கரண்டி,பென்சில்,பொம்மை
ரீமோட்,டார்டாய்ஸ் காயில்
டம்ளர்,சாவிக்கொத்து,பவுடர் டப்பா
கட்டை சீப்பு என கையில் கிடைத்த
எல்லாவற்றையும்
கிழே தூக்கிப்போட்டு
ஆவலுடன் பார்க்கிறது
மூன்று வயது ஆர்த்தி
நாலாவது மாடி ஹால்
ஜன்னலில் இருந்து
ஆர்த்தி எதிர்பார்த்தபடி
வளைந்தும் உடைந்தும்
திரும்பி வந்துவிடுகின்றன
மீண்டும் நாலாவது மாடிக்கே
ஒன்று மட்டும் வருவேதேயில்லை
அதே ஜன்னல் வழியாகத்தான்
தன் கண் முன் விழுந்தது
சாவிக் கொத்துபோல் சொத்தென்று
அம்மா
Subscribe to:
Post Comments (Atom)
ரெண்டு முறை வருது.தூக்கி எறிந்தது அல்லது எறிய வைத்தது யாரு ஆர்த்தியின் அப்பாவா.
ReplyDeleteஇரும்புத்திரை said...
ReplyDelete//ரெண்டு முறை வருது//
சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
திருத்தி(தூக்கி எறிந்து)விட்டேன்.
//தூக்கி எறிந்தது அல்லது எறிய வைத்தது யாரு ஆர்த்தியின் அப்பாவா//
அங்கு ரகசிய கேமரா இருந்திருந்தால்
தெரியும்.கவிதை எழுதியவுடன் நானும் ஆர்த்தியும் பிரிந்துவிட்டோம்.
ஏன் இப்படிக் கொலவெறிக்கவிதை? ரசிக்கமுடியவில்லை.
ReplyDeleteஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDelete//ஏன் இப்படிக் கொலவெறிக்கவிதை? ரசிக்கமுடியவில்லை.//
கருத்துக்கு நன்றி ஆதி.
நன்றி ஸ்ரீ.
ReplyDeleteசின்னச் சிரிப்போடு வாசித்துக் கொண்டே வந்த போது...கடைசி வரி உலுக்கிவிட்டது..
ReplyDeleteசின்னச் சிரிப்போடு வாசித்துக் கொண்டே வந்த போது...கடைசி வரி உலுக்கிவிட்டது..
ReplyDeleteநன்றி பாசமலர்.
ReplyDelete