சிறு வயதில் முதன் முதலில் காலையோ சாயங்காலமோ ”தாயே கருமாரி””மாரியம்மா எங்கள் மாரியம்மா” ”வேர்காடு வாழ்ந்திருக்கும் ”எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் ரொம்ப பிடித்திருந்தது.ஆனால் உண்மையில் காற்றில் மிதந்து வந்து ஒரு மாதிரி மயக்கும் குரலில் வசீகரித்திருந்தது.அப்போது தெரியவில்லை.
அடுத்து கல்யாண மண்டபங்களில் அடிக்கடிப் பெண் அழைப்பு பாட்டு”வாராயோ என் தோழி”(பாசமலர்).இதுவும் பிடித்திருந்தது.காற்றில் மிதந்து வந்து ரசிக்க முடிந்த இவரை ரேடியோ பக்கத்தில் உட்கார்ந்துக்கேட்டால் ரசிக்க முடியவில்லை.தெரு குழாய் பெண்கள் மாதிரி அராத்துக்குரல். இவரின் குரல் டெக்சர் அப்படி.
கொஞ்ச நாள் கழித்து அதே சிறு வயதில் ”அம்மம்மா கேளடி சேதி”(கருப்புப் பணம்)சோகம் அப்பிய பாட்டு மனதைப் போட்டுப் பின்னியது.பிறகு காதல் பாடல் “நாம் ஒருவரை ஒருவர்”(குமரிக்கோட்டம்) ”கண்ணில் தெரிகின்ற வானம்” அதற்கு அடுத்து மனதை வருடும் ஹம்மிங்கில் ”கல்லெல்லாம் மாணிக்க”(ஆலயமணி)””பவளக்கொடியிலே”(பணம் படைத்தவன்)
ஒரு நாள் “ஆட வரலாம்” என்ற பாடல் கேட்டுவிட்டு “ஆஹா! இவங்க கெட்ட பாட்டெல்லாம் பாடுவாஙகளா!” மார்டன் தியேட்டர்ஸ் படங்களில் எலக்டிரிக் கிடார் பின்னணியில் நிறையப் பாடல்கள். ஹை பிட்ச்/லோ பிட்ச்/ஊளையிடுதல்/போதைப் பாட்டு என்று எல்லாப் பாடல்களையும் கேட்டேன்.
இவரின் பிரபலமான பாடல் “காதோடுதான் நான் பாடுவேன்”(ஹிந்தி பாட்டு காபி) .
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவர் ஒரு பன்முகத்தன்மைக் கொண்ட பாடகி என்பது ஒன் பைன் டே தெரிந்தது.இவரின் திறமை கிளப் டான்ஸ்(இப்போது குத்துப்பாட்டு) சூப்பராக எடுபடுகிறது. காரணம் இவர் குரல்.
ஒரு வித்தியாசமான குரல்.
இவர் லெவலுக்கு ஜானகியும் பன்முகத்தன்மைக் கொண்டவர்.
மனதை மயக்கும் ஹம்மிங்:
1.கல்லெல்லாம் மாணிக்க - ஆலயமணி
2.பவளக்கொடியிலே - பணம் படைத்தவன்
கல்லெல்லாம் மாணிக்க
இதில் முதலில் வரும் இசை அருமை.ஈஸ்வரியின் ஹம்மிங்கை தொடர்ந்து வரும் புல்லாங்குழல் வித்தியாசமான இனிமை
பவளக்கொடியிலே
தாளக்கட்டு அற்புதம். பாட்டு வரிகள் இலக்கியதரம் வாய்ந்தவை.
கிளப் டான்ஸ் பாடல்கள்(மேற்கத்திய இசை)
1.பளிங்கினாள் ஒரு மாளிகை(வல்லவன் ஒருவன்)
2.ஆட வரலாம் (கருப்புப்பணம்)(ஜாஸ் டைப்)
காதல்
சோகம்
அராத்துக்குரல்

3.துள்ளுவதோ இளமை(குடியிருந்த கோவில்)
4.வர வேண்டும் ஒரு(கலைக்கோவில்) (ஜாஸ் டைப்)காதல்
- நெஞ்சத்தை அள்ளி - காதலிக்க நேரமில்லை
- முத்துக் குளிக்க வாரிஹளா- அனுபவி ராஜா அனுபவி
- நாம் ஒருவரை ஒருவர் - குமரிக் கோட்டம்
- சந்திப்போமா - ராமு
- ராஜாராஜஸ்ரீ ராஜன் - காதலிக்க நேரமில்லை
- பன்சாயி காதல் பறவைகள் - உலகம் சுற்றும் வாலிபன்
- கண்ணில் தெரிகின்ற வானம -ரகசிய போலீஸ் 115
சோகம்
- மாணிக்கத் தொட்டில் -
- மலருக்கு தென்றல் பகையானல் - எங்க வீட்டு பிள்ளை
- அம்மம்மா கேளடி சேதி - (கருப்புப்பணம்)
- காதோடுதான் நான் பாடுவேன் - வெள்ளி விழா
- உனது மலர் கொடியிலே - பாதகாணிக்கை
அராத்துக்குரல்
- எலந்த பயம் - பணமா பாசமா
- அடி என்னடி உலகம் - அவள் ஒரு தொடர்கதை
- ஆனந்தத் தாண்டவமோ - நினைத்தாலே இனிக்கும்
- குடி மகனே பெரும் - வசந்த மாளிகை
- அடி சரிதான் போடி வாயாடி - பூவா தலையா
- சிந்து நதியின் இசை - கப்பலோட்டிய தமிழன்
- வாராயோ என் தோழி - பாசமலர்
- மணமகளே மருமகளே - சாரதா