட கதா பாத்திரங்கள் பெயர்களை விளிக்கும்போது சுருக்குவதில்லை.கடவுள் பெயரை அடிக்கடி உச்சரிக்கும் புண்ணியம் கிடைக்கும்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் ஏதோ ஒரு பலனுக்காக நம் பெயரை பல தடவை எழுதிப் பார்ப்பதும் உண்டு.


“முழுச கூப்பிட என்ன வெட்கம்? வக்கும் போது உலகத்தயே பொரட்டி ஒரு பேரத் தேடறோம். இது என்ன சினிமா பேர ..ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி   ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது(பாட்டி அப்போது இருந்தார்) சார்ட் பண்றத்துக்கு.” என்று பாட்டி கொதிப்பாளாம்.


“இவுங்க கோயில்ல போய் ”அச்சு” பன்னுங்கன்னு சொல்றாங்க..இல்லையே அர்ச்சனை பண்ணுஙகன்னுதான்னே சொல்றாங்க.கோவில் குருக்கள் “ஐஸூ(ஐஸ்வர்ய்ய)நமக,காமு(காமாட்சி) நமக, சுப்பு (சுப்ரமண்ய) நமகன்னு சொல்லி பூவ போட்ட எப்படியிருக்கும். முகத்த சுளிக்க மாட்டமாக்கும்.நிறைய பேர் அவங்கள அறியாம பண்றாங்க.” என்று ஒரு போடு போடுவாளாம். 

(அன்றிலிந்து பாட்டியை தொடர்ந்து அம்மாவும் நாங்களும் பெயர்களை சிதைப்பதில்லை. உண்மையிலேயே முழுப் பெயர் கூப்பிட்டால் ரம்யமாகத்தான் இருக்கிறது.(அலர் மேல் வள்ளி?) 
 

சிதைக்கப்படும் பெயர் பட்டியல்:- 

பத்மா-பத்து, லலிதா(லல்லி), ஜானகி(ஜானு),  சரஸ்வதி(சச்சு/சரசு),தீபா(தீபூ), பவானி(பவ்வு), வைஷ்ணவி(வைஷி) ஐஸ்வர்யா(Ash)(Ash.....இது ரொமப கொடுமை சரவணன். இந்த காலத்தை விட பாட்டி காலத்துப் பெயர்கள் நிறைய சுருக்கிக் கூப்பிட தோதுவாக இருக்கிறது. உம்: ருக்மணி(ருக்கு) ,காமாட்சி(காமு).


பார்த்தசாரதி (பாச்சா),  கிருஷ்ணமூர்த்தி(கிச்சு/கிட்டு) வெங்கட்(வெங்கு)
நரசிம்மன்(நச்சு)இங்கும் தாத்தா காலத்துப் பெயர்கள் நிறைய சுருக்கிக் கூப்பிட தோதுவாக இருக்கிறது.

அபிலாஷ், கார்த்திக், ஆதித்யா, அனிருத், ஷ்ருதி, ஸ்வேதா, அஷ்மிதா, வர்ஷா,
ஜானவி அரவிந்த்,etc., etc., போன்ற(அபார்ட்மெண்ட்)லேட்டஸ்டு பெயர்கள் சிதைக்கப்படுகிற மாதிரி தெரியவில்லை. 

இரண்டு எழுத்துப்பெயர்களையே சுருக்குவது (அத விட இது ரொமப கொடுமை சரவணன்) 
மாலா(மாலு) etc., etc., 


பெயரை சிதைக்காமலும் வைத்த பெயரை பயன்படுத்தாமலும் வேறு சில செல்ல பெயர்கள் உண்டு. அவை: ஜில்லு,பேபி,அச்சு,மல்லு,சம்பு,பப்பு,சன்னு,பப்பி,குட்டி,டால்லி,பிங்கி.


