சிறு வயதில் முதன் முதலில் காலையோ சாயங்காலமோ ”தாயே கருமாரி””மாரியம்மா எங்கள் மாரியம்மா” ”வேர்காடு வாழ்ந்திருக்கும் ”எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்கள் ரொம்ப பிடித்திருந்தது.ஆனால் உண்மையில் காற்றில் மிதந்து வந்து ஒரு மாதிரி மயக்கும் குரலில் வசீகரித்திருந்தது.அப்போது தெரியவில்லை.
அடுத்து கல்யாண மண்டபங்களில் அடிக்கடிப் பெண் அழைப்பு பாட்டு”வாராயோ என் தோழி”(பாசமலர்).இதுவும் பிடித்திருந்தது.காற்றில் மிதந்து வந்து ரசிக்க முடிந்த இவரை ரேடியோ பக்கத்தில் உட்கார்ந்துக்கேட்டால் ரசிக்க முடியவில்லை.தெரு குழாய் பெண்கள் மாதிரி அராத்துக்குரல். இவரின் குரல் டெக்சர் அப்படி.
கொஞ்ச நாள் கழித்து அதே சிறு வயதில் ”அம்மம்மா கேளடி சேதி”(கருப்புப் பணம்)சோகம் அப்பிய பாட்டு மனதைப் போட்டுப் பின்னியது.பிறகு காதல் பாடல் “நாம் ஒருவரை ஒருவர்”(குமரிக்கோட்டம்) ”கண்ணில் தெரிகின்ற வானம்” அதற்கு அடுத்து மனதை வருடும் ஹம்மிங்கில் ”கல்லெல்லாம் மாணிக்க”(ஆலயமணி)””பவளக்கொடியிலே”(பணம் படைத்தவன்)
ஒரு நாள் “ஆட வரலாம்” என்ற பாடல் கேட்டுவிட்டு “ஆஹா! இவங்க கெட்ட பாட்டெல்லாம் பாடுவாஙகளா!” மார்டன் தியேட்டர்ஸ் படங்களில் எலக்டிரிக் கிடார் பின்னணியில் நிறையப் பாடல்கள். ஹை பிட்ச்/லோ பிட்ச்/ஊளையிடுதல்/போதைப் பாட்டு என்று எல்லாப் பாடல்களையும் கேட்டேன்.
இவரின் பிரபலமான பாடல் “காதோடுதான் நான் பாடுவேன்”(ஹிந்தி பாட்டு காபி) .
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவர் ஒரு பன்முகத்தன்மைக் கொண்ட பாடகி என்பது ஒன் பைன் டே தெரிந்தது.இவரின் திறமை கிளப் டான்ஸ்(இப்போது குத்துப்பாட்டு) சூப்பராக எடுபடுகிறது. காரணம் இவர் குரல்.
ஒரு வித்தியாசமான குரல்.
இவர் லெவலுக்கு ஜானகியும் பன்முகத்தன்மைக் கொண்டவர்.
மனதை மயக்கும் ஹம்மிங்:
1.கல்லெல்லாம் மாணிக்க - ஆலயமணி
2.பவளக்கொடியிலே - பணம் படைத்தவன்
கல்லெல்லாம் மாணிக்க
இதில் முதலில் வரும் இசை அருமை.ஈஸ்வரியின் ஹம்மிங்கை தொடர்ந்து வரும் புல்லாங்குழல் வித்தியாசமான இனிமை
பவளக்கொடியிலே
தாளக்கட்டு அற்புதம். பாட்டு வரிகள் இலக்கியதரம் வாய்ந்தவை.
கிளப் டான்ஸ் பாடல்கள்(மேற்கத்திய இசை)
1.பளிங்கினாள் ஒரு மாளிகை(வல்லவன் ஒருவன்)
2.ஆட வரலாம் (கருப்புப்பணம்)(ஜாஸ் டைப்)
காதல்
சோகம்
அராத்துக்குரல்

3.துள்ளுவதோ இளமை(குடியிருந்த கோவில்)
4.வர வேண்டும் ஒரு(கலைக்கோவில்) (ஜாஸ் டைப்)காதல்
- நெஞ்சத்தை அள்ளி - காதலிக்க நேரமில்லை
- முத்துக் குளிக்க வாரிஹளா- அனுபவி ராஜா அனுபவி
- நாம் ஒருவரை ஒருவர் - குமரிக் கோட்டம்
- சந்திப்போமா - ராமு
- ராஜாராஜஸ்ரீ ராஜன் - காதலிக்க நேரமில்லை
- பன்சாயி காதல் பறவைகள் - உலகம் சுற்றும் வாலிபன்
- கண்ணில் தெரிகின்ற வானம -ரகசிய போலீஸ் 115
சோகம்
- மாணிக்கத் தொட்டில் -
- மலருக்கு தென்றல் பகையானல் - எங்க வீட்டு பிள்ளை
- அம்மம்மா கேளடி சேதி - (கருப்புப்பணம்)
- காதோடுதான் நான் பாடுவேன் - வெள்ளி விழா
- உனது மலர் கொடியிலே - பாதகாணிக்கை
அராத்துக்குரல்
- எலந்த பயம் - பணமா பாசமா
- அடி என்னடி உலகம் - அவள் ஒரு தொடர்கதை
- ஆனந்தத் தாண்டவமோ - நினைத்தாலே இனிக்கும்
- குடி மகனே பெரும் - வசந்த மாளிகை
- அடி சரிதான் போடி வாயாடி - பூவா தலையா
- சிந்து நதியின் இசை - கப்பலோட்டிய தமிழன்
- வாராயோ என் தோழி - பாசமலர்
- மணமகளே மருமகளே - சாரதா
அராத்து....