நமது முதலமைச்சரிடம் “நீங்க ஏன் வட மொழி (கருணா நிதி) பெயர் வைத்துள்ளீர்கள்” என்று கேட்டதற்கு “என் பெற்றோர்கள் பத்து மாதம் சுமந்து பாராட்டி சீராட்டி வைத்தப் பெயர். அத இழக்க மனசு வரல”  என்று சொன்னாராம்.

நம்து முழு பெயரையும் காது குளிர கேட்கும் இடங்கள் சில:-

1.ஆஸ்பத்திரி 2.ரேஷன் ஆபிஸ் 3.பேங்க் கவுண்டர்.4.நீதிமன்றம்
(கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி..ஒரு தரம்..கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி..ரெண்டு தரம்..கனேஷ்வெங்கடகிருஷ்ணராமசாமி.. மூணு தரம்)etc., etc., 
 

13 comments:

 1. பெயர்ச் சுருக்கம் பெரும்பாலான் பிராமணப் பெயர்களில் நிகழ்வதை கவனித்திருக்கிறேன்! உதா: சீமாச்சு, பம்மேச்சு, சச்சு, பாரு (முறையே சுதர்சனம், பரமேஸ்வரன் :-), சரஸ்வதி, பார்வதி!). இதெல்லாம் விட விசித்திரமாக நாம் எப்போதோ போய்விட்டோம் -

  அம்பி - இது எந்தப் பெயருக்கும் பொருந்தும்!

  என் பெயர் வெங்கட்ரமணன். என் சித்தி இன்னும் என்னை கிச்சான் (அ) விச்சான் என்றுதான் அழைப்பார்! சின்ன வயதில் உரைக்கவில்லை; இப்போது வேடிக்கையாய் உள்ளது!

  & அபிலாஷ்(அபி), ஆதித்யா(ஆதி), வர்ஷா(வர்ஷ்), ஜானவி(ஜானு)ன்னு இன்னும் சுருக்குதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாய்த்தான் தோன்றுகிறது!

  //நமது முதலமைச்சரிடம் “நீங்க ஏன் வட மொழி (கருணா நிதி) பெயர் வைத்துள்ளீர்கள்” என்று கேட்டதற்கு “என் பெற்றோர்கள் பத்து மாதம் சுமந்து பாராட்டி சீராட்டி வைத்தப் பெயர். அத இழக்க மனசு வரல” என்று சொன்னாராம்.//
  இதை அப்போதே சோ 'துக்ளக்' கேள்வி பதிலில் கிண்டலடித்ததுண்டு (தட்சிணாமூர்த்தி என்பதுதான் முத்துவேல் - அஞ்சுகம் தம்பதி வைத்த பெயர்!)

  நன்றி
  வெங்கட்ரமணன்!

  ReplyDelete
 2. Looks like you are going to have your first child and seriously searching for names!

  ReplyDelete
 3. venkatramanan (வெங்கி/வெங்கட்)

  முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி
  //பிராமணப் பெயர்களில் நிகழ்வதை//
  நானும் ஒத்துப்போகிறேன்.

  //அம்பி - இது எந்தப்//
  இது 100% பிராமண குடும்பத்தில் பார்க்கலாம்.திருநெல்வேலியில் “குளத்து மணி” பிரபலம்.

  //அபிலாஷ்(அபி), ஆதித்யா(ஆதி), வர்ஷா(வர்ஷ்), ஜானவி(ஜானு)//

  இதில் சிதைந்தாலும் அர்த்தம் தொனிக்கிற மாதிரி தெரிகிறது.

  ReplyDelete
 4. வினிதா,
  //you are going to have your first child//
  நிச்சியமாக இல்லை.

  போன(பெயர் வைப்பது பற்றி) பதிவு மற்றும் இந்த பதிவில் என்னை மையப் படுத்தி வரும் பெயர்கள் “பீலா” அல்லது கற்பனை.
  90%கற்பனை + 10% உண்மை

  ReplyDelete
 5. ஆசையா கூப்பிட்டுவிட்டு போறாங்க...

  ஏன் காண்டு ?