ReplyDeleteஎங்கனயிருந்து புடிக்கிறீங்க தலைவரே....
பளிங்கினால்” எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
ஆனால் மார்கழி மாத விடிகாலைகளில் போர்வைக்குள் முடங்கிக்கிடந்தவனை காதில் ஊசி விட்டு எழுப்பிவிட்டதில் இந்தம்மா குரல் மனசில் கொஞ்சம் உறுத்தல்தான்..
ஹை பிட்ச் வாய்ஸல்லாவா இவர்களினது..
போட்டோவ பார்த்தா “ஆத்தா மகமாயீ” என்று மிரட்டுவதை போலவே இருக்கிறதே யம்மாடீ...
ReplyDeleteநன்றி கும்க்கி.
ReplyDelete//அராத்து....//
இது நம்ம தின வாழ்கையில் ஆளப்படும் சொல்தான்.
//போட்டோவ பார்த்தா “ஆத்தா மகமாயீ” என்று மிரட்டுவதை போலவே இருக்கிறதே யம்மாடீ..//
இதுவா மிரட்டுது.சாந்தமா இருக்காங்க.
March 7, 2010 12:50 PM
நல்லா இருக்கு சார்!
ReplyDeleteநன்றி ஆதித்யா.
ReplyDeleteசார்,
ReplyDeleteஈஸ்வரியம்மாவுடைய ஒவ்வொரு பாடல்கள் ஏற்கனவே கேட்டு ரசித்ததுதான் என்றாலும் இத்தனை பாடல்களின் தொகுப்பையும், அதன் சிறப்பையும் ஒன்றாக இதுவரை அலசியதில்லை...
உங்களின் இந்த இடுகை படிக்கும்போதுதான், அவர்கள் ஒரு பன்முகப்பாடகி என்று உணர்கிறேன். உணர்த்தியதற்கும். மனதில் பழைய பாடல்களை அசைபோட வைத்ததற்கும் மிக்க நன்றி...
குறிப்பாக 'பவளக்கொடியிலே' பாடல் ஹம்மிங் மனதிற்குள் இந்த comments எழுதும்போதும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.
-
DREAMER
//உங்களின் இந்த இடுகை படிக்கும்போதுதான், அவர்கள் ஒரு பன்முகப்பாடகி என்று உணர்கிறேன். உணர்த்தியதற்கும். மனதில் பழைய பாடல்களை அசைபோட வைத்ததற்கும் மிக்க நன்றி...//
ReplyDeleteநான் எல்லோரையும் கேட்பேன்./வசந்தகோகிலம்/எம்கேடி முதல் நேற்றுவரை.
நன்றி DREAMER.
மிகவும் சிறப்பு. குறிப்பா பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்...... படலை தேடினேன்.. உங்கள் வலை பூ கண்ணில் பட்டது. நன்றி திரு.ரவி ஆதித்யா.
ReplyDeleteநன்றி கோவை செய்திகள்.
ReplyDeletesir
ReplyDeletein our circle she will be referred as 'Raatshasi'
அன்பு ரவி சார்
ReplyDeleteஉங்கள் உடைய ஒரு பதிவில் உயிரே உனக்காக அப்படின்னு ஒருபடம் பற்றி தகவல் கொடுத்து இருந்தீர்கள். அது மோகன் நதியா நடித்த படம் அல்ல என்றும் பிரபு சுலக்ஷ்னா நடித்து பூஜை போடப்பட்டு நின்று போன படம் என்று சொல்லி இருந்தீர்கள். இதை பற்றி மேல் தகவல் கொடுக்க முடியுமா ப்ளீஸ் . அந்த படத்தில் 3 பாடல்கள் இருந்ததாக ஒரு வலைப்பூவில் படித்த நினைவு . அந்த வலை பூ பெயர் மறந்து விட்டது .
ரேடியோஸ்பதி நண்பர் கானா பிரபா ப்ளாக் இல் இதே போல் பின்னூட்டம் நேற்று இட்டேன். அங்கு அந்த பின்னூட்டம் ஏற்றப்படவில்லை. நேற்றே உங்களிடம் கேட்டு இருக்கலாம் .மன்னிக்கவும் .தகவல்கள் இருந்தால் தெரிந்து கொள்ள விருப்பம்
நட்புடன்
கிருஷ்