  ReplyDelete
 6. அம்மா எனக்கு 'சுபா சந்திர போஸ்' என்று பெயர் சூட்ட ஆசப்பட்டாங்க. ஆனா என் தாத்தா பெயர் சுருக்கமா இருக்கனும்னு சொல்லி 'சுகுமார்'-னு வச்சார். சுகுமார்ன்னா நல்ல பையன்னு அர்த்தம். சிலர் 'சுகு'ன்னு குப்புடுராங்க. எனக்கு ஒன்றும் வருத்தமில்லை.

  என் தம்பி பையனுக்கு நாந்தான் நரேஷ்னு பெயர் கண்டுபிடித்தேன். மனிதகுலத் தலைவன்னு அர்த்தம். அதை யாரும் சுருக்கி கூப்பிடாமல் இருக்க கடவுளை வேண்டிக்கிரேன் :)

  ReplyDelete
 7. என்ன ஒரு காமடி,
  உங்க பெயருக்கு ஷார்ட் பார்ம் இல்லையா ரவி அங்கிள்?

  பத்மநாபன் எங்க மாமா பேரு. அவரை பப்பி எனு தான் கூப்பிடுவோம்

  ReplyDelete
 8. சுகு,

  உங்க பெயரை சுருக்கி கூப்பிட்ட தப்பில்லை...

  யார் கிட்டையும் சாவால் விட்டு..என் பேரை மாத்தி வைச்சுசுகறேன்னு சொல்லிடாதீங்க..

  ரணகளமாயிடும்...

  ReplyDelete
 9. எங்க நிறுவனத்துல நாரி நாரின்னு ஒருத்தரக் கூப்புடுவாங்க. கொஞ்சப் பெரிய ஆளும் கூட. அவரோட உண்மையான பேரு நரசிம்மா. இந்தப் பேரெல்லாம் வழக்கமா வடமொழிப் பெயர்களைச் சிதைச்சுச் சொல்றதுதான்.

  யாரும் வளர்மதியை வளர் வளர்னு கூப்ட மாட்டாங்க. ஆனா மதின்னு கூப்டுவாங்க. ஏன்னா அது தமிழ்ப் பெயர். அதுக்குப் பொருள் நம்க்குத் தெரியும். முருகன்னு பேரு வெச்சி முரு முருன்னு யாராச்சும் கூப்டுறாங்களா? மங்கையர்க்கரசி மங்கை ஆகும். ஆனா பொருள் சிதையாது. வடமொழிப் பெயர்களைச் சுருக்குறப்போ நம்ம இஷ்டத்துக்குச் சுருக்கிக்கிறோம். அதுக்குதான் தாய்மொழியில பேர் வைக்கிறது நல்லது.

  ReplyDelete
 10. சிவா/ராகவன்,

  முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி
  சிவா,
  நான் சண்டே பிறந்தேன்.அதான் ரவி.
  சங்கரன்(சம்-ஹரன்) நல்லதை செய்பவன்.
  அதனால் ரவிஷங்கர்.

  ஆனால் சுருக்கமாக் “ராஜாதிராஜா ராஜ கம்பிர குலோத்துங்கச் செங்குட்டுவ வானவராய பாண்டியன்னு” கூப்பிடுவார்கள்.

  ReplyDelete
 11. நல்ல கருத்து, என் பெண்ணை பாதி பேர் வர்ஷினி அப்படின்னு தான் கூப்பிடுறாங்க. நான் அமித்துன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன். என்னவோ அட்டெண்டஸ்ல முழு பேரு வரும்ல...

  ReplyDelete
 12. அமிர்தவர்ஷினி அம்மா,

  அமிர்தவர்ஷினி! லட்சணமான பெயர்.
  வர்ஷினி/வர்ஷான்னு கூப்பிட்டா கூட
  அர்த்தம் (மழை)வருதே.

  திவ்யா!

  கருத்து சொன்னதற்கு நன்றி

  ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!